பெரியார் முதல் கருணாநிதி வரை: வழக்கைச் சந்திக்கத் தயார்!

பெரியார் முதல் கருணாநிதி வரை: வழக்கைச் சந்திக்கத் தயார்!

கருணாநிதி இவ்வாறு சவால் விடுவார் என்று எதிர்பார்த்தது தான். ஏனெனில் இப்படி சவால் விடுவார்கள், ஆனால், கோர்ட் என்றதும் ஓடிவிடுவார்கள்!

ஏற்கெனெவே இவர் மீதுள்ள வழக்குகளை கோர்ட்டில் வரவிடாமல் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டுள்ளார். நீதிபதிகளும், நீதிமன்றங்களும் அவ்வாறே ஒத்துழைத்துள்ளன.

பிள்ளையார் உடைப்பு வழக்கில் பெரியார் நீதிமன்றம் முன்பு வரவில்லை!

உச்சநீதி மன்றம் அவர் மீது கண்டனத்தைத் தெரிவித்தது! அது மட்டுமல்லாது, அத்தகைய அடாவடித்தனத்தையும் கண்டித்தது!

அப்பொழுது எல்லோரையும் அடிப்பது, உதைப்பது…………….. என்ற ரீதியில்தான் இருந்தனர். ஆண்ட திமுகவினர் சரியான நடவடிக்கை, ஏன் நடவடிக்கையே எடுத்ததில்லை.

வழக்கை சந்திக்க தயார்: ஜெ.,க்கு கருணாநிதி சவால்
மே 16,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18365

Latest indian and world political news information

சென்னை : ‘என் மீது ஜெயலலிதா தொடரவுள்ள மான நஷ்ட வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். கமிஷன் அறிக்கையில் இன்னும் என்னென்ன சொல்லப்பட்டுள்ளன; பங்களாவுக்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களின் கதி என்ன என்பன எல்லாம் வெளிவர, அவர் என் மீது தொடுக்கும் வழக்கு உதவியாக இருக்கும்’ என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட, ‘கேள்வி – பதில்’ அறிக்கை: சிறுதாவூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அபகரித்தது பற்றி, 2006ம் ஆண்டிலேயே ஊர்வலமாக கோட்டைக்கு வந்து, என்னிடம் புகார் மனுவை கொடுத்தவர், தற்போது அ.தி.மு.க.,வுக்காக அழைக்காமலேயே இடைத்தேர்தலில் மேடை ஏறி பிரசாரம் செய்த வரதராஜன் தான்.

அந்த மனுவின் அடிப்படையில் தான், உண்மையை அறிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் புகார் கொடுத்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர். உண்மையை அறிய விசாரணை கமிஷன் அமைத்தது தான் அரசின் பணி. இதிலே நான் பொய்யான தகவலைப் பரப்பினேன் என்பது என்ன நியாயம்?

சிவசுப்ரமணியம் கமிஷன் விசாரணையே, சிறுதாவூர் நிலத்தில் ஜெயலலிதாவுக்கு பங்கு உண்டா? அந்த நிலம் அவர் பெயரில் உள்ளதா என்பதைப் பற்றி அல்ல. சிறுதாவூர் பங்களா உள்ள நிலம் அவர் பெயரில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், அவர் அடிக்கடி சென்று தங்குகிற சிறுதாவூர் பங்களா யாருடையது? அவர் யாருக்கு வாடகை கொடுக்கிறார்? கமிஷன் அறிக்கையிலே, தலித் மக்களுக்காக அரசால் வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள் பரணி ரிசார்ட்ஸ் என்றும், அதன் உரிமைதாரர்கள் சுதாகரன், இளவரசி, சித்ரா என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் எல்லாம், ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் இல்லையா?

கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அந்தப் பகுதியிலே உள்ள இடங்களுக்கெல்லாம் ஒரே நாள் இடைவெளியில் பட்டா மாற்றம் மிக அவசரமாக செய்யப்பட்டது; அதற்காகவே, 10 நாட்களில் ஓய்வு பெறும் நிலையிலே இருந்த தியாகராஜன் என்ற தாசில்தார், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார்; அவர் முறைகேடாக அந்த பட்டா மாற்றங்களை செய்து கொடுத்தார் என சொல்லியிருக்கிறது.

இந்த முறைகேடுகளுக்கெல்லாம் பொறுப்பானவர்கள் யார்? எந்த ஆட்சிலே அது நடந்தது என்பதைப் பற்றியெல்லாம், ஜெயலலிதா பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

அவரோ, ‘அந்த இடத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கமிஷன் சொல்லிவிட்டது. அதுவே நியாயத்துக்கும், தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி என்று சொல்லிக் கொள்கிறார். சிவசுப்ரமணியம் கமிஷன் அறிக்கையை முழுவதுமாக படித்தால் உண்மை புரியும்.

நம்மை பொறுத்தவரை, சிறுதாவூரில் தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தையோ, அரசுக்குச் சொந்தமான நிலத்தையோ ஜெயலலிதா வாங்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், அந்த இடத்தை வாங்கியவர்கள் ஜெயலலிதா குடும்பத்தில் உள்ளவர்களா? இல்லையா? அந்த பங்களாவில் இன்றளவும் ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்குகிறாரா? இல்லையா? இதிலே என்ன தர்மம்? நியாயம்?

என் மீது ஜெயலலிதா தொடரவுள்ள மான நஷ்ட வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அப்போது தான் விரிவான முறையில், இன்னும் பல விவரங்களையும், விளக்கங்களையும் சொல்ல முடியும். அ.தி.மு.க., ஆட்சியில் அரசு இயந்திரம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது, சட்ட விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, அரசு அதிகாரி எப்படியெல்லாம் செயல்பட்டார், அதற்கு, மேல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதை மீறி எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, கமிஷன் அறிக்கையில் இன்னும் என்னென்ன சொல்லப்பட்டுள்ளன, பங்களாவுக்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களின் கதி என்ன என்பன போன்ற விளக்கங்கள் எல்லாம் வெளிவர, அவர் என் மீது தொடுக்கும் வழக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்து திருடன் என்று சொல்லி, அதைப் பற்றிய வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆனால், கருணாநிதி மிகவும் தைரியத்துடன், நீதி மன்றங்களுக்கு வந்து வாதிட்டு, போரிட்டுத் தான் வந்துள்ளார்.

நீதிபதிகள் இவரது வாதங்களைக் கேட்டு அரண்டுத்தான் போயுள்ளனர்!

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “பெரியார் முதல் கருணாநிதி வரை: வழக்கைச் சந்திக்கத் தயார்!”

  1. Ramajanmabhumi-Babarimasjid, evidences and Court or Hisorians as witnesses and Sunni Wakf Board Experts! « Indology Says:

    […] https://dravidianatheism.wordpress.com/2010/05/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE… […]

  2. Historians as witnesses and Sunni Wakf Board Experts! « Issues concerning Indian society Says:

    […] https://dravidianatheism.wordpress.com/2010/05/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE… Possibly related posts: (automatically generated)Historians as expert witnesses […]

  3. பிரபல சரித்திர ஆசிரியர்கள் சுன்னி வக்ஃப் போர்டின் நிபுணர்களாக செயல்பட்ட விதம்! « இஸ்லாம்-இந Says:

    […] https://dravidianatheism.wordpress.com/2010/05/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE… […]

  4. பிரபல சரித்திர ஆசிரியர்கள் சுன்னி வக்ஃப் போர்டின் நிபுணர்களாக செயல்பட்ட விதம்! « இஸ்லாம்-இந Says:

    […] https://dravidianatheism.wordpress.com/2010/05/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE… […]

  5. “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச் Says:

    […] [3] https://dravidianatheism.wordpress.com/2010/05/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE… […]