பெரியார் ருஷியா சென்றது பற்றிய செய்திகளை அறிவதெப்படி?

மாஸ்கோவில் இந்தோ – ருசிய கலந்துரையாடல்: 60 பேர் கொண்ட இந்தியக் குழுவில்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பங்கேற்ற சிறப்பு
1932 இல் தந்தை பெரியார் சென்றதுபற்றிய குறிப்பு பேராளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

http://viduthalai.periyar.org.in/20091127/news01.html

பேராளர் அரங்கில் துணைவேந்தர் சொற்பொழிவு.

கலந்துரையாடல் ஒருங்கிணைப்பாளர் ரோசோவிஸ்கி, இந்திய வரலாற்றை ருஷ்ய மொழியில் எழுதும் மாஸ்கோ அரசு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் பெலிக்ஸ் யுர்லோவுடன் தமிழகக் குழுவினர்.

மாஸ்கோ, நவ. 27_ மாஸ்கோவில் நடை-பெற்ற இந்தோ _ ருசிய நல்லுறவு தொடர்பான கலந்துரையாடலில் _ சந்திப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்-கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்-சந்திரன் பங்கேற்று, 1932 இல் தந்தை பெரி-யார் ருசியா சென்ற பல்வேறு தகவல்களை, குறிப்புகளை வழங்கி-னார். பேராளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்திய-_ ருசியா ஆகிய இருபெரும் நாடு-களின் நல்லுறவை மேம்-படுத்தவும், புதுப்பிக்கவு-மான பணிகள் ருசியா-வின் தலைநகரான மாஸ்-கோவில் ரஷ்ய வெளி-நாட்டு தூதரகத்தின் வாயிலாக ஏற்பாடு செய்-யப்பட்டது, அதற்கென இந்தியாவிலிருந்து 60 பல்துறை அறிஞர்களும் ருசியாவின் 100 பேரா-ளர்களும் அழைக்கப்-பட்டு நவம்பர் 17_20 ஆகிய தேதிகளில் மாஸ்-கோவில் உள்ள காஸ்-மாஸ் பல்நோக்கு தங்கு-மிடத்தில் ஒரு கலந்-துரையாடல் நிகழ்ந்தது. இந்த உயர்நிலைக் குழு-வில் பெரியார் மணி-யம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசி-ரியர் டாக்டர் நல். இராமச்சந்திரன் கல்வி-யாளராகவும், டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்-பரம், இசை வல்லுநராக-வும், டாக்டர்.எம்.வி. ரெங்கராஜன் நிதி மற்-றும் தொழில் வல்லுந-ராகவும், மக்கள் குரல் ஆசிரியர் திரு.ஆர். முத்-துக்குமார் ஊடகத்-துறை சார்பாகவும், இவர்களோடு சென்னை இந்திய-_ருசியா கலாச்-சார மய்யத்தின் மக்கள் தொடர்பு அலு-வ-லர் பி. தங்கப்பன் ஆகி-யோரும் தமிழகத்திலி-ருந்து அழைக்கப் பெற்-றிருந்-தனர்.

இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட மற்ற பேராளர்களில் இந்திய-_ருசியா வர்த்தக அமைப்-பின் தலைவர் எச்.பி.சிங், மேனாள் தமிழக ஆளு-நர் மற்றும் நடுவண் அமைச்சரான மேதகு பீஷ்ம நாராயண சிங், ஜெயபிரகாஷ் அகர்-வால் புதுடில்லி, தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி-னர், புதுச்சேரி உள்-துறை அமைச்சர் இ. வலசராஜ், புதுடில்லியில் உள்ள ருசிய தூதரக கலாச்சார மய்யத் தலை-வராகிய, ரோஸோ-விஸ்கி, கேன்சர் நோய் வல்லுநர் டாக்டர் சாந்தி வர்தன், தெற்-காசிய இன்டர்நேஷனல் நியூஸின் நிறுவனர் மற்-றும் மேலாண் இயக்கு-நர் ரோகிட் காந்தி, டலீம் ரிசர்ச் பவுன்டே-ஷனின் இயக்குநர் தலை-வர் வினோத் சி. அகர்வால் பி.எச்.டி., பேராசிரியர் டாக்டர் தயிசுந்தி புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்-கலைக்கழகம், பேராசி-ரியர் டாக்டர். குமார், டெல்லி பல்கலைக்-கழகம். ருசியாவிலிருந்து இந்தியத் தூதர் சுக்லா பிரசாத், ருசிய, வெளி-யுறவு இணையமைச்சர் பொரோட்வாகின் அலக்ஸி நிகோலாவச், கலாச்சாரம் மற்றும் உறவு இணைப்பு இணை-யமைச்சர் புஸ்கின் அந்-திரி ஈஜெனிவிச், விளை-யாட்டு, சுற்றுலாதுறை இணை அமைச்சர் ரோஸ்னவ் ஓலெக் அலெக்ஸான்டிரியா, செல்வி. மார்சவ், ருசிய அர-சின் மூதலீடு ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் பிரடரிக், மாஸ்-கோவின் விற்பனை ஆராய்ச்சி நிறுவனம், டாக்டர் அலெக்ஸாண்-டர், ருசிய அரசின் அறி-வியல் மற்றும் தொழில்-நுட்பத் துறை வெளி-நாடு நல்லுறவு மற்றும் கலாச்சார துறைத்-தலைவர் எப்எம். மொக-மடின் மற்றும் தொழில், வாணிபம், ஊடகம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அறிமுக விழா

தமிழகத்திலிருந்து சென்ற குழுவினரை 16.11.2009 அன்று காலை 12.00 மணியளவில் சென்னை, ருசியா-இந்-திய கலாச்சார மய்யத்-தில் ருசியாவின் துணைத் தூதர் ல்டானிஸ் லாவ் சிமாகாவ் முன் பேரா-ளர்-கள் அறிமுகம் நிகழ்ந்-தது. செய்தி மற்றும் ஊடகத்துறைக்கு பேராளர்களின் நோக்-கத்-தையும், ருசியாவில் கடுங்குளிர் நிலவுவதால் அதற்கான பாதுகாப்பு-கள் குறித்தும் கூறி வழி-யனுப்பி வைத்தனர். 17.11.2009 அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்-டுச் சென்ற குழுவினர் அபுதாபி வழியாக எடி-கட் விமானம்மூலம் தங்-கள் பயணத்தை மேற்-கொண்டனர். அன்று மதியம் 2.30 மணியள-வில் (ருசிய நேரப்படி) விமான நிலையத்தில் எம். நசார்கின் வர-வேற்று காஸ்மாஸ் பல்-நோக்கு தங்கும் விடுதி-யில் தங்க வைத்தனர். அன்று மாலை அரசின் விருந்தினர் மாளிகை-யில் இந்திய பேராளர்-க-ளுக்கு வரவேற்பு நிகழ்ச்-சியும் அறிமுக விழாவும் ஏற்பாடு செய்து ருசிய பாரம்பரிய கலை-நிகழ்ச்சியோடு நிகழ்வு-கள் நடந்தன. ருசிய கலைக்குழு-வின் நிகழ்ச்சிக்குப்பின் டாக்டர் சிவசிதம்பரம் அவர்கள் குற்றால அரு-வியிலே என்ற இந்தி-ய-_-ருசிய கலாச்சார உறவை வலியுறுத்தும் பாட-லைப்பாடி அதற்கானஆங்கில மொழியாக்கத்-தையும் தந்து தமிழகம் இந்திய-_-ருசிய கலாச்சாரத்தில் எவ்வாறு முன்னோடியாக விளங்கியது என்பதைக் கூறினார். இதேபோல் ஜெயபிரகாஷ் அகர்வால், எம்.பி திர-தல்பீர்சிங் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், ஆகியோர் இரு நாடு-களின் உறவுகள் எவ்வாறு வலுப்-பெற்றி-ருந்தன; மேலும் நாம் செய்ய வேண்டியவைகள் எவ்வாறாக அமைய வேண்டும் என்று சுட்டிக்காட்-டினர். அன்றைய இரவு உணவிற்கு பின் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்தன.

18.11.2009 அன்று இரு நாட்டுப் பேராளர்களும் சரியாக காலை 9.30-_-10.00 மணிவரை தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர். அனை-வருக்கும் மூன்று நாள்களின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அடையாள அட்டை-கள், கோப்புகள் ருசிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளால் வழங்கப்-பட்டன.

தந்தை பெரியார்
ருசியா சென்றதுபற்றி…

பதிவு நிகழ்வின்போது அனைத்துப் பேராளர்களுக்கும் தந்தை பெரியார் அவர்களால் 1932 இல் மேற்கொள்-ளப்பட்ட ருசிய பயணம் பற்றிய குறிப்புகள் தந்தை பெரியாருக்கு பின் அன்னை மணியம்மையார் மற்றும் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் தொடர் தலைமைகள் உள்-ளிட்ட குறிப்புகள் அடங்கிய ஆங்கிலக் கையடக்க நூல் அனைத்து இந்திய-_ருசிய பேராளர்கள், அமைச்-சர்கள், ருசிய மற்றும் அதிகாரி-களுக்கும் வழங்கப்பட்டன.

சரியாக 10 மணியளவில் தொடங்-கிய நிகழ்ச்சிக்கு ருசிய வெளியுறவு இணையமைச்சர் பொரோட்வாசின் அலக்சி நிகோலாவச் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இந்திய தூதர் சுக்லா பிரபாத் மய்யக் கருத்துரை-யாற்றி கலந்துரையாடலை தொடங்கி வைத்தார். வரவேற்புரையையும், தொடக்கவுரையையும் ருசிய கல்விக்-குழுத் தலைவர் மெரோனோ ஆற்றி-னார். தொடர்ந்து ரோலோவிஸ்கி நன்றியுரையை ஆற்றினார். தொடக்க நிகழ்ச்சியில், நிகழ்ச்சி வெற்றி பெற தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் அளித்த வாழ்த்துச் செய்தியினை ருசிய மொழியாக்கம் செய்து வாசித்தனர். கூட்டத்தில் இருந்த அனைவரும் பலத்த கரவொலி செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மய்ய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் டில்லி மாநில முதலமைச்சர் ஷீலா திட்சித், கேரள அரசின் ஆளுநர் மேதகு ஆர்.எஸ். கவாய், டாக்டர். கரன்சிங் எம்.பி., அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டாக்டர் ஜெயலலிதா ஆகியோரது வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்-டன. பேராளர்கள் அனைவரும் கர-வொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். தொடக்க உரை-யில் ருசிய வெளியுறவு இணை அமைச்-சர் வாழ்த்துச் செய்தியின் முக்கியத்-துவத்தையும், நல் ஆதரவையும் பாராட்டி வாழ்த்து செய்தி அனுப்பிய இந்திய தலைவர்களுக்கு தமது அரசின் நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் மேதகு மேனாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண சிங், டெல்லி காங்கிரஸ் கட்சியின் நாடாளு-மன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ் அகர்வால், ருசிய-_இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் தல்பீர் சிங் வாழ்த்தியும் 20 ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் இந்த கலந்துரையாடலின் முக்-கியத்துவத்தையும் பேராளர்களுக்கு எடுத்துரைத்தும், இருநாடுகளுக்கும் நன்றியையும் நல்லுறவை மேம்படுத்தும் விதத்தில் நம் கலந்துரையாடல் அமைய-வேண்டும் என்றும் பேசினர். தேநீர் அருந்திய பின்னர் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. பேராளர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் குழு வாணிபம் மற்றும் பொருளாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் குறித்தும், இரண்-டாம் குழு பொது வெளிவிவகாரம் மற்றும் இருநாடுகளிக்கிடையே-யான மனிதநேய கூட்டுச் சிந்-தனை-கள் குறித்தும் மூன்றாம் குழு உலக தகவல் மற்றும் ஊடகத்துறையில் ருசியா மற்றும் இந்திய நாடுகள் இணைந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் மூன்று அணி-களாக பிரித்து நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் கலந்துரையாடல் நடை-பெற்றது.

எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள், நடைமுறைச் சிக்கல்கள், போக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதித்து இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தங்கள் குழுக்களின் பரிந்-துரைகளை இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியில் வாசிக்க வைத்தனர்.

விளையாட்டு, சுற்றுலா மற்றும் இளம் அரசியல் அமைப்புகளுக்கான ருசிய இணை அமைச்சர் ரோஸ்னவ் ஓலெக்குடன் நமது துணை வேந்தர்

மாஸ்கோ அரசு பல்கலைக் கழக பின்னணியில் துணைவேந்தர்…

மூன்று குழுக்கள்

முதல் குழுவிற்கு வெளியுறவு அமைச்சகத்தை சேர்ந்த லூட்மிலா எகோர்கினாவும், இரண்டாம் குழுவிற்கு ருசிய நாட்டின் முதல் இணைய அலைவரிசையை தொடங்-கிய அதன் ஆசிரியர் திரு. ரோடியான் மரினிசேவ், மூன்றாம் குழுவிற்கு ஊடக வல்லுநரும், ருசிய நாட்டின் ஊடக முகமையில் பணி-புரிபவருமான பாவெல் டெமி-டோவிச் மதிப்புரையாளர்களாக அமர்ந்து (விஷீபீமீக்ஷீணீஷீக்ஷீ) தங்கள் பணி-களை சிறப்பாக ஆற்றினர். நிகழ்ச்-சியில் ருசிய பேராளர்கள் அனை-வரும் ருசிய மொழியில் தாங்கள் உரைகளை ஆற்றினர். அதற்குரிய ஆங்கில ஆக்கத்தினை அனைத்து குழுவிலும் மொழி பெயர்ப்பாளர்-கள் ஆங்கிலத்தில் மாற்றம் செய்து உதவினார்கள். அதேபோல் இந்திய பேராளர்களின் ஆங்கில உரை-களை ருசிய மொழியிலும் மொழி பெயர்த்து உதவினர். இந்த இணைப்பு அனைவராலும் பாராட்டப்பெற்றது. பேச்சாளர்-கள் சற்று அதிக நேரம் எடுத்தது உண்மை என்றாலும் செய்திகளை நன்கு பரிமாறிக்கொண்டது உண்மை.

இரண்டாம் நாள் இரவு மிகச்-சிறப்பான அளவில் ருசிய அமைச்-சர்கள், அதிகாரிகள், இந்திய தூத-ரக அதிகாரிகள் கலந்து-கொண்டு மிகச்சிறப்பான விருந்தினை ஏற்-பாடு செய்து நல்ல வண்ணம் உப-சரித்து அனைத்து இந்திய பேரா-ளர்களும் மகிழ்ச்சியுறும் அள-விற்கு பெருமைப்படுத்தினர்.

மூன்றாம் நாள் இரவு ருசிய நாட்டின் கலாச்சார இரவாக ஒரு பொது இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. அவ்விழாவிற்கு அனை-வரையும் அழைத்துச் சென்றனர். கலை இரவு உள்ளபடியே பழை-மையும், புதுமையையும் உணர்த்-தும் வண்ணம் சமூக அநீதிகளை சித்-தரிக்கும் வகையில் கலை நிகழ்ச்சி-கள் அமைந்திருந்தது. 80 கலை-ஞர்கள் இசைக்கருவிப் பணியில் ஈடுபடவும், 100_க்கு மேற்பட்ட சிறார்கள் முதல் பெரியவர்கள் (இரு-பாலரும்) அனைவரும் கலந்து-கொண்ட இந்த கலை நிகழ்ச்சி இரண்டரை மணி நேரம் நடை-பெற்றது. இந்திய திரையரங்குகள் போல் இருந்தாலும் நேரடியாக நடனக் கலைஞர்களின் திறனைக் காணும் விதத்தில் செவிக்கு இத-மாகவும் ஆக்கப்பூர்வமான மாற்-றுச் சிந்தனைகளுக்கு இடமளித்-தும் ருசியாவில் நடனக் கலைஞர்-கள் தற்கால சூழ்நிலையிலும் நலி-வடையாமலும் இருப்பது கண்டு இந்திய பேராளர்கள் வியக்கும் வண்ணம் அமைந்து இருந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பார்வையிடல்

நான்காம் நாள் காலை உண-விற்கு பின் பேராளர்கள் மாஸ்கோ நகர் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் ஆகிய இடங்-களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்க்கவும் அழைத்துச் செல்லப்பட்டனர். ருசிய நாட்டின் பல்துறை வளர்ச்-சிகளை காண்பதற்கும் இது வாய்ப்பாக இருந்தது.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின் அமையப்பெற்ற இந்த ரஷ்ய_-இந்திய பொது கலந்துரையாடல் நிகழ்ச்சி இருநாடுகளின் நல்லுற-வினை தொடர்ந்து முன்னெடுத்-துச் செல்லவும், மொழி, கலை, கல்வி, கலாச்சாரம், வாணிபம், அறிவியல் மற்றும் தொழில்-நுட்பம், பொருளாதாரம், ஊடகம் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் இணைந்து செயல்-படுவதற்கும் ஒருநல்ல முயற்சியாக இருந்தது. கலந்துரையாடலின் தொகுப்புப் பரிந்துரைகளை நடை-முறைப்படுத்தும் வண்ணம் இரு நாட்டு தூதரகங்களும் தங்களு-டைய அமைச்சகங்கள் மூலம் நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டனர் என்றே கூறலாம்.

சென்ற ஆண்டு அதாவது 2008-_இந்தியாவில் ருசியா என்ற ஓராண்டு நிகழ்ச்சியின் விளைவின் வெளிப்-பாடாக இந்த கலந்துரை-யாடல் ஏற்பாடு செய்யப்பட்டும், 2009–_-ரஷ்யா-வில் இந்தியா என்ற பெருமை கொள்ளும் விதத்தில் நமது இந்திய குடியரசுத் தலை-வரின் மாஸ்கோ பயண நிகழ்ச்-சியும், வரும் டிசம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் இருநாடு-களின் தலைமை அமைச்சர்கள் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் விளாட்டிமிர் புட்டின் ஆகியோர்-களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்-களுக்-கும் இது அடித்தளமாக அமையும் என்பதில் அய்யமில்லை.

மெய்சிலிர்க்க வைத்தவை

கலந்துரையாடல் நிகழ்வில் நடந்த சில மெய் சிலிர்க்க வைத்த நிகழ்வுகள்

Dravidian Patriarch

Periyar EVR’s

Russia Visit-1932

என்ற திராவிட பெரும் தலைவர் பெரியார் ஈ.வெ.ராவின் ருசிய சுற்றுப்-பயணம் 1932 என்ற வண்ணமிகு கையேட்டினை பதிவு நாள் தொடங்கி படித்துப் பார்த்த ஒவ்வொருவரும் தேநீர், மதிய உணவு இடைவேளை, இரவின்போது, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரனிடம் தனிப்பட்ட முறையில் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர். தந்தை பெரியாரின் ஈடற்ற கொள்கைகளை பெரியாரின் சமூகப் பேரியக்கம், அன்னை மணியம்மையாருக்கு பிறகு தற்போதைய தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடை-பெறும் விதங்கள் குறித்து விளக்கம் கேட்டு அறிந்து கொண்-டனர். மேலும் பெரியார் அறக்கட்ட-ளைகள் ஆற்றும் பல்வேறு பணியி-னைக் கேட்டும் மெய் சிலிர்த்தனர், மனமுவந்து பாராட்டினர். பெரியார் மணியம்மை பல்கலையில் ரஷ்ய மொழியைப் பயிற்றுவிப்பதற்கான முன்னேற்பாடுகளை கேள்வியுற்று பெரிதும் மகிழ்ந்தனர். ரஷ்ய மொழி-யில் இந்திய வரலாற்றை எழுதும் டாக்டர் பெலிக்ஸ் யுர்லோவ் அய்ந்து பக்கத்துக்குக் குறையாமல் தந்தை பெரியார் மற்றும் நம் நிறுவனங்கள் பற்றி எழுதுவதாகக் கூறினார்.

இந்திய-_ரஷ்ய கலாச்சாரக் குழுவில் பெரியார் மணியம்மை பல்கலைக்-கழகத்தின் துணைவேந்தர், பேராளராக பங்கு பெற்ற வாய்ப்பை கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பகிர்மாணம் குறித்து உரையாற்ற வாய்ப்பு கிடைத்த அதே வேளையில் ரஷ்ய மண்ணில் நமது ஈடிணையற்ற அறிவுப்பேராசான் தந்தை பெரியார் சென்றுவந்த நிகழ்ச்சியினையும், அவரது சிந்தனையைச் செயல்படுத்தும் விதத்-தில் தமிழர் தலைவர் இது நாள் காறும் செய்து வரும் அரும்பணி-களையும், அங்கு நினைவுபடுத்திட வாய்ப்புக் கிடைத்தது. நவம்பர் 22- ஆம் நாள் காலை சென்னைக்குத் திரும்-பினர்.

(மாஸ்கோவில் நிகழ்ந்த இக்-கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கல்வி, அறிவியல், தொழில் நுட்பம் பற்றி டாக்டர் நல். இராமச்சந்திரன் ஆற்றிய சொற்பொழிவு தனிக்கட்டுரையாக வெளிவரும்).

Advertisements

ஒரு பதில் to “பெரியார் ருஷியா சென்றது பற்றிய செய்திகளை அறிவதெப்படி?”

  1. vedaprakash Says:

    “Dravidian Patriarch Periyar EVR’s Russia Visit-1932” – how to get this pamphlet?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: