ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்துக் கொள்ளை!

ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்துக் கொள்ளை!

ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்துக் கொள்ளை![1]: இதுவரைக்கும் ராஜராஜனைப் பற்றி எந்த தமிழனுக்கும், குறிப்பாக திராவிடம், திராவிட சித்தாந்தம் பேசும் பகுத்தறிவாளனுக்கு, அக்கரையிருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இன்று திடீரென்று ராஜராஜன் பெயரில் ஏகப்பட்ட கூத்துகள், ஆட்டங்கள், கொண்டாட்டங்கள்! லட்சங்களை செலவு செய்து, தங்கள் பெயரும் அதில் வராதா என்ற ரீதியில் விளம்பரங்கள். இதில் கருணாநிதி குடும்பத்தினரின் தொல்லையான கொண்டாட்டங்கள் தாங்க முடியவில்லை.

செம்மை நெல்லுக்கு செம்மை, “ராஜராஜன் 1000”: நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், “ராஜராஜன் 1000′ என்று பெயரிடுகிறேன். என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஏதோ இவர் பெயர் வைத்துதான் ஆகப்போகிறது என்பது போல இருக்கிறது, அகம்பாவம், ஆணவம்! உருப்படியாக, உண்மையாக தான் என்ன செய்திருக்கிறார் என்று யோசித்துப் பார்ர்க்கவேண்டும்.

பிச்சையை அள்ள வந்த பெருமாள்: தஞ்சை பெரியகோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “ராஜராஜனுக்கு நாம் பெருமை சேர்க்கவில்லை. நமக்குத்தான் ராஜராஜன் புகழை பிச்சையாக வழங்கியுள்ளான். அப்படிப்பட்ட பெருமைக்குரிய மன்னாதி மன்னன் ராஜராஜன். உள்ளூர் ஆட்சி முறை, கலை, சமயம், இலக்கியம் என பல்வேறு துறைகளில், பிற்காலங்களில் மீண்டும் அடைய முடியாத மேன்மையை அப்போதே தமிழகம் பெற்றது[2]. சோழர்களுடைய பாரம்பரியம் கி.மு., – கி.பி., என்று பகுத்து பார்க்கும் போது, 176 ஆண்டு ஒரு சேர சோழப் பேரரசு தென்னகத்தில் இருந்தது, நிலைத்து வாழ்ந்தது. அப்போது, தஞ்சை, சோழப்பேரரசின் தலைநகராக இருந்தது. சோழ சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்தில், குறிப்பாக ராஜராஜன் நிர்வாகம் அனைத்து மன்னர்களுக்கும் உதாரணமாக விளங்கியது[3]. ராஜராஜன் திரட்டிய நிதி எப்படியெல்லாம் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிட முடியாது. மக்களின் நலவாழ்வுக்கு, நாட்டை காப்பாற்ற, வசூலிக்கப்பட்ட வரிப்பணம் செலவிடப்பட்டது.

உலகளந்த போரும், வரி வசூலும்: வரியை வசூலித்து, மக்களுடைய பணத்தை திரட்டி இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் அரசு, ஒவ்வொருவர் தலையிலும் இவ்வளவு கடனை சுமத்தியிருக்கிறது என்று பேசுகின்றனர். அப்படி மக்கள் தலையில் கடனை சுமத்தும் எந்த அரசும் இந்தியாவில் இல்லை. அப்படிப்பட்ட அரசும் தமிழக அரசு இல்லை. நாம் வாங்கும் கடன்களை மக்கள் தொகையால் வகுத்து புத்திசாலி அரசியல்வாதிகள், தலைக்கு இவ்வளவு கடன் என்று சொல்கின்றனர். நாம் வாங்கும் கடன்கள், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதம் வரை இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் காலத்தில் நிலங்களை அளக்க போர் உருவாக்கப்பட்டது. அதற்கு உலகளந்த போர் என்று பெயர். ராஜராஜன் காலத்தில் நிலங்களை அளக்க ஒரு முறை கையாளப்பட்டிருந்தது. இதற்கென பயன்படுத்தப்பட்ட ஒரு கோலுக்கு உலகளந்தான் கோல் என்று பெயர். நிலங்களை நிலம், கொல்லை, காடு எனப் பிரித்து, அக்காலத்திலேயே அளவீடுகள் செய்யப்பட்டன[4]. ராஜராஜன் சைவன் என்றாலும் சமணத்தையோ, பவுத்தத்தையோ வெறுத்தவன் அல்ல[5].

யோக்கியதை இல்லாதவகள் ராஜராஜ ஆட்சிமுறையைப் பற்றி பேசுவது: ராஜராஜன் காலத்தில் ஊராட்சித் தலைவர்களாக, கால்வேலி சொந்த நிலம் இருக்க வேண்டும்[6]. படித்தவனாகவும், எதையும் மற்றவர்களுக்கு புரிய வைக்கும் தன்மை உள்ளவனாகவும், எண்ணத்திலும், செயலிலும் தூய்மை உடையவனாகவும், 30 வயதுக்கு மேற்பட்டவனாகவும், ஒழுக்கம் மிகுந்தவனாகவும், குற்றமில்லாதவனாகவும் இருக்க வேண்டும். கள்ளக் கையெழுத்து போட்டோர், லஞ்சம் வாங்கியவர், அபராதம் செலுத்தியவர் போட்டியிட முடியாது என்பது, ராஜராஜன் காலத்தில் விதிமுறைகளாக இருந்தது. இப்போது போட்ட கையெழுத்தையே சிலர் இல்லை என்று கூறுகின்றனர்[7]. ராஜராஜன் காலத்தில் குடவோலை முறையில் உள்ளூர் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழன் நிர்வாகத்திறமை, கவிதைத்தன்மை, வீரத்தின் விளை நிலமாக இருப்பான். ராஜராஜன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத பகுதிகள் இல்லை. அவனைக்கண்டு அஞ்சாதவர்கள் இல்லை. பல போர்களில் தந்தைக்கு துணையாக நின்று வெற்றிகளை குவித்தான் ராஜேந்திரன். ராஜராஜன் பெயர் இந்த கோவிலில் ஆயிரம் ஆண்டு நிலைத்து, ஆயிரமாவது ஆண்டை நாம் கொண்டாடும் நேரத்தில், அடுத்த ஆயிரமாவது விழா நடத்தும் போது நாம் இருக்கப்போவதும் இல்லை.

நம்மை யாரும் மறக்கப்போவதுமில்லை!: இரண்டாயிரமாவது ஆண்டு விழா நடக்கும் போது, நம்மை யாரும் மறக்கப்போவதுமில்லை. பெரியகோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் வேளையில், தஞ்சை நகரின் வளர்ச்சிக்கு தமிழக அரசின் சார்பில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிர, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், சாலை வசதி மேம்படுத்தப்படுகிறது. தஞ்சை அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு என்று தனியாக பிரிவு ஏற்படுத்தப்படும்.தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதிபோல், மத்திய அரசும் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மத்திய திட்ட மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நிதியில்லாமலேயே நிதியின் பெயரில் தானம், தம்பட்டம்: அந்த நிதி இன்னும் வந்துசேரவில்லை. அதை சேர வைக்கும் வேலையை அவரே செய்ய வேண்டும். ஏற்கனவே, தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நல்ல உற்பத்தித் திறன் கொண்டது. எனவே, செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், “ராஜராஜன் 1000′ என்று பெயரிடுகிறேன். இது, தமிழக மக்கள் எப்போதும் ராஜராஜனை நினைத்துக் கொண்டிருக்க உதவும். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப சோழர்கால வரலாற்று கண்காட்சி மேலும் ஒருவார காலம் வரை நீடிக்கப்படுகிறது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

கருணாநிதி-ஸ்டாலின் மற்றும் ராஜராஜன்-ராஜேந்திரன்: ராஜராஜ சோழன் கட்டிய சுவரை உடைத்துத் ததருடன் போல பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து, அரசு பணத்தில் விழா எடுத்து, ……இப்படி ஒன்றுமே சொந்தத்தில் இல்லாது ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்துக் கொள்ளையடிக்குக் யுக்தி / வித்தை, இந்த திராவிட மந்திரவாதிக்குத்தான் தெரியும் போல!

1. “ராஜராஜன் திரட்டிய நிதி எப்படியெல்லாம் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிட முடியாது. மக்களின் நலவாழ்வுக்கு, நாட்டை காப்பாற்ற, வசூலிக்கப்பட்ட வரிப்பணம் செலவிடப்பட்டது”, என்று சொல்லி தான் எப்படி அரசு பணத்தை விரயமடித்தார் என்கிறார்.

2. “நாம் வாங்கும் கடன்கள், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதம் வரை இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது” – அதாவது, அதேபோல கொள்ளயடிப்பேன், மக்கள்தானே பிறகு கட்டவேண்டும்!

3. “பல போர்களில் தந்தைக்கு துணையாக நின்று வெற்றிகளை குவித்தான் ராஜேந்திரன்” – ஸ்டாலின் அதே போல உதவினாராம்! சொல்லாவா வேண்டும், துரைமுருகன் அதை சொல்லியே விட்டார்[8].

4. குடவோலை முறையை குடும்பவோலை முறையாக மாற்றி பேசியது படு கேவலமாக இருந்தது[9].

5. நாணயமில்லாது நாணயக் கொள்ளையடித்து, ராஜராஜன் பெயரில் நாணய வெளியீடு.

6. கோடிகளில் ஊழல் செய்த ஸ்பெக்டரம் ராஜாவை வைத்துக் கொண்டு, ராஜராஜனின் “தபால் தலை” வெளியிடுவது, ராஜராஜனையே கேவலப்படுத்துவது போல இருந்தது.


[1]தினமலர், செம்மை நெல்லுக்கு ராஜராஜன் 1000 : முதல்வர் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010,23:46 IST;மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 27,2010,00:32 IST,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=93554

[2] ஆக உண்மையை ஒப்புக்கொள்கிறார்!

[3] இப்பொழுதுள்ள திராவிட கழகக்கட்சிகளின் ஆட்சி, ஊழல் மிகுந்து, மக்களை சுரண்டும் கொள்ளையாட்சியாக உள்ளது.

[4] http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=309323&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

[5] தினமலரில், இன்னுமொரு கமென்ட்: paramarasenthiran – chennai,இந்தியா  2010-09-27 03:56:31 IST : “ராஜராஜன் சைவன் என்றாலும் சமணத்தையோ, பவுத்தத்தையோ வெறுத்தவன் அல்ல. அனால் நான் நாத்திகன் என்ற போர்வையில் இஸ்லாத்திற்கும் கிருத்துவ சமயங்களுக்கு கொடுக்கும் மரியாதையை சைவ , வைணவ சமயத்துக்கு கொடுக்க மாட்டேன். பகுத்தறிவு பேசும் போதும் ராசராசன் வாயில் வழியே கோயில் உள்ளே செல்லமாட்டேன். என்னே பகுத்தறிவு ? …எல்லாம் சரி இவருக்கு (நாத்திகர் ) கோயிலில் என்ன வேலை ?… …”

[6] ஆனால், இப்பொழுதோ, பதவிக்கு வந்த பிறகு, நிலத்தைக் கொள்ளஒயடித்துச் சேர்த்துக் கொள்கின்றனர். குறிப்பாக கோவில் நிலம் கொள்ளையென்றால், அல்வா சாப்பிடுவது போல இந்த திராவிட-நாத்திகக் கொள்ளையருக்கு!

[7] தினமலரில், “Ancient vs Modern – சென்னை, இந்தியா” என்பவரின் கமென்ட்: “……………இன்றைய மன்னர் ஆட்சியில் கொலைசெய்பவர்கள் கொள்ளைஅடிப்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், ஒழுக்கம் இல்லாமல் பல தாரம் கண்டவர்கள், படிக்காதவர்கள், எதையும் மற்றவர்களுக்கு புரிய வைக்கும் தன்மைஇல்லாதவர்கள், ஜாதி வெறியர்கள், மரவெட்டிகள், பகுத்தறிவு என்று சொல்லி ஊரை ஏமாற்றும் பச்சோந்திகள் மட்டுமே போட்டியிட முடியும் என்பது விதிமுறைகளாக இருக்கிறது…………”!

[8] http://www.dailythanthi.com/article.asp?NewsID=596788&disdate=9/27/2010

[9] http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=16411&id1=4

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: