திருமாவளவனும் சோனியா மெய்னோவும்: செக்யூலரிஸ ஊடல்கள், கூடல்கள், மடலேறிய அடலேறு!

திருமாவளவனும் சோனியா மெய்னோவும்: செக்யூலரிஸ ஊடல்கள், கூடல்கள்!

 

திருமாவின் பிரார்த்தனை-அன்றும் திருமாவின் பிரார்த்தனை-இன்றும்
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். என்றாலும் முஸ்லிம்கள் தங்கள் இறைவனிடம் இறைஞ்சுவது போல், கிறிஸ்தவர்கள் தங்கள் கர்த்தரிடம் இறைஞ்சுவது போல், நான் சோனியா அம்மையாரிடம் இறைஞ்சுகிறேன் மீண்டும் ஒருமுறை உங்கள் குடும்பத்திற்கு, குறிப்பாக ராஜீவ்காந்திக்கு எனது மரியாதையையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தம் உண்டு என்று கூறப்படுவதை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம்.

 

திராவிட சித்தாந்த்தின் முகமூடிகள் கிழிகின்றன: ஆரிய-திராவிட இனவாதங்களைப் பேசிக் கொண்டு அரசியல்-பிச்சையேந்திவரும் திராவிட கட்சிகளுக்கு, தன்மானம் என்பதெல்லாம் சும்மாதான். பிரபாகரனை வாழ்த்தி[1], ராஜிவை ஏசி வந்த கூட்டங்கள்[2], மறுபடியும் இறைஞ்ச ஆரம்பித்து விட்டன. திருமா எந்த ஆளவிற்கு ராஜிவ் காந்தியை மதித்தார் என்பது சோனியாவிற்குத் தெரியாமல் இல்லை. ராஜீவ் காந்தி சிலை அவமதிப்புக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், முழு இந்தியாவை வழிநடத்திச் செல்லும் உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு,’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய கடிதத்தில் விவரம்[3]:

 

திருமாவின் இறைஞ்சல் (25-10-2010): “விடுதலை சிறுத்தைகள் கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் கட்சி ஆகும். நாங்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.

 

“2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்களும் ஒரு உறுப்பினர்.

 

“இந்த சமயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கும் அழைப்பு விடுத்ததற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீருக்கு சென்ற அனைத்து கட்சிகள் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமனம் செய்ததற்கும், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் விரும்பத்தகாத சம்பவம் பற்றி உங்களுக்கு சில விளக்கங்கள் அளித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

 

“சென்னை அசோக்நகரில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலையை அவமானம் செய்த சம்பவத்தை கண்டித்து, அந்த மனித தன்மையற்ற நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று எங்கள் சார்பில் கேட்டிருக்கிறோம்[4]. ஆனால், சில காங்கிரசார் அங்கு கூடிநின்று நடத்திய போராட்டத்தில் எங்கள் கட்சியினரையும் உள்நோக்கத்தோடு அதில் சம்பந்தப்படுத்தி பேசியதோடு என்னை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

“அந்த சம்பவத்தில் எங்களுக்கு துளியளவும் தொடர்பு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்வதில் மட்டுமல்ல இந்த முழு இந்தியாவையும் வழிநடத்தி செல்லும் உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு.

 

“தேசத்தின் நலனுக்காக உங்களது குடும்பம் அளித்துள்ள பங்களிப்பை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். தமிழகத்தில் தலித் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்லுறவு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

 

“மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் தலித் மக்களின் நிலை பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் எல். இளையபெருமாள் மற்றும் தமிழகத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் ஆகியோரை பெருமையுடனும், அன்புடனும் நினைவுகூறுகிறோம்”. இவ்வாறு சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.

 

குறிப்பாக ராஜீவ்காந்திக்கு எனது மரியாதையையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்: இப்படி செத்தவருக்கு ஏன் குறிப்பாக மரியாதையையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்? சாமியில்லை, பூதமில்லை என்பவர்ள் ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டும்? நாத்திகம் பேசி மக்களை ஏமாற்றிவரும் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை…………………………….எல்லாம் இல்லையா? இப்படி கஞ்சிகுடுக்குன் கேஸ்களைவிட மோசமாகிவிட்டதற்கு காரணம் பகுத்தறிவா, சிதம்பரமா?

 

சோனியா மேய்னோவை கடவுளாக்கி இறைஞ்சிய திருமா (25-09-2009): திருமாவளவன் பேசும் போது, “மே 13ஆம் தேதிக்குப் பிறகு இலங்கை அரசு தமிழர்கள் மீது முழு அளவில் தாக்குதல் நடத்தப் போவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல் நடைபெறாமல் இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். என்றாலும் முஸ்லிம்கள் தங்கள் இறைவனிடம் இறைஞ்சுவது போல், கிறிஸ்தவர்கள் தங்கள் கர்த்தரிடம் இறைஞ்சுவது போல், நான் சோனியா அம்மையாரிடம் இறைஞ்சுகிறேன்”.

மே 25, 2009 தீவுத்திடல் சோனியா-திருமா விளையாட்டு: சோனியா தனது வரவேற்பு உரையில் பொன்குமார், ஜெகன்மூர்த்தி உள்பட பலரின் பெயரை வரிசையாக வாசித்தபோது திருமாவின் பெயரை சொல்லவில்லை. தங்கள் தலைவரின் பெயரை வேண்டுமென்றே சோனியா புறக்கணித்தார் என்று கருதிய வி.சி. தொண்டர்கள், சோனியாவைக் கண்டித்து கூக்குரல் எழுப்பியபோதும் சோனியா கண்டுகொள்ளவில்லை. சோனியாவுடன் வேட்பாளர்கள் வரிசையாக நின்று போட்டோ எடுத்துக்கொள்ள அழைக்கப்பட்டபோது அங்கு வந்த திருமா, சோனியாவைப் பார்த்து இரு கரங்களை குவித்து வணக்கம் தெரிவித்தார். ஆனால், சோனியா கண்டுகொள்ளாமல் தனக்கேயுரிய அலட்சிய பாவத்தில் இடது பக்கமாகத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அந்தபக்கமாகச் சென்று திருமா வணக்கம் தெரிவித்தபோது, லாவகமாக வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டார் சோனியா. இதனால் அடலேறு ஊடல் கொண்டு விரக்தி அடைந்து, மேடையைவிட்டு கீழே இறங்கி மடலேற முயன்ற திருமாவை குலாம்நபி ஆசாத்தும் தயாநிதிமாறனும் சமாதானம் செய்தனர். ஆசாத் பிரச்சினை நாஜுக்காக சோனிஆவிடம் இந்தியில் சொன்னதும், சோனியா திருமாவின் கையைப் பிடித்து தன் அருகில் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்ததும் திர்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே, பூரிப்புதான்!.

 

ஆற்காடு வீராசாமி அளித்த விளக்கம்[5] – இது திட்டமிட்டு செய்த செயல் அல்ல:  ஆக இதனை பெரிதாக்கி, லாபம் தேட ‘சிறுத்தைகள் கோபமாக இருக்கிறார்கள்” எனக் கட்டிக் கொண்டபோது, திருமாவின் பெயரை சோனியா வேண்டுமென்றே தவிர்க்கவில்லை’ என்று சொல்லி ஆற்காடு வீராசாமி, ஒரு சமாதான அறிக்கை விட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10.5.2009 அன்று சென்னை தீவுத்திடலில் நடந்த கூட்டத்தில் தோழமைக்கட்சிகள் சார்பில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்று அந்த கட்சி தலைவர்களிடம் கேட்டபோது, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ரவிக்குமார் எம்.எல்.., கலந்து கொள்வார் என்றும் தொல். திருமாவளவன் தொகுதியில் இருக்க வேண்டிய பணி இருப்பதால் அவர் வர இயலாது என்றும் தெரிவித்து இருந்தனர். எனவே தோழமைக்கட்சிகளின் சார்பில் பேசக்கூடியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, ரவிக்குமார் பெயரை எழுதி சோனியா காந்தியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் அந்தப் பெயரை பொதுக்கூட்டத்திலே குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். திருமாவளவன் பெயரை அறிவிக்காமல் போனதற்கு சோனியாகாந்தி காரணமல்ல. இருந்தபோதிலும் கூட்டம் முடிந்து வேட்பாளர்களுடன் சோனியாகாந்தி எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் திருமாவளவன் இருக்கிறார். எனவே இது திட்டமிட்டு செய்த செயல் அல்ல”, என்று விளக்கியுள்ளார் வீராசாமி.

 

கருணாநிதியும் நேரு பாட்டு பாடுகிறார், அடுத்தது சோனியாதான் போலும்!: “எங்களுக்கும், நேரு குடும்பத்திற்கும் பகையை மூட்டி, அரசியலிலே மீன் பிடிக்கலாம் என சிலர் கருதிக் கொண்டு அறிக்கைகள், கட்டுரைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில், சிண்டு முடிய நினைப்பவர்கள் யாரும் வெற்றி பெற முடியாது,” என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்[6]. …………………… போப் ஆண்டவர் சன்னிதானத்தை காணும்போது ஏற்படும் உணர்வு, லயோலா கல்லூரிக்குள் நுழையும் போது ஏற்படுகிறது. ……………பிறகு மல்லிப்பூ, ரோஜாப்பூ……என்று பழைய கவிதையை வாசித்து[7], தான் நேருவிக்கு எவ்வளவு நெருக்கம் என்பதனை மெய்ப்பித்தார்!

 

வேதபிரகாஷ்

28-10-2010


Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “திருமாவளவனும் சோனியா மெய்னோவும்: செக்யூலரிஸ ஊடல்கள், கூடல்கள், மடலேறிய அடலேறு!”

 1. John Chandrasekharan Says:

  This man has been just a paid agent and he does not have any principle at all, as could be noted from his activities and speches.

  If MP / MLA poost is given, he would be going around like a faithful dog wagging tail and licking feet!

 2. M. M. Enathi Reddy Says:

  Karunanidhi tried to kill Indira Gandhi, but surrendered to her.

  With Rajiv Gandhi, he could not go together, as he was more attracted towards AIADMK.

  Of course, Sonia could go along with Karunanidhi, when he collaborated with her to eliminate Prabhakaran solving the Sri Lankan issue.

  Of course, Karunanidhi has been benefited substantially by getting the pipelines of Prabhakaran operating from Canada, Australia, Paris, US and other places.

  VAIKO, Nedumaran, Tirumavalavan, Sebastian Seeman and others would get only the crumbs thrown away or left out.

 3. M. Nachiappan Says:

  How is that?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: