பூணூலும், திகவினரும், சுவாமி விவேகாநந்தரும்!

பூணூலும், திகவினரும், சுவாமி விவேகாநந்தரும்!

விடுதலையில் “பூணூல்!” என்ற தலைப்பில், “மயிலாடன்” என்ற பெயரில் ஏரோ இப்படி உளறிக்கொட்டியிருப்பது வேடிக்கையாக உள்ளது. விவேகானந்தரை திகவினரும் புரட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. ஏதோ அங்கு ஒரு வரி, இங்கு ஒருவரி என்று எடுத்துக் கொண்டு, இப்படி பொய் சொல்லியிருக்க்கும், இந்த புரட்டர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும். இத்தகையவர் நடத்தும் கல்விக்கூடங்களில், எப்படி சரியான படிப்பு, ஒழுக்கம் முதலியவற்றை எதிர்பார்க்கமுடியும்?

http://www.viduthalai.periyar.org.in/20100823/news04.html

நாளை (ஆவணி 8 ஆகஸ்ட் 24) ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கி றார்கள்.

இந்தப் பூணூல் வந்த விதம் குறித்து அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தின் பிரதாபங்களைப் பீரங்கியாக முழங்கி வந்த விவேகானந்தர் என்ன சொல்லுகிறார்?

“முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு, ஜீவனுடைய சோகங்களையும், துன்பங் களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்தில் சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத் துக்கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி, அவனுக்குத் தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரி யாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக்கொள் ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்துகொள்ளும் வழக்கம் பின்னாளில் வந்து விட்டது.

மேலும், வேதங்களில் பூணூலைப் பற்றிய குறிப்பு ஏதுமில்லை என்றும் விவேகானந்தர் கூறியுள்ளார் (ஆதா ரங்கள்: சுவாமி விவேகானந் தர் சம்பாஷணை, பக்கம் 2628).

கோவணம் கட்டுவதற்குப் பயன்பட்ட நூல்தான் திரிநூல் என்பதைக் காண்க!

சரி… நான் ஒரு இந்து சனாதனி என்று பெருமை யாகச் சொல்லிக் கொள்பவரான காந்தியாரின் பூணூலைப்பற்றிய கருத்து என்ன? அவர் ஏன் பூணூலை அறுத்து எறிந்தார்?

லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமலிருக்கும்போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆதலால், நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு மாசற்ற வாழ்வு வாழவேண்டும். ஆத்மார்த்திக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்கவேண் டும் இப்பூணூல். இன்றுள்ள இந்துக்கள், இன்று இந்து மதம் உள்ள நிலையில், இப் பூணூலை அணிந்து கொள்வ தற்குத் தகுதி உள்ளவர்களா என்பது எனக்குச் சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண் டாமை, உயர்வு, தாழ்வு, வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம் யாவும் ஒழிந்த பிறகுதான் இந்துவுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டு. ஆகை யால், பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை. (காந்தியாரின் சுயசரிதம், பக்கம் 480).

காந்தியார் கூற்றில் முரண்பாடுகள் உள்ளன என்பது உண்மையாகும். இந்து மதத்தில் தீண்டாமை இல்லாததுபோலவும், அதற்கு மாறாக தீண்டாமையை அனுசரிப்பது போலவும் எழுதுவது சரியானதல்ல.

காந்தியார் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பாலக்காட்டில், மாட்டுக் கொட்டகையில் சந்தித்தபோது, தீண்டாமை சாத்திர சம்பிரதாய வழிபட்டது என்று முகத்துக்கு முகம் சொல்லிவிட்ட பிறகு (சங்கராச் சாரியாரைவிட சாஸ்திரம்பற்றி யார் கூறவேண்டும்?) காந்தியார் இந்து மதம் குறித்துக் கணித்திருப்பது தவறாகும்.

காஞ்சி மச்சேஸ்வரர் கோயில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன்கூட நாளை கண் டிப்பாகப் பூணூல் தரித்துக் கொள்வான் என்பதில் அய்யமில்லை.

என்னே பூணூல் என் னும் கோவணக் கயிற்றின் மகாத்மியம்!

—————————————————————————————————————————————

ஆனால், விவேகாநந்தரின் முழு நூல்கள் என்பதில் இவ்வாறு உள்ளது:

குருவினுடைய குடிசையை பழுது பார்க்கும் சீடன் எரிவளர்க்கும் பொருளுடன் நிற்கிறான். குருவானவர், அவனுடைய தகுதி, திறமையைப் பார்த்து, அவனுக்கு வேண்டிய சடங்குகளை செய்து, வேதங்களைக் கற்றுக் கொடுக்கத் தீர்மானிக்கிறார். அந்நிலையில் அவனுடைய இடுப்பைச்சுற்றி மூன்று புரிகளைக் கொண்ட முஞ்சா என்ற புல்லை, கட்டுவார்.  அது அவன் தன்னுடைய உடல், மனது மற்றும் வாக்கு முதலியவற்றை அடக்கி வைத்துக் கொள்ள அடையாளமாக அணிவிக்கப்படுகிறது. இந்த புற்கள் பிறகு கௌபீனத்தை இதனுடன் முடிச்சுப்போட்டுக் கட்டிவைப்பதர்கும் உதவுகிறது.

இதற்குப் பிறகுதான், சீடன் கேட்கிறான், “அப்படியென்றால், பூணூல் போட்டுக் கொள்வது என்ற சடங்கு வேதங்களின்படி இல்லையா?”

அதற்கு விளக்கமாகத்தான், கூறியுள்ளது, அத்தகைய விவரணம்.

………………….The disciple of old used to repair to the hermitage of the Guru, fuel in hand; and the Guru, after ascertaining his competence, would teach him the Vedas after initiation, fastening round his waist the threefold filament of Munja, a kind of grass, as the emblem of his vow to keep his body, mind, and speech in control. With the help of this girdle, the disciples used to tie up their Kaupinas. Later on, the custom of wearing the sacred thread superseded this girdle of Munja grass.”

Disciple: Would you, then, say, sir, that the use of the holy thread we have adopted is not really a Vedic custom?

Swamiji: Nowhere is there mention of thread being so used in the Vedas.The modern author of Smritis, Raghunandana Bhattacharya, also puts it thus: “At this stage,*  the sacrificial girdle should be put on.” Neither in Gobhila’s Grihya – sutras  do we find any mention of the girdle made of thread. In the Shastras, this first Vedic Samskara (purification ceremony) before the Guru has been called the Upanayana; but see, to what a sad pass our country has been brought! Straying away from the true path of the Shastras, the country has been overwhelmed with usages and observances originating in particular localities, or popular opinion, or with the womenfolk! That’s why I ask you to proceed along the path of the Shastras as in olden with an undaunted heart. It is fear alone that is death. You have to go beyond all fear. So from this day be fearless. Off at once, to lay down your life for your own liberation and for the good of others. What good is it carrying along a load of bones and flesh! Initiated into the Mantra of extreme self – sacrifice for the sake of God, go, lay down for others this body of flesh and bones like the Muni Dadhichi! Those alone, say the Shastras, are the real Gurus, who have studied the Vedas and the Vedanta, who are knowers of the Brahman, who are able to lead others beyond to fearlessness; when such are at hand, get yourself initiated, “no speculation in such a case”. Do you know what has become of this principle now?–“like the blind leading the blind”!

Volume 6     [  Page :472- 473 ]

வேதங்களில் இல்லையா என்ற கேட்டாபோது, வேதங்களில் இல்லாத சில பழக்க-வழக்கங்கள் எப்படி பிற்பாடு சேர்க்கப்பட்டது என்று விளக்குகிறார். வேதங்களுடன், வேதாந்த்திற்கும் முக்கியம் கொடு, கிரியைகளைப் பற்றி கவலைப் படவேண்டாம், ஏனெனில், அவை குருடர்களை குருடர்கள் பின்பற்றுவது போல முடியும் என்கிறார்.
அதாவது, அத்தகைய கிரியைகள் செய்யவேண்டுமானால், ஒழுங்காக செய்யவேண்டும், இல்லையென்றால், செய்யவேண்டாம், இவ்வாறு அறிவுரைக் கூறுவது, அந்த அளவிற்கு பக்குவம் வந்தவர்களுக்கு, எல்லோருக்கும் அல்ல.
……………………..Another phenomenon is there. Those of you that have been to hear the first lecture already know that in India there are two great races: one is called the Aryan; the other, the non – Aryan. It is the Aryan race that has the three castes; but the whole of the rest are dubbed with one name, Shudras — no caste. They are not Aryans at all. (Many people came from outside of India, and they found the Shudras [there], the aborigines of the country). However it may be, these vast masses of non – Aryan people and the mixed people among them, they gradually became civilised and they began to scheme for the same rights as the Aryans. They wanted to enter their schools and their colleges; they wanted to take the sacred thread of the Aryans; they wanted to perform the same ceremonies as the Aryans, and wanted to have equal rights in religion and politics like the Aryans. And the Brahmin priest, he was the great antagonist of such claims. You see, it is the nature of priests in every country — they are the most conservative people, naturally. So long as it is a trade, it must be; it iso their interest to be conservative. So this tide of murmur outside the Aryan pale, the priests were trying to check with all their might. Within the Aryan pale, there was also a tremendous religious ferment, and [it was] mostly led by this military caste.

There was already the sect of Jains [who are a] conservative [force] in India [even] today. It is a very ancient sect. They declared against the validity of the scriptures of the Hindus, the Vedas. They wrote some books themselves, and they said: “Our books are the only original books, the only original Vedas, and the Vedas that now are going on under that name have been written by the Brahmins to dupe the people.” And they also laid the same plan. You see, it is difficult for you to meet the arguments of the Hindus about the scriptures. They also claimed [that] the world has been created through those books. And they were written in the popular language. The Sanskrit, even then, had ceased to be a spoken language –[it had] just the same relation [to the spoken language] as Latin has to modern Italian. Now, they wrote all their books in Pali; and when a Brahmin said, “Why, your books are in Pali!” they said, “Sanskrit is a language of the dead.”

The Complete Works of Swami Vivekananda
Volume 3     [  Page : 520-521 ]

பிறகு மற்றொரு இடத்தில், இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்.

“உலகத்திலேயே இரண்டு இனங்கள்தாம் உள்ளன – அவை ஆரியன் மற்றும் அநாரியன். ஆரியர்களுள் மூன்று ஜாதிகள் உண்டு. மற்ற அநாரியர்கள் எல்லோரும் சூத்திரர்கள்தாம். ஆனால், சூத்திரர்கள் என்பது ஜாதி கிடையாது. இவ்வாறு, அநாரியர்கள், ஆரியர்களாக மாறும் போது, அவர்களும், ஆரியர்களைப் போலவே, எல்லாவற்றையும் செய்கின்றனர். ஆரியர்களின் பூணூலையும் எடுத்துக் கொள்கின்றனர்..…………………அந்த நேரத்தில், அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வீர-மறவர்களின் ஜாதியும் இருந்தது.

“வேதங்களை மறுக்கும் ஜைன மதமும் இருந்தது. அவர்களும் தங்களுடைய நூல்கள்தாம் உயர்ந்தன என்று சொல்லிக் கொண்டனர். உண்மையில் அவைதான் வேதங்கள், பிராமணர்கள் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்றுதான் வேதகங்களை இயற்றினர், என்றெல்லாம்கூட பேசினர். மக்கள் அப்பொழுது, உங்களது வேதங்கள் பாலி மொழியில் மொழியில் உள்ளனவே என்று கேட்டதற்கு, சமஸ்கிருதம் செத்துவிட்டது என்றுகூட சொன்னார்கள்”.

ஆகவே, ஜைனம் மற்றும் பௌத்த மதங்களின் திரிபுவாதங்களினால்தான், அத்தகைய வேற்றுமைகள் தோன்றின. எனவே, அவைப்பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை.  அந்நிலையில்தான், காந்தியடிகள், பூணூலை மறுத்தார். அதாவது, அனைவரும் அதனை அணிந்து கோள்ளும் நிலை வந்தால், தானும் அணிவேன் என்ற சத்திய சோதனை அது.

அவர் பூணூல் அணியவில்லை என்பதினால், பூணூல் அணியாதவர்கள் எல்லாம் மகாத்மா ஆகிவிடமாட்டார்கள்.

அல்லது பூணூல் அணிந்தவர்கள் எல்லாம் துராத்மா ஆகிவிட மாட்டார்கள்.

மேலும் காந்தியை “மஹாத்மா” என்றே அழக்க மறுத்த இந்த கோஷ்டியினருக்கு, இதைப் பற்றி என்ன கவலை? மற்றவர்கள் இரு உடைகளுடன் இல்லை என்று, ஒரு ஆடையையே காந்தி அணிந்தார். மற்ற தலைவர்கள் அவ்வாறு அணியவில்லையே? பிறகு எதற்கு, காந்தியைப் பற்றி பேச வேண்டும்?

அதுபோலத்தான், பூணூல் விஷயமும்.

திகவினரும், பகுத்தறிவு ஜீவிகளும் தாலிகளைக் கழட்டிவிடவில்லையே? இப்பொழுது, திகவினர் தாலி கட்டித் திருமணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். அதனால், தாலி கட்டுகிறவர்களை ஒன்றும் செய்யமுடியாதே. கருணாநிதியின் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவி, அவரது மகள்கள், சகோதரிகள், ஏன் மற்ற திக, திமுகவினரின் பெண்கள் தாலி அணிவதை கழற்றிவிடவில்லையே?

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “பூணூலும், திகவினரும், சுவாமி விவேகாநந்தரும்!”

  1. S. M. Pakkiri Raja. Says:

    தச்சர்கள், கொல்லர்கள், விஸ்வகர்மாக்கள் முதலியோர்களும் பூணூல் போடுகிறார்களே, அவர்களை என்ன செய்யப் போகிறார்கள்?

    சுவாமி விவேகானந்தர் சொல்லியதையே புரட்டுகிறர்கள் என்றல், இவர்கள் பெரிய எத்தர்களாகத்தான் இருக்க வேண்டும்.

    அதனால்தான், முன்னர் “விவேகானந்தர் இல்ல”த்திலிருந்து,. விவேகானந்தரையே விரட்டப் பார்த்தனர்.

    பிறகு நன்றாக மாட்டிக் கொண்டதால்,சப்பைக் கட்டி, நல்ல பிள்ளைகள் போல நடித்தனர்.

  2. vedaprakash Says:

    இன்றைய “விடுதலையில்” (24-08-2010) ஆசிரியரின், அதவது, வீரமணியின் தலையங்கம்:

    பூணூல் கொழுப்பு!
    http://www.viduthalai.periyar.org.in/20100824/news07.html

    ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து நேற்றைய தினமணியில் (23.8.2010) அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியில் இது தேவையா? எனும் தலைப்பில் கீழ்க் கண்ட பெட்டிச் செய்தி ஒன்று இடம் பெற்றுள்ளது.

    ஜாதிவாரிக் கணக்கெடுப்பால் என்ன ஆகப் போகிறது? அமைச்சரவை (பிரதமர் தலைமையில்) ஜாதி வாரிக் கணக் கெடுப்புக்கு ஒப்புதல் தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் காடுகளில் புலிகள் எத்தனை? சிங்கங்கள் எத்தனை? யானைகள் எத்தனை? எனக் கணக்கிட்ட செய்தி வெளியாகியது. நல்லவேளை நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணகெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை!

    அதிகமான ஜாதிகள் உள்ளவர்கள் விகிதாசாரப்படி, முன்னுரிமை கோரி நாங்கள்தான் ஜாதியில் அதிகமாக உள்ளோம் என போராட மைனாரிட்டி ஜாதிகள், அதெல்லாம் சரியல்ல. பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள்.

    ஆக, இப்படி போராட்டம் பெரிதாகி வெடிக்க அதில் பலர் சாக, அதற்கு ஆதரவாக இப்போது காஷ்மீரில் நடக்கும் அராஜகம் போல் அராஜகம் வெடிக்க வருங்கால இந்தியாவுக்கு இது தேவையா?

    எவன் திறமை மிக்கவனோ – அவனே உயர்ந்த ஜாதி! எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி! இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும்!

    இதனைப் படிக்கும்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளவர்களின் மனப்பான்மை எந்த உஷ்ணத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை எளிதில் உணரலாம்.

    நல்லவேளை, நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணக்கெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை என்று தனது ஆத்திரத்தின் மூலம் அவரது கீழ்மையான குரைச்சல் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    நாய்கள் கணக்கை- ஜாதிவாரிக் கணக்கெடுப்போடு ஒப்பிட்டு எழுதியிருப்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.

    மைனாரிட்டி ஜாதிகள் – பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள்- என்பதன் மூலம் பெரும்பான்மை மக்கள் பன்றிக் குட்டிகளோடு ஒப்பிடப்பட்டுள்ளனர்.

    அசல் ஆர்.எஸ்.எஸ். நெய்யில் பொரித்த பண்டமாக இருக்கக்கூடிய ஒருவர் ஆசிரியராக இருக்கும் இந்த ஏட்டில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்று சமாதானம் அடைந்துவிட முடியாது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக தினமணி தனது தீய, ஆலகால நஞ்சினைக் கக்கிக் கொண்டு திரிகிறது.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் வருண வெறி நாகங்களை அடையாளம் காணக் கடமைப் பட்டுள்ளனர்.

    ஜாதியை ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்ற ஜாதி ஒழிப்பு ஆவேசத்தில் எழுதப்பட்ட கடிதமா இது? அல்ல, அல்ல. ஆவணி அவிட்டமாகிய இன்று பழைய அழுக்குப் பூணூலை அப்புறப்படுத்தி விட்டு, தடித்த புது முறுக்குடன் புதிய பூணூலைத் தரித்துப் பலமுறை இழுத்துவிட்டு அழகு பார்க்கும் கூட்டம்தான் இந்த வகையில் மூக்கணாங்கயிறு இல்லாத பொலி காளை போல துள்ளுகிறது.

    ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்தால் காஷ்மீரில் நடப்பது போல அராஜகம் வெடிக்க ஆரம்பிக்குமாம். இந்தியாவுக்கு இது தேவையா என்று மூக்கை ரத்தம் கசியக் கசிய சிந்துகிறது.

    உரிமை பாதிக்கப்பட்ட மக்கள், அந்த உரிமை எந்த வகையிலாக இருந்தாலும் அதற்காகப் போர்க் கோலம் பூணத்தான் செய்வார்கள்.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளைப் புரிந்துகொண்டு அதற்கான வாய்ப்புகளை சட்ட ரீதியாக அளிக்கத் தவறினால், அந்த மக்களின் குமுறல் எரிமலையாகி ஒரு நாள் வெடிக்க ஆரம்பித்தால், ஆதிக்கவாதிகளின் கதி என்னவாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    உலகம் முழுமையும் உரிமையின் கூர் வாட்கள் கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, ஆதிக்க வாதிகளை எப்படியெல்லாம் சிதைத்துள்ளன என்ற வரலாறு தரும் பாடத்தைப் படித்துக் கொள்ளவில்லையானால், புத்திசாலித் தனமாக அதன் வீரிய வீச்சைப் புரிந்துகொண்டு செயல்பட முன்வரவில்லையானால் வட்டியும் முதலுமாக – அதற்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று எச்சரிப்பது நமது கடமையாகும்.

    இட ஒதுக்கீடு வந்தால் தகுதி, திறமை தற்கொலை செய்துகொண்டுவிடும் என்று கூறிப் பார்த்தனர்; அது எடுபடவில்லை; இட ஒதுக்கீடு அடிப்படையில் படித்துத் தேர்ந்தோர் தங்களின் திறமைகளைச் சாதனைகள் மூலமாகப் பட்டொளி வீசிப் பறக்கிறார்கள்.

    கடைசியில் தங்களுக்கும் இத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை என்ற மனு போடும் நிலைக்கு வந்தார்கள் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் என்பதை மறந்துவிட்டு, தினமணி தன் ஆவணி அவிட்டப் புத்தியைக் காட்டலாமா?

    எவன் திறமை மிக்கவனோ, அவனே உயர்ந்தவன் – எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி என்று மகரிஷி மாதிரி உபந்நியாசம் ஒரு பக்கத்தில்.

    திறமைக்கும், தேச பக்திக்கும் அளவுகோல் என்ன? மனப்பாடம் செய்து தாள்களில் வாந்தி எடுத்துப் பெறும் மதிப்பெண்கள்தானா? வகுப்பில் மக்குப் பையன் என்று கூறப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதியனவற்றைக் கண்டுபிடித்துத் தந்தவர் என்பதை யெல்லாம் தினமணிகள் வசதியாகச் சாமர்த்தியமாக மறந்து விடும்.

    இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று இறுதியாக மங்கலம் பாடிக் கடிதம் முடிக்கப்பட்டுள்ளது.

    இறைவனன்றிதான் ஒன்றும் அசையாதே. அப்படியானால் இப்பொழுது நடைபெற்று வரும் (ஜாதி வாரிக் கணக்கெடுப்பு உள்பட) அனைத்தும் அவனால்தான் நடைபெறகிறது என்று ஒப்புக்கொண்டு கிருஷ்ணா, ராமா என்று முணுமுணுத்து பஜனை செய்துகொண்டு கயிற்றுக் கட்டிலில் படித்துக் கிடக்க வேண்டியதுதானே! அதற்குப் பிறகு என்ன ஜாதி முறுக்கும் – பூணூல் கொழுப்பும்?

  3. vedaprakash Says:

    பதில் சொல்லட்டும் பார்ப்பனர்கள்!
    http://www.viduthalai.periyar.org.in/20100831/news07.html

    ஆவணி அவிட்டம் பற்றியும், அந்நாளில் பார்ப்பனர்கள் பூணூல்களைப் புதுப்பிப்பது குறித்தும் விடுதலை ஆதாரப்பூர்வமாக வெளுத்து வாங்கியது இப்பொழு தெல்லாம் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையிலும் பார்ப்பனர்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற தலைவராகவும் துருத்திக் கொண்டு நிற்பவர் திருவாளர் சோ ராமசாமிதான். அந்த வகையில் ஆவணி அவிட்டம் குறித்து விடுதலைக்கு மறுப்பு எழுதுவதாக நினைத்துக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறார்.

    கேள்வி: இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலைக் கழற்றிவிட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது! அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?

    பதில்: நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆவணி அவிட்டம் அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்ம தேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்தத் தினம் ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் அதற்கு ஆவணி அவிட்டம் என்ற பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால் அவனுக்கு ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படு கிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.

    (துக்ளக், 1.9.2010, பக்கம் 17).

    சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக ஒரு நினைப்பு தொடக்கத்திலேயே ஓர் உண்மையை ஒப்புக்கொண் டுள்ளார். பார்ப்பனர்கள் புதிய பூணூலைப் போட்டுக் கொள்வதுபோல்தான் ஆவணி அவிட்டம் ஆகிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டுள்ளதே துக்ளக்.

    அது தவறு என்றால், அதனைக் கண்டித்தோ, அது கூடாது என்றோ என்றைக்காவது துக்ளக் சோ ராம சாமியோ, காஞ்சி சங்கராச்சாரியாரோ, கல்கியோ, ஆனந்த விகடனோ, காமகோடி இதழோ எழுதியது கிடையாதே!

    விடுதலை எழுதுகிறது என்றவுடன், தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சிக்கிறார்கள் அவ்வளவுதான்! அதிலாவது சரக்கு இருக்கிறதா என்றால், அதுதான் இல்லை.

    பிரம்மதேவனுக்கு முதன்முதலில் வேதம் கிட்டியது அல்லது உபதேசம் ஆகியது அந்த நாள்தான் இந்த ஆவணி அவிட்டமாம். பிரம்மதேவனுக்கு முதன்முதலில் வேதம் கிட்டியது என்றால் எப்படி கிட்டியது? யாரால் கிட்டியது? உபதேசம் கிடைத்தது என்றால், யாரால் அந்த உபதேசம் கிட்டியது என்று ஆதாரத்தோடு கூறவேண் டாமா?

    அப்படியெல்லாம் கேட்டால், தயாராக ஒன்று வைத்துள்ளனர்…. என்பது நம்பிக்கை; என்பது அய்தீகம் என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள்.

    இன்னொன்றையும் துக்ளக் குறிப்பிடுகிறது.

    இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்துவிடக் கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்திரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ஆவணி அவிட்டம் என்கிற உபாகர்மாவைச் செய்யவேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதிவிடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருதவேண்டும் என்று கூறி மங்களம் பாடி முடித்துக் கொண்டுவிட்டது.

    இந்தப் பூணூலைத் தரிப்பதில்கூட இந்த மூன்று வர்ணத்தாருக்கும் வேறுபாடு காட்டப்பட்டுள்ளதே அது ஏன்?

    பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயி ராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் 2; சுலோகம் 44) என்று வேறுபாடு காட்டப்படுவதும், பெரும்பாலான மக் களான சூத்திரர்கள் பூணூல் தரித்தால், அவன் அங்கங் களை அரசன் வெட்டிவிடவேண்டும் என்றும் (மனு அத்தியாயம் 9; சுலோகம் 224) கூறப்பட்டுள்ளதே இதற்கு என்ன சமாதானம்?

    பிறப்பால் பிராமணன் கிடையாது குணத்தால் பிராமணன் என்று துக்ளக்கில் திருவாளர் சோ ராமசாமி எழுதி வந்தது என்னாயிற்று?

    பூணூல் அணிந்த பிறகுதான் பிராமணன் துவிஜாதி இரு பிறப்பாளன் என்று கூறப்படுகிற வைதீகம் என்னாயிற்று?

    தொடக்கத்தில் கோவணம் கட்டிக் கொள்ளப் பயன்படும் அரைஞாண் கயிறாக இருந்ததுதான் பின்னர் பூணூலாகி விட்டது என்று விவேகானந்தர் கூறியுள்ளதற்கு என்ன பதில்?

    வேதம் சூத்திரர்களுக்குக் கிடையாது அதனால் பூணூல் தரிக்கக் கூடாது என்று சாமர்த்தியமாகக் கூறுவார்களேயானால், பெரும்பான்மையான இந்த மக்கள் வேதம் படிக்கக் கூடாது என்றால், அந்த மக்கள் இந்து மதத் திலேயேதான் இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க் கிறார்கள் வேறு மதங்களுக்குச் சென்று அந்த மதங்களில் வேத நூலைப் படிக்க வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டும்போது, அய்யயோ மத மாற்றம்! மத மாற்றம்! என்று கூப்பாடு போடுவானேன்? மரியாதையாக துக்ளக் அடுத்த இதழில் பதில் சொல்லட்டும்!

  4. ஆர்யத்தமிழன் Says:

    வேதத்தில் பூணூல் பற்றிய குறிப்புகள் உள்ளது அதை நான் ஆதாரங்களுடன் எழுதினால் அவர்கள் தி.க. காரர்கள் பூணல் போட்டுக்கொள்வார்களா?

  5. ஸ்ரீகாந்த் நைத்ருபகாஸ்யபா. Says:

    இந்த பதிவே ஆதாரமற்றது.
    வேதங்களில் யக்ஞோபவீதம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
    மிக ப்ராசீனமான ஆஸ்வலாயன, ஆபஸ்தம்ப ஸுத்ரங்கள் இதை தெளிவாக தெரிவிக்கின்றன.
    மேலும் ஸூத்ரங்கள் ஆண்பெண் இருபாலாருக்கும் மற்றும் ஜாதி பேகமின்றி இதை கட்டாயமாக்கியுள்ளன.

  6. ஆர்யத்தமிழன் Says:

    இப்போது நம்முன் உள்ள இரு கேள்வி விவேகானந்தர் அவ்வாறு சொல்லியுள்ளாரா? அப்படியெனில் விவேகானந்தர் வாதம் தவறு . பகுத்தறியாமல் இதை பதிவு செய்த பகுத்தறிவு வாதிகள் முட்டாள்கள் . விவேகாந்தார் அவ்வாறு சொல்லவில்லை எனில் திகவினரின் பொய்மூட்டை அம்பலம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: