துக்ளக், விடுதலை, பதிலுக்குப் பதில்!

துக்ளக், விடுதலை, பதிலுக்குப் பதில்!

துக்ளக் தர்பார்! விடுதலை 02-01-2010; எழுதியது: மின்சாரம்

http://viduthalai.periyar.org.in/20100102/snews01.html

கேள்வி: மாவோயிஸ்ட்களின் போராட்ட வழிமுறை தவறாக இருக்கலாம்; ஆனால் போராட்டத்தின் காரணங்கள் நியாயமானவையே என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?

பதில்: இந்த மாதிரி வாதம் அனேகமாக எந்த வன்முறைக்குமே பொருந்தும். இப்படி வாதிட்டு, எல்லா வன்முறைகளையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தால், அதற்குப்பின் நாட்டில் அமைதி என்பது அர்த்தமற்ற சொல்லாகி விடும்.

(துக்ளக் 23.12.2009 பக்கம் 13,14)

வன்முறைபற்றி துக்ளக் சோ ராமசாமியின் கருத்து இதுதான் என்றால், இதே கண்ணோட்டம் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீது பாயாதது ஏன்?

பா.ஜ.க.வும் சங்பரிவார்க் கூட்டமும் பாபர் மசூதியைத் திட்டமிட்டு இடித்தன என்று நீதிபதி லிபரான் ஆணையம் சொன்னால், சாட்சிகள் இருக்கின்றனவா? என்று அதே இதழில் தலையங்கம் தீட்டும் சோ ராமசாமிதான் மாவோயிஸ்ட் விஷயத்தில் அந்தர் பல்டி அடிக்கிறார்.

வன்முறையை எதிர்ப்பது போல் நடிக்கும் திருவாளர் சோ மனுதர்மத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டி எழுதுவது ஏன்?

அந்த மனுதர்ம சாஸ்திரம் வன்முறையை எதிர்க்கிறதா _ தூண்டுகிறதா?

வர்ணாசிரமபடி சூத்திரன் நடக்கவில்லையென்றால் பிராமணர்கள் ஆயுதம் எடுத்துப் போராட வேண்டும் (அத்தியாயம் 8, சுலோகம் 348) என்றுதானே மனுதர்மம் கூறுகிறது.

சம்பூகன் தவமிருந்தான் என்றுகூறி ராமன் வாளால் வெட்டிக் கொன்றானே _ அது வன்முறையில்லையா?

இந்து மதக் கடவுள்கள் கைகளில் கொலைகார ஆயுதங்களை ஏந்தி நிற்கின்றனவே _ அவை எல்லாம் அகிம்சையின் சின்னங்களா?

இந்துமதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளனவே _ கொலை செய்துள்ளனவே _ கற்பழித்துள்ளனவே அவை எல்லாம் எந்த பட்டியலைச் சேர்ந்தவை?

கேள்வி: குஜராத் கலவர வழக்கில் மோடியை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதே! விசாரணையின் முடிவு எப்படியிருக்கும்?

பதில்: நடந்தவற்றை எடுத்துக்கூற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இதைச் சரியாகப் பயன்படுத்தி உண்மையை ஊருக்கு உணர்த்துவோம்! என்ற நினைப்புடன், குஜராத் முதல்வர் இதை அணுகினால் நல்ல பயன் இருக்கும். ஆனால் விசாரணைக் கமிஷன் பாரபட்சமாக நடந்து கொண்டால் அது பிரச்சினையாகத்தான் முடியும்.

(துக்ளக் 12.8.2009)

எவ்வளவு சாமர்த்தியமான பதில்! ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மோடியின் மண்டை பொத்துக் கொள்ளும் வகையில் ஆழமாகவே குட்டியிருக்கிறது.

நீரோமன்னன் என்றுகூட விமர்சித்திருக்கிறது. மோடி அரசாங்கம் வேண்டுமென்றே கைவிட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களை பேட்டி எடுத்து டெகல்கா ஊடகம் மோடியின் வன்முறைத் தூண்டுதல்களைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. சிறுபான்மையினர்களைக் கொன்று குவிக்க, அவர்களின் உடைமைகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்க முதல் அமைச்சர் நரேந்திரமோடி எப்படியெல்லாம் ஆணை வழங்கினார் _ காவல்துறைக்கு என்னென்ன ஆணைகளைப் பிறப்பித்தார் என்பதை வெளிப்படையாகவே பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.

2000 சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டது யார் ஆட்சிக் காலத்தில்? மோடி முதல்வராகயிருந்தபோது தானே! அதற்கான தார்மீகப் பொறுப்பு யாரைச் சார்ந்தது? ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் சோ ராமசாமி அய்யர் மோடி விஷயத்தில் மட்டும் முரண்பட்டு மோதிக் கொள்வது ஏன்? அடி மனத்தில் ஆர்.எஸ்.எஸ். நஞ்சு பாய்ந்து இருப்பதால் தானே இப்படியெல்லாம் ஆளுக்குத் தகுந்தாற்போல விமர்சனம்?

பாபர் மசூதியை இடித்தால் அது வன்முறையல்ல; இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தால் அது வன்முறையல்ல; மற்றவர்கள் இதில் ஆயிரத்தில் ஒன்று செய்தால் அய்யய்யோ, அய்யய்யோ வன்முறை! வன்முறை!! என்ற கூச்சல் என்றால், இந்தப் பார்ப்பனத்தனம் _ இந்தப் பூணூல்தனம் பெரியார் சகாப்தத்தில் எடுபடாது _ எடுபடவே எடுபடாது என்று எச்சரிக்கிறோம்.

விசாரணைக் கமிஷன் என்பது இவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி வந்தால் பாரபட்சமற்ற தன்மை! மோடி அரசின் சட்ட மீறல்களை அது தோலுரித்தால் _ படுகொலைகளுக்குக் காரணம் மோடி அரசுதான் என்று ஆணையம் சொன்னால் _ அது பாரபட்சமாக நடந்து கொண்டதாக அர்த்தம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது பிரச்சினையாக முடியும் என்று அச்சுறுத்துகிறார் அக்கிரகாரவாசி.

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மப் புத்தி கொண்ட இந்தப் பார்ப்பனர்களை எது கொண்டு சாற்றினாலும் ஜென்மத்தோடு பிறந்த புத்தி சிறிதும் அசைந்து கொடுக்காது. இதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் –_ ஆவணம் தேவை?

கேள்வி: அரிசி, பருப்பு, பூண்டு, சமையல் எண்ணெய் என்று எல்லா சமையல் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறி விட்டதே! கீழ்த்தட்டு மக்களின் நிலைமை என்னவாகும்?

பதில்: அதனால் என்ன? வயிறாரச் சாப்பிட முடியாததால், லிவர் பாதிக்கப்பட்டால் இருக்கவே இருக்கிறது. தமிழக அரசின் உடல் நலப் பாதுகாப்பு இன்ஸுரன்ஸ் திட்டம் அதன்கீழ் சிகிச்சை பெற்று, பிறகு புதிய தெம்புடன் மீண்டும் பட்டினி கிடக்க லாமே!

(துக்ளக் 12.8.2009 பக்கம் 27)

ஏழை எளிய மக்களுக்கு உதவிகரமான இந்தத் திட்டத்தால், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட குறைந்த கால அளவிலேயே பெரும் பலன் அடைந்துவருகின்றனர். பலன் பெற்ற மக்கள் வாயார மனமார நன்றியுணர்ச்சியுடன் கலைஞர் அரசைப் பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள்.

ஆனால், துக்ளக் பார்ப்பன வயிறு எப்படி-யெல்லாம் கொதிக்கிறது? ஏழை எளிய மக்கள் பயன் அடைந்தால் அவாளுக்குப் பொறுக்குமா?

ஏழை -_ எளிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்-றால், அது அவாள் அவாள் தலையெழுத்து, பூர்வ ஜென்ம பலன் என்றல்லவா கை விட்டுவிட வேண்டும்?

அவாளுக்குப் போய் உதவி செய்யலாமா என்கிற பார்ப்பனத்தனம்தானே இங்கே பதைபதைக்கிறது?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமா? அது தமிழ்நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் திட்டம்; அது கூடவே கூடாது. ராமன் என்றால் சாதாரணமாய்? விஷ்ணுவின் அவதாரம் ஆயிற்றே அவன் பெயரால் உள்ள பாலத்தை இடிக்கலாமா? அபவாதம், அபவாதம் என்று துடிப்பு!

ஈழத் தமிழர் பிரச்சினையா? ஈழத் தமிழர்களாவது, ஈனத் தமிழர்களாவது. அவர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன? அவர்களுக்கு உதவக் கூடாது, உதவவே கூடாது என்று கூச்சல் போடும் குடுமித்தனம்.

பார்ப்பான் தமிழினத்தின் பரம எதிரி என்பதற்கு இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் தேவை?

தேவநாதன்களும், திவாரிகளும் பார்ப்பனக் கலாச்-சாரத்துக்குக் கண் எதிரே தெரியும் எடுத்துக்-காட்டுகள்!

அவாளின் ஜெகத் குரு ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கதையே கூவத்தைவிட குடலைப் பிடுங்கித் தின்கிறது.

அசோக் நகர் அனுராதா, கும்பகோணம் வனஜா, ஆந்திரா ஜெயா, சென்னை சொர்ணமால்யா சிறீரங்கம் உஷா என்று சங்கராச்சாரியாரின் அந்தரங்க உறவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தேவநாதன் கோயிலுக்குள் _ கர்ப்பக்கிரகத்துக்குள் சரசக் கடலில் நீந்தினார் என்றால், அவரது குருநாதரான சங்கராச்சாரியாரோ மடத்துக்-குள்ளேயே காலைக் காட்சி, பகல் காட்சி, மேட்னிக் காட்சி, பகல் _ இரவுக் காட்சி என்று புரண்டு எழு-கிறார்.

இந்த யோக்கிய சிகாமணிகள் பேனா எடுத்து சிலம்பம் விளையாட எத்தனித்தால் எதிரடி எரிமலைக் குழம்பாகவே இருக்கும், எச்சரிக்கை!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: