ஏழு ஐம்பொன் சிலைகள் மீட்பு :திருட்டுக்கு கோவில் குருக்களே உடந்தை!

ஏழு ஐம்பொன் சிலைகள் மீட்பு :திருட்டுக்கு கோவில் குருக்களே உடந்தை
நவம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5623

Front page news and headlines todayசென்னை : குடவாசலில் இரு கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏழு ஐம்பொன் சிலைகளை, சிலைக் கடத்தல் தடுப்பு போலீசார் சென்னை கிண்டியில் கைப்பற்றியுள்ளனர். இந்த சிலைகளை கடத்திய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த, பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி., திலகவதி கூறியதாவது:மூன்று மாதங்களுக்கு முன், குடவாசல் பரவாக்கரை கிராமத்தில் உள்ள வெங்கடாசலபதி கோவில் மற்றும் பூங்கொடி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன. பாழடைந்த இக்கோவில் முட்புதர்களுக்கு நடுவே உள்ளது. சிலை திருடுபோனது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.தனிப்பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. ரகசிய தகவலின் பேரில், சென்னை கிண்டி ரயில் நிலையம் எதிரே உள்ள போலீஸ் செக்போஸ்டில் சோதனை செய்தபோது, இரு நபர்கள் சாக்குப்பையுடன் வந்து கொண்டிருந்தனர்.

போலீசாரைப் பார்த்தவுடன் ஓடிய திருவாரூர், குடவாசல் பூங்கொடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(29), கும்பகோணம், தாராசுரம், கீழத்தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி(34) என்ற அந்த இரு நபர்களையும் போலீசார் விரட்டிப் பிடித்தனர். சாக்குப்பையில் குடவாசல் கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் இருந்தன.மணிகண்டன் வீட்டில் நடந்த சோதனையில் மேலும் சில சிலைகள் கைப்பற்றப்பட்டன. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமார், மாரியம்மன், சுப்ரமணியர், தெய்வயானை என மொத்தம் ஏழு ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 45 லட்சம் ரூபாய்.வெங்கடாசலபதி கோவிலில் முன்பு குருக்களாக பணியாற்றிய மணிகண்டன், சிலைகளை திருடி வெளிநாட்டிற்கு கடத்துபவர்களிடம் விற்றால், பெருமளவில் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் சென்னை கொண்டு வந்துள்ளனர்.

இவ்வழக்கில், சுதாகர், கலைச்செல்வன் ஆகிய இருவரைத் தேடி வருகிறோம்.சிலைகளுக்கு புராதானமானவை என சான்றிதழ் வழங்கும்போதும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்போதும், சிலைக் கடத்தல் தடுப்புப் போலீசில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என விதியை உருவாக்குமாறு அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்.சுப்ரபாத் நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் கண்ணப்ப குருக்களின் திருவான்மியூர் வீட்டில், நேற்று முன்தினம் நடந்த சோதனையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே கண்ணையன், தேவராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கண்ணப்ப குருக்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இந்த சொத்து ஆவணங்கள் பழையவையா, சொத்துக்கள் யாருக்காவது விற்கப்பட்டுள்ளதா என்பன குறித்து ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு, கோர்ட், வருவாய்த்துறை உத்தரவுகளை பெற்று, சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு, அத்தொகையிலிருந்து முதலீட்டாளர்களில் பணம் திருப்பித் தரப்படும்.கும்பகோணத்தில் 2000ம் ஆண்டு சிலை திருடியது தொடர்பாக, அரியலூரைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகன் பெரியசாமி மீது 11 வழக்குகள் உள்ளன. இவர் கத்தாருக்கு தப்பி ஓடிவிட்டார். இவரை தேடப்படும் நபராக அறிவித்து, விமான நிலையங்களுக்கு தகவல் தரப்பட்டிருந்தது.

கத்தாரில் டிரைவராக பணிபுரிந்து வந்த பெரியசாமி, குவைத் ஏர் – லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வருவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் அளித்தனர். இதன்படி, விமான நிலையத்தில் பெரியசாமியை சிலை கடத்தல் தடுப்புப் போலீசார் கைது செய்தனர்.கடத்தப்பட்ட மரகத லிங்கம் மீட்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்த இன்ஸ்பெக்டர் காதர்பாஷாவுக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்க சிபாரிசு கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு திலகவதி கூறினார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., ராஜேந்திரன் உடனிருந்தார்.

முந்தைய செய்திகளில் ஒரு இன்ச்பெக்டெரே சிலைத்திருடர்களுக்கு உளவு சொல்லிக் கொண்டிருந்தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது!
அவர் என்ன ஆனார்?

சிலை திருட்டு தடுப்பு போலீசில் 5 வருடத்தில் இருந்து 30 ஆண்டுகளாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 24 போலீசார் பணியாற்றுகிறார்கள். இவர்களில் சில போலீசார் சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு பெரிய அளவில் சதிவேலையில் ஈடுபட்டதாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயர் அதிகாரிகள் எடுக்கும் முக்கிய முடிவுகளை அவ்வப்போது சிலை கடத்தல் கும்பலிடம் இவர்கள் உளவு சொல்லியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
http://atheismtemples.wordpress.com/2009/09/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

2 பதில்கள் to “ஏழு ஐம்பொன் சிலைகள் மீட்பு :திருட்டுக்கு கோவில் குருக்களே உடந்தை!”

  1. vedaprakash Says:

    Panchaloka idols seized

    Special Correspondent in “The Hindu” dated 14-11-2009
    http://www.hindu.com/2009/11/14/stories/2009111459430300.htm

    Gang stole them from temples with plan to sell them off

    CHENNAI: Sleuths of the Idol Wing CID police on Thursday night arrested two persons and seized seven panchaloka idols from them.

    According to Additional Director-General of Police (Economic Offences Wing) G. Thilakavathi, a special team conducting surprise checks near the Guindy railway station noticed two persons carrying gunny bags and moving in a suspicious manner. On seeing the police, the suspects tried to escape. However, the team managed to apprehend the duo.

    The accused were identified as G. Manikandan (29) of Poongodi village in Tiruvarur district and K. Maruthupandi (34) of Darasuram in Thanjavur district. They confessed to having stolen the idols from the Venkatachalapathi Temple in Paravakkarai and Sivan Temple in Poongodi.

    The accused came to Chennai with an intention to make big money by selling the idols to agents involved in smuggling of antiques to foreign countries. The value of the seized idols was put at Rs.35 lakh, she added.
    ‘Action plan’

    Sources in the EOW said the agency had suggested a plan of action to eradicate theft of idols from temples. It was suggested to the government to take steps for identifying temples, both managed by the Hindu Religious and Charitable Endowments and private people, that were located in remote villages and prone to thefts.

    The idols in such temples could be kept in icon centres for safe custody. “We have underlined the need for revamping the temple security with modern gadgets. Steps are being taken by the EOW to sensitise Temple Protection Force personnel to the use of sophisticated gadgets. The burglar alarm at the Marundheeswarar Temple in Tiruthuraipoondi, where a Maragatha Lingam idol was stolen, was out of order for about six months…it was not repaired,” an official said.

    It was also suggested to have more icon centres in Thanjavur, Tiruvarur, Nagapattinam, Tiruchi and Villupuram districts while establishing new ones at Tiruvannamalai, Kancheepuram, Cuddalore, Kumbakonam, Pudukottai, Madurai and Sivaganga districts.

  2. Tamizhchelvan Says:

    A careful reading of the news give different versions about the position of the so-called “Guruykkal”.

    1. Thinamalar says it is “Gurukkal”.

    2. “Viduthalai” says, he is “manthiiravathi”!

    3. Some other paper says he is ex-exploytee of the temple.

    Therefore, the press should give details specificcally.

    In any case, if the person is “GurukkasL’ / “Archaka” type person, he could be hanged for the betterment of the society!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: