நந்தனார் இருந்தாரா, இல்லையா? பெரியாரைத் தான் கேட்க வேண்டும்: கதை சொல்லும் கருணாநிதி!

நந்தனார் இருந்தாரா, இல்லையா? பெரியாரைத் தான் கேட்க வேண்டும்: கதை சொல்லும் கருணாநிதி!

சிதம்பரம் கோயில் பிரச்னை: கருணாநிதி சொல்லிய கதை: “சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் கோட்டையாக இருந்தது. அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த கோட்டை என்பதை மாற்றி அரசாங்கத்தின் பிடியில் நம்முடைய அறநிலையத் துறையின் பொறுப்பில் அது வந்து விட்டது.அப்போது, எல்லோரும் மகிழ்ந்தார்கள். பாராட்டினார்கள். அந்த மகிழ்ச்சி நீடித்ததா என்றால் இல்லை. இப்போது ஒரு போராட்டம். எதற்குப் போராட்டம் தெரியுமா?”

நந்தனார் நடந்து வந்த அந்தக் கோயிலுக்குள் புகுந்த பாதையில் நடக்கவேண்டும்:  கருணாநிதி தொடர்கிறார், “நந்தனார் நடந்து வந்த அந்தக் கோயிலுக்குள் புகுந்த பாதை இதுதான்-அந்தப் பாதையை மதில் வைத்து அடைத்து விட்டார்கள்-அதைத் திறக்க வேண்டும் என்று ஒரு போராட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி நடத்துகிறது. கோவிலையே திறந்து விட்டாகிவிட்டது.நந்தனார் நடந்த பாதை என்று சொல்லி அதற்காக ஒரு போராட்டம்”.

நந்தனார் இருந்தாரா இல்லையா – அதை பெரியாரைத் தான் கேட்க வேண்டும்: நந்தனார் இருந்தாரா இல்லையா என்பது வேறு விவகாரம். அதை பெரியாரைத் தான் கேட்க வேண்டும்.நந்தனாரை உள்ளே போகவே விடவில்லை. எப்படி அவர் பாதையிலே போயிருக்க முடியும்? இவர் உள்ளே போக வந்த போது நந்தி மறைத்தது. வழி மறைத்திருக்கிறதே நந்தி என்று பாடிய பாட்டெல்லாம் இருக்கிறது.நந்தி மறைத்தது; ஆகவே நந்தனார் உள்ளே போகவில்லை. நந்தி மறைத்ததால் நந்தனை காண்பதற்காக உள்ளேயிருந்த சாமி, நந்தா நீ விலகி வா என்று சொன்னாரே தவிர, அவர் விலகி வந்து இவரைப் பார்த்தாரே தவிர, நந்தா உள்ளே வா, கவலைப்படாதே என்று சொல்லவில்லை.சாமியும் சொல்லவில்லை. நந்தனும் போகவில்லை. இதுதான் கதை”.

கதையை மாற்றும் கம்யூனிஸ்ட்டுகாரர்கள்: “இந்தக் கதையை மாற்றி இந்த வழியாகத்தான் நந்தனார் போனார், போகும் போது நான் பார்த்தேன் என்னிடம் கூட வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு போனார் என்றெல்லாம் சொல்லி…ஆகவே நந்தன் பாதையை அடைக்கக் கூடாது. அது தீண்டாமை சுவராகி விடும் என்று சொல்லி இன்றைக்குப் போராடுகிறார்கள். எதற்கு? நந்தனுக்காவா? அல்ல. வேண்டுமென்றே இவர்கள் இந்த ஆட்சியின் நல்ல திட்டங்களுக்கு நந்தியாக இருந்து கெடுக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார்கள் அல்லாமல், நந்தனுக்காக அல்ல என்பதை மறந்து விடக் கூடாது.

சிதம்பரம்.கோவில்.நுழைவு.கலாட்டா.2010

சிதம்பரம்.கோவில்.நுழைவு.கலாட்டா.2010

உண்மையில் நந்தனார் சிதம்பரம் கோவிலுக்கு வரவில்லை. திருப்புங்கூர் என்ற இடத்தில்தான் சென்றார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “நந்தனார் இருந்தாரா, இல்லையா? பெரியாரைத் தான் கேட்க வேண்டும்: கதை சொல்லும் கருணாநிதி!”

 1. vedaprakash Says:

  விடுதலை 17-07-2010 தேதியிட்ட இதழில், கீழ்கண்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன:

  சிதம்பரம் கோயில் தெற்கு வாசல் அடைப்புப் பிரச்சினை மேலும் சில வினாக்கள்
  http://www.viduthalai.periyar.org.in/

  சிதம்பரம் நடராசர் கோவில் தெற்கு வாசல் நந்தனார் பயன்படுத்தியதால் சுவர் எழுப்பி அடைக்கப்பட்டுள்ளது என்றும் அச்சுவர் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரச்சினை உருவாகி உள்ளது.

  இதையொட்டி அடியிற்கண்ட வினாக்களுக்கும் விடை தரக் கோவில் அமைப்பு வல்லுநர்களும் வரலாற்றாசிரியர்களும் முன்வருவார்களாக.

  வினாக்கள்

  1. பாண்டி நாட்டுக் கோவில்களிலும் நான்கு வாசல்கள் உளவா இல்லையா?

  2. பாண்டி நாட்டுப் பெருங்கோவில்களின் மேற்கு வாசல்கள் பல நூற்றாண்டுகட்கு முன்னரே சுவர்கள் வைத்து அடைக்கப்பட்டுள்ளனவா இல்லையா?

  3. இந்த மேலை வாசல்கள் கோவில்கள் அமைப்பு விதிகளின்படி யார் பயன்படுத்துவதற்கு உரியவை?

  4. இந்தப் பாண்டி நாட்டுக் கோவில்களின் மேலை வாசல்கள் எப்போது அடைக்கப்பட்டன?

  (மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில்கள் உள்பட)

  5. இந்தப் பாண்டி நாட்டுக் கோவில்களின் மேலை வாசல்கள் யாரால் அடைக்கப்பட்டன?

  6. இந்த மேலை வாசல்கள் யார் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அடைக்கப்பட்டன?

  7. யாரோ பயன்படுத்தக்கூடாது எனப் பல நூற்றாண்டுகட்குமுன் அடைக்கப்பட்ட இவ்வாசல்களைத் திறக்க வேண்டாமா?

  முனைவர் பு.இராசதுரை

 2. P. Ravichandran Says:

  நாத்திகம், பெரியாரியம், பகுத்தறிவு…….முதலியவற்றின் நம்பிக்கைகளே வினோதமாகத்தான் உள்ளது.

  இல்லாததை வைத்துக் கொண்டு நம்புகிறவர்கள் யார்?

  அதாவது இல்லாத கடவுளை நம்புவது யார்?

  நம்பிக்கையாளர்கள், ஆத்திகர்கள்.

  நம்பாதவர்கள் – இவர்கள்.

  பிறகு இல்லாததை வைத்துக் கொண்டு ஏனிப்படி இரண்டு-மூன்று-நான்கு என்றிருக்கும் பலதரப்பட்ட கோஷ்டிகள் சண்டைப் போட்டுக் கொண்டு, வசைப்பாடிக் கொண்டிருக்க வேண்டும்?

  தினம்-தினம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

 3. vedaprakash Says:

  சிதம்பரம் நடராசர் கோவில் தெற்குக் கோபுர வாயில்
  விடுதலை-ஞாயிறு மலர், 24-07-2010, பக்கம்.6
  http://www.viduthalai.periyar.org.in/20100724/snews12.html

  05.06.2010 நாளிட்ட விடுதலை ஞாயிறு மலரில் ஆசிரியர் விடையளிக்கிறார் என்ற பகுதியில் இடம் பெற்ற முதல் வினாவில் நந்தனார் நடந்து வந்ததாகக் கூறப்படும் சிதம்பரம் நடராசர் கோவில் தெற்குக் கோபுர வாயில் அடைக்கப்பட்டுள்ள செய்தி காணப்படுகின்றது. 15.07.2010 நாளிட்ட செய்தித்தாள்களில் இவ்வாயில் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் போர் முழக்கம் செய்கின்றன.

  வாயில்கள் அமைப்பு

  பெருங்கோயில்களில் நான்கு வாயில்கள் காணப்படுகின்றன. இந்த நான்கு வாயில்களும் நான்கு ஜாதியார்க்கு உரியவை. நான்கு ஜாதியாரும் தத்தமக்கு உரிய வாயில் வழியாகவே சென்று மீள வேண்டும். (பல முறை இச்செய்தி விடுதலை வழி அறிவிக்கப்பட்டுள்ளது)

  நான்கு ஜாதியார்

  நான்கு ஜாதியார் என்பவர்கள் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவர். இவர்கள் எந்தெந்த வாசல்வழியாக கோவிலுக்குள் சென்று மீள வேண்டும் என்பதை அடியிற்கண்ட பாடல் குறிக்கின்றது.

  அந்தணர் தென்றிசை அரசர் மேற்றிசை
  வந்திடு வணிகர்நல் வடக்கு வான்திசை
  தொந்தமில் சூத்திரர் தோன்றுங் கீழ்த்திசை
  பிந்திய நடுவது பிரமன் தானமே

  இந்த நான்கு ஜாதியாரும் பிரமன் உடலிலிருந்து பிறந்தவர்கள். பிராமணர் பிரமன் நெற்றியிலிருந்தும் க்ஷத்திரியர் பிரமன் தோளிலிருந்தும், வைசியர் பிரமன் தொடையிலிருந்தும், சூத்திரர் பிரமன் காலிலிருந்தும் பிறந்தனர். அய்ந்தாம் ஜாதியாராகிய பஞ்சமர் (ஆதி திராவிடர்) பிறக்கப் பிரமன் உடலில் அய்ந்தாம் கருவி இல்லை என்று தெரிகிறது. அப்படியானால் அவர்கள் எப்படிப் பிறந்தார்கள் என்று மக்கள் பெரியாரிடம் வினவிய போது அவர் பஞ்சமர் ஆகிய ஆதி திராவிடர், அவர்தம் தாய் தந்தையார்க்குப் பிறந்தார்கள் என்று பதில் கூறினார்.

  டாக்டர் டி.எம். நாயர்

  1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் சென்னை ஸ்பர்டாங்சாலைப் பகுதியில் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் தலைமையில் டி.எம். நாயர் உரையாற்றினார். இக்கூட்டத்தில் தியாகராயரும் கலந்து கொண்டார்.

  இக்கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:

  கடவுள் என்ற கற்பனைக் கருத்தை நிலைநாட்டித் தம் சூழ்ச்சிகளில் வெற்றிகண்ட ஆரிய வஞ்சகர்கள் தம்முடைய வெண்ணிறத்தைக் காட்டித் தாம் உயர்ந்தவர்கள் என்றும் திராவிடர்களின் கருப்பு நிறத்தைக் காட்டி அவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும், கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன் தான் பார்ப்பனர் என்றும் கடவுளின் தோளிலிருந்து பிளந்து கொண்டு வெளிவந்தவன் தான் சத்திரியன் என்றும், கடவுளின் வயிற்றிலிருந்து வெளிவந்தவன்தான் வைசியன் என்றும் கடவுளின் காலிலிருந்து பிளந்து வெளிவந்தவன்தான் சூத்திரன் என்றும் கூறித் திராவிட அப்பாவிகள் பலரையும் நம்ப வைத்தனர். நான் 30 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்திலும் இங்கும் மருத்துவப் பணி செய்து அனுபவம் பெற்றவன். ஆனால் இம்மாதிரியாக உடலின் பல பகுதிகளிலிருந்து பிள்ளைப்பேறு மருத்துவங்களை நான் என் வாழ்நாளில் கண்டதுமில்லை. கேட்டறிந்ததுமில்லை (சிரிப்பு _ கைதட்டல்).

  ஆரியக் கடவுளின் உடல் அமைப்பே அலாதியாகத் தான் இருக்கும் போலிருக்கிறது. (சிரிப்பு, கைதட்டல்) என்பதே அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

  நான்கு வாயில்களுடன் கோவில் அமைக் கத் திட்டமிட்டுச் செயல்படுத்தியவன்

  அக்காலத்தில் இந்துமதம் சார்ந்த கோயில்களைக் கட்ட வரைபடம் தீட்டிய பொறியியல் வல்லான் (என்ஜினீயர்) மயன் என்பவனாகும். இவன் மநுமயன் என்றும் குறிப்பிடப்படுகின்றான். இவன் யாத்த நூல் மநுமயன் மனையடி சாஸ்திரம் இவன் இந்நூலில் குறிப்பிட்ட படிதான் கோவில்களில் நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டன.

  இப்படி அமைக்கப்பட்ட கோவிலில் பிராமணருக்கு உரிய தெற்கு வாயில் வழியாக நந்தன் என்ற பஞ்சமன் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்தானாம். இவ்வாறு பஞ்சமன் பார்ப்பனர்க்கு உரிய வாயிலில் நுழைந்தால் அது தீட்டு ஆகாதா? தீட்டு ஆன கோவில் தெற்கு வாசலை, பிராமணர்க்கு என அமைக்கப்பட்ட தெற்கு வாசலைச் சிதம்பரம் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் அன்றைக்கே மூடி விட்டார்கள். அது இன்னும் திறக்கப்படவில்லை.

  இப்போது ஆளாளுக்கு தெற்கு வாசலைத் திறக்க ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

  தீட்டான வாசலைத் திறக்க மநுமயன் தன் நூலில் ஏதாவது வழி சொல்லியிருப்பானோ! இந்து முன்னணியினரே! மநுமயனுடன் தொலைபேசியில் உரையாடி இவ்வினாவுக்கு விடை காணுங்களேன்!

 4. R. Karuppusami Says:

  So Karunanidhi has such a belief that Periyar lives even today.

  That is why perhaps, the other day, he went Anna samadhi suddenly.

  When they do not believe in soul and other things, how is that they believe these things?

 5. M. Dhandayuthapani. Says:

  As K has becoming old, the fear of death has crept into his mind.

  He has divided his political, monetary, and other wealth and distributed among his dear and near relatives.

  He gets maximum praise, euology, sychophancy etc., from his royal-appointed poets like Vairamuthu, Vali and others. Thus, he is kept happy.

  So manyy actresses of different sizes, shapes, categories are made to dance, talk, and sing before him in different functions and thus, his youngerdays feelings, senses and sensations, romances are kindled and rekindled.

  Thus,now he talks about the spirit of EVR, that is debnied in the atheist principle.

  Earlier too, he and his other ideolgists have made that blunder by visiting the dead of others (particulartly, Christians and Muslims).

  Now, he says that EVR should be consulted about the Nandanar!

  Last month, hurriedly he made a visit to the “Anna samadhi”, where, he reportedly talked with Anna and so on!

  Thus, the Dravidian atheisnm now goes in a different direction.

  Even DK-walas started paying respects to the dead and tombs with folded hands!

 6. Sathyaveer Singh Says:

  கருணாநிதிக்கு வயதாகி விட்டது, மேலும் குறிப்பாக சாவைப் பற்றிய பயம் வந்து விட்டது.

  தனது இறப்பிற்குப் பின் திமுக என்னவாகும்,

  1. மகன்கள் சணையிட்டு திமுகவை உடைத்து விடுவார்களா இல்லை,
  2. தனது குடும்பத்தார் இல்லாதவர்கள் ஒன்று கூடி தனி திமுக ஆரம்பித்து விடுவார்களா,
  3. மாறன் சகோதரர்கள் தமது பலத்தால் திமுகவில் ஆதிக்கம் பெற்றுவிடுவார்களா
  4. கட்சி உடைந்த பிறகு, சிலட் அதிமுகவிற்கு சென்று விடுவார்களா

  இப்படி பல கவலைகள் வந்து விட்டன,.

  இரண்டு மனைவிகளும் வேண்டாத தெய்வங்கள் இல்லை. அடுத்த் தேர்தலில் திமுக வெல்ல வேண்டும், ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்கவேண்டும் என்று ஒரு ஆசை. ஆனால், அழகிரிக்கும் அதே ஆசை! என்ன செய்ய?

  ஆக, இறப்பு, இறப்பிற்க்யு பின் எண்ணகும்….என்ற எண்ணங்களில் இவ்வாறு உளறுகிறார்.

  பெரியாரிடம்தான் கேகவேண்டும் என்றால், பெரியாரின் ஆவியிடம்போய் கேட்பாரா?

  இல்லை, அன்று அண்ணாதுரை சமாதிக்குச் சென்று, ஏதோ ஏவல் வேலை செதாராம், அதுபோல, பெரியாரின் சமாதிக்குச் சென்று, சித்து வேலை செய்வாரா?

  பார்ப்போம், கருணாநிதியின் மந்திர-தந்திர வேலைகளை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: