சரித்திரத்தை மறைத்த கிருத்துவ பாதிரிக்கு கருணாநிதி கௌரவம்!

கால்டுவெல்லுக்கு கவுரவம்
ஜனவரி 29,2010,15:55  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6439

Front page news and headlines todayசென்னை: நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர் கால்டுவெல் வீடு அரசு நினைவு இல்லம் ஆகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:  இங்கிலாந்து நாட்டில் பிறந்து கிறிஸ்தவ சமயத் தொண்டு புரிவதற்காக 1838-ம் ஆண்டில் சென்னைக்கு வந்த ராபர்ட் கால்டுவெல், நெல்லை மாவட்டம் இடையன்குடி என்னுமிடத்தில் தங்கி சமயப் பணிகள் ஆற்றி மறைந்தார். கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தபின் தமிழ்மொழி கற்று, அதன் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ்மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்று, இம்மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்தவர். அதன் பயனாக, “திராவிட மொழிகள்” என்னும் சொல்லாக்கத்தை முதன் முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர் அவர்.

அத்துடன் “திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத சொற்களை அறவே ஒழித்து விட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும் என்னும் வரலாறு போற்றும் மகத்தான உண்மையை நிலைநாட்டி உலகறியச் செய்தவர் கால்டுவெல். அவர் படைத்த “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூல் தமிழ்மொழியின் தனித்தன்மையையும், சிறப்பையும் உலகுக்கு வெளிப்படுத்தியதுடன், தமிழ்மொழி பற்றிய தொன்மைச் சிறப்பினையும் பறைசாற்றுகிறது.

இவ்வாறு தமிழ் மொழிக்கு மாபெரும் பெருமைகளை சேர்த்த ராபர்ட் கால்டு வெல்வை போற்றும் வகையில், அண்ணா முதல்- அமைச்சரான பின், 1968-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, சென்னை கடற்கரையில் காமராஜர் சாலையில் சிலை அமைத்து சிறப்பிக்கப்பட்டது. செம்மொழியாம் தமிழ் மொழிக்கு சிறந்த மணிமகுடம் சூட்டிய மாமேதை கால்டு வெல்லுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், நெல்லை மாவட்டம், இடையன் குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை, அவரது நினைவைப்போற்றும் வகையில், அரசு நினைவு இல்லமாக மேம்படுத்திப் பராமரிக்க  முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

கால்ட்வெல் புராணம்: பாதிரி ராபர்ட் கால்ட்வெல் (1814-91), கிளாஸ்கொவில் (ஸ்காட்லாந்து) ப்ரெபிடிரியன் குடும்பத்தில் (Presbyterian family) பிறந்தார். முதலில், சித்திரக்காரராக பயிற்சி பெற்றார் (1830-33). ஆனால் அவரது இறையியல் பண்டிதத்தனத்தை அறிந்து, கிருத்துவ மடங்களில் பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. பிறகு, குறிப்பிட்ட காரியங்களைச் செய்வதற்காக  இந்தியாவிற்கு லண்டன் மிஷனரி சொஸைடி சார்பில் மிஷனரியாக (LMS Missionary) அனுப்பப்பட்டார். இவர்கூட மாமனார், மாமியார் எல்லோரும் அனுப்பிவைக்கப்பட்டனர்! பாம்பேயை அடைய ஆறுமாதங்கள் ஆகியது. பிறகு அடுத்த ஏழு மாதங்களில் நாகர்கோவிலில் இருந்த சார்லஸ் மிஷன் நிலையம் அடைந்தனர்.
Charles Mault 

மாமனார் சார்லஸ் மௌல்ட்

Martha Mault 

மாமியார் மார்த்தா

மாமனார்-மாமியார் தூண்டிய ஜாதி கலவரங்கள்: இந்த மௌல்ட் தம்பதியர் பல பிரச்சினகளுக்குக் காரணம் என்று தெரிகிறது. சாணர்களை மதம் மாற்றி, ஜாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டதில் இவர்களது பங்கு புலப்படுகிறது. 1821ல் தமிழ் பேசப்பட்ட பகுதிகள் கொச்சிற்கு மற்றாப்பட்டபோதும், 1828-30களில் நடந்த ஜாதிக் கலவரங்களுக்கும் இவர்களே காரணம். ஆனால், கீழ்ஜாதி மக்கள், மேல்ஜாதி மக்களுக்குண்டான உரிமைகளை பெற்றபோது, இந்துக்கள் தங்களுடைய வீடுகளையெல்லாம் கொள்ளையெடித்தனர் என்று எழுதிவைத்துள்ளனர்!  அதாவது, இந்துக்களுக்கிடையில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டால், ஏன் இவர்கள் வீடுகள் கொள்ளையடிக்கப்படவேண்டும்? அதுமட்டுமல்லாது, கொவிலுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற வேலைகளும், இந்துக்களை கோபமடையச் செய்துள்ளன.

இவ்விவரங்களைRobert Caldwell and his Missionary Dynasty” என்ற தளத்தில் காணலாம்.

http://www.britishempire.co.uk/article/faithandfamily.htm

சென்னை பிஷப்பின் அகழ்வாராய்ச்சி!: சென்னையில் 1838-41 காலத்தில் இருந்தார்.  தமிழ்நாட்டில் அவர் செய்யவேண்டிய வேலைகள் பற்றி விவரங்கள் கொடுக்கப்பட்டன. அதற்கேற்றார்போல, பைபிளைப் பரப்புவதற்கான சங்கத்திற்கு 1841ல் மாற்றப்பட்டார் ( the Society for the Propagation of the Gospel (SPG) .  பல இடங்களுக்குச் சென்று தமிழ் சமூகம், பிரச்சினைகள் முதலியவற்றை ஆராய்ந்தார். திருநெல்வேலியைச் சுற்றி அங்கு எப்படி சைவம் தழைத்திருக்கிறது என்று திகைத்தார். இடையன்குடியில் இருந்த காலம் 1841-83 வரை.  மறுபடியும், தோதுவாக சென்னை பாதிரியாக இருந்தார் [Missionary Chaplain to the Bishop of Madras (GJT Spencer) 1844-48]. அதுமட்டுமா, சென்னைப் பல்கலைகழகத்தில் முதிய-ஆராய்ச்சியளர் ( Senior Fellow of the University of Madras) என்ற தகுதியும் கொடுக்கப்பட்டது!  சென்னையின் பிஷப்பாகவும் 1877ல் ஆனார்! தூத்துக்குடியில் 1883ல் இறந்தார். தனது 77வது வயதில் கொடைக்கானலில் 1891ல் இறந்து, பழனிமலையில் புதைக்கப்பட்டார்!

நாணயங்கள், முக்கியமான சரித்திர அதாரங்கள் மறைப்பு!: அங்கிருந்து ஆயிரக்கணக்கில், ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்து இங்கிலாந்திற்கு அனுப்பினார். தமிழ் தொன்மையினை ஆராய்ந்து அதனை மாக்ஸ்முல்லரின் ஆராச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருமைப்பாடு அதிர்ச்சியளித்தது. ஓலைச்சுவடி புத்தகங்களைப் படித்து தாமரைப்பரணி ஆற்றங்கரையில் உள்ள பழைய காயல் என்ற ஊர்தான் மிகவும் பழமையானது என்று தெரிந்து கொண்டார். அதுமட்டுமல்லது அது பாண்டியர்களின் துறைமுகமாக இருந்தது, போன்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டார். பல இடங்களில் பழமையான நாணயங்கள் முதலியவற்றைக் கண்டதும் திகைத்தார். ஏனெனில், அவையெல்லாம், இந்திய ராஜ வம்சாவளியினரின் கடற்பயணங்களைக் குறிக்கும் ஆதாரங்களைக் கொண்டிருந்தன. சர் வால்டர் எல்லியட் எடுத்துக் காட்டியபடி, கப்பல் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களையெல்லாம், சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். பிறகு அரசு பூர்வமாக அறிவிக்கவேண்டுமேயன்று, அனுமதியுடன் அகழ்வாய்வு மேற்கொண்டதுபோல், பிறகு பழங்கால கட்டிடங்கள், கோவில்கள் முதலியவற்றின் அஸ்திவாரங்களுக்கு அருகில் நோண்ட ஆரம்பித்தார்.  அதன்மூலமாகத்தான், தாழிகள், பளபலப்பான மற்றும் கலைநயம் பொருந்திய மண்பாண்டங்கள் , மீன் இலச்சினையுடைய பாண்டியர்களது நாணயங்கள் முதலியவற்றைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இப்படி த்ருட்டுத் தனமாக, அகழ்வாய்வு மேற்கொண்டு பல ஆதாரங்களை மறைத்தவர் தான் கால்டுவெல்.

நாணவியல், அகழ்வாய்விற்குப் பிறகு, மொழியியல்!: 1877 வரை கல்கத்தாவில், ஆசிய சங்கத்தில் அவருக்கு பல விஷயங்கள் சொல்லப்பட்டன. முக்கியமாக சமஸ்கிருதத் தொன்மையை மறுக்க யாதாவது செய்யவேண்டும் என்பது அவட்களது திட்டம். அதன்படியே, 63 வயதில் சென்னைக்கு வந்தார். தமிழக அல்லது தென்னிந்தியா தனித்துள்ளது போல, ஏதாவது ஒரு கருதுகொள உருவாக்க அவர்க்குஆணையிடப்பட்டது. அதன்படியே, சமஸ்கிருதத்திற்கு தொடர்பில்லாமல் தமிழ் உள்ளது என்ற தனது “கண்டுபிடிப்பை” வெளியிட்டார். பிறகு, கிருத்துவத்தையும் காக்கவேண்டும், அதே நேரத்தில் சமஸ்கிருதத் தொன்மையும் மறுக்கப்படவேண்டும் என்ற நிலையில், “திராவிடக்குடும்ப மொழிகள்” என்று கருதுகோளை வைத்தார். இலக்கணம் உதவவில்லை என்றாலும், “ஒப்பிலக்கணம்” என்று சொல்லி அதனையும் சேர்த்துக் கொண்டார். 1856ல் தானெழுதியதை 1875ல் பலவாறு மாற்றிக் கொண்டார். அவரது வேலையை அறிந்து அவரது நண்பர்களே இது ஒரு பெரிய “வெளிப்பாடு”  [“a revelation”] என்றே ஆச்சரியப்பட்டனர்! இதில் வேடிக்கை என்வென்றால், இவர் சி. பி. பிரௌனிடமிருந்து சமஸ்கிருதம் கற்றுக் கொண்டு, அவரையே மிகவும் கேவலமாக சாடியுள்ளார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

15 பதில்கள் to “சரித்திரத்தை மறைத்த கிருத்துவ பாதிரிக்கு கருணாநிதி கௌரவம்!”

 1. devapriyaji Says:

  Kindly Read my Article at
  http://devapriyaji.wordpress.com/2009/10/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/

  From http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell

  “The Comparative Grammar of the Dravidian Languages”, (1856, revised edition 1875) laid the theoretical foundation of the political, academic and ‘revivalist’ movement that came to dominate Dravidian nationalism in the twentieth century. It also significantly dampened the arising nationalist and Indian freedom movements.

  He was the Architect of Divide and Rule Foundation.

  • vedaprakash Says:

   “ஆரிய இனத்தை”க் கட்டுபிடித்ததாகக் கூறிய மாக்ஸ் முல்லர், அது தன்னுடைய கற்பனை என்று சொல்லிவிட்டு, 1888லேயே ஒதுங்கி விட்டான்.

   அந்நிலையில், ‘திராவிட ஒப்பிலக்கணத்திலிருந்து” (Dravidian comparative grammar), “திராவிட இனத்தை” (Dravidian race) உருவாக்கி, அதை வைத்துக் கொண்டு, அரசியல் பிழைப்பும் மக்கள் விரோத சக்திகள் இவ்வாறு “இனவாதம்” பேசுவதே, மனித உரிமைகள் மீறல்தான்!

   இந்திய மக்களை, இல்லாத karuthukooLkalukku / இனவாதங்களுக்கு (race / racist / racialist hypotheses and theories) உட்படுத்தி, அந்த பித்துடன் இன்றைக்கும் இந்த கழகங்கள் இன-வெறியுடன் (racism) செயல்பட்டு வருகின்றார்கள் என்றால், கால்டுவெல் செய்தது மாபெரும் துரோகம்.

   ஆகவே, அவனுக்கு கௌரவம் செய்யப்படவில்லை, அந்த துரோகியுடன், சேர்ந்து இந்தியாவிற்கு துரோகம் செய்கின்றனர் எனலாம்.

 2. Kuppusamy Says:

  வெட்கம், மானம், சூடு, சொரணை…………..இவைகள் தாம் இல்லையென்றால், சரித்திரமும் தெரியாது போல இருக்கிறது.

  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோஷம் என்பார்கள்.

  அந்த பரதேசி பயல், இல்லாத “திராவிட” இனத்தை உருவாக்கி, இந்த “திராவிட” பைத்தியங்களாக்கிவிட்டான். பிறகு, அந்த “திராவிட மாயை”யிலிருந்து விடுபட முடியவில்லை!

  தமிழ்குடியை இரண்டாகப் பிரித்தான் அந்த பரதேசி,
  ஆண்ட வெள்ளக்காரனும் பிரித்தான் இந்தியர்களை,
  இந்த கருவும் பிரிக்கிறது உள்ள தமிழ் மக்களை!

  உள்ள கோவில்களைக் காப்பாற்ற நாதி இல்லை.

  லட்சக் கணக்கில் உள்ள தமிழ் புலவர்களை மதித்து, மரியாதை செய்ய யோக்கியதை இல்லை.

  தமிழ் மன்னர்களை நினைவு கொள்ள அவர்கள் சிறப்பு பேச, இப்பொழுது சந்ததியர் தெரிந்து கொள்ள எந்த வழியும் இல்லை.

  அந்த பரதேசிப் பயலை அறிந்து கொண்டு என்னத்தை, இந்த தமிழர்கள் சாதிக்கப் போகிறார்கள்?

 3. ankaraikrishnan Says:

  As per Caldwell, the Dravidians are also OUTSIDERS Who came to India from North i.e., through Kaiber and Bolen as per the imaginery Aryans.

  Why this is not being said by CM and others

 4. k.v.krishnaswami Says:

  அன்று மக்களிடையே பிரிவினை உண்டாக்கி, பொய் சரித்திரத்தை உறுவாக்கி அப்பாவி மக்களை ஏமாற்றி நாட்டை அடிமையாக்கிக்கொண்ட்டான் ஆங்கிலேயன். அவன் நம் நாட்டை விட்டு சென்றபிறகு நம்மவர்கள் அவனுடைய பாணியை கடைப்பிடித்து, திராவிட இயக்கம் எங்கிற பெயரில் அதன் தலைவர்கள் ஜாதி துவேஷத்தை தூண்டி இன்று ஆட்சியை பிடித்து மக்களையும் நாட்டையும் ஏமாற்றுகிறார்கள். திராவிட இயக்கத்தின் தந்தையின் தலையாய கொள்கையான “திரவிட இயக்கத்திற்கு முட்டாள்தான் தேவை” என்கிற கொள்கையை செவ்வனே கடைப்பிடித்து தமிழகத்தில் கல்வியை தரம் தாழ்த்தி நாரடித்துவிட்டார்கள். உண்மையை வெளிக்கு கொண்டுவரவேண்டும்.

  • vedaprakash Says:

   நன்றி.

   கருணாநிதி இங்கு முக்கியமாக, சாணார்களை அவமத்தித்த, அதே மாதிரியான இந்தியர்களை தூஷித்த, ஏன் இந்தியர்களை தனது போலித்தனமான “திராவிட மாயையை” போர்த்தி, பிரிக்க முயன்ற அயோக்கியனுக்குத் தான் மரியாதை செய்யத்துணிந்துள்ள விஷயம்.

   இந்த இந்திய விரோதிகள், இந்திதிய விரோதிகளை கௌரவிக்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது.

   அதுவும், அரசு முறையில் நடப்பது, அடிமைத்தன்னத்தைவிடக் கேவலமானது.

   ஆனால், கருணாநிதி போன்ற நரிகளுக்கு அது புரிந்தும், புரியாதது போலத்தான் இருக்கும்.

 5. vedaprakash Says:

  கால்டுவெல் எந்தவித உள்நோக்கமும் அற்ற உண்மையான ஆய்வாளர் அல்லர். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற அவரது நூல் மிகச் சிறப்பான ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை.

  அதே வேளையில் இந்தியப் பண்பாட்டு, மரபு பற்றிய ஏளனமான பார்வையும், கிறிஸ்தவத்தை இந்த மண்ணில் வேரூன்றச் செய்ய வேண்டுமென்றால் தம்முடைய மரபு குறித்த பெருமித உணர்வை இந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நீக்கிவிட வேண்டுமென்ற நோக்கமுமே அவருடைய செயல்திட்டத்துக்குப் பின்புலமாக அமைந்த அம்சங்களாகும்.

  கால்டுவெல் எழுதிய History of Tinnevelly என்ற நூலின் மூலமும், சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மண்டல வரலாற்றுத் தொகுப்பு நூல்களின் மூலமும் தமிழர்களின் வரலாற்று உணர்வு குறித்து கால்டுவெல் கொண்டிருந்த ஏளனமான கண்ணோட்டம் புலப்படுகிறது.

  பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கிழக்கிந்தியக் கும்பினியின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸியால் 1803ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டன. இவ்வம்சாவளி வரலாறுகள் குறித்துக் “கட்டுக்கதையைவிட மோசமான புனைவுகள்” என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1980ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் இவ்வரலாறுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை சில இடங்களில் சற்று மிகைப்பட எழுதப்பட்டிருப்பினும் நம்பகமான வரலாற்று அடிப்படையைக் கொண்டவையே என்பதில் ஐயமில்லை.

  அவ்வாறிருக்க, இவ்வளவு கடுமையான விமர்சனத்தை இவ்வரலாறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைத்ததன் நோக்கம் என்ன? இந்தியர்களுக்கு வரலாற்றுப் பார்வை அறவே இல்லை என்ற எண்ணம் கொண்டவர் கால்டுவெல் என்பதுதான் இதற்குப் பதில்.
  காலின் மெக்கன்ஸி, பிரான்சிஸ் வைட் எல்லிஸின் நெருங்கிய நண்பர் என்பதோடு இவ்விருவரும் ஆய்வுப் பணிகளிலும் தம்முள் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஆவர். காலின் மெக்கன்ஸியும் எல்லிஸ¤ம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாக அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் ஆவர். அவர்களுக்குக் கால்டுவெல்லைப் போல கிறிஸ்தவ மதப்பரப்பல் நோக்கம் இருந்ததில்லை. நல்ல நிர்வாகிகள் என்ற பெயரெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருந்ததால் அவர்கள் இந்த மண்ணின் மரபுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் காலனி ஆதிக்க மனப்பான்மை சிறிதும் இருந்ததில்லை என்பதல்ல எமது வாதம். ஆளப்படுவோரின் வாழ்வியலை அனுதாப உணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டுமென்ற முயற்சி அவர்களிடம் இருந்தது என்பதைத்தான் குறிப்பிட விழைகிறோம். கள ஆய்வு அனுபவங்கள் அவர்களுடைய கண்ணோட்டத்தைச் செழுமைப்படுத்தின.

  கால்டுவெல்லுக்கோ மதமாற்றக் களத்தில் அமோக மகசூலை அள்ளிவிட வேண்டுமென்ற உள்நோக்கம் இருந்த அளவுக்கு இந்த மண்ணின் மரபுகள் குறித்து அனுதாபத்தோடு கூடிய புரிந்துணர்வு இல்லை. Tinnevelly Shanars என்ற அவருடைய நூல் நெல்லைச் சீமைச் சான்றோர் சமூகத்தவர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தை விசுவாசத்தோடு பின்பற்றி வந்த சான்றோர் சாதியினரே அவர் மீது கடும் சீற்றம் கொண்டனர்.

  ஞானப்பிரகாசம் நாடார் என்ற புராடஸ்டண்ட் கிறிஸ்தவர் 1883ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் இங்கிலாந்துப் பிரதமர் கிளாட்ஸ்டனுக்கு இந்த நூலைத் தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்படாது போய்விட்டாலும்கூட, நெல்லைச் சீமையில் தம்மால் நிம்மதியாகத் தொடர்ந்து வாழ முடியாது என்று உணர்ந்துகொண்ட கால்டுவெல் கோடைக்கானலுக்குச் சென்று தம் இறுதிக்காலம் வரை, சற்றொப்ப இருபது ஆண்டுகள் அங்கேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது சான்றோர் சமூகத்தவரின் பெருமிதம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இயலாத வண்ணம் அவருடைய பார்வையில் படிந்து போய்விட்ட, கிறிஸ்தவ மதம் சார்ந்த ஐரோப்பிய இன மேன்மை என்ற காமாலைக் கண்ணோட்டம்தான்.

  திராவிட மொழிகள் குறித்த பிரான்சிஸ் வைட் எல்லிஸின் முன்னோடிப் பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரத்தைக் கால்டுவெல் வழங்கவே இல்லை. எல்லிஸ் கிறிஸ்தவ மதத்தின்பால் விசுவாசம் உடையவர் அல்லர். பெளத்த சமயம் குறித்த அனுதாபத்தோடு கூடிய புரிதல் அவரிடம் இருந்தது. திருவள்ளுவர் உருவத்தைப் பொற்காசில் பொறித்து வெளியிடும் அளவிற்கு திருக்குறளை நேசித்தவர் எல்லிஸ். சென்னைப் பட்டிணத்தின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 27 கிணறுகள் வெட்டுவித்து வார திதி, நக்ஷத்திர யோக கரணம் (பஞ்சாங்கம்) பார்த்துப் புண்யாஹவாசனம் செய்தவர் எல்லிஸ். (திருமலை நாயக்கர் அரண்மனைக் காட்சிக்கூடத்திலுள்ள கல்வெட்டு வாசகம்.) இப்படிப்பட்ட ‘பாசண்டி’யை கால்டுவெல் போன்ற விசுவாசமான கிறிஸ்தவரால் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இதுதான் கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் இருந்த அடிப்படைப் பிரச்சினை ஆகும்.

  பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கட்டுக்கதையைவிட மோசமானவை எனக் குறிப்பிடும் கால்டுவெல் தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் குறிப்பிடும் ஓர் அபத்தமான கதையினை வரலாற்றுக் குறிப்பு என்ற பெயரில் தொகுத்துள்ளார்.

  மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் பற்றிய புராணக் குறிப்பு சிலப்பதிகாரத்தில் முதன் முதலில் இடம்பெறுகிறது. புதிய கற்காலப் பண்பாட்டு நிலையிலிருந்து இரும்பு யுக நாகரிகத்திற்குத் தமிழ்ச் சமூகம் மாற்றம் அடைந்தபோது, நீரைத் தேக்கி பிரம்மாண்டமான நீர் நிலைகளை உருவாக்கிக் குடிநீர் மற்றும் நீர்ப் பாசன வசதிகளைப் பாண்டிய மன்னர்கள் மேம்படுத்தி அதன்மூலம் மழை பொய்த்த வறட்சிக் காலங்களிலும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வகை செய்தனர் என்ற வரலாற்றினை இது உணர்த்தக்கூடும் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் கரிகால் சோழன் என்றும், அவன் மேகத்தைச் சிறை செய்தது மாவு விற்கும் கிழவியின் வியாபாரத்தைக் காப்பதற்குத்தான் என்றும் தோன்றியிருக்கின்றன. தமிழக வரலாறு பற்றிய கால்டுவெல்லின் வரலாற்றுக் கண்ணோட்டம் இதுதான்.

  பாளையப்பட்டுகளின் ஆதாரபூர்வமான வரலாற்றைக் கட்டுக்கதையைவிட மோசமானதென்று குறிப்பிடும் கால்டுவெல் “மாவு விற்கும் கிழவி” போன்ற சிறுபிள்ளைத்தனமான கதைகளை வரலாறு என்று குறிப்பிடுவதன் உட்பொருள் என்ன? கால்டுவெல் ஆய்வுக் கண்ணோட்டமில்லாத அடிமுட்டாள் அல்லர். மிகச் சிறந்த அறிஞர். ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து இன்னுயிர் ஈந்த கட்டபொம்மன் போன்ற திராவிட வீரர்களை (பாளையக்காரர்களை) இந்த மண்ணுக்கு உரிமையற்றவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களே உண்மையான திராவிடர்கள் என்றும் ஒரு சித்திரத்தைத் தீட்ட முயன்றவர் கால்டுவெல். அவர் தமிழர்களை முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாவும் கருதியதால்தான் மாவு விற்கும் கிழவி பற்றிய அபத்தமான கதையை வரலாற்றுக் குறிப்பாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

  நன்றி: தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.)

 6. கால்டுவெல்லை வைத்துக் கொண்டு, தமிழர்களை இழிவு படுத்தும் செயல்கள்! « atheism Says:

  […] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-governm… […]

 7. எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்! « திராவிடநா Says:

  […] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-governm… […]

 8. காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்! | ப Says:

  […] [2] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-governm… […]

 9. கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது! | atheism Says:

  […] [5] வேதபிரகாஷ், சரித்திரத்தைமறைத்தகிருத்துவபாதிரிக்குகருணாநிதி கௌரவம்!, https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-governm… […]

 10. கால்டுவெல் புராணம் பாடும் கருணநிதி: கோயம்புத்தூரிலிருந்து இடையன்குடிக்கு போகும் தீவிரவாத ஆத Says:

  […] [2] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-governm… […]

 11. திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ் – மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும Says:

  […] [8] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-govern… […]

 12. திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ் – மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும Says:

  […] [8] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-govern… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: