திராவிடம் பஞ்சாயத்து திட்டம்!

திராவிடம் பஞ்சாயத்து திட்டம்!

திராவிடம் பஞ்சாயத்து திட்டம், இதென்ன கலாட்டா?

பஞ்சாலைத் திட்டாமாம் மகன் சொல்லுவது?

நெஞ்சுக்கு நீதி அன்று, விலைவாசி பீதி இன்று,

அஞ்சுகம் மகனோ அஞ்சுவதில்லை எதற்கும்!

 

கஞ்சித் தொட்டிகள் திறந்தனர் அப்போது,

பஞ்சாய் பறக்கின்றனர்  காய்கறி வாங்க இப்பொது.

அஞ்சுகின்றனர் அரிசிவிலை ஏற்றம் கண்டு

நஞ்சு விளம்பரமோ ஒரு கிலோ ஒரு ரூபாய்.

 

ஒதுக்கீடு, அரசியல் ஒதுக்கீடு, அரசியல் தீட்டு

இடமுண்டு, இடமுண்டு, நடிகனுக்கும் நிலப்பட்டா!

கோடிகளைக் குவிக்கும் நடிகனுக்கென்னத் தெரியும் வெங்காயம்?

ஆடி போகலாம், ஆடிப்போய்விட்டனர், வெங்காயம் ரூ.30/-

 

“நிறப்பிரிகை” ஊழலிலோ ரூ. 22, 000 கோடி ராஜா!

அறமறுக்கும் தமிழகத்தில் தேடிக்கொள்வதோ தாஜா

சின்னவயசில் தூக்கினாரம் இச்சையுடன் பச்சைக்கொடி!

பெரியவயசில் வாயால் பச்சையாகத் தாக்குவதில் அத்துப்படி.

 

ஆடிப்பிழைக்கும் “கோடிகளுக்கு”த் துணைபோனால்,

ஓடி உழைப்பவர்கள், தேடித் தின்பவர்கள் என்னாவது?

பாடிக்கு அருகே கையகப்படுத்தி நில-இடஒதுக்கீடாம்

மாடிகள்-சொர்க்கவீடுகள் பணப்படுத்திக் கட்டுவார்களாம்!

 

கடிதங்கள் எழுதினால் குறையுமோ விலைவாசி?

தூதுவர்கள் சென்றால் தீருமோ இடம்பெயர்ச்சி?

சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமம் என்றால் திராவிடம்

ஏன் பஞ்சாயம் பார்க்காமல் காட்டுகிறது பாரபட்சம்?

 

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=146002&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

 

https://dravidianatheism.wordpress.com/2009/10/28/திராவிட-பஞ்சாயத்து-தி/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: