அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – III

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – III

மத நிறுவனங்களுக்கு வரி போட வேண்டும்: டாக்டர் விஜயம்
டெல்லி பி.சந்தர், நல்.ராமச்சந்திரன் பங்கேற்று உரை

சென்னை, டிச. 27_ மத நிறுவனங்களுக்கு வரி போட வேண்டும் என்று டாக்டர் விஜயம் பேசினார்.

இந்திய பகுத்தறிவா-ளர் கழகத்தின் மாநாடு சென்னை, பெரியார் திடலில் 26.12.2009 அன்று காலை தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. காலை தொடக்க நிகழ்ச்-சிகள் 26.12.2009 அன்-றைய விடுதலையில் வெளி-வந்தது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி வருமாறு:

மலர் வெளியீடு

மாநாட்டு மலர் வெளி-யிட்டு டாக்டர் விஜயம் பேசியதாவது:

இது ஓர் அற்புதமான மலர்; இது கருத்துகள் நிறைந்தது; 21ஆம் நூற்-றாண்டில் மனித நேயர்-கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய திட்டத்தைக் கொண்-டது?

இத்தகைய ஒரு மாநாட்டு மலரை நாம் காண்பது அரிது. இதன் அச்சாக்கம், கட்டமைப்பு, கருத்துகள் ஆகியன அருமை-யானவை.

கடந்த காலத்தில் மதம், அறிவியல் வளர்ச்சி-யைத் தடுத்தது. இப்-பொழுது அறிவியலின் வளர்ச்சியை மதம் பயன்-படுத்திக்கொள்கிறது.

அநீதி, ஏற்றத்தாழ்வு, அடக்குமுறை என்பன இன்னும் தொடர்-கின்-றன. மதம் மக்களுக்கு அபினி. இருக்கின்ற கொடு-மைகளை மக்கள் காணாதவாறு மத நம்பிக்கை தடுக்கிறது. எல்லாவிதமான கொடு-மைகளையும் ஒழுக்கக்-கேடுகளையும் கடவுள், மத நம்பிக்கை மூலம் மறைக்கிறார்கள்.

மதத்திலிருந்து சுதந்திரம்

மதச் சுதந்திரம் வேண்-டும் என்பதை விட, மதத்திலிருந்து சுதந்திரம் வேண்டும். மத நிறுவனங்-களின் வருமானத்திற்கு வரிபோட வேண்டும்.

மறைந்த பிரேமா-னந்தத்தின் உடைமை-யாக இருந்த நிலத்தை, புட்டபர்த்தி சாய்பாபா அபகரித்துக் கொண்-டார்; அந்த மோசடியை பிரேமானந்த் மக்களுக்குத் தெரிவித்தார். உண்-மையை நாடும்படி மக்-களை வேண்டினார். டாக்டர் அப்ரகாம் கோவூ-ரின் வழியைப் பின்பற்றி, செயல்முறை மூலம் மூடநம்பிக்கை மோசடி-களை வெளிப்படுத்-தினார்.

கோபன்கோப்மேன், எடின்பர்க் பல்கலை

பெரியார் திடலில், ஃபிரா செய்தி இதழை வெளியிடுவதில் பெரு-மைப்படுகிறேன். அதன் ஆசிரியரையும் கட்டுரை-யாளர்களையும் பாராட்டு-கிறேன்.

பி.சந்தர்: ஏழாவது ஃபிரா மாநாடு வெற்றி-யடைய வாழ்த்துகிறேன். இளம் நெஞ்சங்களில் புதிய கருத்து விதைகளை விதைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நல்.ராமச்சந்திரன் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழக கழக துணைவேந்தர்)

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர், துணைவேந்தர், இணைவேந்தர் ஆகிய மூவரும் பகுத்தறிவா-ளர்-கள். இந்தியாவில் உள்ள 408 பல்கலைக்கழகங்-களில் இப்படிப்பட்ட ஒரு நிலை இந்தப் பல்-கலையில்தான் காண முடிகிறது.

பெரியார் சிந்தனை மய்யம் இப்பல்கலையில் செயல்படுகிறது. அம்மய்-யத்-தின் வழியே 2010இல் மனிதநேயப் பகுத்தறி-வாளர் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம் என்றார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: