குஷியில் வீரமணி, பயத்தில் கருணாநிதி: கோபுரங்கள் சாய்கின்றன!

குஷியில் வீரமணி, பயத்தில் கருணாநிதி: கோபுரங்கள் சாய்கின்றன!

தனது கோபுரத்தையே காக்க முடியாத கடவுளா- உனது வேண்டுதலை நிறைவேற்றுவான்? சிந்தித்தீர்களா?

http://www.viduthalai.com/20100528/news03.html

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி ராஜகோபுரம் நேற்று முன்தினம் அடியோடு இடிந்து விழுந்துவிட்டது. ஏற்கெனவே இது இரண்டாக விரிசல் விட்டு பிளந்த நிலை காரணமாக, எச்சரிக்கையாக சுமார் 50 அடி தூரத்திற்கு வளைவுப் பாதுகாப்பு அமைத்து யாரும் அருகில் செல்லக்கூடாது என்று அதிகாரிகள் செய்த ஏற்பாட்டினால், உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. குரங்குகள் _ அனுமார்கள்தான் சுமார் 200_க்கும் மேல் இறந்துவிட்டிருக்கலாம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. அனுமன் மிகவும் பலசாலி என்ற பித்தலாட்டக் கதையும், இதன்மூலம் அம்பலமாகிவிட்டது! இதனால் ஏதோ நாட்டிலுள்ள மக்களுக்கே பேரபாயம் ஏற்படும் என்று பல பார்ப்பன மற்றும் மூடநம்பிக்கை வியாபாரிகளான பத்திரிகைகள் கயிறு திரித்து, மக்களை தேவையற்ற பீதிக்கு ஆளாக்கி, தங்களது மூடநம்பிக்கை வாணிபத்தை _ பரிகார தோஷம் செய்ய வாருங்கள் என அழைத்து வருவாய் சுரண்டும் வக்ரபுத்தியுடனே செயல்படுகின்றனர்!

சிவபெருமான் இங்கு வாயு லிங்கேசுவரன், ஞான பிரசன்னா அம்பிகையுடன் காட்சியளித்தவர் என்று கதைக்கிறார்களே _ அப்படிப்பட்ட கடவுள் ஏன் இதைத் தடுக்கவில்லை? அவன் எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன் _ அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற கதையெல்லாம் பச்சைப் புளுகு_ புருடா என்பதை இன்னமும் பகுத்தறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்ளாவிட்டால், 21 ஆம் நூற்றாண்டில் வாழ அம்மனிதர்களுக்குத் தகுதி உண்டா? அரசுமீது, அதிகாரிகள்மீது ஏனோ பாமர மக்கள் _ கோபுரம் இடிந்து விழுந்தமைக்கு கோபப்படுவதில் பொருள் உண்டா? எல்லாம் அவன் செயல் என்கிறபோது இது மட்டும் எவன் செயலோ? எவரோ கவனஞ்செலுத்தி பழுது பார்க்காததால் ஏற்பட்ட விளைவு என்கிறார்களே, இதில் பெரியார் வெற்றி பெற்றுள்ளாரா இல்லையா?

கடவுளை மற, மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். கோபுரம் இடிந்ததற்குக் காரணம் கடவுள் அல்ல; ஏனெனில், அவர் வெறும் கற்சிலை _ பொம்மை _ பக்தி வியாபாரத்தின் முதல் அவ்வளவே! என்று உணர்ந்ததால்தானே மற்றவர்கள் ஏன் இதைப் பாதுகாக்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்த கோடிகள். அவர்கள் சொல்வது _ கடவுளை மறந்து மனிதனை (அதிகாரிகளை) நினைத்துதானே, ஏன் இந்நிலை என்று கேள்வி கேட்கின்றனர்! இதற்குப் பரிகார தோஷம் என்று மூடத்தனத்தில் மூழ்கியுள்ள ஏமாந்த பாமர பக்தர்கள் வசூல் செய்துகொள்ள ராகு, கேது _ சனி விலக்கு பயன்படுமா? தன்னுடைய கோபுரத்தைக் காக்கத் தெரியாத சிவனா உன்னுடைய தோஷத்தைப் போக்கப் போகிறான்? அட மவுடீக மண்டுகளே, சிந்திக்க மாட்டீர்களா? பக்தி மாற, பகுத்தறிவு கொள்!

அடுத்த ஆபத்து ஏழுமலையானுக்கா? கோயில் கோபுரம் இடியப் போகிறது என்று பக்தர்கள் போடும் புலம்பல்- கூக்குரல்!

http://www.viduthalai.com/20100528/news28.html


திருப்பதி, மே 28-_ காளஹஸ்தி கோயில் கோபுரம் குப்புற வீழ்ந்த நிலையில், திருப்பதி ஏழு-மலையான் கோயில் கோபுரமும் இடியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது, உடனே சரி செய்யவேண்-டும் என்று பக்தர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்-டனர். ஆலமர செடிகள் அதிகமாக வளர்ந்துள்-ளதால் திருப்பதி ஏழு-மலையான் கோவில் கோபுரத்திலும் விரிசல் விழும் அபாயம் ஏற்பட்-டுள்ளது. உடனடியாக இந்த செடிகளை அகற்றி கோபுரத்தை சீரமைக்கும்-படி பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனராம்.

ஆந்திர மாநிலம் சித்-தூர் மாவட்டத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காள-ஹஸ்தி கோவில் ராஜ-கோபுரம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. இந்த கோவில் கோபு-ரம் இடிந்து விழ பல காரணங்கள் சொல்லப்-பட்ட போதிலும் கோவில் கோபுரங்களில் வளர்ந்த ஆலமர செடிகள் காரண-மாகவே கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக இந்த பகுதி பக்தர்கள் கூறுகின்றனராம்.

கோபுரத்தில் செடிகள்…திருப்பதி ஏழுமலை-யான் கோவில் கருவறை மீதுள்ள ஆனந்தநிலையம் கோபுரத்தை சுற்றி தங்க முலாம் பூசப்பட்ட தக-டுகள் பொருத்தப்பட்டுள்-ளன. இந்த தகடுகளையும் மீறி கோபுரத்தில் உள்ள விமான வெங்கடாஜலபதி சிலைக்கு அருகில் சுமார் ஒரு அடி நீளமான ஆல-மர செடிகள் பச்சைபசே-லென்று வளர்ந்து காட்சி அளிக்கின்றன. 50 அடி உயரமுள்ள மகா வாயில் கோபுரம் 5 அடுக்குகளாக கட்டப்பட்-டுள்ளது. இந்த கோபுரத்-தின் உச்சியில் 7 தங்க கவ-சங்கள் பொருத்தப்பட்-டுள்-ளன. இந்த கோபுரத்-திலும் ஆலமரச்செடிகள் வளர்ந்துள்ளன. இதே-போல 30 அடி உயரம் கொண்ட வெள்ளி வாயில் கோபுரத்திலும் ஆலமரச்-செடிகள் உள்ளன. இந்த செடிகள் வளர வளர கோபுரத்தில் விரிசல் விழுந்து கோபுரங்களுக்கு அபாயம் ஏற்படலாம்

காளஹஸ்தீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்த ஆலமரசெடி-களை உடனுக்குடன் அகற்றியிருந்தால் கோபுரத்-தில் இவ்வளவு பெரிய விரிசல் ஏற்பட்டி-ருக்காது. கோவில் கோபுர-மும் இன்னும் பல ஆண்டுகள் நிமிர்ந்து நின்-றிருக்கும். அதிகாரிகள் மற்றும் கோவில் நிருவாகி-களின் அலட்சியத்தா-லேயே இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. எனவே உடனடியாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரங்களில் உள்ள ஆல மரச்செடிகளை அகற்றி கோவில் கோபுரங்-களை காப்பாற்ற நட-வடிக்கை எடுக்க வேண்-டும் என்று இந்த பகுதி பொதுமக்களும், பக்தர்-களும் கோரிக்கை விடுத்-துள்ளனர். சாதாரண ஆலமரச் செடி சிவனின் காள-ஹஸ்தி கோயிலை தரை-மட்டமாக்கியது. அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் ஆலமரச் செடியால் ஆபத்து. ஏழு-மலையானே ஆட்டம் கண்டு போயுள்ளான். எப்படியாவது ஏழுமலை-யானை காப்பாற்றுங்கள் என்று ஏமாந்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்-ளனர்.

குஷியில் வீரமணி, பயத்தில் கருணாநிதி: கோபுரங்கள் சாய்கின்றன! ஆனால், கருணாநிதியோ கலங்கி போய்விட்டாராம். உடனே மனைவி-துணைவி, ஆஸ்தான சோதிடருக்கு போன் செய்ய, அவர் ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறியுள்ளாராம். முன்பு மாதிரி சாந்தி ஹோமம் செய்ய வேண்டும் என்ரு கூறியதும்,  ஆடிபோய் விட்டனராம். பொறுக்கவில்லை, வீரமணிக்கு. கயிறுதிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

அடுத்த வரப்போகின்ற செய்தி: ஜெயலலிதா காளாஸ்தி சென்றதால் தான், கோபுரம் விழுந்தது, என்று கருணாநிதி நக்கல் அடித்தாராம், ஆனால், மனைவி-துணைவி சொன்னதும் அடங்கிவிட்டாராம்.

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

3 பதில்கள் to “குஷியில் வீரமணி, பயத்தில் கருணாநிதி: கோபுரங்கள் சாய்கின்றன!”

  1. vedaprakash Says:

    காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
    பதிவு செய்த நாள் : மே 28,2010,00:01 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7719

    சென்னை : பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால், சில ராசிக்காரர்களுக்கும், குறிப்பாக, ராகு, கேது திசை மற்றும் புத்தி நடப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என, ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அரசியல் தலைவர்களுக்கு ஆகாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்வர். ராகு, கேது தோஷத்திற்குரிய பரிகார தலமாக கருதப்படும் காளஹஸ்தி சிவன் கோவிலின் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால், தற்போது ராகு திசை அல்லது வேறு திசையில் ராகு புத்தி நடப்பவர்கள், கேது திசை அல்லது வேறு திசைகளில் கேது புத்தி நடப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அவர்கள் இந்த இரு கிரகங்களுக்கும் உரிய பரிகாரங்களை செய்து கொள்வது நன்மை தரும். அதாவது, விநாயகருக்கோ அல்லது துர்கைக்கோ பூஜைகள் செய்வது சிறப்பு தரும். மேலும், இந்தக் கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளதால், அந்த மாநிலத்தில் இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் பாதிப்பு ஏற்படலாம். பெரிய அளவிலான விபத்துகள், கோர சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பு உண்டு. மேலும், தற்போது கோச்சார ரீதியாக, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராகு, கேது கிரகங்கள் பாதகமான நிலையில் உள்ளதோ, அவர்களும் மேற்கண்ட கிரகங்களுக்கு உரிய பரிகார பூஜைகளை மேற்கொள்ளலாம். வீடுகளிலும், கோவில்களிலும் நெய் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும்.

    ஜோதிடர் சிவஓம்குருரவி: பஞ்ச பூத தலங்களில் ஒன்றான காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது, அரசியல் தலைவர்களுக்கு ஆகாது. கேது ஸ்தலமாக காளஹஸ்தி இருப்பதால், இது நிச்சயம் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, தமிழகத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு தர்ம பரிபாலனம் செய்வதே சிறந்த பரிகாரம்.

    ஜோதிடர் பூவை நாராயணன்: பொதுவாக கோவில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்க தகாத, வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனை பாதிக்கும். இதற்கு வைகானச கல்ப சூத்திரத்தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களை படித்து, “அற்புத சாந்தி ஹோமம்’ செய்ய வேண்டும். இதை வைகானச ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் இத்தகைய ஹோமங்கள் செய்யப்படும். மேலும், தெய்வீக விருட்சங்களை பொது இடத்தில் நட வேண்டும். அதிலும், வாயு ஸ்தலமான காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்தது வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஜோதிடர் முத்துகுமார்: காளஹஸ்தி ஆந்திராவில் இருந்தாலும், அங்கு பூஜை நடைமுறைகள் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை பின்பற்றியே நடந்து வருகிறது. அங்கு பூஜை செய்பவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். காளஹஸ்தி ராஜகோபுரம் பழமையானதாக இருந்தாலும், அது இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளதால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரம் அந்த கோவிலிலேயே செய்யப்படும். பொதுவாக இது போன்ற சம்பவங்களின் போது 90 நாட்களுக்குள் விளைவுகள் தெரிந்து விடும். அதற்குள் தெரியாவிட்டால் பாதிப்பு ஏதும் இல்லை என்று அர்த்தம். வெகு விரைவில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது தமிழகத்தில் தெரியாவிட்டாலும், அது அரசு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதற்குள் பரிகார பூஜையை செய்ய வேண்டும்.

    தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா: காளஹஸ்தி கோவில் கோபுரத்தில், கடந்த 88ம் ஆண்டே விரிசல் ஏற்பட்டு விட்டது. இதை அப்போது சரியான முறையில் சரிசெய்யவில்லை. ஆற்றை ஒட்டி கோவில் அமைந்திருப்பதால், மண்ணில் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு, மணல் சரிந்து, கோபுர சுவர்களுக்குள் சுண்ணக் கலவை விடுபட்டு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். பூமி தளத்தில் ஏற்பட்ட மாற்றங் களால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்த காலத்தில் கோபுரங்கள் எல்லாம் ஒரு கல்லின் மீது மற்ற கல்லை அடுக்கி மலைகளை அடுக்குவது போல் தான் உருவாக்கப்படும். அப்படி இருக்கும் போது ஆரம்பத்திலேயே கோபுர விரிசலை சரியான முறையில் சரி செய்திருக்க வேண்டும். ஐநூறு ஆண்டுகள் ஆன இந்த கோபுரத்தில், முதலில் விரிசல் ஏற்பட்ட போதே கோபுர அஸ்திவாரத்தை, “ரேப்ட்’ போட்டு வலுப் படுத்தியிருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததில் தெய்வக் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.

    ஜோதிடர் சிவஅண்ணாமலைதேசிகன்: காளஹஸ்தி ராகு, கேது பரிகார தலம். இந்தியாவின் லக்னம் ரிஷபம், அமெரிக்காவின் லக்னம் தனசு. இந்த இரு லக்னங்களுக்கும் தற்போது ராகு, கேது நிலை சரியில்லை. ரிஷிப லக்னத்திற்கு எட்டாம் இடமான தனுசு லக்னத்திலும் தற்போது ராகு உள்ளது. மிதுனத்தில் கேது உள்ளது. இந்நிலையில், ராகு, கேது பரிகார தலமான காளஹஸ்தி கோவிலின் கோபுரம் இடிந்து விழுந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும். போர் கூட வரலாம். பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இரு கிரகங்களும் இதே நிலையில் இருந்த போது தான் ராஜிவ் படுகொலை நடந்தது. அதன் விளைவாக தற்போது இலங் கையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததற்கு வேறு பரிகாரம் கிடையாது. மக்கள், தலைவர்கள் மத்தியில் தர்ம சிந்தனை வளர்ந்தால் மட்டுமே, ராகு, கேது கிரகங்களின் பாதகமான சூழலை மாற்ற முடியும்.

  2. Selvam Thennarasu Says:

    As days are nearing, the fear is more visible in the eyes and the minds of father, son and daughter than others and hence they talk so many things in front of the public.

  3. M. Dhandayuthapani. Says:

    In the history of temples, it is quite common that the temple gopuras would fall in 500 to 700 years period depending upon the construction site, materials and other factors.

    In fact, in such cases, the Gopuras would be pulled down stage by stage and reconstructed immediatyely and therefore, such falling of Gopuras wwere never felt as different in the past.

    Whereas, the crumbling down of Kalasti Gopura was noticed by the people recently and moreover, because of the media, the news and detauils spread immediately to the other parts of the world.

    Therefore, there is nothing bad or ill-omen in the falling down of Gopuras. Only the things is, they should be monitored and such rennovation work should be done immediately.

    In fact, Kumbabhisekam has been part of such rennovation.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: