பொய்களை கவிதைகளாக எழுத வேண்டாம்: வைரமுத்து!

பொய்களை கவிதைகளாக எழுத வேண்டாம்: வைரமுத்து
First Published : 14 Nov 2009 12:30:05 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Cinema&artid=154358&SectionID=141&MainSectionID=141&SEO=&Title

பெங்களூர், நவ. 13: பொய்களை கவிதைகளாக எழுத வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டார்.

பெங்களூர் பிரசிடென்சி கல்லூரி கன்னடப் பேராசிரியை மலர்விழி, வைரமுத்துவின் கவிதைகளில் பிரபலமான ஒரு நதியின் விதி, இலை, இசை உள்ளிட்ட 33 கவிதைகள் மற்றும் கதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தின் கன்னட சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்த புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் கன்னடத்தில் பேசி அனைவரையும் வரவேற்றார் கவிஞர் வைரமுத்து. பிறகு அவர் தமிழில் பேசியதாவது:

இன்று கன்னடத்து தோழர்களுக்கும் தமிழ் தோழர்களுக்கும் மகுடம் சூட்டும் நாள். இவ்விழாவின் கதாநாயகி மலர்விழி, கன்னடத்தில் மொழிபெயர்த்த எனது கவிதைகள் நம்மை இங்கு சேர்த்துள்ளன.
தமிழின் சங்க இலக்கியங்களை மொழிபெயர்க்க மலர்விழி விருப்பம் தெரிவித்துள்ளார். அதை மொழிபெயர்க்க ஆகும் செலவை வைரமுத்து அறக்கட்டளை ஏற்கும்.

நமக்குள் பேதமில்லை. திராவிடக் குழந்தைகள். ஒரே வேரிலிருந்து வந்தவர்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது.

எனது இதயப் பையை நிரப்புவதற்காக கவிதைகளையும், எனது பணப் பையை நிரப்புவதற்காக அதாவது வயிற்றுப் பிழைப்பிற்காக திரைப்படப் பாடல்களையும் எழுதுகிறேன் என்றார்.

பெங்களூர் தமிழ்ச்சங்கத்திற்கு வந்த வைரமுத்து, அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: நான் வருவதற்கு தேதி கேட்டு வாங்கிய முக்கிய இடம் பெங்களூர்த் தமிழ்ச்சங்கம். கவிஞர்களுக்கு நான் சொல்வது, பொய்யை எழுத வேண்டாம். உங்களது கவிதைகள் இதயத்தில் இருந்துவரும் உணர்ச்சியாக இருக்க வேண்டும். அதுவே நிலைத்து நிற்கும். தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

விமர்சனம்:

1. இந்த சினிமாகாரர்களுக்கு அதிகப்பிரசங்கித்தனம், கொழுப்பு முதலியன நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டேபோகின்றது என்று நன்றாகத்தெரிகிறது. முன்னம், கமகல் ஹஸன் முகமதியர் நடுவே, கருணாநிதி பெயர் சொல்லி அவதூறு பேசினான் – “நாத்திகத்தின்” போர்வையில்!

2. கவியயரசு இங்கு சொல்கிறது, “தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்”! பிறகென்ன, தீபாவளி, பொங்கல், இறந்தநாள் வாழ்த்து கவிதைகளை எழுத வேண்டுமா?

3. இல்லை, கிருத்துவ, முகமதிய இறந்தநாள் வாழ்த்து கவிதைகளை எழுதவேண்டுமா? என்ன சொல்லவருகிறது கவியரசு?

4. “கவிஞர்களுக்கு நான் சொல்வது, பொய்யை எழுத வேண்டாம். உங்களது கவிதைகள் இதயத்தில் இருந்துவரும் உணர்ச்சியாக இருக்க வேண்டும். அதுவே நிலைத்து நிற்கும்” – பிறகு, இது சொல்வதில் எது பொய், எது மெய்?.

5. முன்னர் சொன்னது, “எனது இதயப் பையை நிரப்புவதற்காக கவிதைகளையும், எனது பணப் பையை நிரப்புவதற்காக அதாவது வயிற்றுப் பிழைப்பிற்காக திரைப்படப் பாடல்களையும் எழுதுகிறேன்” என்று! ஆகமொத்தம் பைகளை நிரப்பத்தான் எழுதுவது என்றாகிவிட்டது! பிறகென்ன, வெங்காயம், கஞ்சி?

6. நாத்திக / பகுத்தறிவுக் குஞ்சுகளுக்கு “கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தின் கன்னட சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை” தேவைப்படுகிறது!

7. “நான் வருவதற்கு தேதி கேட்டு வாங்கிய முக்கிய இடம் பெங்களூர்த் தமிழ்ச்சங்கம்”, என்று வேறு கூறிக்கொள்கிறது! பிறகென்ன, நாள், நட்சத்திரம் குறித்துக் கொண்டு வருவது? உனக்கென்ன வெள்ளிக்கிழமை கேடு? இழவு சனியில் வந்துவிட்டுபோவதுதானே?

8. “கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தின் கன்னட சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை” நாள் குறித்து வருகிறாய், “பொய்யை எழுத வேண்டாம்” என்கிறாய், பிறகென்ன, “தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்பது!

9. கடவுள் இல்லை என்றால், எந்த கடவுளும் இல்லை என்று சொல்லிவிடு, ஆனால் அத்தகைய நாத்திகம் உன்னிடத்தில் இல்லை! அங்கு கஞ்சி கொடுத்தால் நக்குவது! இங்கும் எச்சியில் ஆப்பம் கொடுத்தால் நக்கிவிட்டு பிதற்றுவது? என்னய்யா தமிழ் புலமை, தமிழ் நெறி, தமிழ் நாத்திகம்?

10. இந்த அழகில் இந்த தமிழ்-அடைமொழிவாசிகளுக்கு பட்டங்கள் வேறு! சங்கப்புலவர்களையெல்லாம் மறந்து விட்டு, தமிழ் புத்தகங்களை எரித்தவனுக்கு பிறந்த நாள்விழா?

Advertisements

2 பதில்கள் to “பொய்களை கவிதைகளாக எழுத வேண்டாம்: வைரமுத்து!”

 1. M. Nachiappan Says:

  These guys have been known for their sycophancy to the core!

  They do not have anything, as they have been more worse than a
  whore!

  The more he talks such nonsense, the more awards he would get

  The more he talks against one particular religion, the more secular he becomes!

  Though levels vary, I do not find any difference between these categories of self-claiming poets etc., and “eminent historians” categories, who also get postings and talk nonsense in foreign universities!

 2. Tamizhchelvan Says:

  This fellow itself has been the embodiment of lies!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: