கருணாநிதி ஆட்சியில் போலி டாக்டர்கள் இருப்பது ஆச்சரியமே!

கருணாநிதி ஆட்சியில் போலி டாக்டர்கள் இருப்பது ஆச்சரியமே!

“கருணாநிதி ஆட்சியில் போலி டாக்டர்கள் இருப்பது ஆச்சரியமே”  என்று தலைப்பிடப்பட்டது, “டாக்டர்” என்ற பட்டத்திற்கு சிலருக்கு உள்ள ஆசையை எடுத்துக் காட்டத்தான்!                                                                                             நாமக்கல் மாவட்டத்தில் ஒருநாள் ரெய்டில் எட்டு போலி டாக்டர்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 4, 2010, 10:43[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/04/04/1-5-lakh-fake-doctors-tamilnadu.html

இதற்கு முந்தைய காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஒரு குறிப்பிட்ட நிகழ்சியின் வரவேற்பு இதழில் “முதல்வர் கலைஞர் கருணாநிதி” என்று அச்சடிக்கப் பட்டிருந்தது.

அதாவது “டாக்டர்” விடுபட்டிருந்தது.

உடனே பல லட்சங்கள் செலவில் அச்சடிக்கப் பட்டிருந்த அந்த வரவேற்பு இதழ்கள் எல்லாம் ஒதுக்கப்பட்டு, மறுபடியும் “டாக்டர்” சேர்த்து பத்திரிக்கைகள் அடிக்கப்பட்டன.

அதாவது, “டாக்டர்” பட்டத்தின் மீது கருணாநிதிக்கு அவ்வளவு ஆசை!

டாக்டர் பட்டம் இல்லாத டாக்டர்கள்: நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாள் அதிரடி சோதனையிலேயே எட்டு போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான போலி டாக்டர்கள் இருப்பதாக கலெக்டர் சகாயத்திற்கு புகார்கள் வந்தன. உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதிகாரிகள் குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில், முறையாக டாக்டர் பட்டம் பெறாமல் சிகிச்சை அளித்து வந்த முத்துக்காப்பட்டியை சேர்ந்த தங்கமணி (48), திருச்செங்கோட்டை சேர்ந்த தினேஷ் (32), குமரவேல் (62), அறிவழகன் (37), முருகேசன் (43), சண்முகம் (70), நாமக்கல் அலங்காநத்தத்தை சேர்ந்த மணிவாசகம் (40), ப.வேலூர் பெருங்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி (40) ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

தமிழகத்தில் ஏன் போலி டாக்டர்கள்? அவர்களிடம் இருந்த பல ஆயிரம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் போலி மருத்துவர்களின் மருத்துவமனைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. எட்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் போலி டாக்டர்கள் இதற்கிடையே, போலி டாக்டர்களை பிடிக்கும் நடவடிக்கையில், முறையாக படித்து சிகிச்சை அளித்து வரும் சித்த மருத்துவர்களை போலீசார் கைது செய்யக் கூடாது என சித்த மருத்தவ பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் சுமார் ஓன்றரை லட்சம் போலி டாக்டர்கள்: நெல்லையில் நடந்த தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்க மாநில பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் அச்சங்கத்தின் மாநில செயலாளர் ராஜசேகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் சுமார் ஓன்றரை லட்சம் போலி டாக்டர்கள் இருக்கின்றனர் [இதில் தர்மத்திற்காக அளிக்கப்படும் டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளவர்களையும் சேர்த்ததா இல்லையா என்று தெரியவில்லை]. போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசாரின் நடவடிக்கையை வரவேற்கிறோம்.

சித்த டாக்டர்கள், டாக்டர்களா இல்லையா? ஆனால், முறையாக சித்த மருத்துவம் படித்து பட்டம் பெற்ற கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த டாக்டர் ரவீந்திரன் மற்றும் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த டாக்டர் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய மருத்துவ குழுவினரால் ஆங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியின் துணையாக கொண்டு நவீன மருத்துவம், மகளிர் சிகிச்சை, அலோபதி சிகிச்சை, பிரவச சம்பந்தமான மருத்துவ சிகிக்சைகளை மேற்கொள்ளலாம் என இந்திய மருத்துவ குழு தெரிவித்துள்ளது. முறையாக இந்திய மருத்துவ பட்டப்படிப்பு படித்த டாக்டர்களை கைது செய்ய கூடாது என சென்னை ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படி இருக்கும்போது சித்த மருத்துவம் படித்த டாக்டர்களை போலீசார் கைது செய்வது சரியல்ல. சித்த மருத்துவம் படித்தவர்களை கைது செய்த போலீசார் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்’ என்றார்.                                                                                                                           இதற்குப் பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை, ஆனால், இவ்வாறு கைதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் அரசு ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளை ஆதரிக்கிறது, கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறது. ஆனால், இப்படி போலி மருத்துவர்கள், அம்முறைகளை தவறாக பயன்படுத்துவதால், அம்முறைகளைப் பற்றி தவறான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கக் கூடாது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “கருணாநிதி ஆட்சியில் போலி டாக்டர்கள் இருப்பது ஆச்சரியமே!”

  1. சர்ச்சுகளிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் விருதுகள் வாங்குவது! « இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] [9] வேதபிரகாஷ், கருணாநிதி ஆட்சியில் போலி டாக்டர்கள் இருப்பது ஆச்சரியமே!,  https://dravidianatheism.wordpress.com/2010/04/04/doctors-in-karunanidhi-rule/ […]

  2. போலி டாக்டர்கள்: பின்னணி, காரணம், விளைவு « Academic Degradation and Corruption Says:

    […] [1] வேதபிரகாஷ், கருணாநிதி ஆட்சியில் போலி டாக்டர்கள்இருப்பது ஆச்சரியமே!, https://dravidianatheism.wordpress.com/2010/04/04/doctors-in-karunanidhi-rule/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: