“காசியின் நிஜமுகம் நிரந்தர முகமா?” அல்லது “காசி நகரத்தின் மறுபக்கம்”

“காசியின் நிஜமுகம் நிரந்தர முகமா?” அல்லது “காசி நகரத்தின் மறுபக்கம்”
நிஜம் நிகழ்ச்சியில் சன் செய்திகள் 06-11-2009 அன்று இரவு 10 முதல் 10.30 வரை

“காசி நகரத்தின் மறுபக்கம்”, “மரணத்திற்காக காத்திருக்கும் மனிதர்கள்”, “விடாமல் எரியும் சடலங்கள்”, “அலற வைக்கும் அகோரிகள்”, “திகிலூட்டும் போதை உலகம்” “காசியின் நிஜமுகம் நிரந்தர முகமா?” என தொடர்ந்து “முக்கியமான செய்திகள்” போல காட்டிக் கொண்டிருந்தது “சன்-செய்திகள்” தொலைக்காட்சி.

நான்கு நாட்களாக காட்டப்பட்டுவரும் நிகழ்ச்சி, அவற்றின் தொகுப்பே இந்த நிகழ்ச்சி என்றபீடிகையுடன் ஆரம்பித்தது “சன் செய்திகளின்” – “நிஜம்”. நிகழ்ச்சி பார்க்கும்போதே தெரிந்தது, நிகழ்ச்சிற்கும் அதில் பேட்டி காண்பவர்கள் சொல்பவர்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள், பேட்டிகண்டவர்களின் பேச்சுகள் வெட்டப்பட்டுள்ள நிலை, “சன் செய்தியாளர்கள்’ கொடுக்கும் தவறான விளக்கம் முதலியன.

விசித்தரங்களின் நகரம்: இந்துமத நம்பிக்கையாளர்கள் ஒருதடவையேனும் காசிக்குச் செல்வதை தமது கடமையாக, பாக்கியமாகக் கொண்டுள்ளர்கள். ஆனால், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் திடுக்கிடும் வகையில் உள்ளன. கூட்டங்கள் அதிகமாக இருந்தால் குற்றங்கள் அதிகமாகுமா? விசித்தரங்களின் நகரம் என்றெல்லாம் விளக்கம் அளிக்கப் பட்டது!

கங்கையில் சடலங்கள்: கங்கையில் சடலங்கள் மிதக்கின்றன. சடலங்கள் வீசியெரியப்படுகின்றன. சடலம் எரிந்த பிறகு, ஒரு பகுதியை ஞாபகார்த்தமாக, இறந்தவரது மகன் கங்கை நீரில் எரிகிறார். அதை “சடலங்கள் வீசியெரியப்படுகின்றன” என்று விவரிக்கப் படுகிறது. கேமரா இங்கும் இங்குமாக திரும்பி அல்லது “எடிட்டிங்” செய்த “உடல்கள்| மிதக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன!

கங்கைநதி ஓடிக்கொண்டே இருக்கிறது. பல இடங்களிலிருந்து கழிவுகளை ஏற்று வருகிறது. அக்கழிவுகள் எல்லாம் ஆறறிவு படைத்த மக்களது பங்களிப்பேயாகும். பலநேரங்களில் நீர்பெருக்கு திடீரென்று அதிகமாகும்போது, ஆற்றில் நீராடும், அருகில் இருக்கும் மனிதர்கள்-விலங்குகள் ஆற்றில் அடித்து செல்வது சகஜம். அந்த சடலங்கள் கரையில் ஒதுங்கும். ஆயிரக்கணக்கான பிணங்கள், ஆயிரக்கணக்கான கி.மீ தூரங்களிலிருந்து எடுத்துவரப்பட்டு, அங்கு எரிக்கப் படுகின்றன. அத்தகைய 24 மணிநேர “சடலம் எரிக்கும் பணியில்” கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

அகோரிகள் மனித மாமிசம் சாப்பிடுவது: “கும்பல் கும்பலாக உட்கார்ந்திருந்தனர். நள்ளிரவு தொடங்கியதும், அகோரிகள் தவம் செய்யத் தொடங்கினர். நரமாமிசத்தை சாப்பிடுகின்றனர்” என்ற பீடிகையுடன், ஒரு அகோரி ஒரு துண்டத்தை எடுப்பதாகக் காட்டுகின்றனெரேத் தவிர தின்பதாக இல்லை. ஆனால் விவரிப்பவர், ஏதோ காசியில் எல்லொரும் மாமிசத்தை உண்பது போல நடு-நடுவே கூறுகிறார்.

உண்மைநிலையை ஏற்கெனவே ஸ்வாமி ஓம்கார் என்பவர் கீழ்கண்ட தளங்களில் பதிவு செய்துள்ளார்:
http://vediceye.blogspot.com/2009/02/blog-post_19.html
http://vediceye.blogspot.com/2009/02/blog-post_17.html
http://vediceye.blogspot.com/2009/02/blog-post_9628.html
ஆகவே, ஒருகுறிப்பிட்ட கூட்டத்தின் பழக்கத்தை மற்றவர்கள் எல்லோரும் கடைபிடிக்கிறார்கள் அல்லது காசிநகரமே செய்கிறது அல்லது இந்துக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதுபோலச் சித்தரிப்பது சரியானதல்ல.

மரணத்திற்காக காத்திருக்கும் மனிதர்கள்: வயதானவர்கள் தங்களது வாழ்நாட்களின் இறுதியை காசியில் கழிக்கவேண்டும் என்று அங்கு வந்து மடங்களில் தங்கி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் விவரிப்பதோ, “வாழ்வை வெறுத்தவர்கள் நிறைய பேர்கள் மடங்களில் இருந்தனர்”. இதை “கங்கையில் சடலங்கள்” “விடாமல் எரியும் சடலங்கள்”, “அலற வைக்கும் அகோரிகள்”, “திகிலூட்டும் போதை உலகம்” என்றவற்றுடன் சேர்த்து சொல்லி, ஏதோ அந்த வயதான பெண்மணிகள் எல்லாம் இறந்தவுடன், அவர்கள் உடல்கள் நீரில் வீசப்படும் அல்லது அகோரிகள் வருத்து / வறுத்து சாப்பிட்டுவிடுவர் அந்த உன்மத்தநிலை அடைவதற்கு கஞ்சா அடிக்கின்றனர் என்று காட்சிகளை இடை-இடையே காண்பித்து “திகில் படம்” போன்று காட்டினார்கள்! இது முற்றிலும் தவறானச் சித்தரிப்பாகும்.

மேலும் தம்புசாமி மற்றும் நாராயண ஐயர் என்ற இரு “சாஸ்திரிகளிடம்” பேட்டி கண்டபோது, அவர்கள் உண்மையினை நன்றாகவே எடுத்துச் சொல்லியுள்ளார்கள்:

தம்புசாமி: “அங்கு மரணிப்பது மங்கலத்தை உண்டாக்குவதாகும். ஆகையால்தான், இங்கு வயதானவர்கள் வந்து தங்கி தங்களது கடைசி நாட்களைக் கழிக்கின்றனர்” என்று இவர் விளக்குகிறார். ஆனால், அதிலுள்ள கருத்தை எடுத்து விளக்காமல், எல்லாஒரும் சாக அங்கு வருகிறார்கள், வந்தால் அவர்களது உடல்கள் ஒன்று நதியில் எறியப்பட்டு கழுகு, முதலை சாப்பிடும் இல்லை அகோரிகள் நடு இரவில் கஞ்சா போட்டு போதையுடன் வந்து எரித்து சுட்டு சாப்பிட்டி விடுவர் என்பதுபோல “படம் காட்டுகின்றனர்”!

நாராயண ஐயர்: இவர் உள்ளநிலையை இவ்வாறாக, “காபாலிக மதத்தவர் தங்களது தவறான அணுகுமுறையில் அத்தகைய தேவையற்ற பழக்கங்களைக் கடைப் பிடிக்கின்றனர். ஆன்மீகத்திற்கோ, காசிக்கோ, விஸ்வநாதருக்கோ இவர்களது செயல்களுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. அத்தகைய தீய பழக்கத்தை திருத்தத் தான் ஆதிசங்கரர் காபாலிகர்களை மாற்றினார். இருப்பினும் சிலர் அறியாமையால் அவ்வாறு செய்கிறார்கள். அது குறுக்குவழியில் போகும் பாதைதான்””, எடுத்துக் காட்டியுள்ளார்.

இருப்பினும் “சன் செய்தி வல்லுனர்கள்” அதையும் காட்டி திரித்துக் கூற முடிவு செய்தது எநன்றாகவே தெரிகிறது.

அவர்கள் பகுத்தறிவிற்கு தென்பட்டதெல்லாம் அவையே: காசியில் சுற்றித் திரிந்ததில் கண்ணில் தெரிந்ததும் காசியின் போதை உலகம். அனைவர்களும் போதையில் உள்ளார்கள். உன்மத்த நிலையை அடையவே அவர்களது முயற்ச்சி. கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்காக இளைஞர்கள் அங்கு வருகின்றார்கள்., என்றெல்லாம் விளக்கம் அளிக்கிறார்கள். அத்தகைய உன்மத்த நிலையில் அவர்களும் வந்துள்ளதால் அவர்களுக்கு “ஆன்மீகத்திற்கோ, காசிக்கோ, விஸ்வநாதருக்கோ இவர்களது செயல்களுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை” என்று சொன்னதும் விளங்கவில்லை, எந்த நல்லதும் கண்களுக்குத் தெரியவில்லை!

சிலும்புகள் விற்கப்படுகின்றன!

கஞ்சா உருணைகள் விற்கப்படுகின்றன. கஞ்சா அடிக்கிறார்கள்!

பாங்கு கடைக்கார், கஞ்சா புகைப்பவர் – இப்படி!

அகோரிகள் கஞ்சா அடிக்கிறார்கள், அவர்கள் அடித்ததை மற்றவர்கள் அடிக்கின்றனர்.

பெரியார் மற்றும் பாரதியார்களின் காசி விஜயம்!: பெரியார் காசிக்கு வந்து அங்கு நடப்பவற்றைக் கண்டு மனம் மாறி நாத்திகர் ஆனார். சிறுவனாக வந்த பாரதியாரோ அங்கு நடக்கும் “அகோரங்களை”ப் பார்த்து, ரௌத்ரமான உணர்வு பெற்று, அதன்படியே பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இதற்கு “பாரதியார் மருமகன்” என்று ஒரு அப்பாவியைப் பேட்டி கண்டு அதனையும் சேர்த்துள்ளனர். ஆகமொத்தத்தில் பாரதியார் “அகோரமாகி”விட்டார் ஆனால், ராமசாமி நாயக்கர் பெரியாராகி “பகுத்தறிவு பகலவன்” ஆகி விட்டார் என்ற ரீதியில் சித்தரிக்கிறார் அந்த “படம் காட்டும் வல்லுனர்”!

காசியில் தமிழர்கள்: காசிக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு உள்ளது. பல தலைமுறைகளாக தமிழர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். அனுமன் கட்டில் பல தமிழர்கள் வாழ்கிறர்கள். என்றெல்லாம் விவரித்து படம் காட்டினாலும் பிராமணர்களையே அல்லது குடுமி வைத்த நபர்களையேக் காட்டியது வேடிக்கையாக இருந்தது!

காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் உள்ள சம்பந்தம்: “அக்காலத்தில் கஷ்டப்பட்டுதான் காசிக்குச் செல்வார்கள். மாட்டு வண்டியில் செல்வார்கள். அப்படி செல்பவர்கள் திரும்பி வரலாம் அல்லது இல்லை. ஆகையால், காசிக்குச் சென்றவர்கள், பிரயாகைக்குச் சென்று மண்ணை எடுத்துவந்து, ராமேஸ்வரத்தில் சிரார்த்தத்தை முடித்தால்தான் முழுமை ஏற்படும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியதனால் அவர்கள் திரும்பி ராமேஸ்வரத்திற்கு வந்தனர். அப்பொழுது தங்களது குடும்பத்தினரைப் பர்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததால், மறுபடியும் குடும்ப வாழ்க்கை ஆரம்பித்தனர்” என்றெல்லாம் ஒருவர் மூலம் விளக்கத்தைப் பெற்று சேர்த்துள்ளனர்! பாவம், ஆயிரக் கணக்கான் ஏன் லட்சக் கணக்கான சாமியார்கள், யோகிகள் முதலியோர் காசி சென்று குடும்பம் இல்லாமலேயே ஏன் திரும்பி வந்தனர் என்று அவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை போலும்!

தாமே தமக்கு திட்டம்: “தரச் சான்றிதழ் தரும் கட்டம்”: அனுமான் கட், மணிகர்ணிகா கட் எல்லாம் பார்த்தாகி விட்டது. கஞ்சா அடித்தாகிவிட்டது, நரமாமிசம் சாப்பிட்டு விட்டாகியது.. .. இனி?,, தங்களது நிகழ்ச்சிற்கு தாங்களே “சான்றிதழ்” கொடுத்து கொல்லும் வகையில், தமக்கு சாதகமாக சிலரைப் பேட்டிகண்டு நிகழ்ச்சியை ஒரு ஹாலிவுட் “ஹரர் / டெரோர்” படம் மாதிரி, அத்தகைய இசையையும் கூட்டி “படத்தை” முடிக்கின்றனர்!

மோஹன்ராவ்: நான் ஐந்து தடவை காசிக்குச் சென்றுள்ளேன்.. அப்பொழுது வசதிகள் குறைவு.. .. ..24 மணி நேரமும் சடலங்கள் வந்து கொண்டே இருக்கும்.. ..அங்கு. கட்டை வைத்து எரிக்கிறார்கள்.. .. இங்கெல்லாம் வராட்டி (வரட்டி) வைத்து எரிக்கிறார்கள்..

ஒரு பெண்: நான் இதையெல்லாம் பார்த்ததே இல்லை.. .. இதையேல்லாம் நான் மிஸ் பண்னி விட்டோமா? என்று நினைக்கத்தோன்றுகிறது… .. எட்டு வருடமாகச் செல்கின்றேன், ஆனால் நான் இவற்றைப் பர்த்தது இல்லை.. .. அடுத்த தடவை செல்லும்போது, நான் சென்று பார்க்கிறேன்.. .. நல்ல இன்ஃபர்மேட்டிவா இருக்கிறது… …என்னுடைய புரொக்ராமில் சேர்த்துகொள்கிறேன்.. ..

வேணுகோபாலன்: 20 வருடங்களுக்கு முன்பு ரயில் நிலையத்திலேயே படுத்து கிடப்பர்.. .. அன்கிருந்தே தன்களுக்கு முக்தி கிடைக்குமா என்று ஏங்கிக் கிடப்பர்.. .. .. பிறகுதான் பிர்லாவின் “முக்தியடைய ஆஸ்ரம்” கட்டப் பட்டது.. ..ஸ்டேசனிலேயே.. .. .. இறக்கவிருக்கும் மனிதர்களைக் கிடத்தி, இறந்தபிறகு எரிக்க எடித்துச் செல்வர்.. ..

சுசீலாபாய்: டிவியை பார்க்காதவர் ஆனால் சன் செய்திகள் காசியைப் பற்றி ஒளிபரப்பு செய்வதை அறிந்ர்து பார்த்தாரம்! ஆனால் தான் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்று, காசியைப் பற்றி பொதுவான விவரங்களைக் குறுப்பிட்டார்..

ராஜேஸ் சாஃப்ட்வேர் இஞ்சினியர்: நான் அங்கு பாஸிட்டிவ் அதிர்வுகளை அனுபவித்தேன்… .. , அமைதியுள்ள இடம்… அதனை அனுபவித்தால்தான் தெரியும்.. .. அங்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.. .. என்றரீதியில் தனது ஆன்மீக அனுபவத்தை மெய் மறந்து விளக்கினார்!

ஸ்ரீரங்கம் நேயர்: இவர்தான் கடைசியாக “சன் செய்திகளுக்கு” ISO 9001 / 9002 ரீதியில் சான்றிதழ் வழங்கியவர்! நிகழ்ச்சி மிகவும் அருமை.. .. உண்மையான நிஜம் தெரிந்தது.. .. காசியைப் பற்றிய விவரங்களை தெளிவாக, துள்ளியமாக, .. .. .. படம் பிடித்துக் காட்டினார்கள்.. .. சிறப்பாக காண்பித்தார்கள்.. .. .. , அருமையாக இருந்தன .. .. .. 100% நம்புவதாக இருந்தது. .. .. சன் டிவிக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்

பேட்டி கண்டவர்கள் சொல்வதிற்கும், நிகழ்ச்சியின் போக்கிற்கும் சம்பந்தமே இல்லை. நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு உள்நோக்கத்துடன் தயாரிக்கப் பட்டு, ஒளிபரப்பப் பட்டது நன்றாகத் தெரிகிறது. மேலாக அதில் அவர்கள் சொன்ன விவரங்கள், காட்சிகள் முதலியன எல்லாம் ஏற்கெனவே உள்ளதுதான். மேனாட்டு உல்லாசப் பயணிகள், கிருத்துவ-பிரச்சாரகர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்பவர்கள் எல்லாம் இதைவிட அதிகமாகவே படம் பிடித்துள்ளனர், “கதைகள்” எழுதியுள்ளனர். பிச்சைகாரர்களுக்கும் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாத இடத்தில், இவ்வாறாக பிரச்சார ரீதியில் போலிகளை பிடித்து, அவர்களை வைத்து கதைக் கட்டுவது மிக சாதாரண விஷயம். இதில் சன் டிவி இறங்கி இருப்பது தெரிகிறது.

Advertisements

8 பதில்கள் to ““காசியின் நிஜமுகம் நிரந்தர முகமா?” அல்லது “காசி நகரத்தின் மறுபக்கம்””

 1. devapriyaji Says:

  These TVs must be banned, for specifically targeting God’s religion and not other man made religions.

 2. vedaprakash Says:

  வேறொரு தளத்தில் எனது பதிவிற்கு ஒரு பதிலைக் காண நேர்ந்தது. அதனை இங்கே, பதிவு செய்கிறேன்:
  ——————————————————————————

  அன்புள்ள வேதபிரகாஷ்

  உங்கள் அஞ்சலை சன் டிவி நிருபர் ராமகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன் அவர்
  என்னுடைய நல்ல நண்பர். அவர்தான் நிகழ்ச்சியை தயாரித்தவர்.

  அவருக்கு என் மேல் எக்கச்சக்கமாகக் கோபம். கன்னா பின்னாவென்று கத்தினார்.
  (ஏதோ உங்களால் வழியாகக் கிடைத்த உதவி)

  நான் அவருக்கு சொன்னேன். நீ்ங்கள் எனக்கு பதில் கொடுப்பது போலக் கொடுத்தால்
  நான் குழுவுக்கு அனுப்புகிறேன் என்று.

  அவர் அவசர அவசரமாக வேண்டாம் என்று மறுத்து விட்டு அடுத்த நிகழ்ச்சி
  படப்பிடிப்புக்காக ரிஷிகேஷ் போயிருக்கிறார்.

  உங்கள் அஞ்சலை அவர் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இருந்திருந்தால் ரிஷிகேஷ்
  படப்பிடிப்பு நன்றாக செய்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.

  நமக்கெல்லாம் அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்கக் கூடாதே.

  அன்புடன்

  பென்னேஸ்வரன்

  http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/13c17ff613fb6936/fddf100a185c0e92?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D&lnk=ol&

 3. mayil Says:

  focus all sides.dont view narrowly.be religioustic

  • vedaprakash Says:

   The issue pointed out is not about the aspect of “religiustic”, but journalistic – particularly, about the so-called ‘investigative journalism”.

   Note how the views expressed by the interviewed have been edited and misinterpreted.

 4. பிரவீன் சுந்தர் Says:

  இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு, நம்ம மதத்த அசிக படுத்துறதுல அவ்வளவு சந்தோசம்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், பெண்கள் நடத்தும் நிர்வான பூஜை என்று ஆரம்பித்து கடைசி பத்து நிமிடத்திற்கு முன் அப்படி எல்லாம் ஒன்றும் எல்லா என்று முடித்தார்கள்….

  • vedaprakash Says:

   நம்ம பத்தியும் சொல்லட்டும்.

   மத்தவங்கப் பத்தியும் சொல்லட்டும்.

   உண்மையைச் சொன்னா, எந்த பிரச்சனையும் இல்ல.

   ஆனால், பொழப்புக்கு இப்படி காசை வாங்கிண்டு பொய்களை அள்ளி வீசுரதுதான் கேவலமாக இருக்கு.

 5. காசி பயணம் – வாரணாசி கோவில்கள், காட்டுகள், ஆரத்தி தரிசனம்! | உழவாரப்பணி Says:

  […] [4]https://dravidianatheism.wordpress.com/2009/11/07/%E2%80%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: