அயல்நாட்டு கிருத்துவன் ஆடினால் ரசனை, அயல்நாட்டு இந்து ஆடினால் கிண்டல், நக்கல்!

அயல்நாட்டு கிருத்துவன் ஆடினால் ரசனை, அயல்நாட்டு இந்து ஆடினால் கிண்டல், நக்கல்!

கிருத்துவர்கள் பரத நாட்டியம் ஆடுகிறார்கள். ஒரு கல்லூரி வைத்து ஆடி, பட்டமும் தருகிறார்கள். சில சமயங்களில் பாவம் ஏசு அல்லது கிருஸ்து அல்லது ஏசுகிருஸ்துவையே ஆடவைத்துவிடுகின்றனர்!

http://vaticanculturation.wordpress.com/2009/10/25/bharata-natyam-christians-and-dk-atheists-the-intriguing-nexus/

பிறகென்ன, இந்த பார்வை?

கும்பகோணத்தில் குதித்தாடும் குடுமிகள் இப்பொழுது ஒரு கதையைக் கட்டி அவிழ்த்து விட்டுக் கொண்டி-ருக்கிறார்கள்

கிருஷ்ண பரமாத்மா உலகம் பூராவும் பரவி விட்டார். கிருஷ்ண பக்தர்கள் உலகெங்கும் தோன்றி விட்டார்கள் – ஹரே கிருஷ்ணா இயக்-கம் உலகளாவிய இயக்கம் என்ற பரப்புரைதான் அது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்-களுள் ஒருவரும், கேரள மாநில முதல் அமைச்சருமான ஈ.கே.நயினார் போப்பை சந்தித்தபோது கீதையைத் தானே கொண்டு போய்க் கொடுத்-தார்? போதும் போதாததற்கு ஊடகங்-கள் பார்ப்பனர்களின் கைகளில்-தானே இருக்கின்றன.

அள்ளிவிட அளவு வேண்டாமா? ஊதிவிட ஊரார்தான் வேண்டுமா?

தந்தை பெரியார்தான் நறுக்-கென்று சொன்னார் -_ முட்டாள்கள் என்ன இந்தியாவுக்குத் தான் சொந்-தமா? உலகம் பூராவும் இருக்கத்தான் செய்வார்கள் என்றார். அந்தப் பட்-டியலைச் சேர்ந்த சில கிறுக்கர்கள் கும்பகோணம் வந்துள்ளார்களாம்!

கோயில் நகரம் கும்பகோணம் என்று கேள்விப்பட்டு வந்திருக்கிறார்களாம்! குடந்தையில் பரதம் வேறு கற்றுக்-கொள்ளப் போகிறார்களாம்! கோயில், குளம் என்று இந்த அய்ந்து பேரும் பரதம் ஆடுகிறார்களாம், – பஜனை பாடு-கிறார்களாம்!

வேடிக்கை பார்க்க கேட்கவும் வேண் டுமா? அதிசயமாக இந்தப் பஞ்ச பாண் டவர்களை மக்கள் பார்க்கின்றனராம்.

கும்பகோணம் கவரத் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண் டிருக்கிறார்களாம். சொந்தமாகவே சமைத்துக் கொள்கிறார்களாம்.

கிருஷ்ண பக்தர்கள் அல்லவா? கோயில், குளங்கள் என்று சுற்றித் திரிகிறார்களாம்.

இதே கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சி -இது 1936-ஆம் ஆண்டு நடந்த ஒன்றாகும். தினமணி (6.9.1995) அதை வெளியிட்டிருந்தது.

5.9.1936 சனிக்கிழமை குடந்தை ஆலயத்தில் பஜனைக் கோஷ்டி ஹரி சனங்களா? உள்ளே பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

(நமது செய்தியாளர்)

கும்பகோணம், செப்.4. நேற்று இரவு இந்நகர் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி கோயிலில் சுமார் 15 பேர் பஜனை செய்து கொண்டு மேலண்டை கோபுர வாசல் வழியாய் உள்ளே வந்தார்கள். இவர்களைக் கண்டவுடன், அங்கிருந்த வைதீக இந்துக்கள் பயந்து, அவர்களை அணுகி, நீங்கள் யாரென்று கேட்கவே, தாங்கள் நீலகிரி வாசியென்றும், ஆலயப் பிரவேச உரிமை உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் சொல்ல, நிச்சயமாய் அவர்-கள் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவரும் இந்நகரில் தெரிந்து கொள்ள முடியாததால் உள்ளே போக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு மேல் அவர்கள் வெளியேறிவிட்டார்கள். ஸ்ரீகும்பேசுவரர் ஆலயத்திலும் இப்படியே தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1936 இல் தடை. 2009 இல் அனு-மதி என்றால் இதற்குக் காரணம் என்ன? 73 ஆண்டுகளில் தமிழ் நாட்-டில் என்ன நடந்தது என்று எல்-லோருக்கும் தெரியும்.

இந்த நேரத்தில் இன்னொன்றைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்த-மானது.

வியாசர் விருந்து என்று பாரதம் குறித்தும் சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பில் இராமாயணத்தைப்-பற்றியும் நூல் வெளியிட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கிருஷ்ண-னைப் பற்றிபல விதமாகப் பேசும் பாகவதம் பற்றி ஏன் நூல் எழுத-வில்லை என்ற கேள்வி நியாயமான-தாகும்.

அதற்கான காரணத்தை ஆச்சாரி-யாரே கூறியிருந்தார் அதனைக் கல்கி இதழே கூட வெளியிட்டுள்ளது.

வியாசர் விருந்து என்ற தலைப் பிலும், சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் கல்கியில் தொட ராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர் களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுத லாமே என்று சதாசிவம் தமது யோசனையைக் கூட ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும். சதாசிவம்! எனக்கு பாகவதத்தை எழுதுவதில் நாட்டமில்லை. அதில் பகவானின் லீலை களும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன. ராமாயணம், மகாபாரதம் போன்று தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டங் களாக அமையவில்லை. மனிதனுக்கு தார்மீக நெறிகளில் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் இந்த இதிகாசங்கள் ஊட்டுவது போல பாகவதத்தில் நான் காணவில்லை. (கல்கி4.10.2009.பக்.72)

ராஜாஜியாலும் பகவான் கிருஷ்-ணனின் லீலைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த அள-வுக்குக் காமரசம் ததும்பும் கதா-நாயகனாக கிருஷ்ணன் உருவாக்கப்-பட்டிருந்தான்.

இராமாயணத்தைப் பற்றியும், பாரதத்தைப் பற்றியும் ஆச்சாரியார் கூறிய கருத்துகளை பகுத்தறி-வாளர்கள் ஏற்கவில்லை என்பது வேறு விஷயம். ஆச்சாரியாராலேயே கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்க முடியவில்லை என்பதுதான் நமக்கு முக்கியமானது.

ஒரு பக்கத்தில் ஹரே கிருஷ்ணா இயக்கம் உலகம் முழுவதும் கிளை பரப்பிப் பரவியிருக்கிறது என்று பார்ப்பனர்களில் ஒரு சாரார் துள்ளிக் குதித்தாலும், அதனை ஜீயர் போன்றவர்கள் ஏற்றுக் கொள்-கிறார்களா என்பதும் முக்கியமானது.

இந்தத் தகவலையும் கல்கி (11.4.1982) ஏடுதான் பேட்டி கண்டு வெளியிட்-டது.

கேள்வி: ஹரே கிருஷ்ணா என்று ஓர் இயக்கம் அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவி வரு கிறதே. இந்தியாவில் கூட இவ்வியக் கத்தினர் சுற்றுகிறார்களே….

ஜீயர் பதில்: நாமம் போட்டுக் கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, காவி உடுத்தி இங்கேயும் ஒருத்தன் வந்தான். வாயெல்லாம் மந்திரங்கள். பெருமாள் பெயரையே சொல்லிக் கொண்டு இருக்கான். பூணூல் போட்டிருக்கான். உட்காரச் சொல்லி சாப்பாடு போட்டேன். உபசரித்து அனுப்பினேன். அவ்வளவுதான். பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் பிராமணனாக ஆகிவிட-மாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுவே சாஸ்வதம். நல்ல காரியங்கள் செய்து பகவான் பெயரைத் தியானிக்கிறதனாலே அவனது ஜாதிக்குள் உயர்ந்தவனா-கிறான். என்றார் ஜீயர்.

கும்பகோணத்தில் குதியாட்டம் போடும் இந்த கிருஷ்ண பக்தர்கள் குடுமி வைத்துக் கொண்டிருந்தாலும், நாமம் தரித்துக் கொண்டாலும் ஏன், பூணூலை போட்டுக் கொண்டாலும் கூட – பிறப்பால் அவர்கள் எதுவோ, அதுவேதான் – இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்.

Advertisements

2 பதில்கள் to “அயல்நாட்டு கிருத்துவன் ஆடினால் ரசனை, அயல்நாட்டு இந்து ஆடினால் கிண்டல், நக்கல்!”

 1. Balu Natarajan Says:

  மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • vedaprakash Says:

   முன்னமே பதிவு செய்துள்ளபடி, இப்பொழுதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கள். அதை விடுத்து, இப்படி போட்டத்தையே திரும்ப-திரும்ப போட்டு தனி நபருக்காக விளம்பரம் செய்ய வேண்டாம். மக்கள் அவதியுறும் போது, மற்றவர்கள் சித்தாந்தம் பேசி பயனில்லை. மேலும் குறிபிட்ட நபருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தகுந்த முறையில் பதில் சொல்லாமல், கிஞ்சித்தும் இங்கிதம் இல்லாமல் நான்கைந்து முறை இணைப்பைத் துண்டித்து விளையாட்டுக் காட்டினார். இதெல்லாம் அழகில்லையே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: