கருணாநிதிக்கும், ராஜபக்ஸேவிற்கும் உள்ள வேறுபாடுகள்!

ராஜபட்ச தங்கைக்கு கருப்புக்கொடி: ராமேசுவரத்தில் 18 பேர் கைது

First Published : 09 Nov 2009 11:43:34 PM IST

Last Updated :
கருணாநிதிக்கும், ராஜபக்ஸேவிற்கும் உள்ள வேறுபாடுகள்!

ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை தரிசனம் செய்த இலங்கை அதிபர் ராஜபட்சவின் தங்கை நிருபமா ராஜபட்ச, அவரது கணவர் திருக்குமரன்

rajsister_ராமேஸ்வரம்

ராமேசுவரம், நவ. 9: ராமேசுவரம் கோயிலுக்கு வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபட்சவின் தங்கை குடும்பத்தினருக்கு எதிராக, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுகவினர் உள்ளிட்ட 18 பேரை, போலீஸார் கைதுசெய்தனர். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவின் தங்கை நிருபமா ராஜபட்ச, அவரது கணவர் திருகுமரன் நடேசன் ஆகிய இருவரும், திங்கள்கிழமை காலை வந்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த, மதிமுக மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினர், அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி முன்பாக மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் கராத்தே பழனிச்சாமி தலைமையில், மண்டபம் ஒன்றியச் செயலர் பேட்ரிக், நகர்ச் செயலர் பாஸ்கரன், மாணவரணிச் செயலர் சுகநாதன் உள்ளிட்ட 11 பேர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் கோயில் தெற்குவாசல் அருகில் உள்ள மடத்தில் நிருபமா, திருக்குமரன் நடேசன் ஆகிய இருவரும், வேத விற்பன்னர்கள் மூலம் பூஜை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மதிமுகவினர் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து நகர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தனமாரி, சிலைமணி ஆகியோர் அவர்களைக் கைது செய்தனர்.

இலங்கை அதிபரின் தங்கைக்கு கறுப்புக்கொடி: ம.தி.மு.க.,வினர் 12 பேர் கைது
நவம்பர் 10,2009,00:00 IST

tblSambavamnews_8119928837

மண்டபம்: ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தங்கைக்கு கறுப்புக்கொடி காட்டிய ம.தி.மு.க.,வினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தங்கை நிருபுமா. இவர் தனது கணவர் திருகுமரன் நடேசனுடன் நேற்று ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தார். அங்குள்ள தெற்கு ரத வீதியில் கந்தர்வ சத்திரத்தில் பூஜை செய்து கொண்டிருந்த போது, ம.தி.மு.க., நகர் இளைஞரணி செயலர் தலைமையில் நாம் தமிழர் இயக்கத்தினர், கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். ராஜபக்ஷேவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோல் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கறுப்புக்கொடி காட்டிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரம் கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும்: இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
நவம்பர் 10,2009,00:00 IST

General India news in detail

ராமநாதபுரம்: இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தங்கை நிருபுமா ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்ததால் பரிகார பூஜை நடத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தங்கை நிருபுமா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று சாமி கும்பிட்டார். இதையடுத்து “”இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்து தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமானவர் இலங்கை அதிபர் ராஜபக்ஷே. இவரது தங்கை நிருபுமா ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்துள்ளார். தமிழக இந்துக்கள் மனவேதனையோடு இருப்பதால் கொலைக்கு காரணமானவர்களுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ ஏற்படும். இந்த வேளையில் நிருபுமா கோயிலுக்கு வந்துள்ளதால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது. திருக்கோயிலின் புனிதம் காக்க கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து மக்கள் கட்சியினர் பரிகாரம் செய்வார்கள்” என அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சரவணன், கோயில் இணை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
———————————————————————————————-
ஆஹா, திருச்செந்தூரில் விட்டவர்களை, ராமேஸ்வரத்தில் பிடித்து விட்டார்கள்!

வாழ்க, தமிழ்-மறவர்களின் வீரம்!

தமிழின் உயிர், உயிரின் நிலை, முத்தமிழ், வாழும் தமிழ், நடக்கும் தமிழ்………..

தளபதி, இனமானத்தலைவர், பெருங்கவிக்கோக்கள், கவியரசர்கள், முதலியவர்களயும் காணோம்.

குளு-குளு அறைகளில், ஜிலு-ஜிலு அரங்குகளில் கவியரங்கம், பட்டிமன்றம் நடத்தவே நேரமில்லை!

இவர்களும் தமது பெண்டாட்டிகள், சகோதர்களை சாமி கும்பிடவைத்து, தமிழர்களை கொல்கிறார்கள் / வதைக்கிறார்கள், பலவழிகளில், அவர்களும் அதையேத்தான் செய்கிறார்கள்.

கருணாநிதி தமது குடும்பக் கோவிலான, திருக்குவலை அங்காள பரமேஸ்வரி அம்மாளை, கதவுகள் சாத்திக் கொண்டு திருட்டுத்தனமாகத்தான் வழிபடுவாராம்!

அவருடை மனைவி-துணைவியரும், அதுபோலவே நேர்த்திக்கடன்களையெல்லாம் செய்வார்களாம். அவர்கள் குடும்பப் பெண்களும் – சகோதரிகள், மகள்கள் முதலியோரும் அப்படியே. நெற்றிகளில் குங்குமம் என்ன, கழுத்துகளில் தாலிகள் / மங்கள நாண்கள், கைகளில் வலைகள், கால்களில் மெட்டி, பட்டுப் புடவைகள் சகிதம்…………….

அப்பொழுது நமது இனமான போராளிகள், தமிழர் தலைவர்கள் படையைத் திரட்டிக் கொண்டு சென்று அங்கு எப்பொழுதும் கருப்புக் கொடியைக் காட்டியதாக செய்தியில்லை.

பத்திரிக்கைக்காரர்களும், இதைப்போல படங்களுடன் செய்திகளை வெளியிட்டதாகத் தெரியவில்லை!

அவர்கள் அங்கும், இவர்கள் இங்கும் கோவில்களை இடிக்கிறார்கள்!

ஆனால் ஆன்மீகம் ஒருபக்கம், நாத்திகம் மறுபக்கம் பேசுகிறார்கள்.

இருகூட்டங்களுக்கும் “புத்தர்” என்றால் நன்கு பிடிக்கும்!

ஞாபகம் இருக்கா, முன்பு பெரியார் பௌத்தத்தை தழுவ ஆசைக்காட்டியபோது அம்பேத்காரே தடுத்தாராம்!

வாழ்க தமிழ்!

புத்தம் சரணம் கச்சாமி!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “கருணாநிதிக்கும், ராஜபக்ஸேவிற்கும் உள்ள வேறுபாடுகள்!”

 1. vedaprakash Says:

  ஆஹா, திருச்செந்தூரில் விட்டவர்களை, ராமேஸ்வரத்தில் பிடித்து விட்டார்கள்! வாழ்க, தமிழ்-மறவர்களின் வீரம்!

  தமிழின் உயிர், உயிரின் நிலை, முத்தமிழ், வாழும் தமிழ், நடக்கும் தமிழ்………..தளபதி, இனமானத்தலைவர், பெருங்கவிக்கோக்கள், கவியரசர்கள், முதலியவர்களயும் காணோம். குளு-குளு அறைகளில், ஜிலு-ஜிலு அரங்குகளில் கவியரங்கம், பட்டிமன்றம் நடத்தவே நேரமில்லை!

  இவர்களும் தமது பெண்டாட்டிகள், சகோதரிகளை சாமி கும்பிடவைத்து, தமிழர்களை கொல்கிறார்கள் / வதைக்கிறார்கள் பலவழிகளில், அவர்களும் அதையேத்தான் செய்கிறார்கள்.

  அவர்கள் அங்கும், இவர்கள் இங்கும் கோவில்களை இடிக்கிறார்கள்!

  ஆனால் ஆன்மீகம் ஒருபக்கம், நாத்திகம் மறுபக்கம் பேசுகிறார்கள்.

  இருகூட்டங்களுக்கும் “புத்தர்” என்றால் நன்கு பிடிக்கும்!

  ஞாபகம் இருக்கா, முன்பு பெரியார் பௌத்தத்தை தழுவ ஆசைக்காட்டியபோது அம்பேத்காரே தடுத்தாராம்!

  வாழ்க தமிழ்!

  புத்தம் சரணம் கச்சாமி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: