நித்யானந்தா விளக்கம்!

நித்யானந்தா விளக்கம்

Thursday, 04 March, 2010   02:30 PM

http://www.maalaisudar.com/newsindex.php?id=33858%20&%20section=1

http://thatstamil.oneindia.in/news/2010/03/04/swami-moves-court-restrain-media.html

சென்னை, மார்ச் 4:பிரபல நடிகையுடன் தோன்றும் பாலியல் தொடர்பான வீடியோ காட்சிகள் உண்மையல்ல என்று நித்யானந்தா சுவாமிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கும்பமேளாவிற்கு சென்றுள்ள நித்யானந்தா சுவாமி இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிடி  நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதா வுடன் நித்யானந்த சுவாமிகள் படுக்கை அறையில் தோற்றும் காட்சிகள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப் பட்டன.இந்த தகவல் வெளியானதை அடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள நித்யானந்தரின் ஆசிரமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

ஆசிரமத்திற்குள் நுழைந்த வன்முறை கும்பல் நித்யானந் தாவின் படங்கள், பொருட்களுக்கு தீவைத்து கொளுத்தின.இந்த நிலையில் நித்யானந்தா தொடர்பான வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை களில் தொடர்ந்து வெளியிடுவதற்கு தடை விதிக்க கேட்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி மணிவாசகம் வழக்கு விசாரணையை வரும் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதனிடையே நடிகை ரஞ்சிதாவு டன் நித்யானந்த சுவாமிகள் தோன்றும் வீடியோ காட்சிகள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே நித்யானந்தாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருப்பதாக நித்தி யானந்தா தரப்பில் கூறப்படுகிறது.

வீடியோ காட்சியில் தோன்றும் நடிகையும், ஆசிரமமும் உண்மை தான்.  ஆனால் நடிகையுடன் இருப்பது நித்யானந்தா சுவாமிகள் கிடையாது. நடிகையுடன் தோன்றும்  சாமியார் யார் என்பது குறித்து விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

நித்யானந்தாவிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை பிளாக்மெயில் செய்வதற்காக நடிகை ரஞ்சிதாவே இந்த வீடியோ காட்சிகளை எடுத்திருக்கக்கூடும் என்று ஆசிரமம் தரப்பில் கூறப்படுகிறது.சேலத்தை சேர்ந்த தர்மானந்தா என்கிற லெனின் கருப்பன் கடந்த 4 ஆண்டு காலமாக நித்யானந்தாவிடம் கார் டிரைவராக இருந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர் தலைமறைவாகி விட்டார். நடிகை ரஞ்சிதாவுடன் தர்மானந்தா கூட்டு சேர்ந்து இந்த வீடியோவை எடுத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

தலைமறைவான கார் டிரைவர் தர்மானந்தாவை பிடித்து விசாரித் தால் இந்த சிடியின் பின்னணி சதி குறித்து தெரியவரும் என்று ஆசிரமம் தரப்பில் கூறப்படுகிறது.இதனிடையே வாரணாசியில் நடை பெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு நித்யானந்தா சென்றுள்ளார்.

அவர் சென்னை திரும்புவதற்கு 10 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. எனவே இந்த வீடியோ காட்சிகள் குறித்து தனது சீடர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் சிடியில் தோன்றி பேசியுள்ளார். இந்த சிடி நாளை பத்திரி கையாளர்கள் சந்திப்பின் போது வெளியிடப்படும் என்று ஆசிரம தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நடிகை ரஞ்சிதாவை பயன்படுத்தி, நித்தியானந்தாவை செக்ஸ் லீலையில் சிக்க வைத்து அதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு சிடியை அனுப்பி வைத்தவர் ஒரு பெண் என்று கூறப்படுகிறது.

சாமியாருடன் ஏற்பட்ட மோதலால்தான் இந்த வேலையை அவர் செய்திருப்பதாகவும், காசு பார்க்கும் நோக்கமும் அவருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நித்தியானந்தா மீது நடிகை ரஞ்சிதா விழுந்து புரள்வது, முத்தம் கொடுப்பது, காலை அமுக்கி விடுவது, மாத்திரை எடுத்துக் கொடுப்பது, ஐஸ்க்ரீம் கொடுப்பது, தண்ணீர் கொடுப்பது மற்றும் இன்ன பிற வேலைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இந்த காட்சிகளை படமாக்கியவர் யார் என்ற கேள்வி அடுத்து விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நித்யானந்தாவின் மடத்தின் சார்பில் சென்னை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களது ஆசிரமத்தைச் சேர்ந்த பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்பவர்தான் இதைச் செய்ததாக கூறியுள்ளனர்.

அதேசமயம், நடிகை ரஞ்சிதா மற்றும் நடிகை ராகசுதா ஆகியோர் மீதும் சந்தேகம் விழுந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில ஆளுநராக இருந்த என்.டி.திவாரியின் செக்ஸ் லீலைகளை ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டு அவரை பதவியிலிருந்து விரட்டினர்.

அதே பாணியில் வேகமாக வளர்ந்து வந்த நித்யானந்தாவையும் கவிழ்த்த இந்த வீடியோ சதி அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பெண் விஷயத்தில் பலவீனமானவர்களைக் குறி வைத்து இதுபோன்ற செயல்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வலையில்தான் தற்போது நி்த்யானந்தா சிக்கி விட்டார்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா அலங்கோலமாக இருக்கும் படுக்கை அறை காட்சிகளை ஒரு பெண்தான் அதிநவீன முறையில் படம் பிடித்துள்ளார் என்றும், அவர்தான் டிவி, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார் என்றும் தகவல்கள் கிளம்பியுள்ளன.

அந்த சி.டி.யுடன் 10 பக்க விளக்கக் குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். அதில் அவர், சுவாமி நித்யானந்தா பல பெண்களுடன் இருக்கும் சி.டி.க்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாராம். ஆனால் தான் யார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

நடிகை ரஞ்சிதா விவாகரத்து பெற்றவர். சாமியாருடன் நீண்ட காலமாகவே ரஞ்சிதா தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சாமியாருடன் சேர்ந்த பிறகு அவர் யோகாசனம் கற்றுக் கொண்டு யோகாசன பயிற்சி குறித்த வீடியோ படம் ஒன்றையும் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய சர்ச்சைப் படத்தில் சாமியாரை விடவும் ரஞ்சிதாதான் படு வேகமாக செயல்படுகிறார். அவராக வந்து சாமியார் மீது விழுந்து புரளுகிறார். அசிங்கமான செயல்களைச் செய்கிறார், முத்தம் கொடுக்கிறார்.

இதுவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் உள்ளது. யாருடைய தூண்டுதலின் பேரிலோ, இதுபோல ரஞ்சிதா நடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதேபோல, சாமியாருடைய ஆசிரமத்திலேயே தங்கி யோகாசன வகுப்புகளை நடத்தி வரும் முன்னாள் நடிகை ராகசுதா மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

சாமியாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ராகசுதா இந்த சி.டி.யை தயாரித்து ஒரு பெண் மூலம் பத்திரிகை மற்றும் டிவிக்கு அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த வீடியோப் படத்தின் பின்னணியில் இருப்பது யார், ரஞ்சிதா, ராகசுதாவின் பங்கு இதில் என்ன, எந்த நோக்கத்திற்காக இது படமாக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை தோண்டி எடுத்து வெளியிட்டால்தான் இதன் முழு விவரமும் தெரிய வரும்.

குறிச்சொற்கள்: , , , ,

5 பதில்கள் to “நித்யானந்தா விளக்கம்!”

 1. John Chandrasekaran Says:

  இனிமேல் இதையெல்லாம் யார் கண்டு கொள்லப்போகிறர்ர்கல்?

  நக்கிரந்கோபால் கருனாநிதிக்கு வேந்தியவர். சந்திவி அவருடைதுதான், தினகரன் மச்சானுடையது. ஆகவே அவர்களுக்கு மட்டும்தான், இந்த ரகசியங்கல் எல்லாம் தெரியும்.

  யாரும் ஒன்னும் பண்ண முடியாது.

  ஒவ்வொரு மடத்தாள்ளும் ஒரு கோடி கொடுக்கவேண்டும் என்ற பேச்சு வேறு அடி படுகிறது.

  அது உன்மையென்றல், குன்றக்குடி போன்று ஒன்று பாராட்ட்யுவிழா நடத்தனும், இல்லை காசு கொடுக்கனும்.

  • vedaprakash Says:

   அப்பா, நீங்கள் தட்டெழுத்து செய்ததைப் படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.

   உள்ள உண்மைகள் வெளிவரும்போது, அனைத்தும் தெளிவாகி விடும்!

 2. Subu Says:

  ஆக மொத்தம் குடும்பத்தான் மட்டுமில்லை, சன்யாசிக்கு கூட பெண்களால் தான் அழிவு போலக்கீது !! என்னாவோ போ

  சி டி யில இருப்பது சாமி நித்யானந்தர் தானான்னே தெரியெல்லை

  அப்படியே அவர்தான்னு சொன்னானும் சாமியார் தப்பு பண்ணுனார்னு கோர்ட்டில நிரூபணம் ஆயிடிச்சா ? சாமியார் என்னா தப்பு பண்ணிட்டார்னு அவரோட ஆஸ்ரமத்துக்கெல்லாம் போலீஸ் ரெய்டோ தெரியெல்லை. பக்தர்களை காலி பண்ண சொல்லுறாங்களாம் போலீஸ்…ஐயோ பாவம் சாமியார்…அதைவிடப்பாவம் பக்தர்களும் சிப்பந்திகளும்

  சாமியார் பண்ணினது ஆசாரத்துக்கோ,சன்யாஸ்ரம தர்மத்துக்கோ எதிர்ன்னு சொன்னா அது அவர் பாடு அவர் பக்தர்கள் பாடு… போலீஸுக்கு என்னாய்யா வந்திச்சு ? போலீஸ் என்னா இந்து சாஸ்திர நிபுணர்களா ?

  இணக்கத்துடன் பாலுறவு தப்புன்னா பலர் வீட்டுக்கும் போலீஸ் ரெயிடு போக வேண்டி வருமே !!

  இந்தக்கூத்தில நாத்திகக் கும்பலோட பங்கென்னான்னு தெரியெல்லை

  http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

 3. நித்யானந்தா விவகாரம்: ஊடக-சினிமாக்காரர்களின் சதி வெளிப்படுகிறது « சினிமாவின் சீரழவுகள்-தீம Says:

  […] […]

 4. நித்யானந்தா விவகாரம்: ஊடக-சினிமாக்காரர்களின் சதி வெளிப்படுகிறது « சினிமாவின் சீரழவுகள்-தீம Says:

  […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: