குஷ்பு திமுகவில், எதிர்பார்த்தபடியே இணைந்து விட்டார்!

குஷ்பு திமுகவில், எதிர்பார்த்தபடியே இணைந்து விட்டார்!

நேற்று மாலை (14-05-2010) திமுக அலுவலகத்தில் கிடைத்த தகவல்களின்படி பதிவுசெய்தேன். ஓரளவிற்கு இன்று அதற்கேற்றபடி, வந்துள்ள செய்திகளை அதற்குக் கீழே இடுகிறேன்.

கருணாநிதி ஒரு ராஜதந்திரி!

எம்.ஜி.ஆர் தான் தன்னை அண்ணாவிற்குப் பிறகு, முதல் மந்திரி ஆக்கினார் என்ற கதையைச் சொன்னார்.

எஸ். வி. சேகரை வைத்துக் கொண்டு பிராமணர்களைக் குழப்பினார் [எம்.எல்.ஏ. சீட்டும் அலையும் நிலைக்குக் கொண்டு வைத்தார்].

குஷ்புவை வைத்துக் கொண்டு நடிகைகளை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டார்.

கமலஹாசனை ஒரு வலுவுள்ளத் தரகராக்கினார். ரஜினிகாந்தை அமுக்கிவைத்துக் கொண்டார் [மகள் நிச்சயதார்த்தை நினைவு கொள்ளவும்].

இப்படி, ஒரு மாயா பஜாரை உண்டாக்கி, எல்லோரையும் வரவழைத்து நல்ல விருந்தும் அளித்து விட்டார்!

பாவம், இளங்கோவன்!

சுதர்சனம் நன்றாக சாப்பிட்டு தூங்குகிறார்போலும்.

கடைசியில் கோபண்ணா வென்றுவிட்டார் போலும்!

இனி தேர்தலில் நிற்கவேண்டியதுதான் பாக்கி.

திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் குஷ்பு: கருணாநிதிவெப்துனியா – ‎10 மணிநேரம் முன்பு‎

திமுகவின் வளர்ச்சிக்கு நடிகை குஷ்பு பாடுபடுவார் என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5

ஜெயலலிதாவிற்கு எதிராக நிற்கவைக்க, கருணாநிதி திட்டம் போட்டிருக்கிறார். [19-05-2010 அன்று குஷ்பு வெளிப்படைடையாக ஒப்புக்கொண்டாகி விட்டது]

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட சீட் கிடைத்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.  சமீபத்தில் திமுகவில் இணைந்ததையடுத்து ஜெயா டி.வி.யில் அவர் நடத்திவந்த ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் குஷ்பு அளித்துள்ள பேட்டியில்,

ஜெயலலிதா எப்போதுமே என்னுடன் நட்பாக இருந்தது இல்லை. அவரை நான் நேரில் சந்தித்தபோதுகூட அதிகம் பேசிக்கொள்ளவில்லை. நான் அதிமுக அனுதாபி என்று தவறாக செய்திகள்  பரப்பப்பட்டன.
ஜெயா டி.வி.யில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்தினேன். அதை நிறையபேர் பாராட்டினார்கள். ஆனால் ஜெயலலிதா அதுபற்றி என்னிடம் பேசியதே இல்லை. திமுகவில் சேர்ந்ததும் ஜாக்பாட் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர். திமுகவில் சேர்ந்தது சுயமாக எடுத்த முடிவு. யாரும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை. சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட எனக்கு சீட் கிடைத்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தைரியம் பக்குவம் இருந்தால் தாராளமாக அரசியலில் ஈடுபடலாம். நான் அரசியலில் ஈடுபட்டதை பலர் விமர்சிக்கின்றனர். நடிகையாக இருப்பவர்களுக்கும் நாட்டு நடப்புகள் நன்றாக தெரியும். திமுகவில் தனி மனித சுதந்திரம் இருப்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன். இங்கு கருத்து சொல்லும் சுதந்திரமும் இருக்கிறது என்று கூறியுள்ளார் குஷ்பு.

ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவாரா

தினகரன்  [14-05-2010]- ‎5 மணிநேரம் முன்பு‎
சென்னை : முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு, திமுகவில் நேற்று இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு திமுகவில் நேற்று
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக குஷ்புவை வேட்பாளராக நிறுத்துவது மாதிரியான யோசனைகள் எல்லாம் இல்லை.
அன்று கருணாநிதி பேட்டியில் சொன்னது!
ஆனால், இன்று குஷ்புவே சொல்வது, “ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட சீட் கிடைத்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன்“!
அப்படியென்றால், கருணாநிதியையும் மீறி செயல்படும் அளவிற்கு குஷ்புவிற்கு நிலை உயர்ந்து விட்டதா?
அல்லது, இருவரும் சேர்ந்து ஆடும் நாடகமா?
அல்லது ம்உலயம் மாதிரி, கருணாநிதியும் நடிகைகளை வைத்துக் கொண்டு “அரசியல் வியாபாரம்” செய்யப் போகிறாரா?
நல்ல வேலை, திமுகவில் “அமர் சிங்”, “கான்”,……போன்றவர்கள் இல்லை. இருந்தால், குஷ்பு கதை வேறு மாதிரி போய் இருக்கும்!

ஆனால், புவனேஸ்வரிதான் குஷ்புவிற்கு சரியான போட்டிஎன்று ஏற்கெனெவே தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இருவருமே ஜெயலலிதாவிற்கு நின்றாலும் / நிறுத்தப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை!

ஹனிமூன் போயிட்டு வந்திருக்கும் குஷ்பு

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?T=181

கருணாநிதி மாதிரி தமிழ் பேசத் தெரியாவிட்டாலும், கருணாநிதி மாதிரி பொடிவைத்துப் பேசுவதில் வல்லவராம் குஷ்பு: “ரெண்டு மூனு குழந்தைங்க..அப்புறமா ஒரு கல்யாணம் ஆச்சுன்னு”,  விவேக் வாலி படத்தில் அஜீத்கிட்ட  காமெடி பண்ணுவார். அதுமாதிரிதான் குஷ்புவும் ஒரு விசயத்தை சொன்னார்.

சுந்தர்.சி’யை காதல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு நன்கு வளர்ந்துவிட்ட இரண்டு பெண் குழந்தைகள்  இருக்கு.  ஆனால் சுந்தருடன் இப்போதுதான் ஹனிமூன் கொண்டாடினேன் என்கிறார்.

தனது தயாரிப்பில் கணவர் சுந்தர்.சி நடித்து முடித்துள்ள ஐந்தாம் படை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய குஷ்பு,

ஷூட்டிங் அது இதுன்னு ஆயிரம் காரணத்தால திருமணத்திற்கு பிறகு நானும் சுந்தரும் தனியாக எங்கேயும் போகமுடியல. குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறோம். தனியா ஹனிமூன் போக முடியலையேன்னு வருத்தமா இருந்துச்சு.   அந்த வருத்ததை போக்கிடுச்சு ஐந்தாம் படை.    இந்தப்படத்தின் ஷூட்டிங் இடைவேளையில ஹனிமூன் போயிட்டு வந்தோம். ஐ எம் வெரி ஹேப்பி’’, என்று குஷியாக சொன்னார் குஷ்பு.

திமுகவில் ஏன் இணைகிறேன் குஷ்பு விளக்கம்

May 14, 2010

“அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். தமிழக் முதல்வர் டாக்டர் கலைஞர் மீது எனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. அதனால் நான் இன்று மாலை அவர் முன்னிலையில் திமுகவில் இணைகிறேன். இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன். திமுகவில் இணைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக மேலும் இது குறித்து விரிவாக பேசுகிறேன்.தமிழக மக்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. அரசியலிலும் என்னை வரவேற்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்தார்.

விடுவாரா கருணாநிதி, இதோ அவர் அடித்துள்ள ஜோக்:

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதி கூறியதாவது:

குஷ்பு முற்போக்கான கருத்துக்களை கொண்டவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர். “பெரியார்” படத்தில் மணியம்மை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரியார் மீதும், திராவிடக் கொள்கைகள் மீதும் தனக்குள்ள பற்றுதலை வெளிப்படுத்தியவர் குஷ்பு.

மணியம்மை வாழ்க்கையில் நடித்தாரா, இல்லையா என்று சொல்கிறார் போலும். குஷ்பு நிச்சயமாக பெண்களின் முன்னேற்றத்திற்காகத்தான் பாடுபடபோகிறார்!

திமுகவில் மகளிர் அணியில் இணைந்து திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்.

அதாவது, ஜெயலலிதாவிற்கு எதிராக வேலை செய்வார். இனி கலைஞர் டிவியில் நிறைய பார்க்கலாம், பெரிதாக, முழுமையாகப் பார்க்கலாம். விரைவில் “குஷ்பு செனல்” ஆரம்பித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

திமுகவில் குஷ்புக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும்? என்று கேட்கப்படுகிறது. நானே திமுகவில் இணைந்தபோது எந்த பொறுப்பும் இல்லாமல்தான் இருந்தேன்.

கருணாநிதியின் நக்கல், குசும்பு…..இவற்றிற்கெல்லாம் அர்த்தமே வேறு என்பது நண்பர்களுக்கு நன்றாகவேத் தெரியும். பார்த்தீர்களா குஷ்புவை, இல்லை, குஷும்பை! பொறுப்பில்லாமல் இருந்திருக்கிறாராம்! அதனால்தான் போலும், தமிழகம் இந்த பாடுபட்டுள்ளது.

பேராசிரியர் அன்பழகன்,ஸ்டாலின் ஆகியோர் கட்சியில் சேர்ந்தபோது பொறுப்புகள் இல்லாமல்தான் இருந்தார்கள்.கட்சியில் ஆர்வம், உழைப்பு, நேர்மை போன்றவைகளால் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் குஷ்புக்கு பொறுப்பு வழங்கப்படும்.

பாவம் அன்பழகன், ஸ்டாலினைப் பற்றிக் கவலையில்லை! இனி குஷ்புவின்ஆர்வம், உழைப்பு, நேர்மை போன்றவை எப்படியிருக்கும் என்று ஆராய்ச்சி செய்வார்கள் போலும்.

காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைவதாக செய்திகள் வெளியானது பற்றி கேட்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன்தானே கூட்டணி வைத்திருக்கிறோம்.

நல்லவேளை, இனி காங்கிரஸ்காரர்களுக்கும் கொண்டாட்டம் தான்! விடுவாரா சோனியா இல்லை ராஜிவின் மைந்தர் ராஹுல். ஒருவேலை “படுக்கயறை விஷயத்தில்” கொஞ்சம் கண்டிப்பாரோ என்னவோ?

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக குஷ்புவை வேட்பாளராக நிறுத்துவது மாதிரியான யோசனைகள் எல்லாம் இல்லை.

ஆக, இதற்கும் பதில் சொல்லிவிட்டார். கருணாநிதிக்குக் கிடைத்த ஜாக்பாட்டை விட்டுவிடுவாரா என்ன?.

திமுகவில் இணையும்படி குஷ்பு மிரட்டப்பட்டாரா? என்று கேட்கிறீர்கள். அதுபோன்ற கேவலமான நடைமுறைகள் எங்களுக்கு இருந்ததில்லை. குஷ்புவும் அப்படித்தான் என்று கூறினார் கருணாநிதி.

ஒஹோ, அப்படியெல்லாம் கூட விவகாரங்கள் உள்ளன போலும், ஒருவேளை சோனியாவைப் பர்த்தபோது, இது மற்றியும் பேசியிருப்பார் போலிறுக்கிறது.துபோன்ற கேவலமான நடைமுறைகள் எங்களுக்கு இருந்ததில்லை. குஷ்புவும் அப்படித்தான்“, என்றதுதான் புரியவில்லை!

திமுகவில் சற்குணப்பாண்டியன் போன்ற மூத்த அனுபவம் மிக்கவர்கள் மகளிர் அணியில் இருக்கிறார்களே? அவர்களுக்கும் தற்போது வந்திருக்கும் குஷ்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படாதா? என்று கேட்டபோது,”ஏன் கலகத்தை மூட்டுகிறீர்கள்?” என பதிலளித்தார் கருணாநிதி.

கழகத்தில் கலக்கமா, கலகமா…………என்பதெல்லாம், இனிமேல்தான் போகப்போகத் தெரியும். சற்குணப்பாண்டியன் போன்ற மூத்த அனுபவம் மிக்கவர்கள் மகளிர் திமுகவில் இருக்கலாம், ஆனால், அவர்கள் எல்லோரும் குஷ்பு மாதிரி இல்லையே, குஷ்பு மாதிரி ஜாக்கெட் எல்லாம் போட்டு, முன்னே-பின்னே எல்லாம் காட்ட மாட்டர்களே?


Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “குஷ்பு திமுகவில், எதிர்பார்த்தபடியே இணைந்து விட்டார்!”

 1. vedaprakash Says:

  Khushboo meets Karunanidhi, joins DMK
  IANS; First Published : 14 May 2010 12:16:14 PM IST
  Last Updated : 14 May 2010 06:05:52 PM IST
  http://expressbuzz.com/states/tamilnadu/khushboo-meets-karunanidhi-joins-dmk/173488.html

  CHENNAI: Popular southern actress Khushboo met Tamil Nadu Chief Minister M. Karunanidhi here Friday and joined his DMK party, saying she loves to “serve the people”.

  Speaking after meeting the DMK leader, Khushboo, 40, told reporters that she had made the right decision.

  “I think I have made the right decision. It was completely my decision. I love to serve the people. That is what made me join politics,” she said.

  Asked if she desired to be elected to the Tamil Nadu assembly or parliament, she said: “Since I have joined the party, I will leave it to the chief minister to decide what position he wants to give me.”

  Khushboo told IANS earlier that she had always wanted to involve herself in full-time politics.

  “I have always had the greatest of regards for Kalaignar’s leadership qualities. I am extremely happy to be aligning with the DMK,” she said, referring to the chief minister the way he is addressed by admirers.

  Khushboo was last month acquitted by the Supreme Court in all 22 cases pending against her in courts across Tamil Nadu for endorsing pre-marital and live-in relationships.

  She started her career in the 1980s as a child artist with “Thodisi Bewafaii” and next year she did “Laawaris”.

  She was introduced to southern film industry by K. Raghavendra Rao’s Telugu movie “Kaliyuga Pandavulu”. She worked in all four southern movie industry but was more active in Tamil films.

  Some of her films are “Ranadheera”, “Anjada Gandu”, “Shanthi Kranthi” and “Yugapurusha”. After ruling the Tamil film industry in the 1990s, she tied the knot with director Sundar C who later became an actor.

  Long after she fell out of favour with producers due to her age, she remained in touch with her fans, who built a temple for her here, through her hugely popular show “Jackpot” on Jaya TV.

  The show has been running for more than eight years.

 2. நடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்? | சின Says:

  […] [8]https://dravidianatheism.wordpress.com/2010/05/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: