கால்டுவெல் வாழ்ந்த வீடு நினைவிடமாக மாற்றம்
பதிவு செய்த நாள் 1/30/2010 12:07:21 AM
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இங்கிலாந்தில் பிறந்து 1838ம் ஆண்டு சென்னைக்கு வந்த ராபர்ட் கால்டுவெல், நெல்லை மாவட்டம் இடையன்குடியில் தங்கி கிறிஸ்தவ சமய பணி ஆற்றினார். தமிழகத்துக்கு அவர் வந்த பின், தமிழ்மொழி கற்று அதன் இலக்கண, இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் மொழி மட்டும் அல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளையும் கற்று, இம்மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்தவர்.
அவர் படைத்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் தமிழ்மொழியின் தனித் தன்மையையும் சிறப்பையும் உலகுக்கு வெளிப்படுத்தியதுடன், தமிழ்மொழி பற்றிய தொன்மை சிறப்பையும் பறைசாற்றுகிறது. இவ்வாறு தமிழ்மொழிக்கு மாபெரும் பெருமைகளை சேர்த்த ராபர்ட் கால்டுவெல்லை போற்றும் வகையில், அறிஞர் அண்ணா முதல்வரான பின் 1968ம் ஆண்டு நடைபெற்ற 2ம் உலகத் தமிழ் மாநாட்டின்போது சென்னை கடற்கரையில் காமராஜர் சாலையில் சிலை அமைத்து சிறப்பிக்கப்பட்டது.
செம்மொழியாம் தமிழ் மொழிக்கு சிறந்த மணிமகுடம் சூட்டிய மாமேதை கால்டுவெல்லுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இடையன்குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை அவரது நினைவை போற்றும் வகையில் அரசு நினைவு இல்லமாக மேம்படுத்தி பராமரிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழுக்கோ, தமிழ் நாட்டுக்கோ, எந்த கௌரமும் இல்லை: இவ்வாறு அரசின் சார்பில் செய்வது, தமிழுக்கோ, தமிழகத்திற்கோ, எந்த பெருமையும் இல்லை. உண்மையை அறிந்தால், தமிழுக்கு கேவலம், தமிழகத்திற்கு, அசிங்கம், தமிழர்களுக்கு அவமானம்தான்! விவரங்களை, இங்கே விளக்கியுள்ளேன்:
குறிச்சொற்கள்: அகழ்வாய்வு, இல்லம், கால்டுவெல், சரித்திரத்தை மறைத்தல், தமிழகம், தமிழுக்கு துரோகம், நினைவிடம், பிரௌன், மதம் மாற்றம்
9:47 முப இல் ஜனவரி 30, 2010 |
தமிழுக்கோ, தமிழ் நாட்டுக்கோ, எந்த கௌரமும் இல்லை: இவ்வாறு அரசின் சார்பில் செய்வது, தமிழுக்கோ, தமிழகத்திற்கோ, எந்த பெருமையும் இல்லை. உண்மையை அறிந்தால், தமிழுக்கு கேவலம், தமிழகத்திற்கு, அசிங்கம், தமிழர்களுக்கு அவமானம்தான்! விவரங்களை, இங்கே விளக்கியுள்ளேன்:
https://dravidianatheism.wordpress.com/2010/01/29/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/
12:29 பிப இல் பிப்ரவரி 18, 2011 |
[…] [1] வேதபிரகாஷ், கால்டுவெல் வாழ்ந்த வீடு நினைவிடமாக மாற்றம்!, https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/ […]
2:46 முப இல் பிப்ரவரி 24, 2012 |
[…] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/ […]
12:39 முப இல் மார்ச் 14, 2013 |
[…] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/ […]
3:34 முப இல் மே 6, 2013 |
[…] [4] வேதபிரகாஷ், கால்டுவெல்வாழ்ந்தவீடுநினைவிடமாகமாற்றம், https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/ […]
11:13 முப இல் மே 5, 2014 |
[…] [1] https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/ […]