திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம்: அமைச்சர் பொன்முடி

திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம்: அமைச்சர் பொன்முடி
First Published : 03 Nov 2009 01:53:17 AM IST

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=148853&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (இடமிருந்து 2-வது). (வலது படம்) இலவச திருமணம் செய்து

விழுப்புரம், நவ. 2:   திராவிட இயக்கத்தின் மறுபதிப்புதான் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்.  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணித் திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் அமைச்சர் க.பொன்முடி பேசியது:  மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு.  பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார்.  மனித நேயத்தை வளர்ப்பதில் மேல்மருவத்தூர் இயக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது.  பெண்களுக்கு இக் கோயிலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்கள் கூட பூஜை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்.  அதைத்தான் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் செய்து வருகிறது.  அனைவரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேல் மருவத்தூரில் அது நடத்திக் காட்டப்பட்டு வருகிறது.  விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி, லட்சுமி பங்காரு, நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ், அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  27 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வண்டிகள், மாணவர்களுக்கு லேப்டாப், காது கேட்கும் கருவிகள், இஸ்திரி பெட்டி, தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.

—————————————————————————————————————————————————

1. கருப்புப் பரிவார் கூட்டங்களின் பொய்கள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன.

2. ராமசாமி நாயக்கரின் இந்து-விரோத நாத்திகத்தில் ஆன்மீகம் எங்கே வந்தது வெங்காயம்?

3. “ஆதிபராசக்தி பக்தர்கள்” ஏமாளிகளாக இருந்தால், அத்தகைய “வெங்காயங்களை” நம்பலாம்.

4. ராமசாமி நாயக்கர் உயிரோடு இருந்திருந்தால், ஒருவேளை இந்த இயக்கத்தையும் எதிர்த்திருப்பார்.

5. “பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்“! இப்படியெல்லாம் சொன்னால் எப்படி? பெரியார் மணியம்மையை இரண்டாம் தாரமாக மணந்ததால்தான் “கண்ணீர் துளிகள்” தோன்றின. பிறகு  கருணாநிதியோ அவரையும் மிஞ்சும் வகையில் மூன்று பெண்களை மணம் புரிந்து கொண்டுள்ளார். பிறகெப்படி பெண்களின் “சம உரிமை” வருகிறது, அளிக்கப் படுகிறது?

6. “மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு‘ என்று அவர்கள் சொல்லவேண்டும். பிறகு அதை நிரூபிக்கவேண்டுமானால், பெரியார்-அவர் மனைவியர், கருணாநிதி-அவர் மனைவியர் என்று வரிசையாக சன்னதிகள் திறந்து வைத்து “திராவிட ஆன்மீகத்தில்” ஐக்கியம் ஆகலாம்.

7. “பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார்“. பொன்முடி, மிகவும் கில்லாடி. ஏற்கெனவே, கலைஞரை “கடவுள்” ஆக்கிவிட்டதால், பெரியாரை பங்காருக்கு இணையாக வைக்கிறார்![ஞாபகம் இருக்கிறதா, பெரியார் படம் பலமுறை மாற்றி எடுக்கப்பட்டது]

8. “அனைவரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேல் மருவத்தூரில் அது நடத்திக் காட்டப்பட்டு வருகிறது“. இதென்ன அங்கு “அர்ச்சனையா” நடக்கிறது? தெரியவில்லையே? பிறகு ஏன் ஆண்களில் பங்காரு மட்டும் அந்த உரிமையை வைத்துக் கொண்டுள்ளார்?

9. அதுசரி. இந்த கோவில் “இந்து அறநிலை துறையில்” வருகிறதா இல்லையா?

10. நெடுஞ்செழியன் மனைவி இங்கு வந்து சாமி கும்பிட்டார். ஏன் வீரமணியின் மனைவி மோஹனா, கருணாநிதி மனைவியர் முதலியோர் அங்கு வந்து சாமி கும்பிடுவதில்லை? இல்லை, அவர்களே வந்து அத்தகைய “மறுபதிப்பான ஆன்மீகத்தில்” ஏன் திளைக்கவில்லை?

Advertisements

ஒரு பதில் to “திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம்: அமைச்சர் பொன்முடி”

 1. vedaprakash Says:

  நண்பர்களே, பொன்முடி வாலியின் தலமையில் நடந்த “கலைஞர் கருத்தரங்க”த்தில் அண்ணா “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார்.

  ஆனால், தான் “ஏழையின் சிரிப்பில் கலைஞரைக் காண்போம்” என்றார்.

  கருணாநிதியோ, “கடவுள் என்று ஒருவர் இருந்தால், எனக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும்”, “கடவுளை நான் எற்கிறேனா இல்லையா என்பதல்ல பிரச்சினை. கடவுள் என்னை ஏற்கும்படி நடந்து கொள்கிறாரா என்பதே இப்போதைய பிரச்சினை. எனவே கடவுள் ஏற்கும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்” (ஜூலை.2008), என்றெல்லாம் சவால் விட்டது ஞாபகம் இல்லையா?.

  ஆகவே தான் எமனை வெல்லும் சிவனாக, இல்லை, சிவனாகவே மாறத் துடிக்கும் கருணாநிதி! (சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம்).

  ஆகவே பொன்முடி அவ்வாறு பொடிவைத்து சொல்லியுள்ளார்!கருணாநிதியும் நாத்திகக் கடவுள் / திராவிடத் தெய்வம் ஆகத் துடிக்கிறார்!

  தினமணியில் பதித்தது [03-11-2009]:
  http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=148853&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: