Archive for ஓகஸ்ட், 2010

பூணூலும், திகவினரும், சுவாமி விவேகாநந்தரும்!

ஓகஸ்ட் 23, 2010

பூணூலும், திகவினரும், சுவாமி விவேகாநந்தரும்!

விடுதலையில் “பூணூல்!” என்ற தலைப்பில், “மயிலாடன்” என்ற பெயரில் ஏரோ இப்படி உளறிக்கொட்டியிருப்பது வேடிக்கையாக உள்ளது. விவேகானந்தரை திகவினரும் புரட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. ஏதோ அங்கு ஒரு வரி, இங்கு ஒருவரி என்று எடுத்துக் கொண்டு, இப்படி பொய் சொல்லியிருக்க்கும், இந்த புரட்டர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும். இத்தகையவர் நடத்தும் கல்விக்கூடங்களில், எப்படி சரியான படிப்பு, ஒழுக்கம் முதலியவற்றை எதிர்பார்க்கமுடியும்?

http://www.viduthalai.periyar.org.in/20100823/news04.html

நாளை (ஆவணி 8 ஆகஸ்ட் 24) ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கி றார்கள்.

இந்தப் பூணூல் வந்த விதம் குறித்து அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தின் பிரதாபங்களைப் பீரங்கியாக முழங்கி வந்த விவேகானந்தர் என்ன சொல்லுகிறார்?

“முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு, ஜீவனுடைய சோகங்களையும், துன்பங் களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்தில் சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத் துக்கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி, அவனுக்குத் தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரி யாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக்கொள் ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்துகொள்ளும் வழக்கம் பின்னாளில் வந்து விட்டது.

மேலும், வேதங்களில் பூணூலைப் பற்றிய குறிப்பு ஏதுமில்லை என்றும் விவேகானந்தர் கூறியுள்ளார் (ஆதா ரங்கள்: சுவாமி விவேகானந் தர் சம்பாஷணை, பக்கம் 2628).

கோவணம் கட்டுவதற்குப் பயன்பட்ட நூல்தான் திரிநூல் என்பதைக் காண்க!

சரி… நான் ஒரு இந்து சனாதனி என்று பெருமை யாகச் சொல்லிக் கொள்பவரான காந்தியாரின் பூணூலைப்பற்றிய கருத்து என்ன? அவர் ஏன் பூணூலை அறுத்து எறிந்தார்?

லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமலிருக்கும்போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆதலால், நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு மாசற்ற வாழ்வு வாழவேண்டும். ஆத்மார்த்திக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்கவேண் டும் இப்பூணூல். இன்றுள்ள இந்துக்கள், இன்று இந்து மதம் உள்ள நிலையில், இப் பூணூலை அணிந்து கொள்வ தற்குத் தகுதி உள்ளவர்களா என்பது எனக்குச் சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண் டாமை, உயர்வு, தாழ்வு, வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம் யாவும் ஒழிந்த பிறகுதான் இந்துவுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டு. ஆகை யால், பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை. (காந்தியாரின் சுயசரிதம், பக்கம் 480).

காந்தியார் கூற்றில் முரண்பாடுகள் உள்ளன என்பது உண்மையாகும். இந்து மதத்தில் தீண்டாமை இல்லாததுபோலவும், அதற்கு மாறாக தீண்டாமையை அனுசரிப்பது போலவும் எழுதுவது சரியானதல்ல.

காந்தியார் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பாலக்காட்டில், மாட்டுக் கொட்டகையில் சந்தித்தபோது, தீண்டாமை சாத்திர சம்பிரதாய வழிபட்டது என்று முகத்துக்கு முகம் சொல்லிவிட்ட பிறகு (சங்கராச் சாரியாரைவிட சாஸ்திரம்பற்றி யார் கூறவேண்டும்?) காந்தியார் இந்து மதம் குறித்துக் கணித்திருப்பது தவறாகும்.

காஞ்சி மச்சேஸ்வரர் கோயில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன்கூட நாளை கண் டிப்பாகப் பூணூல் தரித்துக் கொள்வான் என்பதில் அய்யமில்லை.

என்னே பூணூல் என் னும் கோவணக் கயிற்றின் மகாத்மியம்!

—————————————————————————————————————————————

ஆனால், விவேகாநந்தரின் முழு நூல்கள் என்பதில் இவ்வாறு உள்ளது:

குருவினுடைய குடிசையை பழுது பார்க்கும் சீடன் எரிவளர்க்கும் பொருளுடன் நிற்கிறான். குருவானவர், அவனுடைய தகுதி, திறமையைப் பார்த்து, அவனுக்கு வேண்டிய சடங்குகளை செய்து, வேதங்களைக் கற்றுக் கொடுக்கத் தீர்மானிக்கிறார். அந்நிலையில் அவனுடைய இடுப்பைச்சுற்றி மூன்று புரிகளைக் கொண்ட முஞ்சா என்ற புல்லை, கட்டுவார்.  அது அவன் தன்னுடைய உடல், மனது மற்றும் வாக்கு முதலியவற்றை அடக்கி வைத்துக் கொள்ள அடையாளமாக அணிவிக்கப்படுகிறது. இந்த புற்கள் பிறகு கௌபீனத்தை இதனுடன் முடிச்சுப்போட்டுக் கட்டிவைப்பதர்கும் உதவுகிறது.

இதற்குப் பிறகுதான், சீடன் கேட்கிறான், “அப்படியென்றால், பூணூல் போட்டுக் கொள்வது என்ற சடங்கு வேதங்களின்படி இல்லையா?”

அதற்கு விளக்கமாகத்தான், கூறியுள்ளது, அத்தகைய விவரணம்.

………………….The disciple of old used to repair to the hermitage of the Guru, fuel in hand; and the Guru, after ascertaining his competence, would teach him the Vedas after initiation, fastening round his waist the threefold filament of Munja, a kind of grass, as the emblem of his vow to keep his body, mind, and speech in control. With the help of this girdle, the disciples used to tie up their Kaupinas. Later on, the custom of wearing the sacred thread superseded this girdle of Munja grass.”

Disciple: Would you, then, say, sir, that the use of the holy thread we have adopted is not really a Vedic custom?

Swamiji: Nowhere is there mention of thread being so used in the Vedas.The modern author of Smritis, Raghunandana Bhattacharya, also puts it thus: “At this stage,*  the sacrificial girdle should be put on.” Neither in Gobhila’s Grihya – sutras  do we find any mention of the girdle made of thread. In the Shastras, this first Vedic Samskara (purification ceremony) before the Guru has been called the Upanayana; but see, to what a sad pass our country has been brought! Straying away from the true path of the Shastras, the country has been overwhelmed with usages and observances originating in particular localities, or popular opinion, or with the womenfolk! That’s why I ask you to proceed along the path of the Shastras as in olden with an undaunted heart. It is fear alone that is death. You have to go beyond all fear. So from this day be fearless. Off at once, to lay down your life for your own liberation and for the good of others. What good is it carrying along a load of bones and flesh! Initiated into the Mantra of extreme self – sacrifice for the sake of God, go, lay down for others this body of flesh and bones like the Muni Dadhichi! Those alone, say the Shastras, are the real Gurus, who have studied the Vedas and the Vedanta, who are knowers of the Brahman, who are able to lead others beyond to fearlessness; when such are at hand, get yourself initiated, “no speculation in such a case”. Do you know what has become of this principle now?–“like the blind leading the blind”!

Volume 6     [  Page :472- 473 ]

வேதங்களில் இல்லையா என்ற கேட்டாபோது, வேதங்களில் இல்லாத சில பழக்க-வழக்கங்கள் எப்படி பிற்பாடு சேர்க்கப்பட்டது என்று விளக்குகிறார். வேதங்களுடன், வேதாந்த்திற்கும் முக்கியம் கொடு, கிரியைகளைப் பற்றி கவலைப் படவேண்டாம், ஏனெனில், அவை குருடர்களை குருடர்கள் பின்பற்றுவது போல முடியும் என்கிறார்.
அதாவது, அத்தகைய கிரியைகள் செய்யவேண்டுமானால், ஒழுங்காக செய்யவேண்டும், இல்லையென்றால், செய்யவேண்டாம், இவ்வாறு அறிவுரைக் கூறுவது, அந்த அளவிற்கு பக்குவம் வந்தவர்களுக்கு, எல்லோருக்கும் அல்ல.
……………………..Another phenomenon is there. Those of you that have been to hear the first lecture already know that in India there are two great races: one is called the Aryan; the other, the non – Aryan. It is the Aryan race that has the three castes; but the whole of the rest are dubbed with one name, Shudras — no caste. They are not Aryans at all. (Many people came from outside of India, and they found the Shudras [there], the aborigines of the country). However it may be, these vast masses of non – Aryan people and the mixed people among them, they gradually became civilised and they began to scheme for the same rights as the Aryans. They wanted to enter their schools and their colleges; they wanted to take the sacred thread of the Aryans; they wanted to perform the same ceremonies as the Aryans, and wanted to have equal rights in religion and politics like the Aryans. And the Brahmin priest, he was the great antagonist of such claims. You see, it is the nature of priests in every country — they are the most conservative people, naturally. So long as it is a trade, it must be; it iso their interest to be conservative. So this tide of murmur outside the Aryan pale, the priests were trying to check with all their might. Within the Aryan pale, there was also a tremendous religious ferment, and [it was] mostly led by this military caste.

There was already the sect of Jains [who are a] conservative [force] in India [even] today. It is a very ancient sect. They declared against the validity of the scriptures of the Hindus, the Vedas. They wrote some books themselves, and they said: “Our books are the only original books, the only original Vedas, and the Vedas that now are going on under that name have been written by the Brahmins to dupe the people.” And they also laid the same plan. You see, it is difficult for you to meet the arguments of the Hindus about the scriptures. They also claimed [that] the world has been created through those books. And they were written in the popular language. The Sanskrit, even then, had ceased to be a spoken language –[it had] just the same relation [to the spoken language] as Latin has to modern Italian. Now, they wrote all their books in Pali; and when a Brahmin said, “Why, your books are in Pali!” they said, “Sanskrit is a language of the dead.”

The Complete Works of Swami Vivekananda
Volume 3     [  Page : 520-521 ]

பிறகு மற்றொரு இடத்தில், இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்.

“உலகத்திலேயே இரண்டு இனங்கள்தாம் உள்ளன – அவை ஆரியன் மற்றும் அநாரியன். ஆரியர்களுள் மூன்று ஜாதிகள் உண்டு. மற்ற அநாரியர்கள் எல்லோரும் சூத்திரர்கள்தாம். ஆனால், சூத்திரர்கள் என்பது ஜாதி கிடையாது. இவ்வாறு, அநாரியர்கள், ஆரியர்களாக மாறும் போது, அவர்களும், ஆரியர்களைப் போலவே, எல்லாவற்றையும் செய்கின்றனர். ஆரியர்களின் பூணூலையும் எடுத்துக் கொள்கின்றனர்..…………………அந்த நேரத்தில், அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வீர-மறவர்களின் ஜாதியும் இருந்தது.

“வேதங்களை மறுக்கும் ஜைன மதமும் இருந்தது. அவர்களும் தங்களுடைய நூல்கள்தாம் உயர்ந்தன என்று சொல்லிக் கொண்டனர். உண்மையில் அவைதான் வேதங்கள், பிராமணர்கள் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்றுதான் வேதகங்களை இயற்றினர், என்றெல்லாம்கூட பேசினர். மக்கள் அப்பொழுது, உங்களது வேதங்கள் பாலி மொழியில் மொழியில் உள்ளனவே என்று கேட்டதற்கு, சமஸ்கிருதம் செத்துவிட்டது என்றுகூட சொன்னார்கள்”.

ஆகவே, ஜைனம் மற்றும் பௌத்த மதங்களின் திரிபுவாதங்களினால்தான், அத்தகைய வேற்றுமைகள் தோன்றின. எனவே, அவைப்பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை.  அந்நிலையில்தான், காந்தியடிகள், பூணூலை மறுத்தார். அதாவது, அனைவரும் அதனை அணிந்து கோள்ளும் நிலை வந்தால், தானும் அணிவேன் என்ற சத்திய சோதனை அது.

அவர் பூணூல் அணியவில்லை என்பதினால், பூணூல் அணியாதவர்கள் எல்லாம் மகாத்மா ஆகிவிடமாட்டார்கள்.

அல்லது பூணூல் அணிந்தவர்கள் எல்லாம் துராத்மா ஆகிவிட மாட்டார்கள்.

மேலும் காந்தியை “மஹாத்மா” என்றே அழக்க மறுத்த இந்த கோஷ்டியினருக்கு, இதைப் பற்றி என்ன கவலை? மற்றவர்கள் இரு உடைகளுடன் இல்லை என்று, ஒரு ஆடையையே காந்தி அணிந்தார். மற்ற தலைவர்கள் அவ்வாறு அணியவில்லையே? பிறகு எதற்கு, காந்தியைப் பற்றி பேச வேண்டும்?

அதுபோலத்தான், பூணூல் விஷயமும்.

திகவினரும், பகுத்தறிவு ஜீவிகளும் தாலிகளைக் கழட்டிவிடவில்லையே? இப்பொழுது, திகவினர் தாலி கட்டித் திருமணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். அதனால், தாலி கட்டுகிறவர்களை ஒன்றும் செய்யமுடியாதே. கருணாநிதியின் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவி, அவரது மகள்கள், சகோதரிகள், ஏன் மற்ற திக, திமுகவினரின் பெண்கள் தாலி அணிவதை கழற்றிவிடவில்லையே?

வீரமணியின் செக்யூலரிஸ நாத்திகம்: மேரி மாதா எங்கே போனார்?

ஓகஸ்ட் 16, 2010

மேரி மாதா எங்கே போனார்?
பாதிரியாரின் அறையில் ரூ.4 லட்சம் கொள்ளை

http://www.viduthalai.periyar.org.in/20100816/news16.html

“மேரி மாதா எங்கே போனார்?” என்று மரியாதையுடன் கேட்கிறார் வீரமணி!

ஆனால், இதே அம்மன் என்றால், “அம்மன் எங்கே போனாள்” என்றுதான் தலைப்பு இருக்கும்!

ஆக நாத்திகத்திலும், இத்தகைய கடந்தெடுத்த மடத்தனத்தை, இப்படி மெத்தப் படித்து, பித்துபிடித்து அலையும் வேந்தர் வீரமணியிடத்தில் தான் காணமுடியும் போல இருக்கிறது!

களியக்காவிளை, ஆக.16 மரியகிரி விண் ணேற்பு அன்னை ஆலய பாதிரியாரின் அறையில் புகுந்து ரூ.3 லட்சத்து 81 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல் துறையினர் தேடி வருகி றார்கள்.

இந்த சம்பவம் பற்றி காவலர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது:

களியக்காவிளை அருகே உள்ள மரியகி ரியில் மலங்கரை கத் தோலிக்க சபையின் மார்த்தாண்டம் மறை மாவட்டத்துக்கு உள்பட்ட விண்ணேற்பு அன்னை ஆலயம் உள் ளது. இந்த ஆலயத்தில் வருடாந்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் மாலை யில் தேர் பவனி நடந்தது. அதில் ஊர் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண் டனர். ஆலய பாதிரியார் பத்ரோசும் தேர் பவனி யில் கலந்து கொண்டார்.

தேர் பவனிக்குப்பின் திரும்பி வந்த பாதிரியார் பத்ரோஸ் தனது அறைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது.

அவர் அதில் பார்த்த போது அங்கு வைக்கப் பட்டு இருந்த ரூ.3 லட் சத்து 81 ஆயிரம் பணத்தை காணவில்லை. அந்தப் பணத்தை மர்ம ஆசா மிகள் கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி யடைந்த பாதிரியார் பத்ரோஸ் உடனடியாக இது குறித்து களியக் காவிளை காவல்துறை யில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆணையாளர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். கை ரேகை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டன.

தேர் பவனிக்கு அனை வரும் சென்றிருந்தபோது அறைக்குள் புகுந்த திரு டர்கள் பணத்தை திருடிச் சென்றதாக தெரிகிறது. அவர்களை காவல்துறை யினர் தேடி வருகி றார்கள்.

எல்லாம் பிடாரி அம்மன் செயல்! கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

இதோ எதிர்பார்த்தபடியே, வீரமணி இன்கு சொல்வது, “எல்லாம் பிடாரி அம்மன் செயல்”!

அப்பொழுது, பாதிரி கொள்ளையடிப்பதும் “மேரியின் செயல்” தானே?

பிறகு, ஆயிரக்கணக்கான பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர் கன்னிகளை கற்பழிப்பதும், மேரி மாதாவின் கருணைதான் போலும்!

வில்ஹியூம், மாத்யூஸ், ஊட்டி பிஷப், பிரைட் என இவர்கள் எல்லாம் அப்படியே கன்னி மேரி அருளாலே, விடாமல் பல பெண்களை கற்பழித்துள்ளார்கள்!

வாழ்க மேரியன் அருள்!

பூவிருந்தவல்லி, ஆக.30 வளசரவாக்கம் அருகே இரவில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம், ராஜேஸ்வரி நகர் பகுதியில் அமைந்துள்ளது ஏழு பிடாரி அம்மன் கோவில். இந்தக் கோவிலின் உள்ளே ஓர் உண்டியலும், கோவில் பூட்டப்பட்டு இருந்தால் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக வெளியே ஓர் உண்டியலும் உண்டு. நேற்று முன்தினம் இரவில் கோவிலின் மதில் சுவரில் ஏறிக் குதித்து கோவிலுக்குள் சென்ற சிலர், இரு உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை அள்ளிச் சென்றனர்.

நேற்று காலை வழக்கம் போல கோவிலைத் திறக்க வந்த பூசாரிகள், உண்டியல் உடைக்கப் பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளை நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். கைரேகை வல்லுநர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

கடந்த 6 மாதங்களாக உண்டியல் திறக்கப் படாமல் இருந்ததால் உண்டியலில் சுமார் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பணம் மற்றும் நகைகள் இருந்திருக்கலாம் என்று கோவில் நிருவாகிகள் தெரிவித்தனர். இதுபற்றி காவல்துறையின

குஷ்புக்கு சவாலாக கற்பை ஏலம் விட்ட பெண்!

ஓகஸ்ட் 7, 2010

குஷ்புக்கு சவாலாக கற்பை ஏலம் விட்ட பெண்!

இப்படியும் நடக்கிறது உலகத்தில் : கற்பை ஏலம் விட்ட இளம் பெண்!

ஆகஸ்ட் 07,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56991

லண்டன் : அவசர உலகத்தில் அன்றாடம் வினோதங்கள் பல அரங்கேறுகின்றன. அப்படிப்பட்ட அதிர்‌ச்சியூட்டும் வினோதம் தான் ஹங்கேரியில் அரங்கேறியுள்ளது. ஹங்கேரியைச் சேர்ந்த 18 வயது இளம் ‌பெண் ஒருவர் ஆன்லைனில் தனது கற்பை ஏலம் விட்டுள்ளார். தனது தாய் பெற்ற கடனையும், தனது மேற்படிப்பையும் தொடர கற்பை ஏலம் விட்டதாகவும் பரபரப்பு விளக்கம் கொடுத்துள்ளார் அந்தப் பெண். ஆன்லைனில் தன்னையே ஏலம் விட்ட அந்தப் பெண் இயற்பெரை வெளியிடவில்லை. மிஸ் ஸ்பிரிங் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண் கன்னித்தன்மையை விற்பதாக அறிவித்‌த ஏலத்துக்கு அமோக வறவேற்பு கிடைத்துள்ளது. கடைசியல் இரண்டு பேர் அதிக ஏலத் தொகையை அறிவிக்க அதில் 200,000 பவுண்ட் ஏலத் தொகை அறிவித்த பிரிட்டன் நாட்டு இளைஞரை தேர்ந்தெடுத்துள்ளார் அந்த இளம் பெண். இது குறித்து அவர் லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் : வருமான வரி போக தனக்கு கிடைக்கும் தொகையைக் கொண்டு கடனை அடைத்து விட்டு படிப்பை தொடர முடியும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை ஏலம் எடுத்தவர் திருமணத்துக்கு விருப்பம் தெரிவித்ததாகவும். இருப்பினும் திருமணம் என்பது மிகப்பெரிய சவால், அதற்கு தான் இன்னும் தயாராகவில்லை எனவே திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறினார். பேரம் முடிந்த கையோடு மிஸ் ஸ்பிரிங்கஸ் லண்டனில் முகாமிட்டுள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்வது பற்றி மட்டும் தான் நாம் பேசியிருக்கிறோம். இப்படிப்பட்ட அறுவறுப்பான ஆன்லைன் வர்த்தகமும் உலகில் ஒரு பகுதியில் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.

திமுக ஆதரவு பார்ப்பன எஸ்.வி.சேகர் நித்யானந்தாவை சந்தித்த மர்மம் என்ன?

ஓகஸ்ட் 7, 2010

திமுக ஆதரவு பார்ப்பன எஸ்.வி.சேகர் நித்யானந்தாவை சந்தித்த மர்மம் என்ன?

நித்தியானந்தாவை வீட்டுக்கு அழைத்த எஸ்.வி. சேகர்!

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5, 2010,

http://thatstamil.oneindia.in/news/2010/08/05/s-ve-shekher-meets-nithyananda.html

சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, போலீஸில் சிக்கி, 50 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வந்துள்ள நித்யானந்தாவை பெங்களூரில் உள்ள பிடுதி ஆசிரமத்தில் நடிகரும், திமுக ஆதரவு எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி. சேகர் சந்தித்துப் பேசியுள்ளார். இதன் மர்மம் என்னவென்பது தெரியவில்லை!

எஸ்.வி.சேகர்-நித்யானந்தா

எஸ்.வி.சேகர்-நித்யானந்தா

விடுதலையான நித்யானந்ததவை நடிகைகள் சந்திக்கின்றனராம்: கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா செக்ஸ் உறவு கொள்ளும் காட்சி வெளியானது. அந்தக் காட்சிகள் உண்மை என்றும் நிரூபணமாகின. இதைத் தொடர்ந்து போலீஸுக்குப் பயந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது உபதேசத்தையும் ஆரம்பித்துவிட்டார். அவரை நடிகை மாளவிகா உள்பட ஏராளமான பெண்கள் இப்போது பார்த்து வருகின்றனர்.

களை கட்டும் ஆசிரமம்! இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்யானந்தாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார். மேலும் தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு நித்தியானந்தா ஹீலிங் தெரபி சிகிச்சை அளித்தாராம். இதில் அவர் குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கூறியதாவது: நித்யானந்தா சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில் நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம் கூறினேன்.

லெனின் போன்றவர்களை சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் செய்த தவறு: லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் நீங்கள் செய்த தவறு என்ற அவரிடம் கூறினேன். எல்லாவற்றையும், சிரித்த முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, ‘சுமார் 200 நாடுகளில் ஆசிரமம் கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை. கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும்’என்றார். நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்…” என்றார்.

ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர்: ‘ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?’, என்று கேட்டதற்கு, “கேட்டேன். அதற்கு அவர், ‘அந்த பெண்ணே மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது’ என்று கூறிவிட்டார்” என்றார் எஸ்வி சேகர். ‘சரி… ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா? இதை ஆதரிக்கிறீர்களா?” என்றதற்கு, “இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர். இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.

ஆபாச படம் பிடித்த லெனினை ஏன் விட்டுவிட்டனர்? அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?” என்றார்.

நித்தியானந்தா சென்னைக்கு வராமல் தவிர்ப்பது ஏன்? இங்கு வருவதற்கு பயப்படுகிறாரா?, என்று கேட்டபோது, “தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது. சென்னையில் உள்ள பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார். வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார். விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.

கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது: பொதுவாக தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது…” என்றார் எஸ்வி சேகர்.