சாவிலும் லாபம் தேடும் அரசியல்வாதிகள்-நாட்டுப்பற்றாளர்கள்!

சாவிலும் லாபம் தேடும் அரசியல்வாதிகள்-நாட்டுப்பற்றாளர்கள்!

இந்தியர்களுக்கு எந்தெந்த அரசியல்வாதிக்கு எத்தனை கிலோ நாட்டுப் பற்று உள்ளது என்று தெரிய அதிக கடந்த ஆண்டுகளில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இன்னும் கூட “இந்தியர்” என்ற உணர்வு இல்லாமல், பேசும் பேச்சு, செய்யும் செயல்,……………..இவற்றின் முடிவுகள் முதலியவற்றை நன்றாக அறிந்தே செய்யப்படும் காரியங்கள்…………வேஷங்கள் தான் என்று நன்றாகவேத் தெரிகின்றது.

இந்திய வீரர்களின் வீரம், தியாகம்……….கணக்கில் அடங்காதது.

விலை மதிப்பற்றது, விலை பேச முடியாதது.

மாவோயிஸ்டுகள் விவகாரத்தில் சித்தாந்தவாதிகள், குறிப்பாக கம்யூனிஸ, கிருத்துவ, ஜிஹாதி தீவிரவாதிகள் கூட்டு வேஷம் போடுகிறது. அதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்கின்றன. தெலிங்கானா விஷயத்திலும் அதுதான் உள்ளது.

காங்கிரஸுக்கு, இதெல்லாம் அல்வா மாதிரி.

இந்நிலையில்தான் வருகிறது…………சிதம்பரத்தின் வீராப்புப் பேச்சுகள்,

“மாவோயிஸ்டுகள் கோழைகள்………………….”

“மாவோயிஸ்டுகள் பற்றிய ஒவ்வொரு விஷயமும் என்னுடைய மேஜைக்கு வந்துள்ளது……………..”

“ஏதோ நடந்திருக்கிறது. அது என்ன என்பது தான் ஆராய வேண்டியுள்ளது………………………….”

“அவர்களின் சாவிற்கு நான் பொறுப்பேற்கிறேன்………………………..”

ஆக, அந்த இரண்டு மணி நேரத்தில் முன்று முறை ஆடை-அலங்காரம் செய்து கொண்டு கேமரா முன்பு பேட்டி கொடுத்த சிவராஜ் பாட்டிலுக்கும், வேட்டிக் கட்டிக் கொண்டு, மணிக்கு மணி இப்படி உKஅறி கொட்டும் சிதம்பரத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

இதில் கேடுகெட்ட அந்த காங்கிரஸ் முதல் மந்திரி, இந்த உபயோகமற்ற சிதம்பரம்……………..இவர்கள் எல்லாம் ராணுவ அதிகாரிகளைக் குறை சொல்கின்றனர்……………….

இங்கு, கருணநிதியோ கேட்கவே வேண்டாம், பணம் கொடுத்து புகழ் தேட வசதியாகப் போய்விட்டது!

நக்சலைட்களுக்கு தகுந்த ‘பதிலடி’ : இறுதி மரியாதையில் ஐ.ஜி., உறுதி
ஏப்ரல் 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17678

Important incidents and happenings in and around the world

சென்னை : நக்சலைட்களுக்கு தகுந்த, ‘பதிலடி’ கொடுக்கப்படும் என்று, பலியான கொளத்தூர் வீரரின் இறுதி மரியாதையில் சி.ஆர்.பி.எப்., போலீஸ் ஐ.ஜி., – எஸ்.ஏ., ஜப்பார் தெரிவித்தார். கடந்த 6ம் தேதி காலை சட்டீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டம் மக்ரானா கிராம காட்டுப் பகுதியில் நக்சலைட்களின் தாக்குதலில் 77  சி.ஆர்.பி.எப்., போலீசார் பலியாயினர். இதில், சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் மோகனரங்கத்தின் உடலுக்கு நேற்று காலை மத்திய, மாநில போலீசார் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த சேகர், மோகனரங்கன், விஜயகுமார் ஆகியோரின் உடல்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு விமானம் மூலம் சென்னை வந்தது. இதையடுத்து டி.ஜி.பி., லத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சி.ஆர்.பி.எப்., போலீஸ் ஐ.ஜி., எஸ்.ஏ. ஜப்பார், சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உட்பட முக்கிய அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

N†ˆÐLÖ¡¥ UÖÚYÖ›Í| RÖehR¦¥ T¦VÖ]
2 R–ZL ®WŸL¸Á EP¥L· «UÖ]†‡¥ ÙNÁÛ] Y‹R]
z.È.‘. X†‡LÖ NW AtN¦

சென்னை கொளத்தூரில் வைக்கப்பட்டிருந்த, போலீஸ்காரர் மோகனரங்கத்தின் உடலுக்கு நேற்று காலை எம்.எல்.ஏ.க்கள்., ரங்கநாதன், ஜெயக்குமார், சேகர்பாபு உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆவடி சி.ஆர்.பி.எப்., போலீஸ் அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் சரக போலீஸ் துணைக்கமிஷனர் சாரங்கன், வில்லிவாக்கம் உதவிக்கமிஷனர் நடராஜ், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சிங்கராஜா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
மத சடங்குகள் முடிந்த பின், 10 மணி அளவில் ராணுவ வாகனம் மூலம் மோகனரங்கத்தின் உடல் கொளத்தூரின் முக்கிய சாலைகள் வழியாக, அப்பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மக்காராம் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. . பொதுமக்கள் சாலையோரம் நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். சுடுகாட்டில் மத்திய, மாநில போலீசார் 21 குண்டுகள் முழங்க வீரர் மோகனரங்கத்தின் உடலுக்கு மரியாதையும், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர். இதையடுத்து, தகன மேடையில் வைக்கப்பட்ட உடலுக்கு, 11 மணி அளவில் மோகனரங்கத்தின் இரண்டாவது அண்ணன் திருவேங்கடத்தின் மகன் பிரமேஷ்(21) எரியூட்டினார்.
வேலூர்: நக்சல்கள் தாக்குதலில் பலியானவர்களில், வேலூர் மாவட்டம், கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (36) என்பவரும் ஒருவர். சேகரின் மறைவு குறித்து தகவல் அறிந்த அக்கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். நேற்று அதிகாலை 12 மணிக்கு சேகரின் உடல் தோக்கியம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று (ஏப்., 9) சேகர் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
வேலூர் கலெக்டர் ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி., ராமசுப்பிரமணி, எஸ்.பி., அறிவுச்செல்வம், எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள், சேகர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க சேகர் உடல் அடக்கம்  செய்யப்பட்டது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: