கம்பனை எதிர்த்து இக்காலத்திலும் வீரமணி ஊலையிடுவதேன்?

கம்பனை எதிர்த்து இக்காலத்திலும் வீரமணி ஊலையிடுவதேன்?

திருவாளர் கே. வீரமணி ஒரு ப்ல்கலைக்கழகத்தின் வேந்தர். அந்நிலையில் பல மாணவர்கள், அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுவர். இன்று “பச்சமுத்து” ஊரெல்லாம் சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் என்று அமர்க்களப் படுத்துகிறார்.  அதாவது பச்சமுத்துவை எஸ்.ஆர்.எம், பல்கலைக்கழகத்தின் தலைவர் என்றுதான் பார்க்கின்றனரே தவிர ஒரு புதிய கட்சியின் தலைவர் என்று பார்க்கவில்லை.

அந்நிலையில், வீரமணி இப்படி பிதற்றிக் கொண்டிருந்தால், நிச்சயம், அவரை ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்று பார்க்கமாட்டார்கள், ஏதோ வெறிபிடுத்து அலையும் தீவிரவாதி என்றுதான் நினைத்துக் கொள்வார்கள். அவ்வாறு இருக்கும்போது, பொருப்பான அந்த வேந்தர், தனது “விடுதலையில்” கீழ்காணும் வகையில், ஒரு கேவலமான தலையங்கத்தை எழுதியுள்ளார்:

கம்பனுக்குக் காவடியா?

விடுதலை தலையங்கம் தேதி: 27-05-2010

http://www.viduthalai.com/20100527/news05.html

கம்பனுக்கு இப்பொழுது என்ன கிராக்கி? மதுரை வட்டாரத்தில் கம்பனைக் காவடியாக்கித் தூக்கி ஆட்டம் போடும் ஒரு வேலை கிளம்பியிருக்கிறது. சென்னையில் கம்பன் பேரால் கழகம் வைத்து கம்பனைச் சீராட்டும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டுள்ளது.

திராவிடர் இயக்கம் கிளம்பி கம்பனை_ காட்டிக் கொடுக்கும் தமிழன் என்று அம்பலப் படுத்தியது. இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்ற விளம்பரம் பெற்ற தமிழ் அறிஞர்-களுடன் திராவிடர் கழகத் தளபதியாக அன்று போர்க்கோலம் பூண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் விவாதப் போர் நடத்தி, எதிர்வரிசையில் நின்றவர்கள் தோற்றேன்! தோற்றேன்! தோற்றேன்! என்று ஒப்புக் கொள்ளும் வகையில் இனமான உணர்வைக் கட்டிக் காத்தார் _ -தமது வழிகாட்டியான தலைவர் தந்தை பெரியார் அவர்களின் செறிவோடு!

அண்ணாவின் தீ பரவட்டும் என்ற அந்தவுரை பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி இளைஞர்கள் மத்தியில் தமிழன் என்ற இறுமாப்புப் பீறிட்டுக் கிளம்பியதுண்டு.

கம்ப இராமாயணம் ஆனாலும் சரி, அதன் மூல நூலான வால்மீகி இராமாயணமானாலும் சரி, மக்கள் மத்தியில் தோலுரித்துத் தொங்க விடப்பட்டது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் கூட, பார்ப்பனர்களின் ஆதார நூல்களைக் கொண்டே தந்தை பெரியார் விளக்கிக் கூறி, பாமர மக்கள் முதற்கொண்டு, பட்டதாரிகள் வரை அறியும் வகையில் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாச நூல்களைப் பரிகாசத்திற்குரிய இடத்தில் ஒதுக்கித் தள்ளினார்.

ஒரு சமயம் தஞ்சாவூரில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்துக்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமாயணத்தைக் குறை கூறுவது தவறு என்றும், கலை உணர்ச்சிக்காகவும், அதனைப் போற்றவேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் அளித்த பதில் மிகவும் முக்கியமானது. நான் கலை உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல், கம்ப ராமாயணப் பாட்டுகள் சிறந்தவை-தான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்று பதிலடி கொடுத்தார் பகுத்தறிவுப் பகலவன்.

இதே கருத்தை அறிஞர் அண்ணாவும் விவாதப் போரில் விண்டுரைத்தார்.

இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்-பட்ட கம்ப இராமாயணத்தையே மக்கள் பெரிதும் அறிவர்; போற்றுவர். அதற்குக் காரணம் அதிலே உள்ள ஆரிய நெறி, தமிழ் மக்களை அடிமைப்-படுத்தியதுதான். கம்ப இராமாயணத்திலே, சங்க நூல்களிலே காணப்படும் அணிகளும், அலங்காரங்-களும், உவமைகளும் நிரம்ப உபயோகிக்கப்பட்டிருக்-கின்றன. குறள் நன்றாக நுழைக்கப்பட்டு இருக்கிறது. கம்ப இராமாயணம் கவிச்சுவை என்று எதைப் பண்டிதர்கள் எடுத்துரைக்கிறார்களோ, அவை கம்பனின் சொந்தச் சரக்குமல்ல; சங்க நூற்கள் தந்த சுவை! அந்த மூலத்தை இழக்கும்படி நாங்கள் சொல்ல-வில்லை. அந்தச் சுவையை ஓர் ஆரியரின் கற்-பனைக்குப் பயன்படுத்தியதால், அந்தக் கற்பனையின் விளைவு கேடு தருவதால், அந்த ஏடு வேண்டாம் என்று கூறுகிறோம்.

காடேக இராமன் கிளம்பும் போது உடன் வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில் சீதை கூறும் மொழியின் தன்மையும், இலக்குவன், கைகேயியை நிந்திக்கும் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறி உள்ளபடியே கம்பர் எழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களின் ஆபாச குணங்கள் கிடந்ததை தமிழர் கண்டு அவர்களைத் தெய்வங்கள் என்று போற்றும் கீழ் நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள். ஆனால், கம்பரோ, ஆரிய இராமனைக் குற்றம் குறையற்ற சற்புத்திரனாக்கி, வழிபாட்டிற்குரிய தெய்வமாக்கி-விட்டார் (தீ பரவட்டும்) என்று ஆரிய அடிமையாக இராமாயணம் எழுதிய கம்பனை கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தினார் அறிஞர் அண்ணா.

அயோத்தி ராமன் பிரச்சினையெல்லாம் தமிழ் மண்ணில் எடுபடாததற்குக் காரணம் தந்தை பெரியார் கண்ட திராவிட இயக்கமே.

மறுபடியும் கம்ப இராமாயணப் பட்டிமன்றங்-களையும் மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் ஆழ்வார்களான தமிழர்கள் நடத்திட முனைவார்-களேயானால் அவர்களை நேருக்கு நேர் சந்திக்க திராவிடர் கழகம் தயார்! தயார்!!

காலமெல்லாம் கம்பனை இழித்துப் பேசியதால்-தான் சென்னைக் கடற்கரையில் கம்பன் காலடியில் அண்ணா உறங்குகிறார் (அண்ணா சதுக்கத்தில் நுழைவு வாயிலில் கம்பர் சிலை) என்று பேசிய சாலமன்கள் கம்பனைத் தூக்கிக் கொண்டு வந்து தமிழன் தலையில் கட்டி, தமிழர்களை விபீடணர்-களாக ஆக்குவதில் ருசி காண்கின்றார்கள் போலும்.

கம்பனையும், அவன் கால் வருடும் கூட்டத்-தையும் வீதிக்கு வீதி தோல் உரிப்போம். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

வீரமணியின் மனப்பாங்கு, வெறித்தனம் முதலியவற்றைப் பார்க்கும் இக்கால இளைஞர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவர்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “கம்பனை எதிர்த்து இக்காலத்திலும் வீரமணி ஊலையிடுவதேன்?”

  1. Selvam Thennarasu Says:

    Because, there are no takers for his blabbering.

    The modern media has clearly exposed their hypocrisy and that is why they try to spread falsehood in the internent.

    Veeramani type “Periyarists” are afraid of full text of EVR / Periyar writings / speeches, as they expose the filtiest mentality of their leader in the respective contexts.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: