திராவிடம், இஸ்லாம், தமிழகம் மற்றும் இந்தியா!

சமூக நீதிக்கான பயணம் நெடியது: முதல்வர் கருணாநிதி
அக்டோபர் 28,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14630

Latest indian and world political news information

சென்னை : “சமூக நீதிக்கான பயணம் என்பது நீதிக்கட்சி காலத்திலேயே துவங்கிய நெடிய பயணம்’ என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம் சமுதாயத்தினரோடு திராவிட இயக்கமும், நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. திருவாரூரில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே நான் கொடி பிடிக்கும் சிறுவனாக, பச்சைப் பிறை கொடியை கையிலே ஏந்துகிற சிறுவனாக அந்த மாநாட்டில் கலந்து கொண்டேன்.தி.மு.க., தான், முதன் முதலாக சட்டசபை மேலவைக்கு முஸ்லிம் உறுப்பினரான ஜானிபாய் என்பவரை நியமித்தது.  தற்போது, தி.மு.க., ஆட்சியில்  உபயதுல்லா, மைதீன் கான் அமைச்சர் களாக இருந்து வருகின்றனர். தி.மு.க., ஆட்சியில் 1973ம் ஆண்டில் உருதுபேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இணைக்கப் பட்டனர்.

அண்ணாதுரையின் 99வது பிறந்த நாள் பரிசாக பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக் கீட்டிலிருந்து, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங் கியது.இன்ஜினியரிங் பட்டப் படிப் பைப் பொறுத்தவரை முஸ்லிம் மாணவர்கள் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன் பெற்றதை விட 72 சதவீத அதிகமான இடங் களை தனி இட ஒதுக்கீடு வழங்கப் பட்டதற்குப் பின் பெற்றுள்ளனர்.சிறுபான்மையினர் என்பதால் இஸ்லாமியர்களிடம் தாம் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருந்தாலும்  எல்லாவற்றையும் நாம் செய்து முடித்து விடவில்லை.  சமூக நீதிக்கான பயணம் என்பது நீதிக்கட்சி காலத்திலேயே துவங்கிய நெடிய பயணம்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

 1. திராவிட இயக்கத்தை முஸ்லீம்கள் எப்படி மதித்தனர் என்பதற்கு, கீழ்காணும் புத்தகங்களைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்:

J. B. P. More, The Political Evolution of Muslims in Taminadu and Madras 1930-1947, Orient Longman, Hyderabad, 1997

B. R. Ambedkar, Pakistan or Partition of India, Vol. 8 of Dr. Babasaheb Ambedkar Writings and Speeches, Bombay, 1990.

தமிழ் முஸ்லீம்கள் திராவிடத் தலைவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை, அதுமட்டுமல்ல, ஜின்னாவே பெரியாரைக் கண்டித்து கடிதம் எழுதியுள்ளார். அதற்கு பிறகும் பெரியார்தாம் விழுந்து-விழுந்து முஸ்லீம்களிடம் உறவு வைத்துக் கொண்டார் என்று மோரே எடுத்துக் காட்டியுள்ளார்.

 1. அபேத்கர் புத்தகத்தைப் படித்தால், முஸ்லீம்களே அவரைப் பற்றிய கருத்துகளை மாற்றிக் கொள்ள நேரிடும். ஏனெனில் அவர்களது மதவாதம், அடிப்படைவாதம், ஜிஹாத் முதலியவற்ரைப்[ பற்றி புட்டு-புட்டு வைத்திருக்கிறார்!
 1. தி.மு.., ஆட்சியில் 1973ம் ஆண்டில் உருதுபேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இணைக்கப் பட்டனர்”, என்பது ஒன்றும் “இஸ்லாத்திற்கு” பெருமையில்லை, ஏனெனில் அது “சமத்துவம்” பேசும் அவரித்தில் உள்ள “ஜாதிவேற்றுமையைத்தான்” காட்டுகிறது.. இல்லையென்றால், அவர்கள் அதனை ஏற்றிருக்கமாட்டார்கள்.
 1. மேலும், என்னொரு விழா எழும்புகிறது – “உருதுபேசாத லப்பைகள்” எதில் சேர்க்கப் பட்டுள்ளனர்?
 1. அண்ணாதுரையின் 99வது பிறந்த நாள் பரிசாக பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக் கீட்டிலிருந்து, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங் கியது” – இதைப் பற்றிய முன்னுக்கு முரணான செய்திகள் பல வந்துள்ளன. அவர்கள், மற்றும் கிருத்ததவர்கள் எதிர்த்தும் தெரிகின்றது. மற்றவர்கள் தொடுத்த வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.
 1. இன்ஜினியரிங் பட்டப் படிப் பைப் பொறுத்தவரை முஸ்லிம் மாணவர்கள் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன் பெற்றதை விட 72 சதவீத அதிகமான இடங் களை வழங்கப் பட்டதற்குப் பின் பெற்றுள்ளனர்”., “இதென்ன புரியவில்லை! அப்படியென்றால், மற்றவர்களின் தனி இட ஒதுக்கீடு முஸ்லீம்களுக்கு வழங்கப் பட்டுள்ளதா?
 1. முஸ்லீம்கள் தங்களை “முஸ்லீம்கள்” என்றுதான் பாவிக்கவேண்டும் என்று விரும்புவார்கள். நிச்சயமாக ஜாதிவாரியாகப் பிரிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி ஏற்றுக் கொண்டால், இன்னும் பல கேள்விகள், சந்தேகங்கள் எழும்.
 1. அது சரி, இப்பொழுது எதற்ககக, திடீரென்று இத்தகைய கடிதம், கழகக் கண்மணிகளுக்கு?
 1. கடைசியாக, ஒரு சின்ன கேள்வி, தமிழ்நாட்டு முதல்வர் என்ற நிலையில், தமிழக இந்துக்களுக்கு, நீர் என்னய்யா செய்துள்ளீர்?

3 பதில்கள் to “திராவிடம், இஸ்லாம், தமிழகம் மற்றும் இந்தியா!”

 1. vedaprakash Says:

  Intake of Muslim students up, says Karunanidhi
  http://www.hindu.com/2009/10/28/stories/2009102858610400.htm

  Special Correspondent

  CHENNAI: The intake of Muslim students to engineering and medical courses has gone up by 72 per cent and 74 per cent after the implementation of the separate quota system for the community, Chief Minister M. Karunanidhi said here on Tuesday.

  For engineering, the number of the Muslim students admitted to Anna University, government and government-aided colleges and self-financing colleges was 3,655 during 2009-2010 whereas it was 2,125 in 2007-2008 before the introduction of the system. Last year (the year after the introduction), the number of the students admitted was 3,288.

  In the case of medicine, the number of students admitted was 46 in 2006-2007 and 57 the next year. But, once the system was introduced, the figure rose to 78 in 2008-2009 and 80 this year.

  Giving an account of how the Dravida Munnetra Kazhagam regime, in different spells, had implemented welfare measures for the Muslim community, Mr. Karunanidhi recalled that his government, as its gift to the community on the occasion of 99th birth anniversary of former Chief Minister C.N. Annadurai, introduced 3.5 per cent reservation for Muslims in the overall quota of 30 per cent for Backward Classes through an ordinance in September 2007. Much more remained to be done for the community, the Chief Minister added.

 2. vedaprakash Says:

  இதோ, கருணாநிதியின் முழுக் கடிதம் [இன்றைய – 28-10-2009 விடுதலை நாளிதழிலிருந்து]:

  “நீதிக்கட்சி” தொடங்கிய நெடிய பயணம்!

  கலைஞர் கடிதம்

  உடன்பிறப்பே,

  இஸ்லாமிய சமுதாயத்தினரோடு, நமது திராவிட இயக்கமும் நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி செல்லும் மாணவனாக இருந்த போதே, திருவாரூரிலே நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே – நான் கொடிபிடிக்கும் சிறுவனாக _- பச்சைப் பிறைக் கொடியை கையிலே ஏந்துகின்ற சிறுவனாக- அந்த மாநாட்டிலே கலந்து கொண்டேன் என்பதை நான் பெருமையோடு நினைவு கூர்கிறேன்.

  அந்த மாநாட்டிற்குப் புதுக்கோட்டையில் திவானாக இருந்த கான் பகதூர் கலிபுல்லா சாகேப் அவர்கள்தான் தலைமையேற்றார்கள். ஒரு கையிலே குடியரசு ஏடு; இன்னொரு கையிலே தாருல் இஸ்லாம் என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரச்சாரம் செய்கிற ஏடு – இவைகள்தாம் என்னுடைய கைகளை அந்த நாட்களில் அலங்கரிக்கும். மாணவப் பருவத்திலே என்னுள் முகிழ்த்த அந்த உறவும், உணர்வும் இன்றைக்குச் செழித்துப் பசுமையாகப் பரவியிருக்கின்றன. எனவே நான், இளமைப் பருவத்திலேயே இஸ்லாமிய சமுதாயத் தினரின் எண்ணற்ற நிகழ்ச்சிகளில், கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதெல்லாம் அந்த சமுதாயத் தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தவறாது ஆற்றி வந்திருக்கிறேன்.

  நேற்றைக்கு நடந்ததைப்போல் இருக்கிறது அந்த நிகழ்ச்சி; என் நெஞ்சத்தை நெகிழ வைத்து, எனது நினைவிலிருந்து நீங்காமல் என்றென்றும் நிலைத்துவிட்ட அந்த நிகழ்ச்சி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவரும், பெரியாரின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணா வின் பாசத்திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரியவரான பெருந்தகையாளர் கண்ணியத் துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள், 1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது – அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக் கிறது என்ற செய்தி அறிந்தவுடன், எனது கோவை மாவட்டச் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனடியாகச் சென்னை திரும்பினேன்.

  ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது நிலையைக் கண்டபோது, அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள எனக்குத் தெம்பில்லாமல் போயிற்று. கண்மூடி மயக்கநிலையில் படுத் திருந்த அவர் அருகே குனிந்து, மெல்லிய குரலில், அய்யா, நான் கருணாநிதி வந்திருக் கிறேன் என்று கூறினேன். அந்தக் குரல் கேட்டுக் காயிதேமில்லத் அவர்கள் கண் விழித்துப் பார்த்தார். அந்த நிகழ்ச்சி குறித்து, தென்காசி என்.கே. ரிபாயி அவர்கள் தான் எழுதிய கவ்மின் காவலர் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

  அவர்கள் கண்விழித்துப் பார்த்தார்கள். வந்-திருப்பது யார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். கலைஞர் கருணாநிதியைப் பார்த்ததும் தங்களது கரங்களை நீட்டினார்கள். அவரும் அக்கரங்களைப் பிடித்துக்கொண்டார். அச்சமயம் காயிதேமில்லத் அவர்கள் மிகவும் பலகீனமான குரலில், முஸ்லிம் சமுதாயத்திற்குத் தாங்கள் செய்த உதவிகளுக்-கெல்லாம் எனது நன்றி என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் அவர் அப்படியே மெய்மறந்துவிட்டார். அவரது கண்கள் கலங்கிவிட்டன. என்ன சொல்வதென்றே தெரியாது அவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். அதற்குள்ளாக காயிதேமில்லத் அவர்களின் கண்கள் மூடிக்கொண்டன. மீண்டும் மயக்கநிலை ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு தலை-வர் அவர்கள் மீண்டும் சுயநினைவு பெறவேயில்லை.

  இளமைக் காலத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்-தினர்-மீது நான் கொண்டிருந்த மதிப்பின் தொடர்ச்சி-யாக; காயிதே மில்லத் அவர்கள்மீது நான் கொண்-டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் அடையாளமாக – இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்திடும் போதெல்லாம் பல்வேறு நன்மைகளை வழங்கி யிருக்கிறேன்.

  1969இ-ல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001-இல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது; 1973-இல் உருதுபேசும் லப்பைகள், தெக்-கனி முஸ்லிம்கள் ஆகியோ ரைப் பிற்படுத்தப்-பட்டோர் பட்டியலில் சேர்த்தது; 1974-ல் சென்னை-அண்ணாசாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி எனப் பெயர் சூட்டியது; 1989இ-ல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், சிறுபான்மையினர் நல ஆணையம் ஒன்றை 13.2.1989 அன்று உருவாக்கியது; 1999இ-ல் வக்ஃபு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்முறையாக 40 இலட்ச ரூபாய் வழங்கியது; 1999இ-ல் தமிழ்நாடு சிறுபான்மை யினர் மேம்பாட்டுக் கழகம் என ஒரு அமைப்பினை 1.7.1999 அன்று உருவாக்கியது; 2000-இல் உலமா ஓய்வூதியத் திட்டத்தை 19.7.2000 முதல் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது; 2000இ-ல் இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, 21.7.2000 அன்று உருது அகடமியைத் தொடங்கியது; 2001-இல் காயிதே மில்லத் மணி-மண்டபம் 58 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய்ச் செலவில் சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, திறக்கப்பட ஆவன செய்தது; சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது; சிறுபான்மையினரின் நலனுக் கென தனி இயக்குநரகம் ஒன்றை 6.4.2007 அன்று அமைத்தது; உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் என ஒரு வாரியத்தை 2009, மார்ச் திங்களில் ஏற்படுத் தியது; என்று இஸ்லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மைகளும் கணக்கிலடங்காதவை.

  1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, 1947ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரையில், தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லை. முஸ்லிம்களுக்கு அமைச்சர-வையிலே இடம் தரவேண்டுமென்ற குரலை முதன் முதலாக எழுப்பியவர் நமது பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆவார்கள். அதற்குப் பிறகுதான் 1962-இல் கடையநல்லூர் மஜீத் அவர்கள் காங்கிரஸ் அமைச்சரவையிலே அமைச்சராக இடம்பெற்றார். திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதன்முதலாக தமிழகச் சட்டமன்ற மேலவைக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை, அதாவது திருச்சி ஜானிபாய் அவர்களை நியமித்தது. ஜனாப் அப்துல் சமது அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியதும் தி.மு.க.தான். 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியகுளம் மேத்தா, நெல்லை கதிரவன், சாதிக்பாட்சா ஆகிய மூவர் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் சட்டப்-பேரவை உறுப்பினர்களாக ஆனார்கள். 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்த-போது, முதலில் ஒரு ஆறு மாதகாலம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக திரு.அன்வர் ராஜா இடம்பெற்றிருந்தார்; ஆனால், அதற்குப்பிறகு முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல்தான் அ.தி.மு.க. அமைச்சரவை நடைபெற்றது. தற்பொழுது, 2006-இல் பொறுப்பேற்ற கழக ஆட்சியில் இரண்டு முஸ்லிம்-கள், அதாவது, திரு.உபயதுல்லா, திரு.மைதீன்கான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து வருகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித் துவம் இல்லாத தி.மு.க. அமைச்சரவையே இதுவரை இருந்ததில்லை – என்ற உண்மைகள் அனைத்தையும் அந்த சமுதாயத்தினர் நன்கறி வார்கள்.

  சமூகநீதியின் தாயகமான தமிழகத்தில் 1920ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் ஆட்சி தோன்றியவுடன், 1921ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட முதல் கம்யூனல் ஜி.ஓ எனப்படும் முதலாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணையில் முகமதியரும், இந்தியக் கிறித்த வரும் இடம்பெற்றனர். அதனைத் தொடர்ந்து அரசு நியமனங்களில் மக்கள் தொகை விகிதாச்-சாரப்-படி பகிர்ந்து நியமிக்க வேண்டு மென்பதற்காக, 1927ஆம் ஆண்டில் வெளியிடப் பட்ட ஆணையிலும், முகமதியருக்கும், கிறித்த வருக்கும் தனியே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, வகுப்புவாரி விகிதாச்சார விதியோடு, வகுப்புவாரி சுழற்சி விதியும் (னிஷீணீ ணீஸீபீ ஸிஷீணீ) பின்பற்றப்பட்டது. நீதிக்கட்சியின் பாரம் பரியத்தை ஒட்டியே கழக ஆட்சியில் 1973ஆம் ஆண்டில் உருதுபேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டனர். சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் தனியே இடஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. அதனை ஏற்று, 2006 சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதற்கான அறிவிப்பு செய்யப்-பட்டது. அதனைத் தொடர்ந்து, 2006_-2007ஆம் ஆண்டுக்-கான கழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும், இஸ்லா-மியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டுக் கான உறுதி வழங்கப்பட்டது.

  முதல்கட்டமாக,நீதியரசர் திரு.ஜனார்த்தனன் அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடம் இஸ்லாமியர் இடஒதுக்கீடு பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து, உரிய பரிந்துரையைத் தருமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த ஆணையம் -_ திரு.ஜெ.அ.அம்பாசங்கர் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும், இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; முஸ்லிம்களில் பிற்படுத்தப்-பட்-டோர் மக்கள்தொகை ஆகியவை பற்றிய புள்ளி விவரங்-களை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்தது. தமிழக அரசு இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா அவர்-களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக, பிற்படுத்-தப்பட்டோருக்கான 30 சதவிகித இடஒதுக்-கீட்டி-லிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் களுக்கு 3.5 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு வழங்கி, 15.9.2007 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

  இப்படி இஸ்லாமியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக, கல்வி நிலையங்களில் அவர்கள் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரித்துள்ளன. எம்.பி.பி.எஸ். எனப்படும் மருத்துவப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, இஸ்லாமியர் களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப் பட்டதற்கு முன்; அதாவது, 2006_2007ஆம் ஆண்டில் அவர்கள் பெற்ற இடங்களின் எண்ணிக்கை 46; 2007_-2008ஆம் ஆண்டில் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 57. ஆனால், அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பிறகு -2008-_2009ஆம் ஆண்டில் கிடைத்த இடங்கள் 78; 2009-_2010ஆம் ஆண்டில் கிடைத்த இடங்கள் 80. அதாவது, மருத்துவப் பட்டப்-படிப்பைப் பொறுத்தவரை இஸ்லாமிய மாணவர்கள் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 74 சதவிகித அதிகமான இடங்களை தனி இடஒதுக்கீடு வழங்கப் பட்டதற்குப் பின்பு பெற்றிருக்கிறார்கள்.

  அதைப்போலவே, பி.இ., எனப்படும் பொறி யியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, இஸ்லா மியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப் பட்டதற்கு முன், அதாவது, 2007-_2008ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்திலும் சேர்த்து, அவர்-களுக்குக் கிடைத்த இடங்கள் 2125. ஆனால், இஸ்லா-மியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட-தற்குப் பிறகு 2008_-2009ஆம் ஆண்டில் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 3288; 2009_-2010ஆம் ஆண்டில் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 3655.

  அதாவது, பொறியியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை இஸ்லாமிய மாணவர்கள் தனி இட-ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 72 சதவிகித அதிகமான இடங்களை தனி இட-ஒதுக்கீடு வழங்கப் பட்டதற்குப் பின்பு பெற்றிருக்-கிறார்கள்.

  இஸ்லாமியர்களுக்குக் கழக அரசு வழங்கிய தனி இடஒதுக்கீட்டின் காரணமாக இப்பொழுது அவர்கள் பெற்றுள்ள வெற்றி, எதிர்காலத்தில் அவர்கள் பெற-வேண்டிய பல வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைந்திட வேண்டுமென்பதே எனது ஆசை. சிறுபான்மையினர் என்பதால் இஸ்லாமியர்களிடம் நாம் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருந்-தாலும்; இப்போதும் நான் சொல்லுகின்றேன் _ எல்லாவற்றையும் நாம் செய்து முடித்துவிட வில்லை; அவர்களது மேம்பாட்டுக்கு நாம் ஆற்றிட வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது! நம்மைப் பொறுத்தவரையில், சமூக நீதிக்கான பயணம் என்பது; நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கிய நெடிய பயணமல்லவா! அன்புள்ள,

  மு.க

 3. முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? உண்மையை சொல்லவேண்டிய நிலை வந்து விட்டத Says:

  […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: