உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதில்அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதில்
தமிழ்மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை!
முதலமைச்சர் கலைஞர் அறிக்கை

விடுதலை 22-10-2009

சென்னை, அக். 21_ உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாடு நடத்து-வதில் தமிழ் மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர, அரசியல் உள்நோக்கம் ஏது-மில்லை என்று முதலமைச்சர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை-யில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நல்ல எதிர்க்கட்சிக்-கான இலக்கணத்தைப் புறக்கணித்துவிட்டு – கழக அரசு எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஏகடியம் செய்வதும்; நாளுக்கொரு அறிக்கை வெளியிடுவதும் எதிர்க்கட்சியின் தலைவி அம்மையார் ஜெயலலி-தாவின் அன்றாட நடை-முறையாகிவிட்டது. கோவையில் 2010 ஜூன் திங்களில் நடை-பெறும் என்று அறிவிக்-கப்பட்டுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பற்றி இன்-றைக்கு அவர் அறிக்கை எழுதியுள்ளார்.

உலகத்-தமிழ் மாநாட்டை அறி-விக்க வேண்டியது சர்வ-தேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்தான் என்று அவர் தனது அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார். அப்-படி அவர் குறிப்பிட்-டி-ருப்பது அவர் ஆட்சி-யில் அவர் தஞ்சையில் நடத்திய எட்டாவது உலகத்தமிழ் மாநாட்-டுக்கே எந்தவகையிலும் முன்மாதிரியாக அமைந்-திடவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் 1993_1994ஆம் ஆண்டுக்-கான நிதிநிலை அறிக்கை-யில் (பக்கம் 53, பத்தி 106) 12.3.1993 அன்று, எட்-டாம் உலகத் தமிழ் மாநாடு 1994 இல் தமிழ்-நாட்டில் நடைபெறும் என்பதை அறிவதில் இம்-மன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று அச்சியற்றி அறி-விக்கப்பட்டது. ஆனால், அந்த நிதிநிலை அறிக்-கை-யில் அறிவிக்கப்பட்டபடி எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1994ஆம் ஆண்-டில் நடத்தப்படவில்லை. மீண்டும் 1994_-1995ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் (பக்கம் 36, பத்தி 109) 23.3.1994 அன்று, எட்டாவது உல-கத் தமிழ் மாநாடு தஞ்-சாவூரில்1995ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 1 ஆம் நாள் அன்று தொடங்கி மிகப்பெரிய அளவில் நடத்-தப்படவிருக்கிறது என்பதை அறிவதில் இம்-மாமன்றத்தின் மாண்பு-மிகு உறுப்பினர்கள் பெரு-மகிழ்ச்சியடைவர் என்று அறிவிக்கப்பட்டது.

உபதேசம் மற்றவர்களுக்கு…

இரண்டாவது முறை-யாக செய்யப்பட்ட இந்த அறிவிப்பின்படிதான் தஞ்சையில் 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதத்-தில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்-பட்டது. இரண்டு நிதி-நிலை அறிக்கைகளில் எட்-டாம் உலகத் தமிழ் மாநாடு குறித்து அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட அறிவிப்பு தன்னிச்சை-யான அறிவிப்பே தவிர; உலகத்தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்தான் என்று ஜெய-லலிதா தற்போது குறிப்-பிட்டிருப்பதைப் போல அப்போது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் அறிவிக்கவில்லை. உப-தேசம் அனைத்தும் மற்ற-வர்களுக்குத்தானே தவிர அவர்களுக்கில்லை. நமக்குத் தரப்பட்-டுள்ள தகவலின்படி, உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, அதன் பின்னரே உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலை-வர் நொபுரு கரஷிமா அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர் அப்-போது இந்தியாவிலே இருப்பது அறிந்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து அன்-றைய நிதியமைச்சர் நாவ-லர் நெடுஞ்செழியன் அவர்கள் அவருக்கு மாநாடு பற்றி தெரிவித்-தார். இப்போது கோவை-யில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாட்டுக்கு; உலகத்தமிழ் ஆய்வுக் கழ-கத்தின் துணைத் தலை-வராக விளங்கும் முனை-வர் வா.செ. குழந்தைசாமி அவர்களையும், பொரு-ளாளர் திரு.இரா.முத்துக்-குமாரசாமி அவர்களை-யும், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஒய்.சுப்பு-ராயலு அவர்களையும், உலகத்தமிழ் ஆய்வுக் கழ-கத்தில் நெடுங்காலமாக இணைந்து ஆய்வு செய்து-வரும் தொல்லியல் அறி-ஞர் திரு.அய்ராவதம் மகா-தேவன் அவர்களையும் கலந்து பேசியே மாநாட்-டுத் திட்டங்கள் வரை-யறுக்கப்பட்டன. கட்-டுரை தயாரித்திட ஆய்-வாளர்களுக்குப் போதிய கால அவகாசம் கூடுத-லா-கத் தேவைப்படும் என்-றும், வெளிநாட்டுப் பல்-கலைக்கழகங்களின் விடு-முறைக்காலம் ஜூன்_ ஜூலையில் அமைகிறது என்பதாலும், 2010 ஜன-வரிக்குப்பதிலாக, 2010 ஜூன்-_ஜூலையில் மாநாட்டை நடத்தலாம் என்று தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆய்வாளர்-களின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்-டுள்ளது.

தற்போது உலகத்-தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவராக உள்ள ஜப்-பான் நாட்டுப் பேராசி-ரியர் நொபுரு கரஷிமா அவர்கள் தமிழகத்தில் மாநாட்டினை 2011 ஜனவரி மாதத்தில் நடத்-தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், 2011 ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேர-வைக்கான பொதுத்-தேர்-தல் நடைபெற இருப்ப-தால்; அவரது கருத்-தினை ஏற்றுச் செயல்படு-வதில் உள்ள பிரச்சினை-கள் தமிழறிஞர்களுக்கு விளக்கப்பட்டு; அவர்-களும் அதனை முழுமன-தோடு ஏற்றுக்கொண்டு தமிழக அரசின் முயற்சி-களுக்கு எல்லா வகை-யிலும் ஒத்துழைப்பு நல்-குவதாக உறுதியளித்-துள்ளார்கள்.

உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் பொறுப்பு-களில் உள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் இசை-வளித்துள்ள நிலையிலும், உலக அளவிலும், இந்தி-யாவிலும் வாழக்கூடிய தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களுமாக 50_க்கும் மேற்பட்டோர் உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாட்டினை நடத்திட முன்வந்ததற்குப் பாராட்டினையும், 2010 ஜூன் மாதத்தில் மாநாட்டை நடத்த முடி-வெடுத்ததற்கு நன்றி-யினையும் தெரிவித்துக் கடி-தங்கள் அனுப்பியுள்-ளனர். உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாட்டுப் பணிகள் தொடர்பான உலகத் தமிழ் ஆய்வுக்-கழகப் பொறுப்பாளர்-கள், அய்ம்பெருங்குழு- எண்பேராய உறுப்பி-னர்கள், தமிழ் அறிஞர்-கள், பல்துறை ஆய்வா-ளர்கள் ஆகியோரைக் கொண்டு பலமுறைக் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பெற்று, முடிவு-கள் எடுக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாட்டின் முக்கியக் கூறாக இருப்பது ஆய்வரங்கம். உலக அள-வில் ஆய்வாளர்களைக் கொண்டு நடத்தப்பெறத் திட்டமிடப்பட்டுள்ள தரம்மிக்க கட்டுரை-களைக் கொண்டதாகத் திகழவிருக்கின்ற ஆய்-வரங்க அமைப்புக் குழு – உலகளாவிய நிலையில் ஒருமித்து ஏற்றுக்-கொள்-ளப்பட்டிருக்கும் இலங்-கைப் பேராசிரியர் முனை-வர் கா. சிவத்தம்பி அவர்-களைத் தலைவ-ராகக் கொண்டும்; முனை-வர் அவ்வை நடராஜன், முனைவர் பொற்கோ ஆகி-யோரை இணைத் தலை-வர்களாகக் கொண்-டும் அமைக்கப்பட்டி-ருக்கிறது.

1995_க்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக உலகின் எந்தப் பகுதி-யிலும் தமி-ழுக்கென்று ஒரு மாநாடு நடைபெற-வில்லையே எனும் பெரும் குறையைத் துடைத்-திட-வும்; அண்-மைக்கால தொல்லியல், வரலாற்-றியல், மொழி-யியல் ஆய்-வுகளின் முடிவு-களைக் கொண்டு தமிழ் மொழி இலக்கிய ஆய்வு-களை மேற்கொள்வதற்-கும்; உலகளாவிய நிலை-யில் தமிழ் மொழி இலக்-கியப் பண்பாடு தொடர்-பான ஆய்வாளர்களை ஒருங்-கிணைப்பதற்கும்; அவர்-கள் அனைவரும் ஓரி-டத்-திலே கூடிச் சிந்திப்ப-தற்கும் வசதியாகத்தான் இந்த மாநாட்டை தமி-ழக அரசு நடத்த முன்-வந்-திருக்கிறது.

ஜெயலலிதா பொறுப்போடு நடக்கவேண்டும்

தமிழர்களின் நூறாண்டு கனவாக இருந்து வந்ததும், தமி-ழறிஞர் பரிதிமாற் கலை-ஞர் முதலாக தொடர்ந்து காலந்தோறும் தமிழுக்குச் செம்மொழித் தகுதி வேண்டிப் போராடி வந்த நிலையிலும், 2004ஆம் ஆண்டு தமிழுக்குச் செம்-மொழித் தகுதியை திரா-விட முன்னேற்றக் கழகம் பங்குபெற்றிருக்கும் அய்க்-கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழங்கிப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலும், கடந்த மாநாடு-களை விடவும் இந்த மாநாட்டிற்கு ஒரு தனிப்பெரும் சிறப்பு சேர்ந்திருக்கிறது. எனவே, கடந்த மாநாடுகள் தமிழ் மாநாடுகளாக நடை-பெற்றிருக்க, தமிழ்ச் செம்-மொழித் தமிழாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலை-யில் இந்த மாநாட்டை _உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாடு – என்று நடத்துவதே பொருத்தம் என்று தமிழ் அறிஞர்-களும், ஆய்வாளர்களும் கருதியதன் அடிப்படை-யிலும்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற திட்டமிடப்பட்டு பணி-கள் தொடங்கப்பட்டுள்-ளன. இதில் வேறு அரசி-யல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்பதைத் தொடக்கம் முதலே இம்-முயற்சியில் இணைந்து பணியாற்றிவரும் தமிழறி-ஞர்கள் அனைவரும் நன்-றாகவே அறிவார்கள். தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆய்வு, தமிழ் அறி-ஞர்கள் தொடர்பான-வற்றில் ஜெயலலிதா போன்றவர்கள், முதன்-மையான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements

3 பதில்கள் to “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதில்அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை!”

 1. vedaprakash Says:

  வருந்தப்போகிறார்களா? இனியேனும் திருந்தப்போகிறார்களா?
  முதல்வர் கலைஞர் கடிதம்
  http://groups.google.com/group/mintamil/msg/e29c7769b73d219a?

  சென்னை, அக். 27_ உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழறிஞர் சிவத்தம்பி கலந்து கொள்வது பற்றி தவறான தகவல்களை வெளியிட்ட பத்திரிகைகளைப்பற்றி வருந்தப்போகிறார்களா? இனியேனும் திருந்தப் போகிறார்களா? என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இன்றைய முர-சொலியில் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

  வெளிநாட்டிலே உள்ள தமிழறிஞர்கள் கோவையில் 2010 ஜூன் திங்களில் நடைபெற விருக்-கின்ற, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்-டிற்கு வருகை தருவது சந்தேகம் என்ற ஒரு பத்திரிகையிலும்; வரப்-போவதில்லை என்று திட்டவட்டமாக இன்-னொரு பத்திரிகையிலும் வர-இயலாதென மாநாட்டு அதிகாரிகளுக்கு அந்த
  அறிஞர்கள் தெரிவித்து-விட்டார்கள் என்று மற்றொரு பத்திரிகை யிலும்; தமிழ் – ஆங்கிலம் என்ற வேறுபாடின்றி ஒருமித்த உணர்வுடன், அவர்கள் வந்துவிடக்- கூடாது என்ற நல்லெண்-ணத்துடன்(!) நாள்-தோறும் தமிழகத்தில் செய்திகளை
  வெளியிட்டு வருகிறார்கள்.

  திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், மொழி-இன முன்னேற்றத்திற்காக, எந்தவொரு நற்செயலில் ஈடுபட்டாலும், அதனை நையாண்டி செய்கிற நச்சு நாக்கினர், தமிழகத்தில் ஆண்டாண்டுக் காலமாக தங்களின்
  திருவிளையா-டல்களை நடத்தியே வந்-திருக்கிறார்கள்! அந்த விளையாட்டுகள் விழிப்-புணர்வு பெற்ற தமிழ் மக்களிடம் செல்லு படியாகாமல் போய்விட்ட கதைகளை காலம் கால-மாகத் தமிழ் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்!

  சீரிய செயல்கள் எது-வாயினும், அது நமது செம்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதைப் பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன் பட்டுவிடாமல், விழிப்-போடு பார்த்துக் கொண்டு இருக்கிற சிறுநரிக் கும்ப-லொன்றும், அந்தக் கும்-பலின் காலடியில் கும்-பிட்டுக் கிடக்கும் விபீட-ணக் கூட்ட மொன்றும், நமது செயல்பாடுகளின் வெற்றி முகடு சிகரங்-களைத் தொட்டுவிடாமல் தடுத்து நிறுத்துவதை, தாங்கள் பிறவி எடுத்ததன் பயனாகக்
  கருதி இருக்கின்-றார்கள்! அந்தச் சந்ததி-யினர் முழுமையாகப் பட்டுப்
  போகவில்லை என்பதற்குச் சான்றாக, இப்போதும் இங்கொன்-றும் அங்கொன்றுமாக, தலை தூக்கித் தாண்டவ-மாடிக் கொண்டிருக்கி-றார்கள். அதன் அடை-யாளம்தான், நமது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஈழத்துச் சிவத்தம்பி போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் வந்துவிடாமல் தடுக்க, இங்குள்ள நெடுமரங்கள் சில பெருமுயற்சி மேற்-கொண்டு, தடுப்பணை-களாகச் செயல்படத் துடிக்கின்றார்கள்.
  அவை-யெல்லாம், மழை பொழி-யும் போது, மழலையர் மணலைக் குவித்துக் கட்டும் அணைகளாகவே உடனடியாகக் கரைந்து-விடுகிற காட்சியைக் காணமுடியும்.

  ஈழத்துத் தமிழறிஞர் சிவத்தம்பி அவர்கள் உலகத் தமிழ்ச் செம்-மொழி
  மாநாட்டிற்கு வரப் போவதில்லை என்-பது போன்ற ஒரு சூசகச் செய்தியை வெளியிடு-கின்ற அந்தத் தமிழ் – ஆங்கில ஏடுகள், எவ்வளவு ஜீர-ணிக்க முடியாத பொய்யை விழுங்கி விட்டு, அதனை மக்கள் மத்தியிலே வாந்தி எடுத்துள்ளன என்பதை, இதோ சில உதாரணங்-கள் மூலமாகச் சுட்டிக்-காட்டுகிறேன்!

  எந்த தமிழறிஞர் சிவத்தம்பி அவர்கள் மாநாட்டிற்கு வரமாட்-டார் என்று
  கூறுகிறார்-களோ, அந்த சிவத்தம்பி அவர்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்-வரங்கப் பணிகளுக்-காக முன்னதாக வருவ-தாகத் தெரிவித்திருப்ப-தோடு; Subject for Discussion என்ற தலைப்பில் அய்ந்து பொருண்மைகள் விவாதிக்கப்பட வேண்-டும் என்ற கருத்தையும் வழங்கி-யிருக்கிறார்கள்.

  அவையாவன:

  1) The concept of Classical languages, and the World Classical
  languages other than Tamil (Chinese, Greek, Sanskrit, Latin and
  Hebrew)

  2) Classical languages of India.

  The Constitutional posi tion of languages of India.

  3) Introduction to lan guage families of India.

  Samerian Language and Tamil, Tamil and Ja panese.

  Indo-Aryan,Mundari, Indo Aryan and Dravidian.

  The relationship of Tamil with Tribal languages of India.

  4) Tamil as Classical Language

  (a) Literary Aspects

  (b) Non-literary aspects – Medicine, Astronomy and Astrology.

  (c) Tamil as Official Langauge in Pre-Western Period, Inscriptional
  Tamil, Tamil as an Official Lan guage, (i) Indian Experience, (ii) Sri
  Lankan Experience and(iii) Singaporean Experience.

  Use of Tamil in Malaysia –

  Use of Tamil in South Africa and Mauritius

  Tamil as a contemporary language in Western coun tries.

  5) Tamil Studies in Britain, U.S., Russia and Continental countries –
  France, Germany, Italy, Spain and Portugal.

  தொடக்கத்தில், அவர் எழுதிய கடிதத்தில், மாநாட்-டிற்கு கால அவ-காசம் குறைவாக இருப்-பதாகவும், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்-வதற்கு வசதியான இடைக்காலம் ஒரு ஆறு மாதமாவது அவசியமா-கும் என்றும் எழுதியிருந்-ததை ஏற்றுக் கொண்டு-தான்; முதலில் 2010, ஜனவரி 21 முதல் என்று குறிப்பிட்டிருந்த தேதியை, 2010, ஜூன் 24 முதல் 27 வரை என்று மாற்றிய-மைத்து அறிவிக்கப் பட்டுள்ளது.

  இந்த விளக்கத்தைப் படிக்கும் விஷமிகள், வேண்-டுமென்றே அவர்-கள் இட்டுக் கட்டிச் சொன்ன பொய்க்கு வருந்தப் போகிறார்களா? இனியேனும் திருந்தப் போகிறார்களா? அல்லது அடடா, பொய் கூறி அவ-மானப்பட்டு விட்டோமே என்று எதையேனும் அருந்தப் போகிறார்களா?

  இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் கடி-தத்தில் எழுதியுள்ளார்.

 2. vedaprakash Says:

  சொல்லியபடியே இதோ வந்து விட்டர் கனிமொழி!
  ஜகத் காஸ்பர், அழகிரி, தயாநிதி மாறன் வந்து விடுவார்கள்!
  சினிமாக் காரர்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள், ஆணையிட்டால் தாங்கள் என்ன்வேண்டுமானாலும் செய்வோம் என்று!

  செம்மொழி மாநாடு : கனிமொழிக்கு பொறுப்பு
  அக்டோபர் 29,2009,00:00 IST

  http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14671

  சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான ஆய்வரங்க அமைப்புக் குழுவின் செயலராக கனிமொழி எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். மாநாட்டுக்கான தனி அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் வரும் ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநாட்டில் ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள, ஆய்வரங்க அமைப்புக் குழுவை அமைத்து, அரசு ஆணையிட்டுள்ளது.குழுவின் தலைவராக இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி, துணைத் தலைவர்களாக அவ்வை நடராஜன், பொற்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக்கு, குழுவின் செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.ஆய்வரங்கப் பணிகளைத் திட்டமிடவும், செயல்படுத்தவும், துணைத் தலைவர்களையும், துணைக் குழுக்களையும் அமைத்துக் கொள்ளவும், ஆய்வரங்க அமைப்புக் குழுவுக்கு அனுமதியளித்தும், அரசு ஆணையிட்டுள்ளது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, அனைத்து ஆய்வரங்கப் பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 3. Tamilzhselvan Says:

  this is just like the nonsence that the price of rise would not rise again!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: