நாத்திகமா, ஆத்திகமா?

கந்தசுவாமிக்கு திடீர் மலர் அர்ச்சனை: திருப்போரூரில் பரபரப்பு
நவம்பர் 13,2009,00:00 IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18769

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று திடீரென மலர் அர்ச்சனை நடந்தது. திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரதான பிரார்த்தனை தலமாக உள்ளது. பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து கிருத்திகை நாளில் கந்தனை வழிபட்டு செல்கின்றனர்.

நேற்று திடீரென கந்தசுவாமி கோவிலுக்கு தமிழக மூத்த அமைச்சர் ஒருவரின் துணைவியார் வருவதாக தகவல் வெளியானது. சிறிது நேரத்தில் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள அனைத்து சன்னிதிகளிலும் உள்ள சுவாமி சிலைகளுக்கு விசேஷ மாலைகள் அணிவிக்கப்பட்டன. மூலவர் எதிரிலுள்ள கருவறை மண்டப முகப்பில் இதுவரை செய்திராத அளவிற்கு மலர் தோரண அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கார மண்டபத்தில் உள்ள உற்சவர் சன்னிதியில் உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அங்கு கோவில் அர்ச்சகர்களோடு வெளியூர்களிலிருந்து வந்திருந்த ஐந்து அர்ச்சகர்கள் இரண்டு மணி நேரம் விசேஷ மலர் அர்ச்சனையில் ஈடுபட்டனர்.

பகல் 12 மணிக்கு அறநிலையத் துறை இணை ஆணையர் பக்கிரிசாமி கோவிலுக்கு வந்தார். அர்ச்சனை வழிபாட்டில் கலந்து கொண்டார். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் திடீரென விசேஷ மலர் வழிபாடு நடந்தது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, செயல் அலுவலர் மறைமலையிடம் கேட்டபோது, இணை ஆணையர் மற்றும் அவரது குடும்ப பிரார்த்தனையாக இந்த பூஜை நடத்தப்பட்டது. வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றார்.

Advertisements

2 பதில்கள் to “நாத்திகமா, ஆத்திகமா?”

 1. M. Nachiappan Says:

  Really it is funny that God-abusing, religion-hating, rabble rousers have been indulging in such worship!

  I remember of reading sometime back about the comment of Karunanidhi about one DMK cadre sporing kumkum on his forehead!

  His audacity had gone to the extent of asking what was the problem with him, what happened to him, why his forehead was bleeding and so on?

  But, when his wife, daughters, sisters and other women his family circles do that, would he make such comment as to why their foreheads are bleeding?

 2. Tamizhchelvan Says:

  அப்பப்பா, இந்த செய்திகள் படித்து அலுத்துவிட்டது.

  இந்த ஆட்களுக்கு நிச்சயம் வெட்கம், மானம், சூடு, சூரணை………..என்று எதோதோ சொல்கிறார்களே அவையெல்லாம் ஒன்றும் இல்லை என்று நன்றாஆகத் தெஇரிகிறது!

  இதென்ன, வாழ்க்கை, பகுத்தறிவி……………….?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: