தமிழகத்தில் 45% குளங்கள் மாயம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் 45% குளங்கள் மாயம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மே 02,2010,00:00  IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7392

தமிழகத்தில் நடந்து வருன் சீரழிவுகளுக்குக் காரணம் யார் என்று முதலில் அறிந்து, அவர்களை தமிழர்கள் முதலில் ஒழித்துக் கட்டவேண்டும்.

ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் 45 சதவீதம் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது, எனும்போது, அவர்கள் யார், அவர்களது பின்னணி என்ன, மக்களின், இயற்கைக்கு எதிராக செயல்பட, அவர்களது மனது, மனப்பாங்கு மாறியது எப்படி…………என்று முதலிய விவரங்களை ஆராய்ந்தால், இதன் பின்னணி தெரிந்து விடும்.

தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள். தமிழகம் மலை மறைவு பிரதேசத்தில் உள்ளது. தமிழகத்தின் புவி மேல் பரப்பு 73 சதவீதத்துக்கும் அதிகமான பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம்.

இதை அறிந்த தமிழ் / இந்திய மன்னர்கள் மழைநீரை சேகரித்து வைக்க கோவில்-குளங்களை ஏற்படுத்தினார்கள். அதாவது, கோவில் கட்டும் போதே, இயற்கையான முறையில் அதற்கு வேண்டிய மண் ,உதலியவற்றை எடுக்கும்போது, குளம் உருவாகி விடும். அதனால் தான் கோவில் இல்லாத குளமும் இல்லை, குளம் இல்லாத கோவிலும் இல்லை என்ற நிலை இருந்தது.

ஆனால், திராவிட அரசியல், சித்தாந்தம் புகுந்த பிறகு, நாத்திகம் என்ற பெயரில் கோவில்கள் சூரையாடப் பட்டன. கோவில் நிலங்கள் பட்டாப் போட்டு விற்க்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளிகளுக்கும் துணையாக அவ்வாறான முறை கையாளாப் பட்டது. இதனால் தான் இப்பொழுது விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இதையெல்லாம் மறைக்கும் வகையில், கடல் நீரை சுத்தப் படுத்துவோம், சுத்தமான குடிநீர் தருவோம்……………என்றெல்லாம் பேசி, கோடிகளை விரயம் செய்து, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் திராவிட அரசியல்வாதிகள்.

Front page news and headlines today

சேலம்: தமிழகத்தில் உள்ள குளங்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் சீர்குலைவு, ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் 45 சதவீதம் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள். தமிழகம் மலை மறைவு பிரதேசத்தில் உள்ளது. தமிழகத்தின் புவி மேல் பரப்பு 73 சதவீதத்துக்கும் அதிகமான பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம். தமிழகத்தில் உள்ளூராட்சி அமைப்பு மற்றும் மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் நிலத்தடி நீரை சேமிக்க குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி அமைப்பின் கீழ் 16 ஆயிரத்து 477 சிறு குளங்களும், 3,936 நடுத்தர குளங்களும் மழையை நம்பியுள்ளது.

மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் மழையை நம்பிய குளங்கள் ஐந்தாயிரத்து 276, நதி நீர் பெறும் குளங்கள் மூன்றாயிரத்து 627, தனியார் குளங்கள் ஒன்பதாயிரத்து 886 உள்ளது. கடந்த சில ஆண்டாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் ஆக்ரமிப்புகள் மற்றும் நிலப்பயன்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நீர் பயன்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குளங்களின் கட்டுமான அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நீர் பிடி பகுதியின் வனப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நகர்மயமாதல் உள்ளிட்டவற்றால் குளங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் 32 ஆயிரத்து 202 குளங்கள் இருந்தது. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது தெரிய வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 15 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்ததோடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு நதிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அண்ணாதுரை நமது நிருபரிடம் கூறியதாவது:

 • கடந்த 2007-08 ம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றை பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது.
 • ஆனால், 2009 ம் ஆக்கிரமிப்பு பகுதியில் 10 ஆண்டாக குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
 • எனவே, பெரும்பாலான ஏரி, குளங்கள் மாயமாகிவிட்டது.
 • மதுரையில் 39 சதவீதமும், சென்னையில் 60 சதவீதம் குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
 • சேலம் திருமணி முத்தாற்றை ஒட்டியிருந்த பகுதிகளில் ஒரு குளம் கூட இல்லை.
 • குளம் நிறைந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் செய்பவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
 • நாளுக்கு நாள் பட்டா போட்டு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
 • தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 • எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகிறது.
 • சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 சதவீதம் குளங்கள் தமிழகத்தில் மறைந்துவிட்டது தெரிய வந்துள்ளருது.
 • இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் குளங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆறுகளை உருவாக்கி நாட்டை வளமாக்கும் மேற்கு தொடர்ச்சி மலை
மே 02,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24664

General India news in detail

தேனி : இந்தியாவில் பெரும்பாலான நதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே உருவாகின்றன. இவற்றில் உருவாகும் ஆறுகள் தான் நாட்டின் வளத்திற்கு முக்கிய காரணம்.

மேற்கு தொடர்ச்சி மலை குஜராத் மாநிலம் தப்தியில் துவங்கி தமிழகத்திலுள்ள கன்னியாகுமரி வரை கர்நாடகா, கேரளா என பரவியுள்ளது. இவற்றில் குஜராத் மாநிலத்தில் நர்மதா, தப்தி ஆகிய ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலை துவங்கும் இடத்தில் உருவாகுகின்றன. இவை குஜராத் மாநில வளத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதையடுத்து கிருஷ்ணா, கோதாவரி ஆறுகள் மலையின் மத்திய பகுதியில் உருவாகி ஆந்திர மாநிலத்தை வளம் கொழிக்க செய்கின்றன. கர்நாடக மாநில பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் கபினி, தமிழக பகுதிக்கு காவிரியாக வந்து சேர்ந்து தஞ்சை, திருச்சி மாவட்டங்களை வளம்கொழிக்கசெய்கிறது. கேரள பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நெய்யாறு, அமராவதி ஆறாக தமிழகத்திற்குள் வருகிறது. இதே போல் கேரள பகுதியில் முல்லையாறு, பெரியாறு ஆகியவை மலைப்பகுதிகளில் ஓடிவந்து பெரியாறு அணையில் தேங்கி முல்லைப்பெரியாறாக தமிழகத்திற்கு ஓடி வருகிறது.

இதை நம்பி தென்மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் உள்ளன. மேகமலை பகுதியில் இருந்து மூலவைகை ஆறு உருவாகி வைகை அணைக்கு வைகை ஆறாக வந்து சேர்கிறது. நாட்டின் முக்கிய நதிகள் அணைத்தும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே உருவாகின்றன. ஆற்றில் தண்ணீர் வளம் குன்றாமல் வர மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது அவசியம். இந்த பணியில் தான் கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தை பாதுகாத்து வரும் பெரியாறு பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை வனங்களை பாதுகாப்பது அவசியம். அங்குள்ள மரங்களை வெட்டாமல், வன விலங்குகள் அழியாமல் இருந்தால் நமக்கு தேவையான மழை கிடைக்கும். காடு வாழ்ந்தால், நம் ஒவ்வொருவரின் வீடும் வாழும்.

ஆனால், தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறர்கள்?

அரசியல் நடத்தி சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறர்கள்.

சினிமா, சினிமாக்கூட்டு, டிவி, டிவி-செனல்கள், சிலைத்திறப்பு, ………………………எனும்போது………..கூட்டுக் கொள்ளை முறையில் ஒத்துழைக்கிறர்கள். அங்கு மலையாளத்தான், கன்னடக்காரன்……………என்றெல்லாம் வருவதில்லை.

ஆனால், தண்ணீர் என்றதும் எல்லாம் வந்து விடும்!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: