கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (1)

கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (1)

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள்[1]: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகித்தான் வருகின்றன. ஏற்கெனெவே வெளிநாட்டுப் பாதிரிகள் எப்படி தமிழகத்தில் சிறுவர்-சிறுமியர், பெண்கள் முதலியோரை பாலியல் ரீதியில் பல குற்றங்களுக்குட் படுத்தியிருக்கிறர்கள் என்று பல கட்டுரைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[2]. இதெல்லாம் திட்டமிட்ட நிர்வாகிக்கப்படுகின்ற குற்றங்களாக / குரூரக் குற்றச் செயல்களாக (organized crimes / heinous criminal acts)த் தெரிகின்றன. கீழேயுள்ளது அரசாங்கத்தாரால் – போலீஸ்துறையினரால் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள். 2010ற்கான விவரங்கள் இன்றுவரைக் கொடுக்கப்படவில்லை.

S.NO HEADS 2007 2008 2009
1 RAPE / கற்பழிப்பு 523 573 596
2 DOWRY DEATH / வரதட்சிணை சாவு 208 207 194
3 MOLESTATION / பலாத்காரம் 1,558 1,705 1,242
4 SEXUAL HARASSMENT / செக்ஸ் தொல்லை 875 974 501
5 CRUELTY BY HUSBAND AND HIS RELATIVES / கணவன் மற்றும் அவருடைய குற்றத்தாரர்களால் ஏற்படும் கொடுமைகள் 1,976 1,648 1,460
6 KIDNAPPING AND ABDUCTION OF WOMEN AND GIRLS / பெண்கள் / சிறுமியர்கள் கடத்தப் படுதல் 1,097 1,155 1,133
7 DOWRY PROHIBITION ACT / வரதட்சிணை ஒழிப்புச் சட்டம் 368 262 207
TOTAL மொத்தம் 6,605 6,524 5,333

இதன்படி பார்த்தால், ஒருநாளைக்கு சராசரியாக சுமார் –

*         இரண்டு பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்,

*         நான்கிற்கும் மேலான பெண்கள் பலாத்காரத்திற்குட்படுகிறார்கள்

*         மூன்று / நான்கு பெண்கள் / சிறுமியர்கள் கடத்தப் படுகிறார்கள்

*         ஒரு பெண் செக்ஸ் தொல்லைக்குட்படுகிறாள்

இவை நிச்சயமாக பெண்களுக்கு சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக ஒருநாளைக்கு சராசரியாக சுமார் மூன்று / நான்கு பெண்கள் / சிறுமியர்கள் கடத்தப் படுவது நல்ல செய்தியாக இல்லை.

குற்றங்கள் பெறுகும் தன்மை: தமிழகத்தில் சமீப காலத்தில், குற்றங்கள், குற்ற விகிதம் அதிகமாகிக் கொண்டே வந்துள்ளன. குறிப்பாக மேனாட்டு பாணியில் தான் அக்குற்றங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வந்துள்ளன, வருகின்றன. ஆகையால், இத்தகைய விபரீத கேல்விகளும் எழுகின்றன.

*         கொலை செய்யலாமா, கூடாதா,

*         சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா,

*         சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா?

*         பணம் திருடலாமா கூடாதா

*         லஞ்சம் வாங்கலாமா, கூடாதா

*         குடிக்கலாமா, கூடாதா

*         தாய்-தந்தையரை அடிக்கலாமா, கூடாதா

*         தாய்-தந்தையரை வீட்டைவிட்டு துரத்தலாமா, கூடாதா

*         மனைவியை / கணவனை ஏமாற்றலாமா, கூடாதா

*         காசு கொடுத்து சீட் வாங்கி படிக்கலாமா, கூடாதா

இவையெல்லாம் சில உதாரணங்கள் தாம், இதைத்தவிர பலவற்றை பட்டியிலிட்டால், அதுவும் ஒரு விதத்தில் நாமே குற்றங்களை விவரிக்கும் குற்றத்தை செய்தவர்கள் ஆகிவிடுவோம். செய்பர்கள் எப்படியெல்லாம் கேள்விகள் கேட்டுக் கொண்டு, மனசாட்சியுடன் விவாதித்து முடிவெடுத்துச் செய்வதில்லை. ஏனெனில், அவர்களுடைய மனங்களினின்று அத்தகைய கேள்வி கேட்கும் சாட்சிகளை கொன்றுவிட்டுதான் அவர்கள் அத்தகைய செய்களை செய்யத் துணிகிறார்கள்,  செய்து வருகிறார்கள்.

எந்திரன்/ ரோபோ படம் வந்தவுடன், ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள்: எந்திரன்/ ரோபோ படம் வந்தவுடன், ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். இது விஞ்ஞானமா விபரீதமா, பகுத்தறிவு மூலம் வருமுன் எடுத்துரைக்கும் தீர்க்கதரிசனமா அல்லது நாத்திக ஜோசியமா என்றெல்லாம் சாதாரண மக்களுக்குப் புரியவில்லை. ஒருவேளை சிற்றறிவு, பேரறிவு, ஆறறிவு முதலியவை இல்லாமல், பகுத்தறிவிற்கும் மேலாக “ஏழறிவு” கொண்டுதான் இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டிய நிலை வந்தாலும் வரலாம். உள்ள “அறிவுஜீவிகள்” மற்றவர்கள் “நம்புகின்றவர்கள் முட்டாள்கள்” என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

எதிர்மறை ஆலோசனை போக்கு மக்களைக் கெடுத்து சீரழித்துவிட்டது: எதிர்மறை ஆலோசனை போக்கு (negative suggestion) சாதாரணமாக மக்களிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த உபயோகப் படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஒருசெயலை செய்யாதே, என்றால் அதை செய்ய மனித மனம் தூண்டுகிறது. அதாவது, அவ்வகையில் ஊக்குவித்து அச்செயலை செய்யத் தூண்டிவிடுகிறது. பொதுவாக குற்றங்களில் இப்போக்கு, மனப்பாங்கு காணப்படுகிறது.  மேலும் கெட்டது இப்படி இருக்கிறது என்று நன்றாக விளக்கி விட்டு அதனை செய்யாதே என்ற போக்கு அதிகமாகவே மக்களை வேண்டாததை செய்யத் தூண்டுகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் அதைப் பற்றி இதுவரை தெரியாதவர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ளும் போது, செய்து பார்க்கத் துடிப்பார்கள், செய்ய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்; சந்தர்ப்பம் கிடைக்கும்போது நிச்சயம்ம்செய்வார்கள். இவ்விதத்தில் சினிமா-ஊடகங்கள் தாராளமாகவே மக்களைக் கெடுத்து சீரழித்து இருக்கிறது.

தார்மீகம், தார்மீக மதிப்புகள், தார்மீக எண்ணங்கள் மக்கள் மனங்களினின்று வெகுவாக அகன்று விட்டன: தார்மீகம் (morality), தார்மீக மதிப்புகள் (Moral values), தார்மீக எண்ணங்கள் (moral thinking) மக்கள் மனங்களினின்று வெகுவாக அகன்று விட்டன எனலாம். பொதுவாக இன்று நியாயம், தர்மம் போன்றவற்றின் சிந்தனைகள் மனங்களினின்று அகன்றது இல்லாமல், அவற்றை மற்றும் அதைப்பற்றிப் பேசுபவரை கேலிசெய்வது, கிண்டல் செய்வது, தூஷிப்பது போன்ற போக்கு அதிகமாகி இருக்கிறது. சினிமா இதற்கு பெரிய பங்கு வகித்துள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் அநியாயங்களை, ஆபாசங்களை, அநாகரிகங்களை, அநாச்சாரங்களை, எல்லாவிதமான அக்கிரமங்களையும், பாவங்களையும், குரூரங்களையும் நியாயப்படுத்து விட்டார்கள். இதை 24 x 7 ரீதியில் டிவிக்களில் திரும்ப-திரும்ப காட்டி மக்களின் மனங்களையும் மரத்துப்போக செய்து விட்டார்கள். ஊடகங்களும் சமமாக அதற்கு பொறுப்பேற்றவர்கள் ஆகிறார்கள்.

வேதபிரகாஷ்

© 02-11-2010


Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (1)”

 1. M. Nachiappam Says:

  You have raised an important issue.

  The “Dravidian land”, which is supposed to respect womanhood, has now started raping, molesting, killing ………………..children and women.

  Is that trend due to their newly acquired qualities or percolated from their “dravidian roots”?

  Who are responsible for the erodoing moral values in Tamilnadu?

 2. M. M. Enathi Reddy Says:

  It is ironical that the women should be treated like this, where they are reportedly venerated.

  That the position could change within 70-80 years is shameful to Indians, as this period is not a long one.

  What has gone wrong with the women or Indians or the system, how it has happened, who are responsible and all other connected factors should be probed and brought out meticulously.

  And the startling and perplexing fact has been that the rulers of TN have been polygamous and polyandrous also many times. Besides, there has been open talk in different circles that they have some sort of “manaivis” (many legal wives) or “thunaivis” (many illegal keeps) and so on.

 3. M. M. Enathi Reddy Says:

  பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல்
  பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2010,23:03 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=119629

  சென்னை : இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிகச்சிறப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, பிற மாநிலப் புள்ளி விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

  அவரது அறிக்கை: இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். பசும்பொன் தேவர் குரு பூஜை மிகவும் அமைதியாக நடந்தது. இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் அமைதிக்கு குந்தகமின்றி நடத்தப்பட்டது. போலீசாரின் சிறப்பான நடவடிக்கையால், எதிர்க்கட்சி தலைவர் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி மதுரை சென்று, கூட்டத்தை நடத்தி, பாதுகாப்பாக சென்னைக்கு திரும்பினார். தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் கொலைக் குற்றங்களும், கொள்ளைகளும், கடத்தல்களும் நடப்பது போன்று ஒரு பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  கடந்த 2009ம் ஆண்டில் நடந்த 1,644 கொலைக் குற்றங்களில் 1,362 இனங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில், சென்னையில் 11 ஆயிரத்து 829 குற்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. பெங்களூரில் 29 ஆயிரத்து 664 நிகழ்வுகளும், மும்பையில் 32 ஆயிரத்து 770 நிகழ்வுகளும், கோல்கட்டாவில் 13 ஆயிரத்து 5 நிகழ்வுகளும், டில்லியில் 49 ஆயிரத்து 350 நிகழ்வுகளும் நடந்துள்ளன. சென்னையில் 2008ம் ஆண்டில் 100 கொலைக் குற்றங்களும், டில்லியில் 554, பெங்களூருவில் 263, மும்பையில் 210 கொலைக் குற்றங்களும் நடந்துள்ளன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 2009ம் ஆண்டில் தமிழகத்தில் 573 கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்ந்த அதே நேரத்தில், ஆந்திராவில் 1,257, மகாராஷ்டிராவில் 1,558, மேற்கு வங்கத்தில் 2,263 குற்றங்களும் நடந்துள்ளன. இந்த ஒப்பீடுகளும், புள்ளி விவரங்களும், குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல. குற்றங்கள் நிகழாமல், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு இரு வேறு கருத்து கிடையாது.

  “டாமின்’ நிறுவன முன்னாள் தலைவர் சரவணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உறவினர் விஜயன் கொலை, திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கடத்தப்பட்டு கொலை, அரியலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் தம்பி மகன் கடத்தல், போத்தீஸ் துணிக்கடை ஊழியர்களை வழிமறித்து தாக்கி 81 லட்ச ரூபாய் கொள்ளை, சிறுவன் ஆதித்யா கொலை, மதுரையில் மாணிக்கம் செட்டியாரை கொன்று ஒன்பது கிலோ தங்கம், 1.25 கிலோ வெள்ளி கொள்ளை, விழுப்புரம் மாவட்டத்தில் 11 கிலோ தங்கம் கொள்ளை போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது போலீசாரின் துரித நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டு.

  தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, 2003ம் ஆண்டு மட்டும், சங்கிலி தொடர் போன்ற படுகொலை நிகழ்ச்சிகள் நடந்த போது, “சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது; நல்லாட்சிக்கு இது அழகல்ல’ என அறிவுரை கூற முன்வருவதற்கான திராணியும், தைரியமும் இல்லை. இப்போது மட்டும் வரிந்துகட்டி எழுதுகின்றனர். இனியாவது நடுநிலை நாளேடுகள் நாட்டு மக்களுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான செய்திகளையும், எந்த ஒரு கட்சியையும் சாராமல், விருப்பு, வெறுப்பின்றி அரசியல் குறித்த செய்திகளையும், நல்லெண்ணத்தையும், நற்செயல்களையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் செயல்களையும் வெளியிடுவது குறித்து சிந்திப்பர் என நம்புகிறேன்.

  நடுநிலையாளர்களுக்கு கெடுமதி கூடாதல்லவா? இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 4. குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! « ஊழ Says:

  […] [1] வேதபிரகாஷ், கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (1), https://dravidianatheism.wordpress.com/2010/11/03/669-murder-kidnap-rape-ransom/ […]

 5. குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! « ஊழ Says:

  […] [1] வேதபிரகாஷ், கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (1), https://dravidianatheism.wordpress.com/2010/11/03/669-murder-kidnap-rape-ransom/ […]

 6. குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! « ஊழ Says:

  […] [1] வேதபிரகாஷ், கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (1), https://dravidianatheism.wordpress.com/2010/11/03/669-murder-kidnap-rape-ransom/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: