கருணாநிதியை அவதூறு பேசுவதும், கடவுளை தூஷிப்பதும்!

முதல்வருக்கு மிரட்டல்: எஸ்.எஸ்.சந்திரன் மீது வழக்கு
அக்டோபர் 29,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13651

Important incidents and happenings in and around the world

தூத்துக்குடி : திருச்செந்தூரில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, அவரது குடும்பம் குறித்து அவதூறு பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எம்.பி., எஸ்.எஸ்.சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்செந்தூர் வ.உ.சி., திடலில் அக்.,20 ம் தேதி இரவு அ.தி.மு.க., 38வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய எஸ்.எஸ். சந்திரன், தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக, திருச்செந்தூர் நகர தி.மு.க., செயலர் கோபால் போலீசில் புகார் செய்தார். அதன்படி, எஸ்.எஸ். சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மாவட்ட செயலர் மீதும் வழக்கு: அதே கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறு பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., செயலர் சண்முகநாதன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

——————————————————————————————————————————————

1. இங்கு தவறு செய்பவர்களை தண்டிப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

2. ஆனால், அதே சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரப் பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறார்கள். உதாரணத்திற்கு குஷ்பு (சினிமா நடிகை), எச். எம். ஹுஸைன் (இந்திய கடவுளர்களை நிர்வாணமாக வரைந்தவன்) முதலியோர்.

3. கருணாநிதியின் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் நீதிமன்றங்கள் தூங்குகின்றன; நீதிபதிகள் தாலாட்டு பாடுகிறார்கள்; நீதிதேவையும் ஆழ்ந்த மயக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறது!

4. கடவுளை தூஷித்தவரும், கடவுளை தூஷித்தவரை அவதூறு பேசியவரும் ஒரே சட்டப் பிரிவில் வழக்குகள் போடும் போது, இருவரின் மீதும் சட்டம் ஒன்றாகத்தானே செயல்பட வேண்டும்?

5. பார்க்கலாம், சட்டம் என்ன செய்கிறது என்று!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: