கொலுடிக்கு வாழ்த்து சொல்லும் அரவவாடு!

கொலுடிக்கு வாழ்த்து சொல்லும் அரவவாடு!

வேதபிரகாஷ்

தமிழன் தெலுங்கனை தூற்றினான் அன்று கொலுடி என்று!

இன்றோ உகாதிக்கு – தெலுங்குப் புத்தாண்டுக்கு வாழ்த்துச் சொல்கிறான்

தெலுங்கு என்பதனை தலைகீழாக்கிப் புரட்டியதுதான் கொலுடி!!

பாவம் தெலுங்கன், புரியவில்லை அவனுக்கு முதலில், ஆனால்…………………….1

தமிழன் சொல்லிக்கொண்டேயிருந்தான், “அதோ பார்டா கொலுடி போறான்”!

புரிந்தவுடன் தான் தெலுங்கனுக்கு தெரிந்தது தமிழனின் வன்மம்

“அரவவாடு” என்றான் பதிலுக்கு அதாவது தலைக்கீழாகச் செய்பவன் என்று!

தமிழனோ இன்னும் வேகமாக இரைந்தான் “கொலுடி, கொலுடி” என்று…………..2

தெலுங்கனோ சொன்னான் அமைதியாக, “அதான்டா அரவவாடு” என்று!

அதாவது “அரவவாடு” என்றால் அரவநாட்டைச் சேர்ந்தவன் – துலுக்கன்!

துலுக்கன் தான் எல்லாவற்றையும் தலைகீழாகச் செய்வான்

அழுதால் சிரிப்பான், சிரித்தால் அழுவான் என்றெல்லாம் சொல்வார்கள்……………3

இன்றோ உகாதிக்கு – தெலுங்குப் புத்தாண்டுக்கு வாழ்த்துச் சொல்கிறான்

உகாதி என்றால் “யுகத்தின் ஆதி”, அதாவது இந்த கலியுகத்தின் ஆதி.

கலியுகத்தின் ஆதியிலிருந்து நாங்கள் இருந்து காலக்கணக்கீடு செய்கிறோம்

என்று தனது விஞ்ஞானத்தைப் பறைச்சாட்டுகிறான் பெருமையாக!………………….4

ஆனால் தமிழனோ தனது பிறந்த ஆண்டை புத்தாண்டாகப் புரட்டிவிட்டான்!

இங்கும் தலைகீழ் வேலைதான், புரட்டல்தான், அடிக்கடி சொல்ல்லிக்கொள்வது

கல்தோன்றி மண்தோன்றா காலத்தேத் தோன்றிய மூத்தக்குடி என்று, ஆனால்

எப்படி முடியும் அவ்வாறு என்று கேட்க எந்த தமிழனுக்கும் துணிவில்லை……….5

அறுபது ஆண்டுக் கணக்கீட்டை அறியாமல் கொச்சைப் படுத்தினான்

விஞ்ஞானத்தை அறியாமால் ஆபாசம் கலந்து விரசப்படுத்தி பேசினான்

வானியலை சோதிடம் என்று தமிழனின் புத்தாண்டையேக் குழப்பி விட்டான்

ஆனால் அவன் இன்று தெலுங்கனுக்குப் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறான்!………6

நாங்கள் எங்களது 5112வது புத்தாண்டை கொண்டாடுகிறோம் என்கிறார்கள்

அறியாத, புரியாத திராவிட வானியல்-கணக்கீட்டுப் புரட்டர்களோ

சித்திரையை தையாக்கி தைய்யா தாக்கா என்று ஆடுகிறான், ஆனால்

அந்த அம்பலவாணன் காலத்தை அளந்து கொண்டே சிரிக்கிறான்…………………….7

அவனையும் இவன் விடவில்லை, உண்டியலை எண்ண ஆரம்பித்துவிட்டான்!

திருவள்ளுவர் ஆண்டு என்று சொல்லி 2032 ஆகின்றன என்கிறான் ஆனால்,

எத்தனையாவது புத்தாண்டைக் கொண்டாடுகிறேன் என்று சொல்வதில்லையே?

தமிழன் முன்னோடி என்றால் கணக்காக எண்ணக்கூடவா தெரியவில்லை?………..8

© வேதபிரகாஷ்

16-03-2009

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “கொலுடிக்கு வாழ்த்து சொல்லும் அரவவாடு!”

 1. vedaprakash Says:

  உகா‌தி‌த் திருநா‌ள்: கருணா‌நி‌தி வா‌ழ்‌த்து
  செ‌ன்னை, திங்கள், 15 மார்ச் 2010( 16:20 IST )
  http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1003/15/1100315070_1.htm

  உகா‌தி‌த் திருநாளை மு‌ன்‌னி‌ட்டு தெலு‌ங்கு, க‌ன்னட ம‌க்களு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

  இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்த‌ி‌‌யி‌ல், த‌‌மிழக‌த்த‌ி‌ல் வாழு‌ம் க‌ன்னட‌ம், க‌ளிதெலு‌ங்கு மொ‌ழிக‌ள் பேசு‌ம் ம‌க்க‌ள் தமது பு‌த்தா‌ண்டு‌த்‌திருநாளாக ஆ‌ண்டுதோறு‌ம் கொ‌ண்டாட‌ப்படு‌ம், உகா‌‌தி ‌திருநா‌ள் இ‌ந்த ஆ‌ண்டி‌ல் ‌மா‌‌ர்‌ச் ‌‌தி‌ங்க‌ள் 16ஆ‌ம் நா‌ள் எழு‌ச்‌சியோடு கொ‌ண்டாட‌ப்படுவதை அ‌றி‌‌ந்து ம‌‌‌கி‌ழ்‌‌கிறே‌ன்.

  த‌மிழக‌ம் வ‌ந்தாரை வரவே‌ற்று வாழவை‌க்கு‌ம் மனவள‌ம் கொ‌ண்ட மா‌நில‌ம். இ‌ந்‌தியா‌வி‌ன் எ‌ந்த ஒரு மா‌நில‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்களு‌ம், இ‌ங்கு எ‌ப்போது‌ம், யாதொரு இட‌ர்‌ப்பாடு‌ம் எவராலு‌ம் நே‌ர்‌ந்த‌‌தி‌ல்லை. யாது‌ம் ஊரே யாவரு‌ம் கே‌ளி‌ர் எ‌ன்று‌ம் மன‌ப்பா‌ன்மை புறநானூ‌ற்று‌ப் பாட‌லி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌ல், த‌மிழக ம‌க்க‌ளிட‌ம் இய‌ல்பாக ம‌ி‌ளி‌ர்வதையே இது கா‌ட்டு‌கிறது.

  மு‌ந்தைய அ‌.‌தி.மு.க. அரசு கால‌த்த‌ி‌ல் மறு‌க்க‌ப்ப‌ட்ட உகா‌தி‌த் ‌திருநாளு‌க்கான அரசு ‌விடுமுறையை 2006‌க்கு‌ப் ‌பி‌ன் ‌மீ‌ண்டு‌ம் நடைமுறை‌ப்படு‌த்‌தியது இ‌ந்‌திய அரசு. கட‌ந்த ஆ‌ண்டி‌ல் பெ‌ங்களூரு மாநக‌ரி‌ல் நடைபெ‌ற்ற அ‌ய்ய‌ன் ‌திருவ‌ள்ளுவ‌ர் ‌திருவுருவ‌ச் ‌சிலை ‌திற‌ப்பு ‌விழா, அதனை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை மாநக‌ரி‌ல் நடைபெ‌ற்ற க‌ன்னட‌க் க‌விஞ‌ர் ச‌‌ர்வ‌க்ஞ‌ர் ‌சிலை ‌திற‌ப்பு ‌விழா ஆ‌கியவை த‌மிழக, க‌ர்நாடக மா‌நில ம‌க்க‌‌ளிடையே ந‌ல்லுறவை வள‌ர்‌ப்ப‌தி‌ல் பெ‌‌ரிது‌ம் பய‌ன்ப‌ட்டு‌ள்ளன.

  மாபெரு‌ம் ‌திரு‌விழாவாக நடைபெ‌ற்ற ச‌ட்டம‌ன்ற‌ப் பேரவை- தலைமை‌ச் செயலக வளாக‌த் ‌தி‌ற‌ப்பு ‌விழா ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு ஆ‌ந்‌திர, க‌ர்நாடக, புதுவை மா‌நில முதலமை‌ச்ச‌ர்க‌ள் வருகை பு‌ரி‌ந்து கல‌ந்து கொ‌ண்ட ‌நிக‌ழ்வு‌ம் இ‌ம்மா‌நில‌ங்களு‌க்‌கிடையே ந‌ல்‌லிண‌க்க மன‌ப்பா‌ன்மைகளை வள‌ர்‌ப்ப‌‌தி‌ல் ஒரு பு‌திய ப‌ரிமாண‌த்தை அ‌ளி‌த்து‌ள்ளது.

  இ‌ந்த உறவு‌ம், உண‌ர்வு‌ம் தெ‌ன்னக மா‌நில‌ங்‌க‌ளிடையே மேலு‌ம் மேலு‌ம் வள‌ம்பெற வே‌ண்டு‌ம் எ‌ன்பது எனது ‌விழைவாகு‌ம். இ‌ந்த ‌விழைவோடு உகா‌தி‌த் ‌திருநா‌ள் கொ‌ண்டாடு‌ம் க‌‌ன்னட, தெலு‌ங்கு மொ‌ழிக‌ள் பேசு‌ம் ம‌க்களு‌க்கு‌த் த‌மிழக அர‌சி‌ன் சா‌ர்‌பி‌ல் எனது மனமா‌ர்‌‌ந்த உகா‌‌தி‌த் ‌திருநா‌ள் ந‌ல்வா‌ழ்‌த்து‌க்களை உ‌ரி‌த்தா‌க்கு‌கிறே‌ன் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

 2. கி. வீரமணி Says:

  திராவிடர் நாங்கள் இருக்கும் வரை, ஆரிய பார்ப்பனர்கள் ஒன்றும் செய்துவிட முடியாது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: