எப்படியும் ஒருவர்மீது வழக்கைப் பதிவு செய்யமுடியுமா?

எப்படியும் ஒருவர்மீது வழக்கைப் பதிவு செய்யமுடியுமா?

நவம்பர் 11, 2004: இதே மாதிரியான தீபாவளி சமயம். காஞ்சிமடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கைது என்ற செய்தி.

பிறகு, ஊடகங்களில் பலவாறான செய்திகள்; ஓலி-ஒளிபரப்புகள்; ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. பல வழக்குகள் தொடரப்பட்டன.

இன்று, இப்படி ஒரு செய்தி:

ஜெயேந்திரர் மீதான வழக்கு தள்ளுபடி

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18709

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெரியகுடியில் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு 2005 நவம்பர் 12-ம் தேதி ஜெயேந்திரர் வந்திருந்தார்.

அவர் வந்து சென்ற பிறகு கோயிலில் இருந்த மரகதலிங்கம் சிலை, அதற்கு அடியில் இருந்த நவரத்தின கற்களை காணவில்லை எனவும், இதற்கு ஜெயேந்திரர் மற்றும் அவருடன் வந்த மன்னார்குடி ராமச்சந்திரன், சேதுராமன், சந்திரசேகரன், லிக்னிசந்த், வி.ஆர்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் வெங்கட்ராஜூலு, சோமசுந்தர சிவாச்சாரியார், முத்து குருக்கள் ஆகிய 9 பேர்தான் காரணம் என மன்னார்குடி கீழ முதல் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோட்டூர் போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே, வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வி.ஆர்.பாலசுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விரைந்து முடிக்க கோட்டூர் போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், புகார் கொடுத்துள்ள சுரேஷ்குமார் கோயிலுக்கே வந்ததில்லை என்றும், கோயிலை கட்டிய கோவிந்தராஜ் ஸ்தபதி, இந்த கோயிலில் மரகத லிங்க சிலையோ, நவரத்தின கற்களோ இல்லை என கூறியிருப்பதாகவும், இந்த புகார் உண்மைக்கு மாறானது என்றும் கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர், வழக்கு தொடர்ந்த சுரேஷ்குமார் தனது புகாருக்கு எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நேற்று தீர்ப்பளித்தார்.

எப்படி இம்மாதிரி வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன?

செய்தியின்படி, நாம் அறிவது:

1. இந்த வழக்கில், புகார் கொடுத்துள்ள சுரேஷ்குமார் கோயிலுக்கே வந்ததில்லை.

2. கோயிலை கட்டிய கோவிந்தராஜ் ஸ்தபதி, இந்த கோயிலில் மரகத லிங்க சிலையோ, நவரத்தின கற்களோ இல்லை என கூறியிருக்கிறார்,

3. இந்த புகார் உண்மைக்கு மாறானது என்று கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

4. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர், வழக்கு தொடர்ந்த சுரேஷ்குமார் தனது புகாருக்கு எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நேற்று தீர்ப்பளித்தார்.

2005ல் இவ்வாறு புகார் கொடுத்ததை கண்டறிய 2009 வரை நேரம் வேண்டுமா?

இந்த விஷயங்களை விசாரித்து அறிய இத்தனை ஆண்டுகள் தேவையா?

மேலும் தீபாவளி சமயத்தில் தீர்ப்பு வெளிவருவதும் ஆச்சரியம்தான்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: