பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (2)

பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (2)

திருப்பதி-திருமலை தேவஸ்தானம், பல ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி முதலிய எல்லொருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்து பூசாரிகள் ஆக்கி வருகிறது. அங்கு எந்தபிரச்சினையும் இல்லை. ஆனால், தமிழகத்தில், தேவையில்லாமல் நாத்திக ஆட்சியாளர்கள் தலையிட்டுக் குழப்பி வருகிறார்கள். போதாகுறைக்கு கிருத்துவர்கள், முஸ்லீம்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற கடவுள் நம்பிக்கையில்லாத கோஷ்டிகள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்து-விரோத கயவர் பட்டாளங்கள், இதில் நுழைந்து கெடுக்கப் பார்க்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், “சான்றிதழ்” பெற்றுவிட்டேன் என்ற போர்வையில், அத்தகைய இந்து-விரோதிகளும் உள்ளே நுழையப் பார்க்கின்றனர். இதனால்தான், மற்றவர்கள் எதிர்க்கின்றனர்[1].

முதலில் “ஆனந்தவிகடனில்” வந்தது (06-10-2010) என்று, “விடுதலை” 22-10-2010 அன்று வெளியிட்டது[2]. பிறகு இணைத்தளங்களில் தேடிப்பார்த்தபோது, இதை எடுத்து தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிகிறது[3]. இதில் பல உண்மைகளை மறைத்து சித்தாந்த ரீதியில் பிரச்சார பீரங்கிகளை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் போக்குதான் காணப்படுகிறது[4]. சட்டரீதியாக என்ன பிரச்சினை என்பதை ஆராயாமல், ஏதோ உணர்ச்சிப் பூர்வமாக சித்தாந்தங்களை வாரியிரைத்து பூசிமெழுகப் பார்க்கிறார்கள். இங்கு குறிப்பாக கீழ்காணும் பத்தி எனது கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் அதில் பல பொய்கள் இருந்தது தான்.

அர்ச்சகர் மாணவர்களுக்கான சங்கத்தை உருவாக்கிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜுவிடம் இன்னமும் ஆவேசம். வழக்கு போட்டுள்ள பிராமணர்கள், தீர்ப்புக் கொடுத்த நீதிமன்றம் எல்லோரும் ஆகம விதி… ஆகம விதி என்கிறார்கள். அது என்ன ஆகமம்? வைணவத்தில் 2, சைவத்தில் 28 என 30 ஆகமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்து மதத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படும் இந்த ஆகமங்களைப் பெரும்பான்மையான இந்துக்கள் கண்ணால் பார்த்ததே கிடையாது. இவற்றை எழுதியது யார், அச்சிட்டவர்கள் யார், எங்கு விற்கப்படுகின்றன? எதுவும் தெரியாது. ஆனாலும், அதன் பெயரால்தான் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. கேட்டால், எல்லோரும் இந்து என்கிறார்கள். அப்படியானால், வா, ரெண்டு பேரும் சேர்ந்து சுடலைமாடன் கோயிலில் ஒற்றுமையா சாமி கும்பிடுவோம். இல்லையா, பெருமாள் கோயிலில் சேர்ந்து பூஜை பண்ணுவோம். இரண்டுமே முடியாது. ஆனால், நீயும் நானும் இந்து என்றால், இது மோசடி இல்லையா?

அர்ச்சகர் மாணவர்களுக்கான சங்கம், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், வழக்கறிஞர் ராஜு[5], ரெங்கநாதன்,……………..இவர்கள் எல்லோரும் யார்-யார் எனபார்த்தால், ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், அவர் சொன்னதாக உள்ளதிலிருந்தே, அதிலுள்ள ஒளிந்துள்ள சித்தாந்திகளின் சதிவேலை தெரிகிறது. உண்மைகளை மறைத்து பொய்யான பிரச்சாரம் நடப்பதும் தெரிகிறது[6]. ஏனெனில் சட்டம் தெரிந்த, நீதிமன்றத்தில் அனுபம் உள்ள அல்லது தீர்ப்புகளை படித்து வரும் வக்கீல், அல்லது அத்கைய பழக்கமுள்ள ஒரு சாதாரணமான மனிதன் கூட இவ்வாறு பேச மாட்டான், எழுத மாட்டான். ஆனால், அவ்வாறுள்ளதால், தெரிந்து கொண்டே தெரியாதது மாதிரி நடித்துள்ள போக்கும் காணப்படுகிறது! இனி அவரது “குற்றச்சாட்டுகளை / வாதங்களை” அலசுவோம்:

1.     வழக்கு போட்டுள்ள பிராமணர்கள்: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைப் பார்க்கும் போது, அதிகமான வழக்குகளைப் போட்டுள்ளது சைவப் பிள்ளைமார்கள், வேளாளர்கள் தாம் அதாவது, பிராமணர்கள் அல்லாதவர்கள்[7]. இதிலிருந்தே மற்றவர்களின் தன்னிலை விளக்கங்களைக் கூட படித்திருக்கவில்லை (Affidavit / counter-affidavit) என்று நன்றாகவே தெரிகிறது. மேலும், நாத்திக அரசு ஊக்குவித்து சில கூட்டங்களும் “ஆத்திக” போர்வையில் (ஐந்தாம் படை, எட்டப்பன், விபீஷண ஆழ்வார்கள் முதலியோர்) வழக்குகள் போட்டுள்ளன[8]. ஆக இதில் யாருக்கு “சமாசாரத்தில்” ஆசை அதிகமாக இருக்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். ஆக, இதில் “வழக்கு போட்ட பிராமணர்கள்” எங்கே என்று தெரியவில்லை. உண்மையில், ஸ்ரீரங்கத்தில் அர்ச்சகர் பயிற்சி ஆரம்பித்து வைத்ததே ஸ்ரீ ரங்கநாத ஜீயர்[9] என்பவர் தாம்[10]!

2.     தீர்ப்புக் கொடுத்த நீதிமன்றம்: நீதிமன்றங்கள் உள்ள சட்டம், எற்படுத்தப் பட்டுள்ள நீதி (established law) என்றமுறையில் தான் தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. எந்த ஒரு கத்துக்குட்டி வக்கீலும் இதை அறிய வேண்டும். இல்லையென்றால் “சீனியரிடம்” கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அதுவும் இல்லையென்றால், சட்டப்புத்தகங்கள், தொடர்ந்து வரும், சஞ்சிகைகளை (Law Journals) மற்றும் வழக்குக்களை(Case laws)ப் படித்தறிய வேண்டும், இதெல்லாம் செய்யாமல், மேடைப்பேச்சாளர் மாதிரி பேசுவது, ஒன்றும் பிரயோஜனப்படாத விஷயமாகி விடும். மேலும் அத்தகைய established lawவையே சிக்கலாக்க ஈடுபட்டால், மற்றவர்கள் ஒன்றும் செய்யமுடியாது. தமிழ்-தமிழ் என்று பேசிக்கொண்டு “சத்தியவேல் முருகன்”[11], சைவர்களுக்கு எதிராகத்தான் வழக்குப் போட்டிருக்கிறார்!

3.     எல்லோரும் ஆகமவிதிஆகமவிதி என்கிறார்கள்: ஆமாம், உள்ளதைப் பற்றிதான் சொல்வார்கள். இங்கும் எதையும் படிக்காமல் உளறியிருப்பது தெரிகிறது. முன்னமே குறிப்பிட்டபடி Affidavit / counter-affidavitகளில் “ஆதரிப்பவர்களே” ஆகமங்fகளைக் குறிப்பிட்டுதான் எதிர்திருக்கிறார்கள்! உதாரணத்திற்கு தமிழ் வழிபாட்டு பயிற்சி மையத்தின் Affidavitஐப் பார்க்கவும்.

4.     அது என்ன ஆகமம்? வைணவத்தில் 2, சைவத்தில் 28  என  30  ஆகமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்: இப்படி சொல்வதே, இவருக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று தெரிகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளைப் படித்திருந்தாலே, இவ்வாறு பேசியிருக்கமாட்டார். பாவம், பட்டை-கொட்டைகளுடன் இருக்கும் ரெங்கநாதனாவது இவருக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம்!

5.     இந்து மதத்தைக் கட்டுப்  படுத்துவதாகச்  சொல்லப்படும்  இந்த  ஆகமங்களைப்  பெரும்பான்மையான  இந்துக்கள்  கண்ணால் பார்த்ததே கிடையாது: இவருக்கு தெரியவில்லை, அதாவது வழக்குப் போட்டுள்ளவருக்கே சட்டம் தெரியவில்லை எனும் போது, மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்பது இவர் கவலைப்படத் தேவையில்லை. பாவம், இவரை நியமித்தவர்தாம், இவரது சட்ட அறிவைப் பற்றி கவலைப்படவேண்டும். பாவம் ரெங்கநாதன் கோஷ்டி!

6. இவற்றை எழுதியது யார்,  அச்சிட்டவர்கள் யார்,  எங்கு விற்கப் படுகின்றன? பாவம், இத அளவிற்கு தனது அறியாமையை கேவலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு வக்கீல் இப்படி கேட்பது IPC, CrPc, Constitution………..இதெல்லாம் எங்கு கிடைக்கும் என்று கேட்பது போல இருக்கிறது! சத்தியவேல் முருகனார், வீரமணி, அல்லது வேறு யாரோ இவர்களுக்கு சரியாக உதவவில்லை அல்லது வேறு யாரோ இயக்குகிறார்கள் போலும்!

7.     எதுவும் தெரியாது. ஆனாலும்,  அதன் பெயரால்தான் தீண்டாமை கடைபிடிக்கப் படுகிறது. ஓஹோ, இவரே நீதிபதியாகி தீர்ப்பையே வழங்கி விட்டார்! இனி யாரும் ஒன்றும் கேட்கமுடியாது! இவர்களை என்னவென்று சொல்வது? தமது கருத்ததகளை / பொய்களை வலுக்கட்டாயமாக அடுத்தவர் / மற்றவர் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்ற நிலையில் இருப்பவரை “பாசிஸ்ட்டுகள்” என்பர். இப்படி “பாசிஸ்ட்டுகளை” விட மோசமான சித்தாந்திகளை குறிப்பிட புதிய வார்த்தையைக் கண்டு பிடிக்கவேண்டும்.

8.     கேட்டால், எல்லோரும் இந்து என்கிறார்கள்.  அப்படியானால்,  வா, ரெண்டு பேரும் சேர்ந்து சுடலை மாடன் கோயிலில் ஒற்றுமையா சாமி கும்பிடுவோம்.  இல்லையா,  பெருமாள் கோயிலில் சேர்ந்து பூஜை பண்ணுவோம். இவையெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி நடப்பதை தடுக்கத்தான் இந்த புல்லுருவி எட்டப்பன் கும்பல்கள் கிளம்பியுள்ளன. உண்மையாக தனது வாதி/பிரதிவாதி நலனிற்காக வாதிடும் எந்த வக்கீலும் இப்படி பொய் பேச மாட்டான்.  இங்கு நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட நபரின் “ஸ்டைல்” தெரிகிறது. அதாவது, இப்படி பட்டை-கொட்டை போட்டு, வேடம் தரித்து இந்து-விரோதிகள் தாம் செயல்படுகின்றனர் என நன்றாகவே தெரிகின்றது.

9.     இரண்டுமே முடியாது. இறுதி தீர்ப்ப்பும் கொடுத்தாகி விட்டது, அதாவது, இனி அப்பிலே ககடையாது! உண்மையைச் சொல்லப் போனால், இவரது நிலை அப்படித்தான் உள்ளது. அதுமட்டுமல்ல, நாத்திகர்கள், கருணாநிதி, போலி அர்ச்சகர்கள், “அர்ச்சகர்” வேடமிட்டு வந்துள்ள புல்லுருவிகள்,……….எல்லொருமே உள்ள சட்டமுறையில் வெற்றிப்பெற முடியாது, இதையெறிந்தே தேவையில்லாது, போலி சட்டத்தை உருவாக்கி அடிவாங்கி இருக்கின்றன.

10. ஆனால், நீயும் நானும் இந்து என்றால்,  இது மோசடி இல்லையா? ஆஹா, இங்குதான் இவரது உண்மையான உருவம் வெளிப்படுகிறது போலும். அதாவது, உண்மையாக தனது வாதி/பிரதிவாதி நலனிற்காக வாதிடும் எந்த வக்கீலாகத்தான் இல்லை என்றால், “நாங்கள் எல்லோருமே” இந்துக்கள் இல்லை, இந்துக்களின் எதிரிகள் என்று ஒப்புக்கொண்டது மாதிரி பேசியுள்ளார். அப்படியென்றால், எத்தகைய இந்தத விரோதி இந்த வக்கீல் அல்லது அவரை நம்பும் வாதி/பிரதிவாதி?

வேதபிரகாஷ்

26-10-2010


[1] வேதபிரகாஷ், நாத்திகஅரசியல்மயமாக்கப்பட்டஅர்ச்சகர்கல்வி, பணி, வழக்குகள்!, http://atheismtemples.wordpress.com/2010/05/13/118/

[4] வேதபிரகாஷ், பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (1), https://dravidianatheism.wordpress.com/2010/10/24/பெரியார்-சிலைக்கு-மாலை-ப/

[5] ஆறுமுகசாமி விஷயத்திலும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5021:-1&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50

[6] Vedaprakash, The Canard spread against Archaka Training, appointment etc., http://vedaprakash.wordpress.com/2010/10/26/the-canard-spread-against-archaka-training-appointment-etc/

[7] O. A. No. 678 of 2007 and Application No.3897 of 2007 in C.C.No. 484 of 2007;  Application No.4552 of 2007 in C.C.No. 484 of 2007 etc., and others. This has been cited for illustrative purposes.

[8] M. P. Sathiyavel Murugan, M. Shanmugasundaram, P. Kumaralingam, Erode Vengadesan, N. R. Senniyappan, S. srinivasan, …………….DMK sponsored / supported splinter muttheads, and host of others.

[9] Staff Reporter, Archakar training starts , The Hindu, Sunday, May 13, 2007

http://www.hindu.com/2007/05/13/stories/2007051315360300.htm

[10] இப்படி “பிராமண எதிர்ப்பு” வைத்துக் கொண்டு, மற்ற சத்திர, வைசியர்களை மறந்து கதையடித்துக் கொண்டிருப்பது ஒன்றிற்கும் உதவாது.

[11] O. A. No. 678 of 2007 and Application No.3897 of 2007 in C.C.No. 484 of 2007ல் பெயர் இப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (2)”

 1. S. Ramananathan. Says:

  Raju, the advocate has been in the association of the communist radical groups of Caddalore district aided and abetted by PMK, PDK, DK, VCK and their splinter groups.

  They have links with the anti-Indian forces like TNLA, MKIK, TDVI, and others.

  After the demise of Prabhakar, there have been fight among the ideological groups to corner LTTE and grab its leadership. The Tamil political leadership, Cine-persons with international distribution network, and others are also interested in infomenting trouble in Tamilnadu by any means.

  For everybody, temple, temple related has been favourite and easy for target.

  Thus posing as atheists, Periyarists, paguttarivu-reformists, humanright activists etc., all anti-national lumpen elements have joined together in opposing India attacking through their soft target!

  First let them go to the stinking mosques and churches with all sorts of sex, crimes, terrorism and other vices.

 2. M. Nachiappan Says:

  You can add the following questions also:

  1. Being in DMK for 40 years, can a worker become CM?

  2. Why Anbazhagan is not made CM?

  3. By garlanding Kushboo, can raped woman get back his chastity?

  4. By garlanding Kanimozhi, can eunuch become a man or woman?

 3. M. M. Enathi Reddy Says:

  The hypocritical deceptive infiltrating “Archakas” have paid lakhs for getting into and they are prepared to spend more legally, as they could loot temples thereafter. This has been their main intention.

  They do not have anything to do with Hindu religion, temple protection, etc., or helping the devotees.

  They are man-eating tigers started prowling under the skins of cows!

  The atheists and anti-Hindu forces have been encouraging and helping them. Of course, some of them including Christians and Muslims have been there already!

 4. Umaptahi Sivam Says:

  Mr Veda Prakash, I see that you have directly and indirectly targeted My Guru Sathiyavel Muruganar. Actually I think when you start your blog you keep yourself biased and keep throwing up words without any support. My Guru did not file any case against any Saivite, rather he had answered the case which was filed against him by the so called “Saivar” who had vested interest and as well they did it as they asked to do so by some mischievous elements. So do not ever dare to misquote the Case numbers without even reading through what was the real case is all about. Please go back and check your facts. Also bear in mind misquote of the case can lead to taking legal action against those who are involved.

 5. இந்து-விரோதிகள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் முதலியோர் “அனைவரும் அர்ச்சகர்” என Says:

  […] [17] https://dravidianatheism.wordpress.com/2010/10/26/garlanding-hindu-idol-breaker-could-get-archaka-pos… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: