அமாவாசையும், அப்துல் காதரும் – திருப்பதியும், நேபாளமும்!

ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதி தேவஸ்தானம் முன் மறியல்!
சனி, 31 அக்டோபர் 2009( 16:49 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0910/31/1091031073_1.htm

மகிந்தவின் வருகையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்! தமிழினப் படையணியைச் சேர்ந்த 30 பேர் கைது!
http://www.pathivu.com/news/3955/54/30.aspx

நேபாளத்தில் “புனிதப் பயணம்” மேற்கொண்டிருந்த ராஜபக்சே திருப்பதிக்கும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தப் பயணம் குறித்த தகவல் படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், நேற்று முன்தினம், இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் சித்தூர் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சேஷாத்திரியுடன் ராஜபக்சேவுக்கான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று காத்மாண்டுவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ராஜபக்சே ரேணிகுண்டா வந்தார். பின்னர் கார் மூலம் அங்கிருந்து திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று பிற்பகலில் திருப்பதி கோவிலில் வெங்கடாசலபதியை அவர் தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கார் செல்லும் வழி நெடுகிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2009/10/31/tn-rajapakshe-to-visit-tirupathi-today.html

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சா ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயில் வருகையைக் கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்று சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன்பு ‘தமிழினப் படையணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 30 பேர் அணி திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களால்

– ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சவுக்கு அனுமதி அளிக்காதே!

– திருப்பதி தேவஸ்தானமே ராஜபக்சவை திருப்பி அனுப்பு!

போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.

– ஒழிக ஒழிக சிங்கள நாயே ஒழிக, கொலை வெறியனே ஒழிக

– கொலைக்கார ராஜபக்சவிற்கு திருக்கோயில் பரிவட்டமா?

– இனப் படுகொலை செய்தவனுக்கு பூரண கும்ப மரியாதையா?

– முடியாது முடியாது கடவுளால முடியாது

– விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம் சிங்கள நாயே விரட்டியடிப்போம்

ஆகிய கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்திலும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

|சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் முன்பு சாலை மறியல் நடந்தது” என்பதே வேடிக்கையாக உள்ளது. அவர்கள் திருப்பதிக்கேச் சென்று தடுத்திருக்கலாமே?

‘தமிழினப் படையணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 30 பேர் இன்று மதியம் 1 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன்பு திரண்டனர். அவர்கள் எல்லாம், ஏதோ “சாமி எதிர்ப்பு கும்பலைப்”போன்றுதான் செயல்பட்டார்கள்!

திருப்பதி கோயிலிற்கு ராஜபக்ச வருவதைக் கண்டித்து சென்னையில் நடந்த இந்த மறியல் அங்கு “பெரும் பரபரப்பை” ஏற்படுத்தியது. ஆமாம், நேபாளத்திர்கு சென்றபோது, பசுபதிநாதரை வழிபட்டாரா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால், சிதம்பரத்திலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம்!
———————————————————————————————————————————–

Rajapaksa in Tirumala; prays for permanent peace

 

http://beta.thehindu.com/news/states/andhra-pradesh/article41446.ece?homepage=true

Sri Lankan President Mahinda Rajapaksa and his wife Shiranthi Rajapaksa offer prayers at the ‘Dhwaja Sthambam’ inside the Sri Venkateswara temple complex at Tirumala on Saturday.

Special Arrangement Sri Lankan President Mahinda Rajapaksa and his wife Shiranthi Rajapaksa offer prayers at the ‘Dhwaja Sthambam’ inside the Sri Venkateswara temple complex at Tirumala on Saturday.

Sri Lankan President Mahinda Rajapaksa on Saturday offered prayers at the famous hill temple of Lord Venkateswara here. He was accompanied by his wife Shiranthi Rajapaksa and a forty member official delegation.

Talking to mediapersons, President Rajapaksa said that he had come here to pray for permanent peace and development in Sri Lanka. “When I visited the temple last time, I had prayed for peace in the war-torn country. Now that my prayers have been answered, I have come here for the second time to pray for permanent peace and development ,” he added.

Unprecedented security arrangements were made by the district police administration for the President’s visit and media persons were kept at a distance from the the main temple complex and Padmavathi Guest House, where the entourage stayed.

Even though officials ruled out the possibility of any interaction with the President in view of security considerations, a smiling Mr. Rajapaksa gently waved towards the media gallery and stopped for a while.

When asked for his comments on the LTTE and its chances of resurgence apart from the safety of the Tamils, he replied that he was here only for ’peace’.

Earlier, on his arrival at the temple’s mahadwaram, he was received with traditional honours by the officials and priests, and led into the sanctum sanctorum.

He stood in front of the main deity for about ten minutes and offered his prayers.

After going round the temple, he made his offerings into the temple `hundi’. Soon after the darshan, the Sri Lankan President left for his country by a special aircraft from Tirupathi.

Tirumala Tirupati Devasthanams (TTD) Chairman D. K. Adikesavulu, Executive Officer I. Y. R. Krishna Rao, Anantapur Range DIG of Police Sujatha Rao and Superintendent of Police Laxmi Reddy received the dignitary upon arriving at the guest house.

1. திரூபதியில் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, பிரியங்கா முதலியோர் கூட சாமி கும்பிட்டுள்ளனர்! அப்பொழுது ஏன் தி.நகர் அல்லது வேறு இடத்தில் இம்மாதிரி மறியல் / ஆர்பாட்டம் செய்யவில்லை?

2. மாவோயிஸ்டு நண்பர்களிடம் சொல்லி, நேபாளத்திற்கே வரவிடாமல் தடுத்திருக்கலாமே?

3. அங்கு பசுபதிநாதரை வழிபட்டாரா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால், சிதம்பரத்திலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம்!

4. புத்தர் பிறந்த இடமான லும்பினியில் வழிபட்டுள்ளார். பிறகு ஏன் புத்தமடாலயங்கள் முன்பெல்லாம் ஆர்பாட்டம் செய்யக் கூடாது?

5. ஏதோ “தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது” போல எதற்கு ஆர்ப்பாட்டம்?

6. வீரமணி கேஸ் போடுவாரே, ஏன் போடவில்லை? மறந்து விட்டாரா?

Advertisements

குறிச்சொற்கள்: , ,

12 பதில்கள் to “அமாவாசையும், அப்துல் காதரும் – திருப்பதியும், நேபாளமும்!”

 1. vedaprakash Says:

  * Rajapaksa visits Lumbini, meets Nepal’s President

  STAFF WRITER 18:55 HRS IST
  http://www.ptinews.com/news/355221_Rajapaksa-visits-Lumbini–meets-Nepal-s-President

  Kathmandu, Oct 30 (PTI) Sri Lankan President Mahinda Rajapaksa, whose last visit here was abruptly cut short due to the terror attack on Lankan players in Pakistan, today visited Lumbini, the birth place of Lord Buddha in western Nepal.

  Rajapaksa, who also called on his Nepalese counterpart Ram Baran Yadav here, is scheduled to meet Prime Minister Madhav Kumar Nepal and Deputy Prime minister and Foreign Minister Sujata Koirala later this evening.

  The Sri Lankan President had yesterday met Maoist chief Prachanda and discussed current political situation and the peace process of their respective countries.

  “I appraised him of the political situation in the country,” Prachanda told media persons after the meeting.

  The leaders also discussed the ongoing rehabilitation and reconstruction process after the decades long ethnic war ended in Sri Lanka.

 2. vedaprakash Says:

  Sri Lanka President to visit Nepal again
  Fri, Oct 16, 2009, 06:04 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
  http://www.colombopage.com/archive_091/Oct1255696466RA.html

  Oct 16, Colombo: Sri Lankan President Mahinda Rajapaksa is to arrive in Kathmandu, Nepal once again on October 29th for a two-day official visit.

  According to the Presidential Media Unit President Rajapaksa is expecting to complete his early visit to Nepal, which was cut short due to the attack on the Sri Lankan cricket team in Pakistan.

  During this visit he will meet his Nepali counterpart Ram Baran Yadav, Prime Minister Madhav Kumar Nepal and several other leaders in Nepal.

  He will also visit Lumbini, the birthplace of Lord Buddha, and inaugurate a Vihar constructed by Sri Lanka.

 3. vedaprakash Says:

  தினமணியின் செய்தியின் கீழ், தேவையில்லாமல் இந்துமதத்தைத் தூஷனம் செய்துள்ளனர். ஆகையால், அதனை கண்டித்து கீழ்கண்ட பதிவைச் செய்துள்ளேன்:

  16-10-2009 அன்றே தெரியும், நேபாளத்திற்கு சென்று திருப்பதி வருவது [இலங்கை பத்திரிக்கை செய்தி]. அப்பொழுதெல்லாம் தூங்கிவிட்டு, இப்பொழுது சென்னையில் தி.தி.தே எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினால்?
  நேபாளத்தில் புத்தரை வணங்கி வந்ததால், பௌத்தாலயங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவிலையே?
  பௌத்தர்களும், மாவோயிஸ்டுகளும் நண்பர்கள்தாமே, அவர்களிடம் சொல்லி பயணத்தையே ரத்து செய்திருக்கலாமே.
  “தமிழன்” என்று சொல்லிக்கொண்டு இந்துமதத்தை, மதக் கடவுளர்களை தூஷிப்பதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
  சோனியா, பிரியங்கா முதலியோரும் திருப்பதி சென்றார்களே? நளினியுடன் பேசிவிட்டு, பிரியங்கா சென்றாளே? அப்பொழுது எங்கே போயிற்று, இவ்வாறு எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம்?
  அப்பொழுது கிருத்துவக் கடவுளையும், புத்தரையும் இம்மாதிரி தூஷணம் செய்யவில்லையே?

  http://www.dinamani.com/edition/story.aspx?Title=%u0bb0%u0bbe%u0b9c%u0baa%u0b9f%u0bcd%u0b9a+%u0ba4%u0bbf%u0bb0%u0bc1%u0baa%u0bcd%u0baa%u0ba4%u0bbf+%u0bb5%u0bb0%u0bc1%u0b95%u0bc8%3a+%u0b9a%u0bc6%u0ba9%u0bcd%u0ba9%u0bc8%u0baf%u0bbf%u0bb2%u0bcd+%u0b86%u0bb0%u0bcd%u0baa%u0bcd%u0baa%u0bbe%u0b9f%u0bcd%u0b9f%u0bae%u0bcd&artid=148162&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

 4. vedaprakash Says:

  தமிழால் ஒன்றுபடவேண்டுமேத் தவிர, பிரிவினை உண்டாக்கக் கூடாது.

  இந்தியத் தமிழர்கள், தாம் “தமிழர்கள்” என்பதனைவிட, “இந்தியர்கள்” என்றுதான் செயல்படவேண்டிள்ளது. ஆனால், சிங்களத் தமிழர்கள், வேறுவிதமாக இந்திய தமிழர்களை அவதூறு பேசி, தூஷணம் செய்வதால்தான், இந்த உணர்ச்சி ஏற்படுகின்றது.

  இதில் தான் “திராவிடம்” பேசிக்கொண்டு, பிரிவினைவாதிகள் “இந்துக்களை / இந்துமதத்தை” தூஷிக்க, நாத்திகத்தை கையேந்துகிறார்கள்.

  “செவ்வேலர்” என்பவர் இன்னும் அந்த “ஆரிய-திராவிட” கட்டுக்கதைகளுக்குள் / மாயையில் இருந்து விடுபடவில்லை. “திராவிடத்தால்” தமிழன் – தெலுங்கு, கன்னட, மலையாளத்து இந்தியர்களை எதிரியாகக் கருதினால், அம்மாயா உலகத்தில் இருந்து கொண்டு வசைப்பாடி கொண்டே இருக்கவேண்டியதுதான்.

  இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையாக உரிமைகள் வாங்கிக் கொடுக்க, உயிகளைக் காக்க, இந்திய / தமிழக அரசியல் ஆளும் கட்சிகள் ஏமாற்றுவேலையைத்தான் செய்துவிட்டன. ஆகையால்தான் சோனியா-பிரியங்கா திருப்பதி சென்றதைக் குறிப்பிட்டேன்.

  இந்தியர்களுக்கு எந்த கடவுள்மீது வெறுப்பு / காழ்ப்பு இல்லை. கந்தா-கடம்பா-கார்த்திகேயா-குஹா-முருகா-சுப்ரமண்யா என எப்படி சொன்னாலும் “இந்துக்கள்” ஏற்பார்கள். ஆனால் “நாத்திகம்” பேசும் திகவினர் “கந்த-சஷ்டி”யையும் தூஷிப்பார்கள். “விடுதலை” பார்த்துத் தெளிக. ஆதையும் நான் மறுத்து பதிலளித்துள்ளேன்.

  தென்னிந்திய மக்களை தண்ணீர் பிரச்சினையில் பிரித்து, “மின்-அலைகளால்” ஒன்றுபடுத்தி லாபம் சம்பாதிப்பது யார் என்று தெரியும்.

  ஆகவே, ஆளும் கட்சிகளை தங்களது அரசியல் அதிகாரத்தை இலங்கை தமிழ் மக்களைக் காப்பதற்காக முறையாக சரியாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

 5. vedaprakash Says:

  தினமணியில் விவாதம் தொடர்வதால், என்னுடைய பதிலும் தொடர்கிறது:

  By Vedaprakash 11/1/2009 3:44:00 PM மற்றும் By Vedaprakash
  11/1/2009 3:42:00 PM அளவில் பதிவு செய்தது, மேலே உள்ளது.

 6. vedaprakash Says:

  pathil thotarkiRathu:

  பழனி சொல்லியிருப்பது, “இலங்கையில் இந்து மத அடையாளங்களை எல்லாம் அழித்து துவம்சம் செய்தவனுக்கு இந்த இந்து மடையர்கள் , பூர்ண கும்பம் கொடுக்கலாம், அதற்கு மேல், திருமலையில் ஒரு பகுதியை வேண்டுமானாலும் கொடுக்கலாம்”.

  இந்நிலை மிகவும் சிந்திக்கத் தக்கது.

  அமிதாப் பச்சன் நேற்று ஒரு கோவில்-மசூதி சென்று வந்தபோது, யாரோ ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் கண்டித்தானாம்.

  “செக்யூலரிஸ” மாயையால், இந்துக்களை எல்லா நாடுகளிலும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பது தெரிகின்றது. ஆகையால்தான், இலங்கை, மலேசியா [முன்பு ஃபிஜித் தீவுகளில்] இந்துக்கள் கொடுமைகளுக்குள்ளான போது, இந்திய அரசியல்வாதிகள் மௌனிகளாக இருந்தனர்.

  எனவே, தமிழக அரசியல்வாதிகள், சித்தாந்தவாதிகள், மற்றவர்கள் எல்லொரும் தத்தமது வேற்றுமைகளை மறந்து அகில-உலக ரீதியில் இலங்கைமீது சட்டரீதியில் / அரசியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி சுமூகநிலையை ஏற்படுத்த வேண்டும்.

  ஐக்கிய நாட்டு பார்வையாளர்களையும் அனுப்பவேண்டும். ஊடக கட்டுப்பாட்டை நீக்கவேண்டும்.

  உள்ள பணத்திற்கு, உடனடியாக இதனை தாராளமாகச் செய்யலாம்.

 7. vedaprakash Says:

  இப்படி தமிழர்கள் வசவு பாடிக் கொண்டிருந்தால், எதையும் சாதிக்க முடியாது. ஒற்றுமையோடு இன்று மளையாளத்துக்காரர்கள்

  இந்தியாவையே அதிகாரத்துடன் ஆட்டிப் படைக்கிறார்கள். ஆந்திர-கன்னடக்காரர்களும் சாமர்த்தியமாக உயர்ந்து விட்டார்கள், ஆனால், தமிழர்கள் தாம் இப்படி தமக்குள் சண்டையிட்டுக் கொண்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  திமுக-காங்கிரஸ் வேடமிட்டுக் கொண்டு தமிழர்களை ஏமாற்றிவருவது கவனிக்கவேண்டும்.

  தமிழர்களது பணம் [சேவைகள், பொருட்கள் வாங்கும்போது] தமிழ்நாட்டை விட்டு வெளியேதான் செல்கிறது.

  ஆனால், நம் நாட்டிற்கு தீவிரவாதத்தை மட்டும் தருகின்ற காஷ்மீருக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டி அழுகிறோம். ஆனால் அந்த காஷ்மீருக்கு இந்திய சட்ட-திட்டங்கள் செல்லாது. இந்தியர்களது வரிப்பணம் செல்லும், ஆனால் வரிச் சட்டங்கள் செல்லாது! [குறிப்பு: நான் பிரிவினைவாதம் பேசவில்லை].

  ஆகவே ஏன் அவர்களுக்கு அத்தகைய “பெரிய சலுகை” தருகிறார்கள் என்றால், அவர்கள் “முஸ்லீம்கள்”, உலகளாவிய lobby செயல்படுகிறது. இந்திய அரசியலையே தாக்குகிறது.

  தமிழ் lobbyயால் ஏன் அவ்வாறு செய்யமுடிவதில்லை?

 8. vedaprakash Says:

  திருப்பதியில் ராஜபக்ஷே தரிசனம்: எழுந்தது புது சர்ச்சை
  நவம்பர் 02,2009,00:00 IST

  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5488

  இலங்கை அதிபர் ராஜபக்ஷே, திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தபோது நடந்துள்ள சம்பவங்கள், ஆன்மிக பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.

  ராஜபக்ஷே மனைவி, மகன் உட்பட 80 பேர் கொண்ட குழுவினர் திருமலைக்கு வந்து சுவு�மி தரிசனம் செய்துள்ளனர்.பாதுகாப்பு காரணங்கள் கருதி, திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பிரதான வாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேட்டுகள் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.ராஜபக்ஷே திருமலை கோவிலுக்குள் நுழையும் முன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.சுவாமி தரிசனத்திற்காக கியூவில் சென்று கொண்டிருந்த பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் கால் கடுக்க கியூவில் காத்திருந்தனர்.

  கோவில் மரியாதைப்படி, அதிபரின் குடும்பத்தினருக்கு முகத்வார தரிசனம் செல்ல அனுமதி வழங்க நிபந்தனைகள் இல்லை. ஆனால், அவருடன் வந்த 80 பேர் கொண்ட குழுவினரில், பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 40 பேர் முகத்வார வாசல் வழியாக தரிசனத்திற்குச் சென்றுள்ளனர். மீதி 40 பேர் கியூ மூலம் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.மூலவரான வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய, கோவிலுக்குள் சென்ற ராஜபக்ஷேவின் குடும்பத்தினரும் அவருடன் வந்தவர்களும் சராசரியாக 20 முதல் 30 நிமிடங்கள் கோவிலுக்குள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

  முன்னதாக வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க தேவஸ்தான போர்டின் சேர்மன் அதிகாரிகள் புடைசூழ சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு, தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேவஸ்தான நிபந்தனைகளின்படி, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள், மாநில முதல்வர்கள் போன்ற உயர் பதவி வகிப்போருக்கு மட்டும், முகத்வார தரிசன வசதிக்கு அனுமதி உள்ளது.இந்நிலையில், அடுத்த நாட்டின் அதிபருடன் வந்த 40 பேர் முகத்வார தரிசனத்திற்குச் சென்றுள்ளனர். இது முற்றிலும் நிபந்தனையை மீறிய நடவடிக்கை என்ற புகார் எழுந்திருக்கிறது.

  பாதுகாப்பு அதிகாரிகளின் அடாவடி கெடுபிடி நடவடிக்கைகள் குறித்து திருமலையில் குவிந்த பத்திரிகையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் முகத்வார தரிசனத்திற்கு அதிபருடன் வந்த பாதுகாப்பு படையினர் மற்றும் அவரது குழுவினரையும், தேவஸ்தானம் அனுமதித்து குறித்தும், ஆந்திர மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

  வேண்டுதல் நிறைவேறியது : சுவாமி தரிசனம் மற்றும் கோவில் அர்ச்சகர்களின் ஆசீர்வாதம், பிரசாதங்களை ஏற்றுக் கொண்ட பின், கோவிலுக்கு வெளியே நிருபர்களை சந்தித்த ராஜபக்ஷே, தன் மனதில் இருந்த கருத்தைக் கூறி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

  அவர் கூறியதாவது:கடந்த ஆண்டு திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தேன். இலங்கையில் விடுதலைப் புலிகளால் எழுந்துள்ள பிரச்னைகள் ஓய வேண்டும், அதற்கான தீர்வும் காணப்பட வேண்டும் என, அப்போது பிரார்த்தித்துக் கொண்டேன். இலங்கையில் தற்போது விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டு அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரும் ஓய்ந்துள்ளது. எனது வேண்டுதல் இப்போது நிறைவேறியுள்ளது. திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் கருணையால் இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. அங்கு வாழும் மக்கள் அமைதியுடன் நலமுடன் வாழ இந்தப் பயணத்தில் பிரார்த்தித்துக் கொண்டேன்,இவ்வாறு ராஜபக்ஷே கூறியுள்ளார்.இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் திருமலையில் அரசியல் பேசுவது இல்லை. பேசவும் விரும்ப மாட்டார்கள். ஆனால், தன் பிரார்த்தனையை வேறுவிதமாக ராஜபக்ஷே வெளியிட்டிருக்கிறார்.

 9. vedaprakash Says:

  இன்றைய “விடுதலை” (02-11-2009, பக்கம்.3) மேலேயுள்ளதை அப்படியே போட்டு தலைப்பை மட்டும் மாற்றியுள்ளது:

  திருப்பதியில் ராஜபக்சே ஏடு கொண்டலவாடுவிடம் வேண்டுதல்
  ஒரு வேண்டுதலில் புலிகள் அழிப்பாம்! இன்றைய வேண்டுதலில் அழியப் போவது…?

  திருப்பதி, நவ. 2_ இலங்கை அதிபர் ராஜபக்சே, திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தபோது நடந்துள்ள சம்பவங்கள், ஆன்மிக பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. ராஜபக்சே மனைவி, மகன் உட்பட 80 பேர் கொண்ட குழுவினர் திருமலைக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். பாதுகாப்பு காரணங்கள் கருதி, திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பிரதான வாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கதவுகள் ஒரு மணி நேரம் மூடப்பட்டன. ராஜபக்சே திருமலை கோவிலுக்குள் நுழையும் முன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்-திற்குள் கொண்டு வரப்பட்டது.சுவாமி தரிசனத்திற்-காக கியூவில் சென்று கொண்டிருந்த பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் கால் கடுக்க கியூவில் காத்திருந்தனர்.

  கோவில் மரியாதைப்படி, அதிபரின் குடும்பத்-தினருக்கு முகத்வார தரிசனம் செல்ல அனுமதி வழங்க நிபந்தனைகள் இல்லை. ஆனால், அவருடன் வந்த 80 பேர் கொண்ட குழுவினரில், பாதுகாப்பு அதிகாரி-கள் உட்பட 40 பேர் முகத்வார வாசல் வழியாக தரிசனத்திற்குச் சென்றுள்ளனர். மீதி 40 பேர் கியூ மூலம் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். மூலவரான வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய, கோவிலுக்குள் சென்ற ராஜபக்சே-வின் குடும்பத்தினரும் அவருடன் வந்தவர்களும் சராசரியாக 20 முதல் 30 நிமிடங்கள் கோவிலுக்குள் இருந்துள்ளனர்.

  முன்னதாக வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க தேவஸ்தான போர்டின் சேர்மன் அதிகாரிகள் புடைசூழ சிறப்பான வரவேற்-பளிக்கப்பட்டு, தரிசன ஏற்பாடுகள் செய்யப்-பட்டுள்ளன.தேவஸ்தான நிபந்தனைகளின்படி, நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் போன்ற உயர் பதவி வகிப்போருக்கு மட்டும், முகத்வார தரிசன வசதிக்கு அனுமதி உள்ளது. இந்நிலையில், அடுத்த நாட்டின் அதிபருடன் வந்த 40 பேர் முகத்வார தரிசனத்திற்குச் சென்றுள்ளனர். இது முற்றிலும் நிபந்தனையை மீறிய நடவடிக்கை என்ற புகார் எழுந்திருக்கிறது. பாதுகாப்பு அதிகாரிகளின் அடாவடி கெடுபிடி நடவடிக்கைகள் குறித்து திருமலையில் குவிந்த பத்திரிகையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரி-வித்துள்ளனர். மேலும் முகத்வார தரிசனத்திற்கு அதிபருடன் வந்த பாதுகாப்பு படையினர் மற்றும் அவரது குழுவினரையும், தேவஸ்தானம் அனுமதித்-தது குறித்தும், ஆந்திர மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இதுகுறித்து தேவஸ்தான அதிகாரி-களின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்-து உள்ளனர்.

  சுவாமி தரிசனம் மற்றும் கோவில் அர்ச்சகர்களின் ஆசீர்வாதம், பிரசாதங்களை ஏற்றுக் கொண்ட பின், கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராஜபக்சே, தன் மனதில் இருந்த கருத்தைக் கூறி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

  அவர் கூறியதாவது:கடந்த ஆண்டு திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தேன். இலங்கையில் விடுதலைப் புலிகளால் எழுந்துள்ள பிரச்னைகள் ஓய வேண்டும், அதற்கான தீர்வும் காணப்பட வேண்டும் என, அப்போது பிரார்த்தித்துக் கொண்டேன். இலங்கையில் தற்போது விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டு அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரும் ஓய்ந்துள்ளது. எனது வேண்டுதல் இப்போது நிறைவேறியுள்ளது. திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் கருணையால் இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. அங்கு வாழும் மக்கள் அமைதியுடன் நலமுடன் வாழ இந்தப் பயணத்தில் பிரார்த்தித்துக் கொண்டேன். இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் திருமலையில் அரசியல் பேசுவது இல்லை. பேசவும் விரும்ப மாட்டார்கள். ஆனால், தன் பிரார்த்தனையை வேறுவிதமாக ராஜபக்சே வெளியிட்டிருக்கிறார்.

 10. vedaprakash Says:

  இதோ, வீரமணியே இன்று தலையங்கத்தில் (03-11-2009) சொல்லியிருப்பதைப் பாருங்கள்:

  ராஜபக்சேவும், ஏழுமலையானும்

  திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினரு-டனும், ரதகஜ துரக பதாதிகளுடனும் (80 பேர்கள் கொண்ட குழு) திருப்பதி வந்து வெங்கடாசல-பதியைத் தரிசித்தனர் என்ற செய்தி ஏடுகளில் தடபுடலாக வெளிவந்தது.

  இவர்களின் வருகையால் பக்தர்கள் பல மணிநேரம் காத்துக் கிடக்க நேர்ந்தது என்ற தகவலும் கசிந்துள்ளது.

  கோயில் மரியாதைப்படி அதிபரின் குடும்பத்-திற்கு முகத்பார தரிசனம் செய்ய அனுமதிக்-கப்-பட்டதாம்.

  அதிபருக்காக ஆகமங்களுக்கு விரோதமாக விஷயங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது.

  கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி என்பது வேறு இடத்தில் கேட்கப்-பட்ட பாடல்.

  கையில் காசில்லை என்றால் கடவுளிடத்திலும் வேலை நடக்காது என்பது நடைமுறையாகும்.

  ராஜபக்சே ஒன்றும் இந்து மதக்காரர் அல்லர். பவுத்த மதத்தைச் சார்ந்தவர். இன்னொரு மதக்-காரரை எப்படி இந்து மதக் கோயிலில் நுழைய விடலாம் என்ற கேள்வி எழும். பவுத்தமும், இந்து மதத்தில் ஒரு பிரிவு என்று வளைத்துப் பேசியதன் அடிப்படையில் இது நடந்திருக்கிறது என்று இந்து வகையறாக்கள் சமாதானம் கூறக்கூடும்.

  உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், பவுத்தர்கள் தங்களை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. ஒருமுறை அத்வானி அவ்வாறு சொல்லிவிட்டு நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

  அகிம்சையை வலியுறுத்திய புத்தர் நெறியை மதமாக்கி, தமிழர்களின் ரத்தத்தை புத்தர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்கு ஒரு கேடு-கெட்ட நிலை சிங்கள நாட்டில் நடை-பெற்றதை யாரும் மறந்திருக்க முடியாது.

  நெறி மதமானால், அது வெறியாகிவிடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். ஹிந்து மதத்தின் வருணக் கோட்பாடுகளையும், சடங்-காச்-சாரங்களையும் தலைகீழாகப் புரட்டியடிக்கத்-தான் கவுதம புத்தர் புதிய நெறிமுறைகளைக் கொடுத்தார்.

  மகாவிஷ்ணுவுக்கு உள்ள பல பெயர்களில் வெங்கடேசனும் ஒன்று. அந்த மகாவிஷ்ணு அவதாரம் எடுத்துதான் கொலைகள் பலவற்றை நிகழ்த்தியிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

  அப்படிப் பார்க்கப் போனால் பவுத்த நெறிக்கு எதிர்மாறான தத்துவத்தைக் கொண்டதுதான் திருப்பதி ஏழுமலையான் கோயில். புத்தரை ஆயுதந்-தூக்கியாக மாற்றி அமைத்துக்கொண்ட சிங்கள இனத்தின் அதிபர் அந்தக் கண்-ணோட்டத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க வந்தால் வியப்பில்லை.

  திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துச் சென்றுவிட்ட பிறகுதான், இலங்கையில் விடு-தலைப்புலிகளை தம்மால் ஒழித்துக்கட்ட முடிந்ததாக ராஜபக்சே கூறியிருக்கிறார்.

  அப்படியென்றால், ஏழுமலையானைப் பகுத்-தறிவுக் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்க-வேண்டும் என்பது ஒன்று; மனிதாபிமானக் கண்-ணோட்டத்தில் எப்படிக் காணவேண்டும் என்பது இன்னொன்று; தமிழர்கள் நோக்கில் எப்படிக் கணிக்கவேண்டும் என்ற மூன்றாம் நிலை.

  பொதுவான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக இருந்தாலும் மக்களைக் கொன்று குவித்திட கடவுள் பக்தி பயன்பட்டு இருக்கிறது. கருணை-யானவன் கடவுள் என்னும் பிரச்சாரம் எவ்வளவு மோசடியானது என்ற முடிவுக்காவது குறைந்த-பட்சம் வரவேண்டாமா? என்பதுதான் நமது கேள்வி.

  இதில் இன்னொரு சூட்சமும் குடிகொண்டி-ருக்கிறது. தாம் செய்த மனிதப் படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) கடவுள் பக்தி என்னும் மூடு திரைமூலம் மறைக்கும் ஒரு தந்திரமும் இதில் மறைந்திருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

  இலங்கையில் நடைபெறும் கலவரங்களுக்கான பரிகாரம் ஒன்றை ஆன்மிகவாதிகள் கூறினார்கள். சிறீரங்கத்தில் உள்ள ரெங்கநாதன் கோயில் கோபுரம் வாஸ்து முறையில் சரியானபடி அமையவில்லை.

  அதைச் சரி செய்ய கொழும்பில் ஒரு அரங்கநாதன் கோயிலைக் கட்டவேண்டும் என்று சொன்னார்களே நினைவிருக்கிறதா?

  எந்தப் பிரச்சினையானாலும் அதனை பார்ப்பனியத்தின் இலாபமாக _ சுரண்டலாக மாற்றும் ஒரு சூழ்ச்சி _ அடங்கியிருப்பதை ஆறாவது அறிவைக் கொண்டு சிந்திப்பார்களாக!

 11. vedaprakash Says:

  திருச்செந்தூர் கோயிலில் ராஜபட்ச தங்கை, மைத்துனர் தரிசனம்

  தினமணி 08-11-2009
  First Published : 08 Nov 2009 12:37:57 AM IST

  Last Updated : 08 Nov 2009 11:49:51 AM IST

  திருச்செந்தூர், நவ. 7: இலங்கை அதிபர் ராஜபட்சவின் தங்கை நிருபமா மற்றும் அவரது கணவர் திருக்குமர நடேசன் உள்ளிட்ட உறவினர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சனிக்கிழமை இரவு வந்தனர். அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

  தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜபட்சவின் தங்கை கணவர் திருக்குமர நடேசன் கடந்த 22 ஆண்டுகளாக திருச்செந்தூருக்கு தரிசனம் செய்ய வந்து செல்கிறார்.

  இந்நிலையில், அவர் தனது மனைவி நிருபமா மற்றும் உறவினர்களுடன் சனிக்கிழமை இரவு திருச்செந்தூர் வந்தார்.

  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று சண்முகர் அர்ச்சனை செய்தார். பின்னர், அனைவரும் தனியார் விடுதிக்கு இரவு 8.30 மணிக்கு வந்தனர்.

  இந்நிலையில், அவருக்கு நாம் தமிழர் இயக்கம் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, டிஎஸ்பி நடராஜமூர்த்தி தலைமையில் கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால், யாரும் போராட்டம் செய்ய வரவில்லை.

  ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூரில் திருக்குமர நடேசன், நிருபமா ஆகியோர் சிறப்பு யாகம் நடத்த உள்ளனர்.

 12. vedaprakash Says:

  என்னுடைய பதில்:

  கருத்துக்கள்

  முன்பு வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்கள், இப்பொழுது அமைதி காண்கின்றனரே, ஆச்சரியம்தான்? ஒருவேளை தமிழகத்தில் வந்து தமிழ் கடவுளைக் கும்பிட்டதால் மௌனம் காக்கிறார்கள் போலும்! “ராவணனின் சகோதரி, மைத்துனர்” என்றெல்லாம் சொல்லவில்லை! புகைப்படங்களும் வெளியாகவில்லை!”திராவிட நாட்டில், ஆரியர்கள்” யாகம் செய்கின்றனர் என்றும் சொல்லவில்லை!
  By Vedaprakash
  11/8/2009 2:03:00 PM

  http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=151440&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=%u0ba4%u0bbf%u0bb0%u0bc1%u0b9a%u0bcd%u0b9a%u0bc6%u0ba8%u0bcd%u0ba4%u0bc2%u0bb0%u0bcd+%u0b95%u0bcb%u0baf%u0bbf%u0bb2%u0bbf%u0bb2%u0bcd+%u0bb0%u0bbe%u0b9c%u0baa%u0b9f%u0bcd%u0b9a+%u0ba4%u0b99%u0bcd%u0b95%u0bc8%2c+%u0bae%u0bc8%u0ba4%u0bcd%u0ba4%u0bc1%u0ba9%u0bb0%u0bcd+%u0ba4%u0bb0%u0bbf%u0b9a%u0ba9%u0bae%u0bcd

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: