நித்தியானந்தாவுக்கு எதிராக திரும்ப ரஞ்சிதா மறுப்பு?

நித்தியானந்தாவுக்கு எதிராக திரும்ப ரஞ்சிதா மறுப்பு?

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/03/06-ranjitha-refuses-go-against-nithyantha.html

இந்த செய்தியே வேடிக்கையாக இருக்கிறது. இதுவரைக்கும் அந்த சாமியாரைப் பற்றி பரபரப்பு ஏற்படுத்திவிட்டு, இப்போழுது ஏதோ அயல்நாட்டவர்களில் சதி என்பது போல குறிப்பிடுவது வியப்பாகவே உள்ளது. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று பார்ப்போம்!

நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் [^] அளிக்கவோ, அவருக்கு எதிராக திரும்பவோ முடியாது என்று நடிகை ரஞ்சிதா கூறி விட்டதாக அவருக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது.

நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோ காட்சி போலியானது, அது கிராபிக்ஸ் வேலை என்று நித்தியானந்தா பீடத்தின் பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார். மேலும், சாமியாருக்கு எதிராக புகார் அளிக்குமாறு ரஞ்சிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் ரஞ்சிதாவோ, சாமியாருக்கு எதிராக புகார் தரவோ, எதிராக செயல்படவோ முடியாது என்று உறுதிபடக் கூறி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் ரஞ்சிதா புகார் கொடுத்தால் மட்டுமே சாமியார் மீது நடவடிக்கை எடுக்க உறுதியான வாய்ப்புகள் உண்டு. எனவே ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பிடியில் சிக்காமல் ரஞ்சிதா நழுவி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஞ்சிதா எப்படி நித்தியானந்தாவுடன் இணைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை மகளான நடிகை ராக சுதாதான், ரஞ்சிதாவை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாராம். கணவருடன் ஏற்பட்ட பிரிவால் மனம் உடைந்து போயிருந்த ரஞ்சிதாவை, ராக சுதாதான், பெங்களூர் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் ஆறுதல் அளித்துள்ளார்.

ஆசிரம சூழல் ரஞ்சிதாவுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. இதையடுத்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். அங்கு பல மணி நேரம் தியானம் செய்வாராம். யோகா குறித்த ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தாராம்.

மேலும் நித்தியானந்தர் மீது வைத்திருந்த மதிப்பு காரணமாக அவரது அறையைக் கூட ரஞ்சிதாதான் சுத்தம் செய்வாராம். அப்போதுதான் நித்தியானந்தாவுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டதாம்.

இந்த சமயத்தில்தான் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளது ஆசிரமத்திலேயே இருந்து வந்த நித்தியானந்தா எதிர்ப்பு கோஷ்டி. இவர்கள் செய்த சதியில்தான் ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் மாட்டிக் கொண்டு விட்டதாக கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயமும் இதேபோல உலா வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா.
32 வயதிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம் அமைத்து உலகம் முழுவதும் மடத்துக்கு 1500 கிளைகள் உருவாக்கிய நித்யானந்தா மீது வேறு சில மடங்களின் சாமியார்களுக்கு பொறாமை இருந்ததாம்.

அவர்களும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியைத் தூண்டி விட்டு, நித்தியானந்தாவை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள்.

இப்படி பல முனைகளிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகள், பொறாமைகள் உள்ளிட்டவை சேர்ந்துதான் நித்தியானந்தாவை, இன்று ரஞ்சிதா மூலம் வீழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: