கருணாநிதியைப் பாராட்டும் கனிமொழி!

‘ஏழைகளின் தேவைகளை செயல்படுத்தும் முதல்வர்’
நவம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15166

Latest indian and world political news information

அண்ணனை பாராட்டும் தம்பி! உடனே பரிசு!!

தம்பியைப் பாராட்டும் அண்ணன்! உடனே பதவி!!

தந்தையைப் புகழும் மகள், மகன்: தகுதி சான்றிதழ் தர போட்டி!

மாமன் – மச்சான்களிடம் முன்பு போலி சண்டை, இப்பொழுதோ அஞ்சலிகள்!

குறிஞ்சிப்பாடி: ஏழைகளின் தேவைகளை அறிந்து முதல்வர் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கனிமொழி எம்.பி., பேசினார்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் வேலைவாய்ப்பு தகவல் மையம் மற்றும் அண்ணாதுரை நூற்றாண்டு விழா நினைவு துணை மின் நிலைய திறப்பு விழா நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

துணை மின் நிலையத்தை திறந்து வைத்த கனிமொழி எம்.பி.,பேசியதாவது:இந்த துணை மின் நிலையம் மூலம் 16 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் முதல்வர் கருணாநிதி.கடலூர் மாவட்டத்தில் இதுவரை இரண்டு லட்சத்து 96 ஆயிரத்து 840 குடும்பங்களுக்கு இலவச கலர் “டிவி’யும், 61 ஆயிரத்து 845 குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் அவரது திட்டங்களால் பயன் பெறாத குடும்பங்களே இல்லை என்ற நிலை உள்ளது.இவ்வாறு கனிமொழி பேசினார்.

விமர்சனம்:

1. சென்ற வருடம் மாம்பலத்தில் மழையினால் நீர் புகுந்து அவதிபட்ட வீடுகளூக்கு பணம் கொடுக்காமலேயே ஏமாற்றிவிட்டனர் [இது மாதிரி மற்ற இடங்களிலும் நேர்ந்திருக்கக்கூடும்].

2. இன்றைய விலைவாசியின் கஷ்டம், நிச்சயம் கனிமொழிக்கோ, கருணாநிதிக்கோத் தெரியாது. அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறி அவர்கள் வாங்கி சமைத்து உண்டால் அந்த கஷ்டம் தெரியும்.

3. ஆனால், “அவரது திட்டங்களால் பயன் பெறாத குடும்பங்களே இல்லை என்ற நிலை உள்ளது” என்று பேசுவது வேடிக்கையாகவும், வருத்தமாகவும் உள்ளது.
4.  இதற்கு பதிலாக, அவரது செயல்களால் / திட்டங்களால் பாதிப்பு பெறாத குடும்பங்களே இல்லை என்ற நிலை உள்ளது”, எனலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: