“கூவத்தைச் சுத்தப்படுத்தி, கரைப் பகுதியை சுற்றுலா இடமாக மாற்றுவோம்”: மு.க.ஸ்டாலின்!

சிங்கப்பூர் ஆற்றில் ஸ்டாலின் படகு பயணம்
நவம்பர் 27,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15239

Latest indian and world political news informationசென்னை: சிங்கப்பூர் ஆற்றில் படகு மூலம் சென்ற துணை முதல்வர் ஸ்டாலின், ஆற்றுப் பணிகளை பார்வையிட்டார்.சிங்கப்பூர் சென்றிருந்த துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள், அங்குள்ள ஆற்றை சுத்தப்படுத்தும் விதம் குறித்து, சிங்கப்பூர் அரசின் “பப்ளிக் யுடிலிட்டி’ வாரிய உயரதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 1977ம் ஆண்டுக்கு முன், முற்றிலும் மாசுபட்டிருந்த சிங்கப்பூர் ஆற்றை, 10 ஆண்டுகளில், மேம்படுத்திய நடவடிக்கைகள் குறித்து, துணை முதல்வரிடம் விளக்கினர்.

இந்த சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்த பின், ஆற்றின் ஓரம் உள்ள பகுதிகளில் வணிக ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், அழகூட்ட தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும், சிங்கப்பூர் அதிகாரிகள் விளக்கினர்.இதன்பின், துணை முதல்வர் ஸ்டாலினும், அதிகாரிகள் குழுவினரும், சிங்கப்பூர் ஆற்றில், கடல் நீர் புகாமல் இருக்க கட்டப்பட்டுள்ள தடுப்பணை யை பார்வையிட்டனர். படகு மூலம் 3 கி.மீ., தூரம் வரை சென்று, ஆற்றின் ஓரப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பணிகளை, துணை முதல்வர் கண்டறிந்தார்.

கருணாநிதியும் கூவமும்: திமுக ஆட்சியில் ஏறியவுடன் கூமம் பட்ட பாடு ஞாபகத்தில் இருக்கிறதோ இல்லையோ, அதில் கொள்ளையடித்த விஷயம் சில வதான கிழங்களுக்கு ஞாபகம் இருக்கிறது இன்றும்!

“கூவம் நதியினில் கப்பல் விடுவோம்” என்றார் கருணாநிதி!

அவர் கப்பல் விட்டாரோ இல்லையோ, சோ “கூவம் நதிக் கரையிலே” என்று சோ ஒரு தொடரை எழுதி அதனை அல்லயன்ஸ் சீனிவாசன் புத்தகமாகப் போட்டு வெளியிட்டார்!

அப்பாவிற்கு தப்பாமல், மகன்! மறுபடியும் கூவம்!

வாழ்க தமிழகம்! தமிழ் மணக்கிறதோ இல்லையோ, கூவம் மணக்கட்டும்!

“கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, ஆற்றங்கரை பகுதியை சுற்றுலா இடமாக மாற்றுவோம்” என்று சிங்கப்பூர் சென்று திரும்பிய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்

Advertisements

ஒரு பதில் to ““கூவத்தைச் சுத்தப்படுத்தி, கரைப் பகுதியை சுற்றுலா இடமாக மாற்றுவோம்”: மு.க.ஸ்டாலின்!”

 1. vedaprakash Says:

  கலைஞரின் கனவுத் திட்டத்தினை நனவாக்கிட உறுதியுடன் பணியாற்றுவோம் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
  http://viduthalai.periyar.org.in/20091212/news27.html

  சென்னை, டிச. 12_ முதல-மைச்சர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டமான கூவத்தினை தூய்மைப்படுத்தும் பணி கலைஞர் அவர்களின் ஆலோசனை, அறிவுரை-கள் பெறப்பட்டு நினை-வுத் திட்டமாக நிறை-வேற்றிட உறுதியுடன் செயல்படுவோம் என்று செனடாப் சாலை, -டர்ன்புல்ஸ் சாலை மேம்-பால திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  அவர் உரை வருமாறு:

  இன்று சென்னை மாநகராட்சியின் சார்பில் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்தூர் சாலையில் மேம்பாலம், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் வாகன சுரங்கப்பாதை, டர்ன்புல்ஸ் சாலை, -செனடாப் சாலை மேம்பாலம் ஆகிய-வற்றை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்து இருக்கின்றார்கள். இந்-நிகழ்ச்சியில் முன்னிலை வகிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  டர்ன்புல்ஸ் சாலை, -செனடாப் சாலை மேம்-பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்துவ-தற்காக ரூ.10 கோடியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 19 கோடியே 93 லட்சம் செலவில் இந்த பாலம் அமைக்கும் பணி முடிக்-கப்-பட்டுள்ளது. இம்-மேம்பாலப் பணி 12.2.2009 அன்று தொடங்-கப்பட்டு, 15 மாதங்களுக்-குள் முடிக்க திட்டமிடப்-பட்டது. ஆனால், 9 மாதங்களிலேயே இப்-பாலம் கட்டி முடிக்கப்-பட்டு, சாதனைப் படைக்-கப்பட்டுள்ளது.

  ஆலந்தூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் மத்திய அர-சின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனர-மைப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. ரூ. 9 கோடியே 3 லட்சம் செலவில் ஆலந்தூர் மேம்-பாலம் கட்டிமுடிக்கப்-பட்டுள்ளது.

  ஜோன்ஸ் சாலையில் வாகனச் சுரங்கப்பாதைத் திட்டம் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மேற்-கொள்ளப்பட்டது. இச்சுரங்கப்பாதைக்கு இரயில்வே துறை மூலம் ரூ. 3 கோடி உள்பட ரூ.8.89 கோடி செலவில் இச்சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தலைவர் கலைஞர் தலைமையி-லான ஆட்சி எப்போ-தெல்லாம் நடைபெறு-கிறதோ, அப்போதெல்-லாம் சென்னையில் மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் பாலங்கள், சாலைகள், பூங்காக்கள் என்று மக்கள் பயன்-பெறும் வகையில் பல்-வேறு கட்டமைப்பு வச-திகள் ஏற்படுத்தப்படு-கின்றன.

  அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பிறகு ஆட்சி பொறுப்-பேற்ற கலைஞர் அவர்-கள் 1971 ஆம் ஆண்டு அப்போது ஜெமினி சர்க்கிள் என்று அழைக்-கப்பட்ட, தற்போதைய அண்ணா சாலையில் பெருமை மிகுந்த அண்ணா மேம்பாலத்-தினை கட்டத் தொடங்கி 1973-_ஆம் ஆண்டு மக்-களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தமிழத்-தில் தலைவர் கலைஞர் தலைமையில் ஆட்சி இல்லாத கால-கட்டங்களில் குறிப்-பிடும்படியான பாலங்கள் ஏதும் ஏற்படுத்தப்பட-வில்லை.

  குறிப்பாக சென்னை-யில் ஒரு பாலம் கூட மாற்றுக் கட்சியின் ஆட்-சியில் கட்டப்படவில்லை. 1996 ஆம் ஆண்டு நான் சென்னை மேயராக இருந்த கால கட்டத்தில், சென்னையில் போக்கு-வரத்து நெரிசலை குறைப்-பதற்காக 10 மேம்பாலங்-கள் கட்ட முடிவெடுக்கப்-பட்டது. அதில், 9 மேம்-பாலங்கள் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டது. அதற்-கான செலவு மதிப்பீடாக ரூ.95 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பாலங்கள் 65 கோடி ரூபாய் செல-விலேயே கட்டி முடிக்கப்-பட்டு 30 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டது-தான் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையி-லான சிறந்த நிருவாகத்-திற்கான எடுத்துக்காட்டு

  சென்னையில், மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தொடர்ந்து பலப் பாலங்-கள், சுரங்கப்பாதைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. பெரம்பூர் மேம்பாலம், மணியக்கார சத்திரத் தெருவில் சுரங்கப்பாதை, கத்திவாக்கம் நெடுஞ்-சாலையில் மேம்பாலம், பெரம்பூர் லோக்கோ ஒர்க்ஸ் மேம்பாலம், ரங்க-ராஜபுரம் மேம்பாலம், கொருக்குப்பேட்டை ரயில்வே வாகன சுரங்கப்-பாதை, தங்கசாலை சந்திப்பில் மேம்பாலம், வியாசர்பாடி-கணேசபுரத்-தில் மேம்பாலம் ஆகிய பாலங்கள் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.

  கலைஞரின் கவனத்திற்கு

  நான் சென்னை மேய-ராக இருக்கும் போது, கட்டப்பட்ட ஒன்பது பாலங்களில் மியூசிக் அகடமி அருகில் அமைந்-திருக்கும் பாலத்திற்கான அனுமதி வழங்கப்படாமல் தாமத-மாகி கொண்டு இருந்தது. நான் அதிகாரிகளிடம் காரணத்தை கேட்ட-போது, அதற்கு காவல்-துறையின் அனுமதி தரமுடியாது, காரணம் பாலத்தின் இறக்கத்தில் முதல்வரின் இல்லம் அமைந்துள்ளது. முதல்-வருக்கு சிரமம் ஏற்படும் என்று காவல்துறை அதி-காரிகள் தெரிவித்தனர். நான், இதனை முதல-மைச்சர் கலைஞரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, கலைஞர் அவர்கள் அதிகாரிகளை அழைத்து எனக்காக ஆயிரக்கணக்கான மக்-களுக்கு பயன்படுகின்ற பாலத்தை நிறுத்தக்-கூடாது. பொது மக்கள் சிரமம் இல்லாமல் பய-ணம் செய்வது தான் முக்கியம் என்று கூறி அந்த மியூசிக் அகடமி பாலம் கட்டுவதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிட உத்தரவிட்-டார்கள்.

  358 ஏக்கரில் அடை-யாறு பூங்கா ரூ. 100 கோடி செலவில் அமைக்-கப்பட்டுவருகிறது. ரூ. 19 கோடி செலவில் 58 ஏக்கரில் முதல் கட்டப்-பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் 2010 இல் அடை-யாறு பூங்கா திறந்து வைக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்-துக் கொள்கிறேன். முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டமான கூவத்தினை தூய்மைப்படுத்தும் பணி கலைஞர் அவர்களின் ஆலோசனை, அறிவுரை-கள் பெறப்பட்டு நினை-வுத் திட்டமாக நிறை-வேற்றிட உறுதியுடன் செயல்படுவோம்.

  தொடர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுகின்ற இந்த அரசிற்கும், மாநகராட்-சிக்கும் நீங்கள் எல்லாம் எப்போதும் ஆதரவை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டு விடைப்பெறு-கிறேன் என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா-லின் பேசினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: