திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம், எனும்போது, அங்கு தீடீரென்று சோதனை ஏன்?

திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம், எனும்போது, அங்கு தீடீரென்று சோதனை ஏன்?

திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம்: அமைச்சர் பொன்முடி
First Published : 03 Nov 2009 01:53:17 AM IST

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=148853&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (இடமிருந்து 2-வது). (வலது படம்) இலவச திருமணம் செய்து

விழுப்புரம், நவ. 2:   திராவிட இயக்கத்தின் மறுபதிப்புதான் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்.  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணித் திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் அமைச்சர் க.பொன்முடி பேசியது:  மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு.  பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார்.  மனித நேயத்தை வளர்ப்பதில் மேல்மருவத்தூர் இயக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது.  பெண்களுக்கு இக் கோயிலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்கள் கூட பூஜை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்.  அதைத்தான் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் செய்து வருகிறது.  அனைவரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேல் மருவத்தூரில் அது நடத்திக் காட்டப்பட்டு வருகிறது.  விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி, லட்சுமி பங்காரு, நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ், அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  27 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வண்டிகள், மாணவர்களுக்கு லேப்டாப், காது கேட்கும் கருவிகள், இஸ்திரி பெட்டி, தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.

மேல்மருவத்தூர் அடிகளார் வீட்டில் சோதனை

தினமணி – ‎3 ஜூலை, 2010‎
பங்காரு அடிகளார் வீட்டின் முன் சோதனை நடத்துவதற்காக குழுமியிருந்த வருமான வரித் துறையினர். மதுராந்தகம்,ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில்

மேல்மருவத்தூரில் நிருபர்கள் மீது தாக்குதல்: செல்போன், தங்கச்

தினமணி – ‎2 ஜூலை, 2010‎
சென்னை, ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நடந்த வருமான வரித் துறை சோதனை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் அந்த

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

தட்ஸ்தமிழ் – ‎2 ஜூலை, 2010‎
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற

Advertisements

குறிச்சொற்கள்: ,

5 பதில்கள் to “திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம், எனும்போது, அங்கு தீடீரென்று சோதனை ஏன்?”

 1. vedaprakash Says:

  மேல்மருவத்தூர் அடிகளார் வீட்டில் சோதனை

  First Published : 04 Jul 2010 02:28:15 AM IST

  http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81……………Tamilnadu

  பங்காரு அடிகளார் வீட்டின் முன் சோதனை நடத்துவதற்காக குழுமியிருந்த வருமான வரித் துறையினர்.
  மதுராந்தகம்,ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பொறியியல்,மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை தொடங்கி 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

  ÷அறநிலைய நிறுவனர் பங்காரு அடிகளார்,அவரது மூத்த மகன் அன்பழகன், அவரது மகள் ஸ்ரீதேவி ஆகியோரது வீடுகளிலும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

  ÷இதையறிந்து பங்காரு அடிகளாரின் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமினர். அப்போது அடிகளாரின் பாதுகாப்பு ஊழியர்கள் திடீரென பத்திரிகையாளர்களைத் தாக்கத் தொடங்கினர். இச்சம்பவத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமிராமேன், நிருபர்கள் தாக்கப்பட்டதுடன் செய்தியாளர்கள் சிலரின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மதுராந்தகம் டி.எஸ்.பி.தணிகைவேலிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸôர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  ÷இச் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் மதுராந்தகம் தாலூகா அலுவலகம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 2. vedaprakash Says:

  மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு
  சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11[IST]
  http://thatstamil.oneindia.in/news/2010/07/03/cbi-files-case-against-melmaruvathur-college.html

  மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு [^]ப் பதிவு செய்துள்ளது.

  இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

  இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.

  லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து.

  இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.

  நேற்று அதிகாலை தொடங்கிய ரெய்ட் நள்ளிரவை தாண்டியும் நடந்தது.

  அடிகளாரிடம் 17 மணி நேரம் விசாரணை [^]:

  பங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன் [^], மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.

  அடிகளாரிடம் நேற்று பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 5 மணிக்குத் தான் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

  விசாரணையின்போது கேத்தன் தேசாய்க்கு தரப்பட்ட லஞ்சப் பணம், கல்லூரியின் வரவு செலவுகள், நன்கொடை கட்டணத்துக்குரிய ரசீதுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

  நிருபர்களுக்கு அடி, உதை:

  இந் நிலையில் இந்த வருமான வரி விசாரணை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்.

  நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்

 3. rrssundaram Says:

  நல்லது, இப்போது பாருங்கள் ஆன்மீக போர்வை, ஆதிபராசக்தி போர்வை எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது?. நாட்டில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீகவாதியே கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து உரிமம் பெறுகிறார். நல்ல உலகமடா சாமி.

 4. நெட்டிமையார் Says:

  ஜெகத்ரக்ஸகன் மாதிரி, பங்காரு அடிகள் கருணாநிதியிடம் பேரம் பேசவில்லை போலும்.

  அதுதான் ரைட் விட்டுள்ளார்!

  பொன்முடி பேச்சு எல்லாம், வீரமணி போல, கருணாநிதி போல!

  வீரமணி கருணாநிதியைத் திட்டியதும், கருணாநிதி வீரமணியைத் திட்டியதும், ஏன் மணியம்மையைத் திட்டியதும் மறந்து விட்டிருப்பர்.

  ஆகையால், திராவிட நாத்திகர்களின் நம்பிக்கைகள், விசுவாசங்கள், அபிமானங்கள் யார் முதலமைச்சராக இருக்கிறாரோ, அவரைப் பொறுத்துதான் இருக்கும்.

  அந்த நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கமுடியாது!

 5. M. Dhandayuthapani. Says:

  Very simple, he has not paid his tributes to K!

  That is all!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: