இந்துகடவுளும், திராவிட நாத்திகமும்: ஆத்திகம் படும்பாடு!

மதுரை ஆதீனம், ஒரு தமாஸான பேர்வழி.
அவர் காரில் செல்லும்போது, ஏதோ முதன்மந்திரியே செல்வது போல பந்தாவோடு செல்வது வழக்கம்.
பேசும்போதோ, ஆடிக்கொண்டே, ஏதோ நகைச்சுவை நடிகர் மாதிரி பேசுவார்.
Dharmapura-adhinam-bows-down-to-Karu

Dharmapura-adhinam-bows-down-to-Karu

சமீபத்தில் 87வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது (03-06-2010), கருணாநிதி, கொஞ்சம்கூட மரியாதை, இங்கிதம் இல்லாமல், உட்கார்ந்து கொண்டேயிருக்க, இந்த மதுரை ஆதீனம் பவ்யமாக இடுப்பை வளைத்து “அபிவாதம்” சொல்வதைப் போல நிற்கவும், கருணாநிதி, அவரது கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ பேசினார்!

திராவிட பரிவார் / கருப்புப் பரிவார்  எனப்படும் திமுக-திக இந்துவிரோத சக்திகள் இவ்வாறு நடந்துகொள்வது புதியதல்ல.
நாத்திகமும் பேசிக்கொண்டு, இந்து-விரோத பிற்போக்கு கூட்டாங்களான இவற்றிற்கு இத்தகைய வெங்கங்கெட்ட செயல்கள் ஒன்றும் புதியதல்ல.
முன்பு, கருணாநிதி கிருஷ்ணனாக, மகன் ஸ்டாலின் அர்ஜுனனாகச் சித்தரிக்கப் பட்ட விளம்பரம் இதோ:
கரு-கிருஷ்ணன், ஸ்டாலின்-அர்ஜுனன்!

கரு-கிருஷ்ணன், ஸ்டாலின்-அர்ஜுனன்!

எல்.டி.டியினரும் விடுவதாக இல்லை, பிரபாகரன் சிவன் போல தோற்றமளிக்கும், ஒரு கணினி சித்திரம்:

LTTE-Prabhakar-as-Shiva

LTTE-Prabhakar-as-Shiva

முருகனாக ஸ்டாலின் சித்தரிப்பு: இந்து பரிவார அமைப்புகள் எதிர்ப்பு
செப்டம்பர் 30,2009,00:00  IST

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=13110

கரூர்: கரூரில், துணை முதல்வர் ஸ்டாலினை, திருவள்ளுவராகவும், முருகனாகவும் சித்தரித்து, வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கரூரில் அக்., 3ம் தேதி நடக்கவுள்ள பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் சிலை திறப்பு விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அவர் வருகையை தொடர்ந்து, காணும் இடமெல்லாம் வானுயர விளம்பர தட்டி, மிக நீளமான மெகா பிளக்ஸ் பேனர், கட்-அவுட் என, நகர் பகுதி முழுவதும் விளம்பரங்கள் களைகட்டியுள்ளன. கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், திருவள்ளுவர் உருவத்தில் ஸ்டாலினுக்கு பேனர் அமைத்து, “இளம் வள்ளுவரே’ என்று அடைமொழி கொடுத்து, தொண்டர்கள் சிலர், தமிழ் ஆர்வலர்களின் உள்ளத்தில் வேல் பாய்ச்சியுள்ளனர். அதேபோல், முருகக் கடவுள் படத்தில், ஸ்டாலினுடைய முகம் பதிவு செய்து, “தமிழ்க்கடவுளே’ என்று தங்கள் பக்தியை தொண்டர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆயிரம் ரூபாய் தாளில், காந்தி இருக்கும் இடத்தில் ஸ்டாலின் படமும், அசோக முத்திரை இருக்க வேண்டிய இடத்தில், முதல்வர் கருணாநிதி படமும் அச்சிட்டு, இடது மூலையில் அசோக முத்திரையுடன் விளம்பர தட்டி அமைக்கப்பட்டுள்ளது. கரூர் இந்து பரிவார அமைப்புகள் சில, இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய தயாராகி வருகின்றன.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: