தமிழகத்தில் டிவி இல்லாத வீடே இல்லை என்ற நிலை வரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் டிவி இல்லாத வீடே இல்லை என்ற நிலை வரும்
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை, அக்.17: தமி-ழகத்தில் அடுத்த ஆண்-டில் எல்லா வீட்டிலும் டி.வி. இருக்கும். அந்த அளவுக்கு எல்லோ-ருக்கும் இலவச கலர் டிவி வழங்கி விட்டோம் என்ற பெருமையை இந்த அரசு மெய்பித்து காட்-டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மாநகராட்சி மற்றும் அரசு சார்பில் நிறைவேற்-றப்பட்ட 84 வளர்ச்சிப் பணிகளின் தொடக்க விழா, சென்னை கோடம்-பாக்கத்தில் நேற்று நடந்தது. இலவச கலர் டிவிக்களையும், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களையும் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்-தார். மேயர் மா.சுப்பிர-மணியன் தலைமை வகித்தார். விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

மாநகராட்சி சார்-பிலும், அரசு சார்பிலும் மொத்தம் 84 வளர்ச்சிப் பணிகள் 19.56 கோடி செலவில் நிறைவேற்றப்-பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி, காலை 10 மணிக்கு நடக்கும் என்று அழைப்பிதழில் போடப்-பட்டுள்ளது. ஆனால், 9.45 மணிக்கே நிகழ்ச்சி தொடங்கியது. இதிலி-ருந்து இந்த அரசின் வேகத்தை புரிந்து-கொள்ள முடியும். குறித்த நேரத்துக்கு முன்பாகவே திட்டங்களை முடிக்கும் ஆட்சி என்பதற்கு இந்த விழா சான்று.

இலவச கலர் டிவி நான்காம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அய்ந்தாம் கட்டமாக 2009-_10ஆம் ஆண்டில் 25 லட்சம் கலர் டிவி கொள்முதல் செய்ய ரூ.500 கோடியை முதல்-வர் ஒதுக்கி இருக்கிறார். தமிழகம் முழுவதும் டிவி இல்லாதவர்களுக்கு வழங்கப்படும். 2010_ஆம் ஆண்டில் எல்லோருக்-கும் டிவி வழங்கிவிட்-டோம் என்ற பெரு-மையை இந்த அரசு மெய்ப்பித்து காட்டும். அடுத்த ஆண்டில், தமி-ழகத்தில் டிவி இல்லாத வீடே இல்லை என்ற நிலை உருவாகும்.

மாணவ, மாணவி-களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. கட்சி சார்பற்று, அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நல திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். விவசாயிகள் கடன் 7 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்தபோது, இதில் அதிகமாக பயன-டைய போகிறவர்கள் எதிர்க்கட்சியினர்தான் என்று முதல்வரிடம் தெரிவித்தோம். அதற்கு முதல்வர் சொன்ன பதில், அதிமுக, காங்கிரஸ், பாமக, திமுக என்று நான் பார்க்கவில்லை. நமது மக்கள், தமிழர்கள் என்று பார்த்துதான் கடனை தள்ளுபடி செய்தேன் என்றார். அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

ஆஹா, இதைவிட தமிழகத்திற்கு வேறென்ன வேண்டும்? இவர் டிவி கொடுப்பார்!

இவர் தந்தை – கருணாநிதி- டிவி கொடுக்க மக்கள் பணம் அல்லிக் கொடுப்பார்;

தயாநிதி மாறனோ எஸ்.சி.வி மூலம் கன்க்ஸென் கொடுப்பார், அல்லது சன் – டைரக்ட் கனெக்ஸன் கொடுப்பார்!

டன்-டனா-டன்!

ஒரு பதில் to “தமிழகத்தில் டிவி இல்லாத வீடே இல்லை என்ற நிலை வரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு”

  1. ஊழல் Says:

    […] [2]https://dravidianatheism.wordpress.com/2009/10/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: