இறந்தவர்களை வணங்கும் திராவிடம்!

இறந்தவர்களை வணங்கும் திராவிடம்!

http://viduthalai.periyar.org.in/20091123/news10.html

இறந்தவர்களை வணங்கும் பழக்கம் நாத்திகர்களிடத்தே உள்ளது வியப்பாகவே இருக்கிறது!

இருப்பினும், இன்று முரசொலி மாறன் சிலைக்கு மலர்தூவி, கைகூப்பி, வணங்கி மரியாதை செய்த திமுகவினரைப் பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது!

என்னே பக்தி பரவசம்!

இறந்தவர்களுக்கு மரியாதை செய்வது என்பது இந்தியப் பண்பாடு, அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், திராவிட நாதிகத்திலே அதில்கூட வித்தியாசம் பார்ப்பது, பாரபட்சம் காட்டுவது, கேலி பேசுவது, முதலிய மனிதத் தன்மையற்ற மனப்பாங்கைத்தான் விமர்சனம் செய்யப் படுகிறது.

பாதிரிகள் செத்தால் மரியாதை, மற்றவர்கள் அதேகதியை அடைந்தால்…………………………..?

சுரதா ஞாபகத்திற்கு வருகிறது, மற்றவர்………………………..?

பெஸ்கி, தமிழ் நூல்களை எரித்தாலும் மலர் தூவல், அரசு மரியாதை, ஆனால் தமிழ் நூல்கள் காத்தவர்களுக்கு…………………………?

இது என்ன பாரபட்சம் அல்லது திராவிட சமத்துவம், சமதர்மம்…………….?

இங்குதான் உண்மை வெளிப்படுகிறது!

தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டும்!


தமிழக முதலமைச்சர் கலைஞர், சென்னை, முரசொலி அலுவலக வளாகத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலைக்கு, அவரது ஆறாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் பேராசிரியர் க. அன்பழகன், ஆர்க்காடு நா. வீராசாமி, க.பொன்முடி, கே.பி.பி.சாமி, உ. மதிவாணன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முரசொலி செல்வம், இயக்குநர் அமிர்தம், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் மற்றும் பலர் உள்ளனர் (சென்னை, 23.11.2009).

முரசொலி மாறன், கவிஞர் சுரதா சிலைகளுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை

http://viduthalai.periyar.org.in/20091124/news08.html

சென்னை, நவ. 24_ முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலைக்கும், கவிஞர் சுரதா சிலைக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (23.11.2009) முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

நாத்திகக் கவிஞரான உவமைக் கவிஞர் சுரதாவின் 89 ஆவது பிறந்த நாளான நேற்று (23.11.2009) சென்னை அசோக் தூண் மாநகராட்சி பூங்கா அருகிலுள்ள அவரது சிலைக்கு பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திராவிடர் கழகத்தின் சார்பில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கு. தங்கமணி மற்றும் இரத்னாவதி, செந்தில், மீனாட்சி, பெரு. இளங்கோவன், மகேஷ், ராஜீ, கருணாகரன், வடசேரி இளங்கோ, கண்ணன், திருமலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: