சிவபிரகாசர் நூல்கள் எரித்த பெஸ்கியின் 330வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

சிவபிரகாசர் நூல்கள் எரித்த பெஸ்கியின் 330வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

வீரமாமுனிவரின் 330வது பிறந்த நாள்!

ss

கருணாநிதி அரசு கொடுத்த விளம்பரம்

ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார்.

தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புழங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தம்மையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது!

1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார்!

1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார்.

மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு இந்த பாதிரி செய்த கொடுமைகள் அநேகம்! உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். அதாவது கத்தோலிக்கர்களுக்கும் புரொடெஸ்டென்டுகளுக்கும் ஆகாது என்பதால் அத்தகைய சண்டைகள் அக்காலத்தில் அநேகம்!

1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார்.

sivaprakasar-1

இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துறைமங்களம் சிவப்பிரகாசர் [கற்பனைக்களஞ்சியம் என்பது இவரது இன்னொரு பெயர்]  கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது!

முனி2

ஆனால் அவரது 330வது பிறந்த நாள் அரசாங்கத்தால் கொண்டாடப்படுவது விந்தையாக உள்ளது!

நாளையொட்டி, சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருப் படத்திற்கு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வீரமாமுனி

என்னே தமிழர்களது கோலம்!

ஏன் தமிழ்நாட்டில் கொண்டாடுவதற்கு உகந்த புலவர்களேயில்லையா?

அவர்களையெல்லாம் எடுத்துக் கொண்டால், நாளுக்கு ஒரு விழா கொண்டாடலாமே?

அதுவும் 330 அல்ல, 660, 1220, 1330, 2220, என்றல்லவோ செல்லும்?

எங்கே போயிற்று இன்று வாழும் தமிழ்புலவர்களுக்கு ரோஸம், மானம், எல்லாம்………………..?

உள்ளர்களே தமிழ் அறிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், கவிகள், கவியரசர்கள், கவிப்பேரரசர்கள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள் …………………….இவர்கள் எல்லாம் என்ன செய்கின்றனர்?

இவர்களுக்கு சரித்திரம் தெரியாதா?

தமிழ் தெரியாதா?

எது தெரியாது?

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “சிவபிரகாசர் நூல்கள் எரித்த பெஸ்கியின் 330வது பிறந்த நாள் கொண்டாட்டம்!”

 1. francis Says:

  You have exposed the Tamil Leaders who follow Monkey Cap story and compete each other to keep their vote base in tact.

  • vedaprakash Says:

   தமிழ்தான் முக்கியம் என்றால், இத்தலைவர்கள் ஏன் இப்படி உண்மை மறந்து, மறைத்து செய்ல்படுகின்றனர் என்பதைப் பார்க்க வேண்டும்.

   இப்பொழுதுள்ள கிருத்துவர்களே அதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

   இன்றைய நிலைகளில், உண்மைகள் நிச்சயமாக வெளிவரும், வந்து கொண்டே இருக்கின்றன.

   ஆகவே, எல்லொரும் பதி சொல்லித்தான் ஆக வேண்டும்.

 2. vedaprakash Says:

  கீழ் குறிப்பிட்ட தளங்களில் பெஸ்கியைப் பற்றிய தலைப்புகள் காணப்படுகின்றன. ஆனாக், விவரங்கள் இல்லை!

  வீரமாமுனிவரின் வாழ்க்கை இன்றைய குருக்களுக்கும் தமிழகத் திருச்சபைக்கும் முன்வைக்கும் சவால்கள்
  http://www.radiovaticana.org/in3/Articolo.asp?c=330394

  அக்.29,2009 அருள்திரு ஜோசப் லயனல், தஞ்சை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூர் தூய பேதுரு குருத்துவக் கல்லூரி பேராசிரியர். இவர் வீரமாமுனிவரின் வாழ்க்கை இன்றைய குருக்களுக்கும் தமிழகத் திருச்சபைக்கும் முன்வைக்கும் சவால்கள் பற்றி பேசுகிறார்.

  வீரமாமுனிவர் காலத்தில் கிறிஸ்தவம்
  http://www.radiovaticana.org/in3/Articolo.asp?c=330384

  அக்.29,2009 அருள்திரு ஜோசப் லயனல், தஞ்சை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூர் தூய பேதுரு குருத்துவக் கல்லூரி பேராசிரியர். வீரமாமுனிவர் காலத்தில் கிறிஸ்தவர்கள் எதிர் கொண்ட இடர்கள் பற்றி விளக்குகிறார்.

 3. vedaprakash Says:

  ஏசுமத நிராகரணம் என்னும் நூல், சதுரகராதி யயற்றிய “வீரமாமுனிவரரெ”ன்னும் கிருஸ்துவன், கவிச்சக்கரவர்த்தியாகிய ஸ்ரீ சிவப்பிரகாட சுவாமிகள் கண்டிதெழுயதாகுமென்பர். ஆனால், அப்பாதிரி அந்நூலை மற்றநூல்களோட சேர்த்தெரித்துவிட்டமையால், அது கிடைதில. இருப்பினும் கிடைதுள்ள சில பாடல்கள் இதோ:

  அறிகிலை நரர்க்காய் வேண்டி யளித்தனன் மிருகமாறி
  யுஇறைவ னென்றோ யோரீ யீன்றிட மலமீ தூருஞ்
  சிறுபுழு விரையு றாதென் செல்குவை யதனை நோக்க
  வறிவரு நுணிய தேகி யனந்தநீ யவையென் செய்வாய்

  வாய்திறந் தலறும் வேங்கை வல்விட முமிழ்பாம் பாதி
  நேயமற் றெவர்கூற் றாய நிகழ்வதெ னுலகத் தந்தாட்
  டூயவ னாதிக் கோதுஞ் சொன்னெறி யடங்கா தென்னி
  குயகோ வாதி மாந்தர்க் கூங்கிய விதமென் கொல்லோ

  சொல்லியன னவர்க்க சாதி யடங்கவுந் துயரஞ் செய்தே
  கொல்லமற்று றையவு மீச னென்றிடிற் கொடுநா காதி
  நல்லவா வோரோர் காலத் தடங்கலா னவிலச் சாதி
  யெல்லல்செய் திடலாற் ரீயோ யறைந்தசொற் பழுதே யாகும்

  நன்றி: பாடல்களைக் கொடுத்துதவிய ஆராய்ச்சியாளர் திரு கே. வி. ராமகிருஷ்ண ராவ்.

  * மற்ற பாடல்கள் கிடைக்குமா?

  * மற்ற பாடல்கள் இருந்தால், கிடைத்தால் கொடுத்துதவுங்கள்.

  * அக்காலத்தில் முதலில், ஓலையில் புலவரே எழுதுவர் அல்லது அவர் சொல்ல மாணவன் அல்லது சுவடியெழுதுபவன் எழுதுவான்.

  * பிறகு புலவர் / கவிஞர் ஏற்றுக் கொண்டவுடன், அரங்கேறியப் பிறகு அல்லது மற்றவர் ஏற்றுக் கொண்டவுடன், பிரதிகள் எடுக்கப் படும்.

  * அவைதாம் குருக்குலங்கள், மடாலயங்கள் முதலிய இடங்களில் இருக்கும்.

  * ஆகவே, ஒருவேளை ஏதாவது பிரதி இருந்தால், ஒருவேளை ஐரோப்பிய, வாடிகன் நூலகங்களில், ஆவணக்காப்பகங்களில் இருந்தால், ஒருபிரதியை இந்தியர்கள் வாங்கிக் கொள்ளவேண்டும்.

  * கிருத்துவ மிஷனரிகள், அவ்வாறு பல்லாயிர / லட்சகணக்கான ஓலைச்சுவடிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இன்றும் அச்செயல்கள் நடக்கின்றன.

  * ஒரு கூகுள் தேடலில், எவ்வளவு ஓலைச்சுவடிகள் இன்றும் விற்பனைக்கு உள்ளன என்பதை பார்த்து அறியலாம்!

 4. M. Nachiappan Says:

  Really, it is disgrace, shameful and amounting to denigrating ourselves to have certain names in the schools or schools having such names, in which crores of Indians study without knowing the facts of the persons behind such names.

  For example, Francis Xavier may be a great man or saint for christians, but unfortunately, most of the Hindus do not know that he was responsible for recommending inquisition in Goa and around places, in which crores of Hindus were massacred; women raped and tortured; children and babies killed; and all those things happened for the simple reason that they were Hindus!

  Many temples were destroyed and curches built on the basements. Even today, anybody visits Goa, they can see and note the facts. On the road appraoching Goa, one can see in front of many houses, there would be “Thulasimada / Thulasimadam”, but instead of “Thulasi”, there would Cement-cross inserted in such “Tulasi maam”.

  In the same way, about Don Bosco, the details available have been exctly opposite to the image that has been created now, as with his name many educational institutions are run!

  Though, I do not want to cast aspersion on good christians, the facts are facts and they have to be told without mincing the facts, that too, when such events took place just 300-400 years back!

 5. vedaprakash Says:

  கவிஞர் மேத்தாவுக்கு உமறுப்புலவர் விருது
  நவம்பர் 25,2009,00:00 IST
  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19189

  சென்னை : இலக்கிய சேவைக்காக கவிஞர் மேத்தாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும், உமறுப்புலவர் விருதும் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில், அடுத்த மாதம் 13ம் தேதி சென்னையில் வழங்கப்படுகிறது. கோவையில் 2010ம் ஆண்டில் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு இஸ்லாமிய இலக்கிய கழகம் முழு ஆதரவு அளிக்கிறது.

  இலக்கிய சேவைக்காக கவிஞர் மேத்தாவுக்கு ஒரு லட்சம் பொற்கிழியும், உமறுப்புலவர் விருதும் வரும் 13ம் தேதி சோழிங்கநல்லூர் சதக் அறிவியல் கலைக் கல்லூரியில் நடக்கும் இரண்டாவது மாநில மாநாட்டில் வழங்கப்படுகிறது. கல்விக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது சதக் கல்வி குழுமங்களின் தலைவர் ஹமீத் அப்துல்காதர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி செயலர் பதுகுர் ரப்பானிக்கும், இலக்கியச் சுடர் விருது ஆர்னிகா நாசர் உட்பட 14 பேருக்கு வழங்கப்படுகிறது. இத்தகவலை இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் அமீர்அலி, பொதுச்செயலர் இதயத்துல்லா ஆகியோர் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தனர்.

 6. இஷ்டப்படி கவுரவ டாக்டர் பட்டம் தரலாமா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி! « Academic Degradation and Corruption Says:

  […] [7] https://dravidianatheism.wordpress.com/2009/11/09/beschi-who-burned-the-works-of-sivaprakashar/ […]

 7. எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்! « திராவிடநா Says:

  […] [5] https://dravidianatheism.wordpress.com/2009/11/09/beschi-who-burned-the-works-of-sivaprakashar/ […]

 8. கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi), தைரியநாதசாமி, “சுவடி தேடும் சாமி,” வீரமாமுனி – யார் இ Says:

  […] https://dravidianatheism.wordpress.com/2009/11/09/beschi-who-burned-the-works-of-sivaprakashar/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: