திமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன்-எஸ்.வி.சேகர்!

திமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன்-எஸ்.வி.சேகர்

புதன்கிழமை, நவம்பர் 25, 2009, 14:48[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/11/25/brahmins-votes-will-shift-dmk-from.html

இது திருவாளர் சேகர் நவம்பரில் சொன்னது, இப்பொழுது மே 2010 ஆகிறது. ஆகவே, திமுக “குதிரை பேரத்தை’ முன்பே ஆரம்பித்து விட்டது என்ற்ய் தெரிகிறது. இனி, ஜாதியாவது, மண்ணாங்கட்டியாவது, காசுதான் பிரதானம்.

இதனால்தான், கருணாநிதி இவரைப் புகழ்கிறார், இவர் அவரைப் புகழ்கிறார்!

பாவம், சேகரென்ன, திருமாவளவனா, வீரமணியா, பட்டங்களைக் கொடுத்து, திரும்பி பெறுவதற்கு?

இவர் இன்னொரு ஜகத்ரெக்சன் ஆவாரா, அல்லது காணாமல் போவாரா, என்பது தேர்தலுக்குப் பிந்தானந்தெரியவரும்!

 திருச்செந்தூர், வந்தவாசியில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: எஸ்.வி.சேகர்

சீர்காழி: தமிழகத்தில் உள்ள 40 லட்சம் பிராமணர்களின் வாக்குகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறும் என்று நடிகரும், மைலாப்பூர் தொகுதி அதிமுக அதிருப்தி எம்எல்ஏவுமான கூறினார்.

தென்னிந்திய பிராமணர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவராக உள்ள அவர் சீர்காழி அருகேயுள்ள வைத்தீசுவரன் கோவிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த இரு தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்.

தமிழகத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். முதல்வர் கருணாநிதியால் மட்டுமே முற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு 16 சதவீதம், குறிப்பாக பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர முடியும்.

இதன்மூலம் 40 லட்சம் பிராமணர்கள் வாக்குகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறும்.

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். இதனால் 20 லட்சம் குடும்பங்கள் பயனடையும்.
முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சனைகளில் அண்டை மாநிலங்களை விட மழைதான் நமக்கு சாதகமாக உள்ளது.

எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாததற்கு இடைதேர்தலால் வீண் செலவு ஏற்படக்கூடாது என்பதே காரணம் என்றார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் இருந்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்ட நடிகர் எஸ்.வி.சேகர், தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது எந்த கட்சியையும் சாராதவராக செயல்பட்டு வரும் அவர், தென்னிந்திய பிராமணர் கூட்டமைப்பு நிறுவன தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: