இறந்தவர்களிடமும் பாகுபாடு பார்க்கும் திராவிட நாத்திகம்?

மதங்களைத் தாண்டி மனிதர்களுக்காக தொண்டாற்றியவர்
கலைக்காவிரி நிறுவனர் ஜார்ஜ் அடிகளார்
தமிழர் தலைவர், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அமைச்சர் உபயதுல்லா, துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் முதலாமாண்டு நினைவு நாளில் புகழுரை

மறைந்த கலைக்காவிரி நிறுவனர் ஜார்ஜ் அடிகளார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை….

மறைந்த கலைக்காவிரி நிறுவனர் ஜார்ஜ் அடிகளார் நினைவு மலரினை பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ வெளியிட, தூத்துக்குடி மறை ஆயர் யுவான் அம்புரோஸ் பெற்றுக்கொள்கிறார்

திருச்சி, அக்.21- திருச்சி கலைக்காவிரி நிறுவனர் எஸ்.எம்.ஜார்ஜ் அடி-களார் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை 5.30 மணிக்கு கலைக்காவிரி அரங்கத்தில் நடைபெற்-றது. ஜார்ஜ் அடிகளார் நினைவிடத்தில் திரா-விடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், திருச்சி ஆயர் அந்தோணி டிவோட்டா, யுவான் அம்புரோஸ், திருமதி இரஞ்சிதம், மருத்-துவர் அஸ்ரப், திருக்குறள் சண்முகனார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்ன-வைக்கோ, வாசன் எஸ்-டேட் சேர்மன் இரவிமுரு-கையா, திருமதி மரிய-நட்சத்திரம், ஞானதுரை, மைக்கில், காங்கிரஸ் மாநகர் மாவட்டச் செய-லாளர் ஜெரோம் ஆரோக்-கியராஜ், பணியாளர் லட்சுமணன், மாணவி அபிஷினி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்-கு கலைக்-காவிரி இணை இயக்குநர் அந்துவான் வரவேற்பு-ரையாற்றினார்.

திருச்சி ஆயர் அந்-தோணி டிவோட்டா தலைமை வகித்து உரை-யாற்றினார். மறைந்த ஜார்ஜ் அடிகளாரின் நினைவு மலரினை பாரதி-தாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்ன-வைக்கோ வெளியிட, தூத்துக்குடி மறை ஆயர் யுவான் அம்புரோஸ் பெற்-றுக் கொண்டார்.

தமிழர் தலைவர் உரை

பாரதிதாசன் பல்-கலைக்கழகத் துணை-வேந்தர் முனைவர் பொன்-னவைக்கோ, தமிழக வணிகவரித்துறை அமைச்-சர் மாண்புமிகு எஸ்.என்.-எம்.உபயதுல்லா, குன்றக்-குடி பொன்னம்பல அடி-களார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் நினைவு உரை-யாற்றினர்.

தமிழர் தலைவர் தமது உரையில், மனித நேய மாண்பாளர் ஜார்ஜ் அடி-களார் மனிதர்களாகப் பிறந்த அனைவரும் தொண்-டாற்ற பழகிக் கொள்ள வேண்டும். பிறந்த மனிதர்-களில் பலர் வரலாற்றில் இடம் பெறுவதில்லை. சிலர் சிறப்பாகத் தொண்-டாற்றி வெற்றி பெறுகி-றார்-கள். வரலாற்றில் இடம் பிடித்து விடுகிறார்-கள். ஆனால் ஜார்ஜ் அடி-களார் கலைக்காகத் தொண்டாற்றி, தாழ்த்-தப்-பட்ட, ஒடுக்கப்பட்ட மக்-கள் மத்தியிலும் இக்கலை-கள் போய்ச் சேர வேண்-டும் என்ற உயர்ந்த நோக்-கத்தோடு தொண்டாற்றி வரலாற்றை உருவாக்கி-யவர். மற்றவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியாக அவர் திகழ்ந்தவர். இந்த மேடையைப் பார்த்தாலே உங்களுக்கு எல்லாம் விசித்-திரமாக இருக்கும். இந்த மேடையில் காவி உடை இருக்கிறது.கருப்பு உடை இருக்கிறது. வெள்ளை உடை இருக்-கிறது. பல வண்ணங்கள் இங்கே இருந்தாலும், அனைவரும் ஒரே எண்-ணத்தில் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். திருச்சியில் ஒரு காவிரி-தான் ஓடுகிறது. அதுகூட சில நேரத்தில் ஓடாமல் வற்றிவிடுகிறது. ஆனால் இந்தக் காவிரி_ கலைக்-காவிரி தொடர்ந்து கலைப் பயணத்திற்காக ஓடிக்-கொண்டே இருக்கிறது. திருமணம் ஆகாதவர் ஜார்ஜ் அடிகளார் என்று சொன்னார்கள். அவர் திருமணம் ஆனவர்தான். இந்தக் கல்லூரியில் அமைக்-கப்பட்டுள்ள ஒவ்வொரு கல்லும், மண்ணும் அவரது குழந்தைகள்தான். மிகச் சிறந்த மனிதநேயப் பண்-பாளர் ஆவார்.

இந்நிகழ்ச்சிக்கு திரு-மதி. மோகனா வீரமணி, பெரியார் கல்வி நிறுவனங்-களின் ஒருங்கிணைப்பா-ளர் பேரா.ப.சுப்பிரமணி-யன், முதல்வர் (பொ) இரா.கலைச்செல்வன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலர் மூர்த்தி, நாகம்மையார் குழந்தை-கள் இல்லக் காப்பாளர் பெரியார் மாளிகை சி. தங்-காத்தாள் உள்ளிட்ட கலைக்காவிரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்

Advertisements

ஒரு பதில் to “இறந்தவர்களிடமும் பாகுபாடு பார்க்கும் திராவிட நாத்திகம்?”

  1. Tamilzhselvan Says:

    When they have been like this, how they could create any social harmony etc., in Tamilnadu?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: