திராவிட நாத்திகத்தின் உச்சக் கட்டம்!

திராவிட நாத்திகம் எல்லைமீறி செயல்படுகிறது என்பதற்கு, இன்னொரு உதாரணம்:

1. திருக்குறளை “கடவுள் படங்கள்” மறைக்கின்றனவாம்! “அ, ஆ” தான் மறைந்துள்ளது. இருப்பினும் அந்த திருக்குறளை ஒரு தமிழன் படிக்கவில்லை என்றால், அவன் தமிழனே இல்லை.

2. தொடர்ச்சியாக திருக்குறளைக் கேவலப் படுத்தி வருகின்றனரே கிருத்துவர்கள். அனால், அந்த தெய்வநாயகத்துடன் ஒட்டி உறவாடுகிறார் வீரமணி! அப்பொழுது தெரியவில்லை, திருக்குறள் படும்பாடு?

3. முஸ்லீம்கள் மட்டும் என்ன, திருக்குறளை விட்டு வைத்தனரா? “பொது மறை குரளா, குரானா?” என்றபோது, குறள் துடைப்பதற்கு கூட உதவாது என்றபோது, எங்கு போயிற்று, திருக்குறள் பாசம், தமிழ் பற்று எல்லாம்?

4. அப்பொழுதெல்லாம் “செக்யூலரிஸம்” ஞாபகத்திற்கு வரவில்லையோ?

போக்குவரத்துத் துறை அமைச்சரின் கவனத்திற்கு!

திருக்குறளை மறைக்கும் கடவுள் படங்கள்

மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்றும் வகையிலும், பொது நெறியை ஊட்டும் வண்ணமும் பேருந்துகளில் திருக்குறளை எழுதப் பணித்தார் மானமிகு கலைஞர் அவர்கள்.

இப்பொழுது நிலைமை என்ன?

திருக்குறள் எழுத்துகளை மறைத்து கடவுள், கடவுளச்சிகளின் படங்கள் மாட்டப்பட்டுள்ளன. மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கவனிப்பாரா?

(தடம்: சென்னை பிராட்வே _ திருநின்றவூர் பேருந்து தடம் எண் 71E)

பிறகு இப்படியும் ஒரு செய்தி! அவர்களே கேள்வி கேட்டிருப்பதால் பொறுத்து பார்க்கவேண்டும். ஒருவேளை, பிள்ளையாருக்குப் பதிலாக, பெரியாரையும் வைக்கலாமே?

பெரியார் படிப்பகத்தை அகற்றி பிள்ளையார் கோயிலா?

தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான் உப்புக்காரத் தெருவில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வந்தது. அந்த இடம் மறைந்த பெரியார் பெருந்தொண்டரும், வலங்கைமான் ஒன்றிய முன்னாள் திராவிடர் கழகச் செயலாளருமான ஏ.எஸ். கணபதி அவர்களுக்குச் சொந்தமானதாகும்.

பெரியார் படிப்பகத்தை இரவோடு இரவாகப் பிரித்துத் தள்ளி அவ்வூர் அரசியல் பிரமுகர்கள் இருவர் பிள்ளையார் கோயிலையும் எழுப்பி விட்டனர். (கால்பங்கு பெரியார் படிப்பகத்துக்குச் சொந்தமான இடம்; முக்கால் பங்கு ஆக்கிரமிப்பு) பக்கத்தில் பறந்துகொண்டிருந்த திராவிடர் கழகக் கொடியும் இரவோடு இரவாகத் திருடப்பட்டுள்ளது. காவல் துறைக்குப் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது எடுப்பார்களா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: