பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (1)

பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (1)

கபட நாடகம் ஆடும் திராவிட சித்தாந்திகள், மற்றவர்கள்: திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள், சாதியில்லை என்று உரைப்பவர்கள், இரட்டைவேடம், இரட்டைப் பேச்சு, இரட்டை நாடகம் போடுவதால் தான் பிரச்சினையே வருகிறது. கோவிலை இடித்துக் கொண்டு, சிலைகளை திருடிக்கொண்டு, கோவில் நிலங்களை அபகரித்துக் கொண்டு ……………………இத்தகைய ஆத்திக-விரோத, இந்து-விரோத காரியங்களை செய்து வருவதால் தான், அவர்கள் சட்டரீதியாக பல பிரிவுகளை அவமதிக்கிறார்கள், மீறுகிறார்கள். சொல்லப்போனால், பல சட்டங்களை மதிப்பதேயில்லை. மேலும், இந்துக்கள் அல்லாத கிருத்துவர்-முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டும் அத்தகைய காரியங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில்தான், இவர்கள் “அனைவரும் அர்ச்சகராகலாம்” என்ற அரசியலில் இறங்கினர். ஆகம சாத்திர முறைகளைக் கொஞ்சம் கூட மதிக்காமல், அவசர-அவசரமாக மாநில அளவில் சட்டத்தை இயற்றி பிரச்சினையை கிளப்பினார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், சட்டரீதியாக அவர்கள் செய்வது வெறும் அரசியல்தான் என்பது.

கடவுளே இல்லை எனும்போது குல்லா போட்டு கஞ்சி குடிப்பதேன், இந்துக்களை தூஷிப்பதேன்: இதற்கு எந்த பகுத்தறிவுவாதியும் பதில் சொல்ல மாட்டான். குல்லா போடாமல் கஞ்சி குடித்தால் அல்லா ஏற்றுக் கொள்ள மாட்டாரா? “உதயம் முதல் அஸ்தமனம் வரை” என்ற நோன்பை கடைப்பிடிக்காமல், இப்படி போலிகளை, வைத்துக் கொண்டு இஃபதர் விழா கொண்டாடுவதை அல்லா ஏற்றுக் கொள்வாரா?  ஆக இந்த போலித்தனத்தை, ஏமாற்றுவேலையை இவர்கள் முதலில் நிறுத்தவேண்டும். மத சடங்குகள், சம்பிரதாயங்கள், ………உள்ளன என்றால் அதை அந்தந்த நம்பிக்கையாளர் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதை மற்ற நம்பிக்கையாளர் அல்லது நம்பிக்கயில்லாதவர்கள் கேட்க முடியாது. நாத்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட பல சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்துதான் வருகிறார்கள்.

நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி,  பணி,  வழக்குகள்! இதை நான் ஏற்கெனெவே, “நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி, பணி, வழக்குகள்!” என்ற பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்[1]. திருப்பதிதிருமலை தேவஸ்தானம், பல ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி முதலிய எல்லொருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்து பூசாரிகள் ஆக்கி வருகிறது. அங்கு எந்தபிரச்சினையும் இல்லை. ஆனால், தமிழகத்தில், தேவையில்லாமல் நாத்திக ஆட்சியாளர்கள் தலையிட்டுக் குழப்பி வருகிறார்கள். போதாகுறைக்கு கிருத்துவர்கள், முஸ்லீம்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற கடவுள் நம்பிக்கையில்லாத கோஷ்டிகள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்துவிரோத கயவர் பட்டாளங்கள், இதில் நுழைந்து கெடுக்கப் பார்க்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், “சான்றிதழ்பெற்றுவிட்டேன் என்ற போர்வையில், அத்தகைய இந்துவிரோதிகளும் உள்ளே நுழையப் பார்க்கின்றனர். இதனால்தான், மற்றவர்கள் எதிர்க்கின்றனர்.

 

சட்டவிரோதமாக படிக்கும் எந்த படிப்பும் செல்லுபடி ஆவதில்லை: “அர்ச்சகர்” படிப்பு இல்லை, மருத்துவர் படிப்பே, அங்கீகாரம் இல்லையென்றால், படிப்பது இல்லை, அல்லது படித்ததும் வீணாகிறது. அந்நிலை தான் இங்குள்ளது. சட்டவிரோதமாக நாத்திக அரசு அமூல் படுத்தி விளம்பரம் தேடியுள்ளது. இதனால், மற்றது போல 3.5% இட-ஒதுக்கீடு செய்தோம் என்றுதான் பேச நன்றாக இருக்குமே தவிர ஏன் கிருத்துவர்கள் மறுத்தார்கள், முஸ்லீம்கள் எதிர்த்தார்கள் என்றெல்லாம் நினைக்கப்போவதில்லை. எனவே, “அர்ச்சகர்” படிப்பு படித்து வேலையில்லாமல் இருக்கிறோம் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இதற்கு பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா?

 

M. B. B. S  படித்தவர்கள் டாக்டராகி விடுகிறார்களா? அதே போல B.E படித்தவர்கள் இஞ்சினியர், B.L படித்தவர்கள் வக்கீல் ஆவதில்லை. இதுதான் நிதர்சனம், உண்மையான நிலைமை. “இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை விட்டுவிட்டு வந்தவர்கள் எனப் பல வகையினர் உண்டு”, என்று வாதிடுவது பெருமையாகவோ அல்லது அவர்களது திறமையினை காட்டுவதாகவோ இல்லை. அந்தபடிப்பில் இல்லாதது “அர்ச்சகர்” படிப்பில் வரும் என்ற நோக்கத்தில் வந்ததாக தெரியவில்லை. இதே ;போலத்தான் “டாஸ்மாக்” வேலைக்கும் வந்துள்ளார்கள். பிறகு, ஒழுக்கத்தில் எல்லோருமே ஒன்றாகி விடுவார்களா? “எங்கள் ஒழுக்கத்தைச் சோதித்து, சைவ, வைணவ பெரியோர்கள் தீட்சை வழங்கி இருக்கிறார்கள்’ என்றெல்லாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. “டாஸ்மாக்” வேலைக்கும் அவ்வாறு சைவ, வைணவ பெரியோர்கள் இல்லை, மற்றவர்கள் தீட்சை வழங்குவார்களா?

“டாஸ்மாக்” வேலைக்கு என்ன  படிப்பு வேண்டும்? “டாஸ்மாக்” வேலைக்கு இது மாதிரி படிப்பு உள்ளதா, பயிற்சி கொடுத்து “சான்றிதழ்” வழங்குகிறார்களா? “இவன் நன்றாக ஊற்றிக் கொடுக்கிறான், மது, குடி, போதை பற்றியெல்லாம் நன்றாக தெரியும், பற்பல குடிகாரர்களுக்கு ஊற்றிக் கொடுத்த அனுபம் உண்டு…………”, என்றெல்லாம் யாராவது பெருமையாக சொல்ல்லிக் கொள்வார்களா? “டாஸ்மாக்” வேலை ஏன் எல்லோருக்கும் கிடைப்பதில்லை, அதன் மர்மம் அல்லது தீட்டு பற்றி என் யாரும் கேட்பதில்லை? ஆக, இந்த விஷயங்களையெல்லாம் யோசிக்கவேண்டும்.

 

வேதபிரகாஷ்

24-10-2010


[1] வேதபிரகாஷ், நாத்திகஅரசியல்மயமாக்கப்பட்டஅர்ச்சகர்கல்வி, பணி, வழக்குகள்!, http://atheismtemples.wordpress.com/2010/05/13/118/

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (1)”

 1. S. Ramananathan. Says:

  As long as existing “established” law is there, a small group cannot question the law.

  In the case of reservation, though, it is for 10 years, it has been continuing and no leader, politician or ideologist could even suggest that such provision should be scrapped or stopped.

  During 1969-70, the Dravidian ideologists tried to legalize the so-called self-respect marriages, but could be accommodated only under “The Hindu Marriage Act”

  Even the caste iconolasts finally settle with caste reservation under the guise of class.

 2. M. Nachiappan Says:

  The meddling of the HR&CE by the atheist government has been only to dilute the Act, so that the temples could be looted legally and the money siphoned out.

  Now, surreptitiously, they have brought Amendments to the Tamil Nadu Hindu Religious Institutions (Officers and Servants) Service Rules, 1964
  [G.O. Ms. No. 255, Tamil Development, Religious Endowments and Information (RE4-2), 28th June 2010, Aani 14, Thiruvalluvar Aandu 2041.] vide No. SRO B-45(a)/2010.

  It starts with,”In exercise of the powers conferred by clause (xxiii) of sub-section (2) of section 116 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959 (Tamil Nadu Act 22 of 1959), the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Tamil Nadu Hindu Religious Institutions (Officers and Servants) Service
  Rules, 1964:-……………”

  I have gone through it, but nowhere, it is mentioned that the employee / worker etc., should be a Hindu. Therefore, it is evident that the amendment has been only counter certain provisions that have been hindrance to their interests.

  It is not known how such amendments are introduced, carried on without informing the general public, particularly, the Hindus, who have been visiting the temples for various religious purposes.

  Do not they have any rights about the persons, who are getting employed there in temples and temple administration?

 3. vedaprakash Says:

  பார்ப்பனத் திமிர்!
  தலையங்கம்,விடுதலை, 30-10-2010
  http://www.viduthalai.periyar.org.in/20101030/news09.html
  http://www.viduthalai.periyar.org.in/20101030/Page02.html

  அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்காகத் தந்தை பெரியார் குரல் கொடுத்தார்; அதற்காகவே களம் கண்டார்; தந்தை பெரியார் அவர்களின் உரிமைக் குரலுக்கு மதிப்பளித்து முதல்வர் கலைஞர் இருமுறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமும், தீர்மானமும் நிறைவேற்றியதுண்டு.

  12 பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று அந்தச் சட்டத்தை முடக்கிவிட்டனர். காஞ்சி சங்கராச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) முதலியோர் இதன் பின்னணியில் இருந்தனர்.

  2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அய்ந் தாவது முறையாகப் பதவியேற்ற கலைஞர் அவர்கள் தேர் தலுக்கு முன்னதாக திராவிடர் கழகத்தின் நிபந்தனைக்கு மதிப்புக் கொடுத்தபடி, அமைச்சரவையின் முதல் கூட்டத் தில் முதல் தீர்மானமாக இதுகுறித்துத் தீர்மானம் நிறை வேற்றி, மீண்டும் சட்டப்பேரவையில் மசோதா புதுப்பிக்கப் பட்டது (22.8.2006).

  69 விழுக்காடு இட ஒதுக்கீடுப்படி அர்ச்சகர் பயிற்சிக்கு விளம்பரம் செய்யப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழனி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில், வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முட்டுக்கட்டை போட்டுள்ளனர். மதுரை அர்ச்சகர்களும், பட்டர்களும் இதில் ஈடுபட்டனர்.

  வழக்கு உச்சநீதிமன்றத்தின் கிடப்பில் கிடக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கை விரைவுபடுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக வந்தார்; இதில் கருத்தூன்றுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. வழக்கை ஒத்தி வைப்பதில்தான் மிகக் கவனமாக இருந்தார் என்பது வேதனைக்கு உரியதாகும்.

  பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண் டுள்ளனர். திராவிடர் கழகம் இதுகுறித்து அரசின் கவனத் துக்கும், உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லும் வகையில் மாநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றியது.

  இதற்கிடையில், திருவண்ணாமலையில் ஒரு நிகழ்வு – தமிழர்களைத் திடுக்கிட வைக்கக் கூடியதாகும். இவ் வாண்டு தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாளன்று, அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் திரு. அரங்க நாதன் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

  பார்ப்பனர்கள் பரபரப்பு அடைந்தனர். பெரியார் சிலைக்கு மாலையா? அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களா? இதனை எப்படி அனுமதிப்பது என்று ஆத்திரம் கொண் டனர். இந்து முன்னணிக்காரர்களைக் கிளப்பி விட்டனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்த – அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதவரான அரங்கநாதனை இந்து முன்னணியினர் தாக்கியுள்ளனர். காவல் நிலை யத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சரியான நடவடிக்கை இல்லை என்ற மனக்குறை தோழர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

  இதே திருவண்ணாமலையில், அர்ச்சகர் பயிற்சி கொடுத்த ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார் என்பது நினைவூட்டத்தக்கதாகும்.

  இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று குரல் கொடுக்கும் இந்து முன்னணி வகையறாக்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற இன்னொரு இந்துவைத் தாக்குகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

  இந்து மதம் என்றால், அது பார்ப்பனர்களின் ஆதிக்கத் திற்கும், உயர்ஜாதித் தன்மையைக் காப்பதற்கு மட்டுமே உள்ளது. மற்றவர்கள் அவர்களுக்கு அடிமையாகக்கிடக்க வேண்டியவர்கள் என்ற இறுமாப்பும், எண்ணமும்தான் பார்ப்பனர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதுதானே இதன் பொருள்?

  அர்ச்சகர் பயிற்சி பெற்ற தமிழர்களைத் தாக்குகிற அளவுக்குப் பார்ப்பனர்கள் வந்துள்ளனர் என்றால், பதிலுக்குப் பதில் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தால் பார்ப்பனர்களின் கதி என்ன என்று சிந்திக்கவேண்டாமா? தந்தை பெரியார் மறைந்திருக்கலாம்; ஆனாலும், அவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் தமிழர்களைத் தாக்கு கிறார்கள் என்றால், பெரியார் ஒவ்வொரு நொடியும் பார்ப் பனர்களால் சீரணிக்கப்பட முடியாதவராகவே இருக்கிறார் என்பதுதான் முக்கியம் ஆகும்.

  இவ்வளவுக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் நாத்தி கர்களா? கடவுள் மறுப்பாளர்களா? இல்லையே – ஆன்மிக வாதிகள்தானே! பக்தியில் மூழ்கியிருக்கும் பார்ப்பனர் அல்லாதார் – தமிழர்கள் இதுகுறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டாமா?

  தேவநாதன் போன்ற பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர் களாக இருக்க உரிமை படைத்தவர்களா? காமக் களி யாட்டப் புகழ் ஜெயேந்திரர்கள்தான் கர்ப்பக் கிரகம் வரை உள்ளே செல்லத் தகுதி படைத்தவர்களா?

  கோயிலுக்குள் இருக்கும் மூலக் கடவுள்கள் திருடு போவதற்குக் கோயில் அர்ச்சகர்களே உடந்தை என்று எத்தனை எத்தனை செய்திகள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன.

  இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதார் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய் தால் சாமி தீட்டுப்பட்டுவிடும். சம்ப்ரோட்சணம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால், இதனை இன்னும் எத்தனைக் காலத்துக்கு அனுமதிப்பது?

  பக்தித் தமிழனாக இருந்தாலும் சரி, பகுத்தறிவுத் தமிழனாக இருந்தாலும் சரி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடலைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  பார்ப்பான் பால் படியாதீர்!

  சொற்குக்கீழ்ப் படியாதீர்!

  உம்மை ஏய்க்கப் பார்ப்பான்

  …… ……….. ………….

  பார்ப்பானின் கையை – எதிர்

  பார்ப்பானையே பார்ப்பான்

  தின்னப் பார்ப்பான்

  தமிழர்கடன் பார்ப்பானைத்

  தரைமட்டம் ஆக்குவதே

  என்றுணர்வீர்!

 4. M. M. Enathi Reddy Says:

  Note, what has been happening in Tamilnadu ruled by the atheist and anti-Hindu Karunanidhi. Incidentally, he has been in charge of the portfolio – the Police!

  School children are raped, kidnapped, ransom demanded…………………

  During the last five years, the child molestation, rape, kidnap and other have been more than a thousand as per the newspapers reports. The real figures have to be provided by the Police.

  However, the Police, NGOs and others have not noted the modus operandi, pattern and scheme in these incidences.

  They cannot be treated as stray incidences, just aiming for money.

  Had money been the single motive, then, there should not have been molestation of girls, rape, etc.

  Why only one particular group, community has been targeted has not been studied by the authorities.

  Thus, the “Archaka” issue has has a grand design behind it.

  That is why all anti-Indians, anti-Hindu and other non-Hindu groups have been involved in such demonstrations, legal battles etc.

  The same advocates have been helping and appearing for the child molesters, rapists, ransom holders, criminals etc.

  They may join the funeral procession and all, but they help only the rapists and not others!

 5. இந்து-விரோதிகள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் முதலியோர் “அனைவரும் அர்ச்சகர்” என Says:

  […] [16] https://dravidianatheism.wordpress.com/2010/10/24/can-one-get-archaka-posting-by-garlanding-periyar-i… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: