தமிழர் கல்யாணம்: தாலி இருந்ததா, இல்லையா?

கல்யாணமாம் கலியாணம் – சு. அறிவுக்கரசு

சு. அறிவுக்கரசு என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்படி தமிழிலே பொய்களை வாரி இரைக்க கிளம்பி விட்டார்கள் போலும்.

பத்துப் பாட்டும், எட்டுத்தொகையும் ஒரு தடவையேனும் படித்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்ததாகவும் தெரியவில்லை. ஆனால் புரப்பட்டுவிட்டது “அறிவுக்கரசு”!

வாழ்க தமிழ்!

வாழ்க தமிழ் ஆராய்ச்சி!!

கல்யாணம், கலியாணம் _ எது சரி? இரண்டுமே சரி என்கிறார்கள். திருமணம் என்கிறார்கள் பலர். பேசும்போது கல்யாணம் என்று பேசுபவர்கள் கூட, எழுதும் போது திருமணம் என்றே எழுதுகிறார்கள். எழுதும் போதும் கல்யாணம் என்று எழுதும் பழக்கமும் இருக்கிறது. திருக்கல்யாணம் என்று எழுதுவார்கள். அவை கடவுளச்சிக்கு நடக்கும் திருமணத்தைக் குறிக்கும். ஆண் கடவுளுக்குக் கல்யாணம் என எழுதமாட்டார்கள். பெண் கடவு ளுக்குக் கல்யாணம் என்று _ சீதா கல்யாணம், பார்வதி கல்யாணம், ருக்மிணி கல்யாணம் என்பார்கள் ஏன்? ஆண் கடவுளுக்குப் பல கல்யாணங்-களாம். கடவுளச்சிக்கு ஒரே கல்யாணம்-தானாம்.

சாகாத, பிறக்காத இந்துமதமற்ற கடவுளச்சிகள், கடவுளர்கள்! ஆக, பொம்மைக் கல்யாணம்தான் _ குழந்தைகள் செய்தால் பொம்மைக் கல்யாணம்; பெரியவர்கள் செய்தால் திருக்கல்யாணம். எல்லாம் பிள்ளை விளையாட்டே என்றார் வடலூர் இராமலிங்க அடிகள். ஆக, கடவுளுக்குக் கல்யாணம் மனிதனுக்குத் திருமணம் எனலாம். இந்தத் தொல்லை மிகுந்த வேறுபாடு மற்ற மொழிகளுக்கு இல்லை. மற்ற மதக்காரர்களுக்கு இல்லை. ஏனென்றால் மற்ற மதக் கடவுள்-களுக்குக் கல்யாணமும் கிடையாது; கருமாதியும் கிடையாது. அவை பிறப்பதும் இல்லை, இறப்-பதும் இல்லை என்றார்கள். அதன்-படியே எழுதிவைத்துக் கொண்டிருக்-கிறார்கள், இந்து மதத்தில் அப்படியா?

ஆணும் பெண்ணும் வாழத்-தொடங்கும் நிகழ்ச்சியை _ கணவன், மனைவி என ஆகும் நிகழ்ச்சியை _ திருமணம் என்கிறார்கள். ஓர் ஆணுக்கு வேலைக்காரியாக, சமையல்காரியாக, தாயாக, தாசியாக, தோழியாக, என்றெல்-லாம் பலவாறாகப் பணிவிடை செய்ய வேண்டி, ஒரு பெண்ணைத் தம் வாழ்க்-கையில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது. மலர்ந்த மலரின் மணம் பரவுவது-போல இவர்களின் மனதில் அன்பு மலர்கிறது என்று கருதி இப்பெயரைச் சூட்டியிருக்கிறார்கள் என்று மொழி, இலக்கிய அறிஞர்கள் கூறுகின்றனர். ஆணும் பெண்ணும் கூடி வாழ்க்கை நடத்துவதற்கான ஒரு குறிப்பு தான் திருமணம் என்று தந்தைபெரியார் அவர்களும் டாக்டர் அம்பேத்கர் அவர்-களும் கருதினர், இந்தக் குறிப்பினைப் பலரும் அறியச் செய்யும் வினைதான் திருமண நிகழ்ச்சி என்றும் அவர்கள் குறிப்பிடுவர். சரிதானே! இதுவே வடமொழியில் கல்யாணம் எனப்படுகிறது. அச்சொல்லுக்கு மங்கலம் என்று பொருளாம். ஆரியப் பார்ப்பன, வடமொழிப் பண்பாடு தமிழர் சமுதாயத்தில் ஊடுருவி உருக்குலைக்கத் தொடங்கியபின் நாலடியார், ஆசாரக் கோவை போன்ற நூல்களில் கல்யாணம், கலியாணம் என இருவகைகளிலும் குறிப்பிடப்படுகிறது.

தொல்காப்பியத்தில் பார்ப்பன இடைசெருகல்! தொல்காப்பியத்தில் மன்றல் என்று திருமணம் குறிக்கப்பட்டாலும், மறை-யோர் தேஎத்து மன்றல் எட்டனுள் எனும்போது பார்ப்பன ஊடுருவல் வெளிப்படையாகத் தெரிகிறது. பிரமம், பிரசாபத்யம், ஆரிடம், தெய்வம், கந்த-ருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்கிற எட்டு முறைகளும் அவா-ளுக்கு உரியன. மணம் செய்து கொள்ளும் ஆணுக்-கும் பெண்ணுக்கும் தினம், கணம், மகேந்திரம், ஸ்த்ரீ தீர்க்கம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜு, வேதை, நாடிப் பொருத்-தம் ஆகிய பத்துப் பொருத்தங்கள் தேவை என்கிறது அவாள் சாத்திரம்.

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு

உருவு நிறுத்த காமவாயில் நிறையே அருளே உணர்வோடு திருவென

முறையுறக் கிளத்த ஒப்பினதுவகையே……….தொல்காப்பியப் பொருளதி-காரம் பாடல் 273 .

ஆகும் பொருத்தங்கள் என எவற்-றையோ கூறிய ஆரியர்கள் ஆகாப் பொருத்தங்கள் பற்றிப் பேசவில்லை. தொல்காப்பியம் அவைபற்றியும் பேசுகிறது.

நிம்புரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை

இன்புறல் ஏழைமை மறப்போடோப்புமை

என்றிவை இன்மை என்மனார் புலவர்    …………..(பொருள் : மெய்ப். 25)

ஆகும் பொருத்தங்களோ, ஆகாப் பொருத்தங்களோ_ இவையெல்லாம் பெற்றோர் பார்த்துச் செய்யப்படும். மணங்களுக்குத்தான் பயன்படும். களவு மணம், கற்பு மணம், காதல்மணம், உடன்போக்கு என்றெல்லாம் வாழ்ந்த மக்களுக்கு இவைபயன்படா. இருப்பினும் மணவினை (சடங்கு) கள் ஏன்? ஒரு குறிப்பு என்றும் விளம்பரம் என்றும் தந்தைபெரியார் கூறியதற்கேற்ப இவை தேவைப்படு-கின்றன. இதற்கு அழைப்பு (INVITATION) தேவைப்படுவதைவிட அறிவிப்பு (INTIMATION) மட்டுமே போதும் என்றே பெரியார் கூறினார்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம்: பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப என்று தொல்காப்பியம் இந்தச் சடங்குகளின் தேவையைப் பட்டென விளக்கிவிட்டது. களவுவழி வாழ்ந்-தோரிடையே, அதனை மறைத்தலும் மறுத்தலும் நடைபெற்று விட்ட காரணத்தால் சடங்கு தேவை. அந்தச் சடங்குகள் வகுக்கப்பட்ட காலத்தில் மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே பொருந்துவன என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது. நான்கு ஜாதி-களாம் _ அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று! முதல் மூன்றும் மேலோர்களாம் வேளாண்குடியினர் தாழ்ந்தோராம்! மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே என்ற தொல்காப்பியப் பாடல் (பொருள்: கற்.3) இதனை மெய்ப்படுத்-துகிறது.

வேளாளர் என்று தொல்காப்பியம் கூறுவதன் வடசொல் சூத்திரர் என்பது. எனவே சூத்திரர்க்கு இந்தச் சடங்குகள் எழுதப்படவில்லை; விதிக்கப்பட-வில்லை. ஆனாலும் வழக்கத்தில் வந்து-விட்டது. இந்த அனுபோக பாத்தியதை யை அனுபவிக்கும்போது கூடுதலாக ஒரு சடங்கு செய்யப்படவேண்டும். அது, பூணூல் அணிவது. மேல் (முதல்) மூன்று ஜாதியார்க்கும் அது உண்டு. அது இல்லாத ஆள், அவர்களைப் போல் ஆகித்தான் சடங்குகளைச் செய்துகொள்ள முடியும். அதனால்தான் சூத்திரர்களுக்குப் பூணூல் அணிவிக்கிறார்கள் _ அன்று ஒரு நாள் மட்டும் (தற்காலிகமாகப் பதவி உயர்வு என்பதுபோல ஜாதி உயர்வு கொடுத்து) மேல் ஜாதியாக மாற்றுகிறார்கள். இந்தச் சடங்கின் இழிதன்மையை விளங்கிக் கொள்ளாத சூத்திரர்கள் தம் செல்வச் செருக்கைக் காட்ட வெள்ளி, பொன் போன்ற உலோகங்களால் பூணூல் செய்து அணிவிக்கச் செய்-கிறார்கள். விலை உயர்ந்த பூணூலாக இருந்தாலும் ஜாதியில் தாழ்ந்தவர் என்பதைக் காட்டும் சின்னம் அது.

அதுபோலவே, மற்றொன்றும் உண்டு. மணவினை நிகழ்த்துவோர் யார்? பார்ப்பனர்.

நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்

வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்

சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது.

தேவந்தியைத் தீவலம் செய்து நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர் என்று தேவந்தியின் திருமணத்தைப் பற்றிக் கூறுகிறது அதே நூல். பல்வேறு சடங்குகளைச் செய்து, தீயைச் சுற்றிவரச் செய்து பார்ப்பனப் புரோகிதர் திருமணத்தை நடத்தி வைத்ததாகப் பேசும் முதல், மூடத்த நூல் சிலப்பதிகாரம் ஆகும். ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்வதற்கு முன் திருமணச் சடங்குகள் நடந்த விதம் குறித்து அகநானூறு 86, 136 பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. சுற்றத்தார் மணமகளை அலங்கரித்து பூ இதழ்களும் நெல்லும் கலந்த நீரை அவளின் கூந்தலில் பெய்து வாழ்த்தி மணமகனிடம் ஒப்படைத்தனர் என்-றுதான் காட்டப்படுகிறது.

திருமணநாள் முதற்கொண்டு, பெண்தன் கூந்தலில் மலர் அணியும், உரிமை பெறுகிறாள் என்ற வழக்கத்-திற்-கொப்ப அன்றைய நாளில் மண-மகளுக்கு மலர் அணிவிக்கும் சடங்கு நடைபெற்றதை அய்ங்குறுநூறு 294 ஆம் பாடல் கூறுகிறது. வீட்டுப் பெண்டிரே முதல் நிலை வகித்து மணமகளை மணமகனிடம் அளித்து வாழ்த்திய நிலை மாறி, குடும்ப உறுப்பினரிடமோ, மக்களிடமோ எவ்வித உறவும் இல்லாத ஒரு பார்ப் பனர் மணவினையை நடத்திவைக்க அழைக்கப்பட்ட அவலம், ஆரிய கலாச்சார ஊடுருவலால் விளைந்த ஊறு அல்லவா?

அந்தத் தகுதியை ஆரியர் பெற்றதும் கூட, நான்கு ஜாதிகளில் முதல் உயர்ந்த ஜாதி என்றதால் பெற்றது. யாரும் கொடுக்காமலே, அவர்களாகவே எடுத்துக் கொண்டது. அதில் ஆழ்ந்து அமைந்துள்ள இழிவு எந்தத் தன்மையது என்பதைக்கூட உணர முடியாத நிலை சூத்திரத் திராவிடர்க்கு! ஆமை நுழைதல் என்பதற்கு மாற்றாக ஆரியர் நுழைவு எனக் கூடக் கொள்ளலாம் போல் இருக்கிறது. திருமணமுறைகளில் மூக்கை நுழைத்த-வர்கள், முழுக்க ஆதிக்கம் செலுத்திய வரலாறு எவ்வளவு கொடுமை!

நல்ல நாள் பார்க்க ஜோதிடர் நுழைந்தார் (பெருங்கதை). நல்ல இலக்கணம் வாய்ந்த நிலத்தை ஆய்ந்து, விறகுக்குச்சிகளைக் கொண்டு தீ மூட்டுதலும் நடந்தது. மணப்பந்தலில் 45 கால்களாம், அவை ஒவ்வொன்றிலும் ஒரு தெய்வம் நிலை கொண்டிருக்கிறது எனும் புனை சுருட்டும் பரப்பப்பட்டது. அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் அறிமுகப் படுத்தப்பட்டன. தெய்வங்களுக்குச் சோறு படையல் இடப்பட்டது. எல்லீரும் இங்ஙனம் ஏழுமுறை வணங்குவீர் என்று குரல் கொடுக்க, மகளிர் வணங்கி எழும் நிலை ஏற்பட்டது, மந்திரம் கூறி, நெய்யை நெருப்பில் ஊற்றி, பெண்ணின் காலை ஆண்தூக்கி அம்மியின்மேல் வைத்து பிறகு இருவரும் பொரியை நெருப்பில் போட்டு மணவினையை முடித்துக் கொண்ட நிலை வந்தது. முடிந்த பின்னர் முதலில் பார்ப்பனன் வாழ்த்த மணமக்கள் தீவலம் வந்த நிலை. உதயணன், வாசவதத்தையை மணம் செய்து கொண்ட விதத்தை ஆறாம் நூற்றாண்டுக் காவியமான பெருங்கதை இவ்வாறு கூறுகிறது.

தாலிகட்டும் நிகழ்வு எந்த நூலும் பேசவில்லை! இதுவரை பார்ப்பனப் புரோகிதத் திருமணங்களில், தாலிகட்டும் நிகழ்வு எந்த நூலும் பேசவில்லை. இதனை முதன் முதலில் கந்த புராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரி, தெய்வானையின் கழுத்தில் முருகன் மங்கல நாண் அணிவித்ததாக எழுதி அறிமுகம் செய்விக்கிறார். 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தப் புராணத்தில்,

செங்கமலத்திறை சிந்தையின் ஆற்றி அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து

நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான்

எனப் பாடப்படுகிறது. திருமணம் முடிந்ததற்கு அடையாளமாகிய மலர-ணிதல் செய்ததோடு மங்கல நாணையும் அணிவித்ததாகப் புராணம் கூறுவது-தான் முதல் செய்தி. முருகன் பாதபூசை செய்ததாகவும், தாரை வார்த்து மணப்-பெண் ஒப்படைக்கப்பட்டது எனவும் இப்புராணத்தில் புரோகிதப் பார்ப்பனர் எழுதியுள்ளார். பொற்றாலி எனும் சொல்-லைக்கூட இப்புராணம் குறிப்பிடுகிறது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “தமிழர் கல்யாணம்: தாலி இருந்ததா, இல்லையா?”

 1. Kuppusamy Says:

  இது அரைகுறை என்று நன்றாகவேத் தெரிகிறது.

  மூலகங்களைப் படிக்காத கபோதி, யாரோ எழுதிவைத்ததை, பிச்சி-பிச்சி எழுதும் அரைவேக்காடு.

  “ஈகையறிய இழையணி களைந்தனரே” என்று சங்க இலக்கியத்தில் உள்ளதெல்லாம் தெரியாமல், இப்படி பேத்தும் இனமானத் தமிழர்களை என்ன செயது?

 2. John Chandrasekaran Says:

  அடடா, என்ன பாஜாரு சார், இதல்லாம்.

  தாலி இருந்தது என்ருதான் நன்றகவே தெரியுமே?

  பிற்றகு எதற்ற்கு இந்த இல்லை ஆராய்ச்சி எல்லாம்??

  பேசாமல் களைஞ்சரிடத்திலே கேட்டு விடல்காமா?

  • vedaprakash Says:

   நிச்சயமாக!

   செம்மொழி மாநாட்டிலே, கனிமொழியின் கீழேயே, தனியாக ஒரு அமர்வை வைத்துக் கொண்டு விவாதித்து முடிவிற்கு வந்து விடலாம்!

 3. திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்! « பகுத்தறிவு தீவிரவாதம் Says:

  […] […]

 4. Balu Natarajan Says:

  மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: