ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா!

ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா!
First Published : 11 Nov 2009 11:46:42 PM IST

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=153263&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

கீழக்கரை, நவ. 11:   ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹாவில் புதன்கிழமை அதிகாலை சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், அனைத்து சமுதாயத்தினரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுல்லாஹ் நினைவிடம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.
இதையொட்டி, சந்தனக்கூடு எடுத்துவரும் ஊர்வலம் பெரிய ஏர்வாடியிலிருந்து புறப்பட்டு தர்ஹாவை வந்தடைந்தது.
ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட யானைகள், வெள்ளைக் குதிரைகள் அணிவகுத்து வந்தன. வாத்தியம் மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் வெள்ளிப்பேழையில் யானை மீது எடுத்து வரப்பட்ட சந்தனம், மகானின் சமாதியில் புதன்கிழமை அதிகாலை பூசப்பட்டது. அப்போது உலக நன்மைக்காக சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
ஊர்வலமாக எடுத்து வரப்படும் சந்தனக்கூட்டின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு சமூகத்தினரும் செய்து அலங்கரித்து எடுத்து வருவதால், அனைத்து மதத்தினரும் கொண்டாடும் மத நல்லிணக்க விழாவாகவும் இது நடந்து வருகிறது.

விமர்சனம்:

“மத நல்லிணக்க விழா” என்றதில் நன்று. ”

வாத்தியம் மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் வெள்ளிப்பேழையில் யானை மீது எடுத்து வரப்பட்ட சந்தனம், மகானின் சமாதியில் புதன்கிழமை அதிகாலை பூசப்பட்டது”, என்பதில் சில முக்கியமான வினாக்கள் எழுகின்றன.

அவர்களே இப்படி, “வாத்தியம் மேளங்கள் முழங்க” செல்லும்போது, இந்துக்கள் அவ்வாறு செல்லும்போது, ஏன் தடுக்கவேண்டும்?

அது மசூதி, இது சமாதி என்று கூறுவார்கள். ஆனால், பல இடங்களில் ஒன்றகத்தானே உள்ளது.

பிறகு எதற்கு பாரபட்சம்? அங்கும் இந்த இணக்கத்தைக் காட்டலாமே?

“நாத்திகர்கள்” இதைப்பற்றி மூச்சுவிடாமல் இருப்பதும் போலித்தனம்தான்!

அவர்களுக்கு மட்டும் இங்கு இணக்கம், இந்துபண்டிகளைகளில் சுணக்கம் போலும்!

அப்போது “தீபாவலி”, இப்போது “தீபாவளி”!

வாழ்க, “திராவிட நாத்திகம்”, “கழக ஆன்மீகம்”, “சகோதர நேயம்” எல்லாம்!

Advertisements

8 பதில்கள் to “ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா!”

 1. M. Nachiappan Says:

  Really, the attitude of “Dravidian” politicians have been disgusting when they they extend greeting to all festivals except Hindus.

  This clearly exposes their ugly-minds corroded with ill-baked ideology with affected thinking.

  as they have such two yardsticks one for non-Hindu festivals and another for Hindu festivals, then, they should also be assesses and judged accordingly.

  In fact, they are unbecoming citizens of India, rulers of Indian states and cheating voters for getting votes.

  In fact, by accepting such reality, they brand others as “Hindus” and thus the “Hindus” should identify themselves and react democratically.

 2. vedaprakash Says:

  நான் தினமணியில் கீழ்கண்டவாறு பதிவு செய்திருந்தேன்:
  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=153263&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

  “மத நல்லிணக்க விழா” என்றதில் நன்று. “வாத்தியம் மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் வெள்ளிப்பேழையில் யானை மீது எடுத்து வரப்பட்ட சந்தனம், மகானின் சமாதியில் புதன்கிழமை அதிகாலை பூசப்பட்டது”, என்பதில் சில முக்கியமான வினாக்கள் எழுகின்றன. அவர்களே இப்படி, “வாத்தியம் மேளங்கள் முழங்க” செல்லும்போது, இந்துக்கள் அவ்வாறு செல்லும்போது, ஏன் தடுக்கவேண்டும்? அது மசூதி, இது சமாதி என்று கூறுவார்கள். ஆனால், பல இடங்களில் ஒன்றகத்தானே உள்ளது. பிறகு எதற்கு பாரபட்சம்? அங்கும் இந்த இணக்கத்தைக் காட்டலாமே? “நாத்திகர்கள்” இதைப்பற்றி மூச்சுவிடாமல் இருப்பதும் போலித்தனம்தான்! அவர்களுக்கு மட்டும் இங்கு இணக்கம், இந்துபண்டிகளைகளில் சுணக்கம் போலும்! அப்போது “தீபாவலி”, இப்போது “தீபாவளி”! வாழ்க, “திராவிட நாத்திகம்”, “கழக ஆன்மீகம்”, “சகோதர நேயம்” எல்லாம்!

 3. vedaprakash Says:

  அதற்கு, கீழ்கண்டவாறு பதில்கள் வந்துள்ளன:

  Sultandeen
  11/12/2009 11:37:00 AM

  நண்பர் V அவர்களே உங்களின் கேள்விகளும் கோபமும் மிகவும் ஞாயமானவை. இதில் வேடிக்கையும் உண்மையும் என்னவென்றால் இந்த மேளதாளம், சந்தகூடு, சந்தனம் பூசுதல் இன்னபிற வைபவங்கள் எல்லாமே இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானவை. இறைஇல்லம் எனப்படும் மசூதியும் இந்த சமாதியும் ஒன்றல்ல. அவை இரண்டும் சில இடங்களில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பதுபோல் தோன்றினாலும் (அப்படி இருக்க கூடாது என்பதுவும் உண்மை) இரண்டும் ஒன்று அல்ல. சமாதி வழிபாட்டை நம்பும் ஒரு இஸ்லாமிய கூட்டம் அடிக்கும் கூத்து தான் இந்த மேல தாள நிகழ்ச்சிகள். இதற்கும் உண்மையான இஸ்லாத்திற்கும் துளியேனும் தொடர்பு இல்லை. இந்த நிகழ்வுகள் உங்களின் மனதை புண்படுத்தி இருப்பின் மன்னியுங்கள்

 4. vedaprakash Says:

  AbooAbdulRahmaan
  11/12/2009 12:45:00 PM

  மாற்று மத சகோதரர்களே? தி.க. வீணர் ஹிந்து மக்களை தனிபட்ட,முறையில் இழிவாக பேசுவது கிடையாது ஹிந்துக்ளின் மூட பழக்க வழக்க்கத்தை தான் எதிர்குக்கிறார்களே ஒழிய ஹிந்துக்களை எதிர்க்க மாட்டார்கள் ,அதே போல் முஸ்லிம்களின் மூட பழக்க வழக்கங்களை எதிர்க்க,முஸ்லீகளிலும் தவ்ஹித்காரர்கள்,மூடபழக்க வழக்கங்களை எதிர்க்குக்கிறார்கள் ,யார் தவறான கொள்கையை தூக்கி பிடித்தாலும் தவறு தவரே

 5. vedaprakash Says:

  kamil
  11/12/2009 3:32:00 PM

  salam brothers.we must respect the saints like sultan saheed oli.our history says he came with nearly 25000 muslims for preaching islam,tawheed,sunna not kufr.some of the pandian kings respect him,permit to preach islam some kings against at last come to some battles.then he won then all muslims r returned to ARABIA only few persons remained to preach salam.most of our tamil peoples converted to islam by his noble,honest,soft approach only.he ruled the madura only six months then make a peace treaty with chola,pandia kings.he didn’t like to rule,wealth,etc.so at last pandian king sufferred lot by some severe disease.at that time he meet and approach him then he dua for him.by his dua only he alright.then he subsidary as ervadi,surroudings to him,so respect him& companions for allah.he also came for allah.but don’t do unnecessary things,worship him.i think this is a culture of our tamil nadu peoples.so only many things done by non-muslims in that area

 6. vedaprakash Says:

  adiraiameen
  11/13/2009 8:59:00 AM

  அன்பு சகோதர, சகோதரிகளே! தூய இஸ்லாத்தையும் அதில் அனுமதிக்கப்பட்டுள்ள வணக்கவழிபாடுகளையும் அறிந்து கொள்ள குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் படியுங்கள். இஸ்லாத்தை அறியாத முஸ்லீம்களின் நடவடிக்கைகளில் தேடாதீர்கள்

 7. vedaprakash Says:

  Mubarak
  11/13/2009 11:01:00 AM

  இவை இஸ்லாத்தின் பெயரில் இடை சொருகப்பட்ட கேலி கூத்துக்கள், அறியாமை, மூட பழக்கம், இவை இஸ்லாம் அல்ல மாற்று மத சகோதரர்களின் கண்களுக்கு எளிதில் புலப்படும் இவை இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை ஏற்படுத்த வேண்டாம். குரானையும் நபி அவர்களின் வாழ்க்கையயும் ஆராயுங்கள் இஸ்லாம் பற்றி தெளிவு பெறலாம்

 8. vedaprakash Says:

  Alihusain,Chennai,01
  11/13/2009 11:23:00 PM

  வலிமார். ஜியாரத், கராமாத், இவைகள் இஸ்லாத்தில் உள்ளது தான். இந்தியாவில் இஸ்லாதை போதனை செய்தது வலிமார்கல் தான். இங்கு நாபிமார்களின் பிரதிநிதியாக அவர்கள் தான் இந்த மார்க்க சேவைகளை செய்தார்கள். அவர்களை கண்ணியத்ப்ப்டுத்துவது கந்தூரி, வுரூஸ், போதனை, இவைகள் எல்லாம் கூறானிலும், ஹட்டீசிலும், சொல்லப் பட்டுள்ளாட்து. எனவே தர்கா ஜியாரதும், இறைவணக்கமும் ஒன்றல்ல. ஜியாரத் என்பது கண்ணியத்தை சேர்த்தது. வணக்கம் என்பது இறைவனுக்கு மற்றும் செய்யப்படுவது. இதனை சரியாக விளங்கி கொள்ள முடியாமல் சில மர மந்தைகள் இங்கு உளறி தள்ளி உள்ளார்கள். ஜியாரத்தை தர்கா வழிபாடு,என்றும், சமாதி வணக்கம் என்றும், கப்ரு வணங்கிகள் என்றும் கேலி பண்ணி உள்ளார்கள். இவர்கள் தமிழ் நாடு தரங்கெட்ட ஜாமாத், தறுதலை ஜாமாத் தலைவன் பீ ,ஜே, இந்திய தரங்கெட்ட ,தறுதலை ஜாமாத் தலைவன் பாக்கர் ஆகிய பொம்பளை பொறுக்கிகலான இவர்களின் கூட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய தீவிர வாதிககலான யஹூட்டிகளின் கை கூளிகள் ஆவார்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: