கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (2)

கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (2)

கோயம்புத்தூர் கொலை துக்கம் ஆறுவதற்கு முன்னர் சென்னைக்கடத்தல்: கோயம்புத்தூர் மனிதாபிமானமற்ற குரூர கொலை நடந்து சிலநாட்களிலேயே சென்னையில் ஒரு சிறுவன் கடத்தல் என்று செய்தி வருகின்றது! எப்படி ஓரிரு நாட்களில், இன்னொரு பெற்றோர்களின் மனத்தைப் பாதித்து, உடனடியாக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து மீட்கத் தயாராகி விட்டார்கள் என்பது நேற்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது (02-11-2010). போலீஸாரே அதை நியாயப்படுத்தி பேசியுள்ளனர். ஆனால், பணம் இல்லாதவர்களின் நிலை நினைத்துப் பார்க்க பயமாக இருக்கிறது. இதையெல்லாம் டிவியில் பார்த்த தாய்மார்கள் அதைப்பற்றித்தான் பேச ஆரம்பித்தனர், “காசில்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய குழந்தைகள் கதி என்னவாகும்”, என்று கேட்கும்போது, என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இப்படி பணத்திற்காக நாளைக்கு குழந்தைகளை, சிருவர்-சிறுமியர்களை கடத்த ஆரம்பித்துவவட்டால் என்ன செய்வது, என்றும் பேச ஆரம்பித்து விட்டனர்.

அக்குடும்பத்தைப் பற்றி அறிந்துள்ளவர்கள்: பெரும்பாலும், குற்றவாளிகளுக்கு தமது பலிக்கடாக்களை அறிந்தேயுள்ளனர் (The criminals always know their victims). இரு வழக்குகளிலும், சிறுவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்துதான், குற்றவாளிகள் செயல்பட்டுள்ளனர். அவர்களின் தங்களது பலிக்கடாக்களின் தினசரி நடமாட்டங்களை கூர்ந்து கவனித்துதான் தங்காளது வேலையை செய்துள்ளனர். எளிதான இலக்கு, அதன் நெருக்கம், அருகில் செல்கின்ற வாய்ப்பு (easy accessibility) இவையெல்லாம் கூட குற்றம் செய்யத்தூண்டுகிறது மற்றும் எளிதாக்குகிறது. கடத்த வேண்டிய எண்ணம் ஏற்பட்டது குற்றம் புரியும் மனப்பாங்கு மனிதர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி, உறுதியாகும்போது ஏற்படுகிறது. செய்வது தவறு / குற்றம் என்று அறிந்தே செய்யத்துணிகிறது, அத்தகைய உறுதியான இறுகிய மனப்பாங்கு பிறகு சித்தாந்த ரீதியாக நியாயப்படுத்தத் தூண்டுகிறது. “என்ன சொல்றீங்க சார், ரஞ்சித்குமாரின் குழந்தைகளை கடத்தி கொலை செய்துவிட்டார்களா?”, என எதிர்கேள்வி கேட்டபோது, அவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது என்பதாகிறது. சென்னை கடத்தலில் நன்றாக படித்தவர்களே ஈடுப்பட்டுள்ளது[1], கடத்தல்காரர்களிடம் “சமத்துவம்” காணப்படுகிறது போலும்! “நாங்கள் படித்து விட்டு வேலயில்லாமல் இருந்ததாகவும், இருவரது பெற்றொருக்கும் தொழில் சரிவர நடைபெறவில்லை, ஆனால் தொழிலதிபர் ரமேஷ் கிரானைட் உள்ளிட்ட பல தொழில்களைச் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தார். அவரிடம் பலமுறை நாங்கள் உதவி கேட்டோம் ஆனால் உதவி கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து அவரிடமிருந்து பணம் கறக்க அவரது மகனைக் கடத்த திட்டமிட்டு கடத்தினோம்”, என்று கூறிய படித்தவர்களின் வாக்குமூலமும்[2], கொலைகாரர்களின் வாக்குமூலமும் ஒரே மாதிரித்தான் உள்ளது. இயலாமை ஒரு சாக்காகக் கொண்டு குற்றத்தில் ஈடுபடுவதை யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். மேலும் ஒரு பக்கம், அரசாங்கM வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது, பணிப்பத்திரம் பட்டுவாடா செய்யப்பட்டது, என்றெல்லாம் படோபடமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிறகு, எது இவர்களைக் குற்றவாளிகளாக ஆக்கியது?

திட்டம் தீட்டியது, நிறைவேற்றியது முதலியன: குழந்தை கடத்தல் ஒன்றும் தமிழகத்திற்கு புதியதல்ல. கடந்த மாதங்களில் அத்தகைய நூற்றுக்கணக்கான சட்டமீரல்களைப் பற்றி செய்திகள் – பாதிரிகளின் குழந்தைக் கடத்தல்[3], கற்பழிப்பு, வில் ஹியூம், மாத்யூஸ், பிரைட், ஊட்டி பாதிரி, சென்ற மாத திருச்சி ராஜரத்னம் – வந்துள்ளன[4]. ஆனால், முடிவு என்ன என்று மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஆக, கொலை-கொள்ளை செய்பவர்கள் நேரம், காலம், சந்தர்ப்பம் முதலியவற்றைப் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள். இப்படி இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருவது, அவர்களை ஊக்குவிப்பதாகவும் இருக்கலாம். அங்கு பல்கிக்கடாக்களான சிறுமிகளை குழந்தைகளாக இருக்கும்போதே வளர்ப்பது, தமது பணிவிடைசெய்ய உபயோகப் படுத்துவது, அவ்வாறே பழக்கப்படுத்தியப்பிறகு, அவர்கள் பாலியல் ரீதியில் பயன்படுத்தப் படுகிறர்கள், வன்கலவியில் ஈடுபடுத்தப் படுகிறர்கள் என்பதனை அறியாமலேயே, வாளர்த்து வந்துள்ளார்கள். இங்கோ, அறிந்து வைத்துக் கொண்டு செய்துள்ளார்கள். “என்ன அங்கிள், எங்கள் ஸ்கூலுக்கு இந்த பக்கம்தானே பொகவேண்டும்”, என்ற கேட்டபோது, அக்குழந்தைகள் எந்த அளவிற்கு நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதானை கவனிக்கலாம். கிருத்திவாசன் கேசில், அவன் சீத்துக் கொண்டு “ரிலாக்ஸாக” இருக்கும் விதத்தில் எல்லாம் அவனுக்குத் தெரிந்து இருக்கின்றது என்றாகிறது. போலீஸாரும், சொல்லிவைத்தால் போல அடுத்த நாளே பிடித்து விடுகின்றனர். ஒரு கோடி பணம் வைத்துள்ளவர்கள், அப்படி உடனடியாக மாஅட்டிக் கொள்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழகத்தில் நடந்துள்ள கொலை-கொள்ளைகள்[5]: தமிழக போலீஸாரின் விவரங்களிபடி, கொலை-கொள்ளை இவ்வாறு உள்ளன.

S.No CRIME HEAD 2009 2008 2007 2006 2005
1 Murder கொலை 1,644 1,630 15,21 1,273 1,365
2 Murder for Gain லாபத்திற்காகக் கொலை 123 105 102 89 74
3 Dacoity வழிப்பறி 97 100 88 95 73
4 Robbery திருடு 1,144 662 495 450 437
5 Burglary உடைத்துத் திருடுதல் 4,221 3,849 3,717 3,300 3,738
6 Theft திருட்டுச் செயல்கள் 15,712 15,019 13,217 13,651 15,851
TOTAL மொத்தம் 22,941 21,365 19,140 18,858 21,538

அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக –

*        நான்கு / ஐந்து கொலைகள் நடக்கின்றன.

*        பூட்டு / கதவு உடைத்து திருட்டுச் செயல்கள் ஆறு / ஏழு நடக்கின்றன.

*        மற்ற திருட்டுச் செயல்கள் 40-50 நடக்கின்றன.

*       மொத்தமாக திருட்டுச் செயல்கள்  60-70 நடக்கின்றன.

*        அதாவது ஒரு மணிக்கு மூன்று குற்றங்கள் நடக்கின்றன.

ஆக இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப் பட்டுள்ள, ஒருங்கிணைந்த ஏற்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ள (organized), கைதேர்ந்தவர்களால் செய்யப்பட்டுள்ள (habitual offenders), வழக்கமாக சிறந்த பழக்கத்துடன் செய்யப்பட்டுள்ள   குற்றங்கள் என்றுதான் தெரிகிறது. இப்படி பழக்க-வழக்கமான நிலை, சட்டத்தை அமூல் படுத்துகிறவர்கள் சரியாக செய்வதில்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஏனெனில், குற்றம் புரிந்தவனே, மறுபடி-மறுபடி செய்கிறான் என்றால்[6], எப்படி அவன் வெளியே வருகின்றான் என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் குற்றம் நடந்தது உண்மை என்றிருக்கும் போது, குற்றாவாளிகள் தப்பித்துக் கொள்வது, மக்களின் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் குறைக்கத்தான் செய்யும்[7]. இவையெல்லாம், திருப்திகரமானவை என்று சொல்லமுடியாது. மிகவும் வருத்தப்படக் கூடிய விஷயங்கள் தாம். வீட்டில் திருடும், குறிப்பாக நகைத் திருட்டில் மட்டும், திருடர்களுக்கும், போலீஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். மேலும், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் போது, அவர்கள் பேசிக்கொள்ளும்போது, “அவன் தான் செய்திருக்கிறான்……….அது அவன் வேலைதான்………..”, என்று பெயர் சொல்லி பேசுவதைக் கேட்கும்போது, அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது[8]. அதாவது, திருட்டு நடக்கின்ற விததைப் பார்த்து அவர்கள் புரிந்து கொண்டு சொல்கிறார்கள்:

*         கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகள்.

*         வீட்டில் வயதான தாய்-தந்தை / மாமியார்-மாமனார் தனித்திருப்பது.

*         பீரோக்கள் ஜன்னல் பக்கம் இருப்பது.

*         யாரும் இல்லாது வீடு பூட்டிக் கொண்டு ஊருக்குச் சென்றுள்ள நிலை.

*         தனியாக இருக்கும் வீடுகள், பின் பக்கத்தில் இருக்கும் வீடுகள், “அவுட் ஹவுஸ்” எனப்படும் வீடுகள், முதலியவை சுலபமான இலக்குகள்.

*         பீரோக்களை குறிப்பிட்ட விதத்தில் உடைத்து, லாக்கரில் இருக்கும் நகை, பணம் எடுக்கப்படும் விதம்.

*         வேலைக்காரி உடந்தையாக இருப்பது அல்லது அவளிடத்திலிருந்து செய்திகளை அறிந்து கொள்வது.

*         நான்கைந்து பெண்களாக வந்து தண்ணீர் கேட்பது, குழந்தைக்கு பால் / உணவு கேட்பது, வீட்டில் உள்ளோரின் கவனத்தைத் திருப்பி திருடிக்கொண்டு செல்லுதல்.

*         கோலம் மாவு மற்ற பொருட்களை விற்பது போன்று வந்து நோட்டம் விட்டுச் செல்வது.

போலீஸாரும் எல்லோருடைய விஷயங்களிலும் ஒரே மாதிரி நடவடிக்கை எடுப்பது இல்லை. மத்திய தர, கீழ்தட்டுக்காரர்கள் வீட்டுத் திருட்டுகள் எல்லாம் எஃப்.ஐ.ஆர். போடுவதோடு சரி, அவற்றை மறந்து விட வேண்டியதுதான். தெரிந்தவர்கள், வேண்டியவர்கள்[9] என்றால், ஏதோ கண்டு பிடித்து முக்கால்வாசி கிடைத்தது என்று கொடுப்பார்கள் / கொடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஒன்ரும் இல்லை, மறந்து விட வேண்டியதுதான்.

வேதபிரகாஷ்

© 04-11-2010


[1] கீர்த்திவாசன் கடத்தல் சம்பவத்தில் இரு இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் பிரபு. இவருக்கு வயது 29. பெரம்பலூரில் டிஎம்இ முடித்த இவர் பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பார் டைம் பிஇ படிப்பு படித்தவர். முதலில் சிங்கப்பூரில் வேலை பார்த்தார். மற்றொருவரான விஜய். இவருக்கு வயது 26. இவர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பிடெக் படித்தவர். இங்கிலாந்தில் எம்.பி.ஏ முடித்தார். கடந்த ஆண்டுதான் இவர் தனது படிப்பை முடித்தார்

http://thatstamil.oneindia.in/news/2010/11/03/chennai-boy-keertivasan-kidnappers.html

[3] வேதபிரகாஷ், ,சென்னைசெக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்: http://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

[4] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

[6] இவர்களுக்கும் கசாப்பைப் போல வக்கீலை அமர்த்தி, கோர்ட்டில் வழக்கு நடத்தி, சாட்சிகள் இல்லை, ஆதாரங்கள் இல்லை என்று ஆறு / ஒருவருடத்தில் வெளியே வந்துவிடிகிறான். பிறகு, மறுபடியும் தனது வேலையை / தொழிலை செய்கிறான். அவர்களது குடும்பத்தாருக்கும் அது பழகிப்போய்விடுகிறது. முதலில் வெட்கப்படலாம், ஆனால், போகப்போக பெருமைத்தான் படுகின்றனர்.

[7] நீதிமன்றங்களின் ஊழல் மலிந்த நிலையைக் காட்டுகிறது. வில் ஹியூம், மாத்யூஸ் மற்ற கேஸ்கள் அதை அப்பாட்டமாகவே எடுத்துக் காட்டுகின்றன.

[8] பூட்டை பாட்லாக்கை / அறுத்து கதவைத் திறப்பது, நெம்பி திறப்பது, சன்னல் கம்பிகளை அறுத்து வளைத்து நுழைவது, பீரோ கதவை / லாக்கரை லாவகமாகத் திறப்பது, நெம்பித் திறப்பது, கைரேகைகளை அழித்துவிட்டுச் செல்வது, மிளகுப்பொடி உபயோகிப்பது, ரசாயனங்களை உபயோகிப்பது…………..என்ற செயல்கள் மூலம், ஒவ்வொருவருக்கும் ஒரு செல்லப்பெயர் வைத்திருக்கிறார்கள்.

[9] இதற்கெல்லாம் கூட “ரெக்கமன்டேஷன்” தேவைப் படுகிறது, இல்லையென்றால், புகார் கொடுக்கச் செல்லும் நபர்கள் குற்றவாளிகளை விட கேவலமாக நடத்தப் படுவர். “வாயா-போயா, நீ……” என்ற பேச்சுகள், “ திருடன் திருடுவதற்கு வரை என்னய்ய பண்ணின்டு இருந்தே……”, எஃப்.ஐ.ஆர். காபி வாங்குவதற்குள் படாத பாடு படுத்திவிடுவர். இதையேல்லாம் அனுபவத்திருப்பவர், அடுத்த தடவை, புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கே போகமாட்டார்!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

6 பதில்கள் to “கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (2)”

 1. M. M. Enathi Reddy Says:

  சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, சேஷனை ஓட விட்டது போன்றவை திமுக ஆட்சியில் இல்லை-கருணாநிதி
  வியாழக்கிழமை, நவம்பர் 4, 2010, 10:04[IST] A A A Follow us on
  http://thatstamil.oneindia.in/news/2010/11/04/karunanidhi-dmk-jayalalitha.html

  சென்னை: சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, டி.என்.சேஷனை ஓட ஓட விரட்டியது, பல்வேறு படுகொலைகள் என இருந்த அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் குறைவுதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் – குறிப்பாக ஜெயலலிதா தொடர்ந்து செய்துவரும் பொய்ப் பிரசாரத்திற்கு, உதவி செய்யும் நோக்கத்துடன்; என்ன செய்தாலும் ஜெயலலிதாவைப் போன்றவர்களை ஆதரிப்பதே பிறவிப்பயன் என்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதைப் போல, நடுநிலை நாளேடு ஒன்று, நேற்று ஒரு தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் படிப்பவர்களை திசைதிருப்புவதற்காக, திட்டமிட்டு செய்திகளை எல்லாம் ஆங்கிலத்திலே சொல்வார்களே, அதைப் போல – ஊதி ஊதிப் பெரிதாக்கி, மிகைப்படுத்தி – கடுகுக்குள் மலையைப் புகுத்தி எழுதியிருக்கிறார்கள்.

  நல்லாட்சி நடத்தி வரும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் சிறப்பான செயல்பாடுகளால் குறை ஒன்றும் கண்டுபிடிக்க இயலாததன் காரணமாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்ற கடைசி அஸ்திரத்தை எடுத்துக்கொண்டு, பொத்தாம்பொதுவாக, “வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பாணியில் சட்டம் ஒழுங்கைப் பற்றியும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் திசை திருப்பும் வகையில் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.

  இந்தியாவிலேயே மிகச்சிறப்பாகச் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். சாதி மதப்பூசல்கள் தலையெடுக்காத வண்ணம் தமிழக அரசின் தொடர் கண்காணிப்பில் மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் காவல் துறை சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகிறது.

  30.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த “பசும்பொன் தேவர் குருபூஜை” மிகவும் அமைதியாக நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை காவல் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நன்கு பராமரித்து வருவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள். அமைதிக்குக் குந்தகமின்றி நடத்தப்பட்டதும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரித்து வருவதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

  எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள் வருவதாகக் கூறி 18.10.2010 அன்று மதுரையில் திட்டமிட்டபடி அவரது பொதுக் கூட்டத்தை நடத்த விடாமல், தடுத்திட முயற்சிப்பதாகவும், அவரது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தொடர்ந்து அவரது கட்சியினர் அறிக்கைகள் விடுத்தபோதும் கூட; காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளினால் 18.10.2010 அன்று எதிர்கட்சித் தலைவர் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி மதுரை சென்று கூட்டத்தை நடத்தி பாதுகாப்பாகச் சென்னைக்குத் திரும்பினார் என்பதை நாடே அறிந்துள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவது உண்மைக்கு மாறானது என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.

  தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் கொலைக் குற்றங்களும், கொள்ளைகளும், கடத்தல்களும் நடப்பது போன்றும், இவற்றையெல்லாம் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது போன்றும் ஒரு பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்திற்கு அடிப்படை ஏதுமில்லை.

  அ.தி.மு.க. ஆட்சியில் 2004-ஆம் ஆண்டில் மிக உயர்ந்த எண்ணிக்கையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 817 குற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில்; தி.மு.க. ஆட்சியில், கடந்த 2009-ஆம் ஆண்டில் 7 லட்சத்து 17 ஆயிரத்து 957 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  மக்கள்தொகை அடிப்படையில் குற்ற நிகழ்வுகள் நடக்கும் விகிதாசாரத்தை எடுத்துக் கொண்டால்கூட பிற மாநிலங்களை விடக் குறைந்த அளவில் குற்றங்கள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. உதாரணமாக, 2008-ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 322 குற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 286 குற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 266 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

  சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பிற மாநிலங்களை ஒப்பீடு செய்தால்கூட; சென்னைப் பெருநகரில் குற்ற நிகழ்வுகள் குறைந்த அளவிலேயே உள்ளது என்பதும் புள்ளி விவரங்களிலிருந்து தெளிவாகத் தென்படுகிறது. அண்மைக் கால குற்ற நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால்கூட, குற்றநிகழ்வுகளில் குற்றவாளிகள் உடனடியாகக் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர்.

  17.7.2010 அன்று நடந்த சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் குற்றவாளி 4 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதச் செயல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் கொடும் குற்றவாளிகள் 2009-ஆம் ஆண்டில் 2220 பேரும், 2010-ஆம் ஆண்டில் இதுவரை 1808 பேரும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  ஜெயலலிதா தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த போது – மயிலாடுதுறையில் காங்கிரஸ் தலைவர் குரு ஞானசேகரன் படுகொலை; முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் சம்பந்திகள் இரண்டு பேர் படுகொலை; வேலூர் நகைக்கடையைக் கொள்ளையடித்து மூன்று பேர் சுட்டுக் கொலை; மயிலாடுதுறை கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை; சென்னையில் தலித் மக்கள் முன்னணித் தலைவர் பாலு என்பவர், அவர் மகன் கண்ணெதிரே படுகொலை; சசி என்ற சசிகுமார் என்ற சினிமா ஸ்டண்ட் நடிகர் வெட்டிக் கொலை; திருப்பத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் மணி என்ற கழகத் தோழர் சுட்டுப் படுகொலை; திருமுல்லைவாயிலைச் சார்ந்த சப்-இன்ஸ் பெக்டர் மகன் விஜி வர்கிஸ் நடுரோட்டில் வெட்டிக் கொலை; சூனாம்பேட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கோவலன் வெட்டிக் கொலை – என ஜெயலலிதா ஆட்சியில், 2003-ஆம் ஆண்டு மட்டும், சங்கிலித் தொடர் போன்ற படுகொலை நிகழ்ச்சிகள் நடந்தபோது; அவற்றையெல்லாம் வெறும் செய்தி என்ற அளவில், வெளியிட்டனவே தவிர; “சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது; நல்லாட்சிக்கு இது அழகல்ல” என்று அறிவுரை கூற முன்வருவதற்கான திராணியும், தைரியமும் இருந்தனவா என்றால், இல்லை. இப்போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறார்களே, என்ன காரணம்? நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?

  ஜெயலலிதா ஆட்சியில் – காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் 3-9-2004 அன்று கொலை செய்யப்பட்டு; அந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது சகோதரர் ரகு, மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன், ரவி சுப்பிரமணியன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்ட போதும்; சுந்தரேச அய்யர், அப்பு உட்பட 11 பேர் மீதும் குண்டர் சட்டம் ஏவப்பட்ட போதும்; தலையங்கங்கள் தீட்டி தங்கள் சான்றாண்மையைக் காட்டிக்கொள்ள முயற்சித்தார்களா?

  8-8-1993 அன்று சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பரிதாபமாக மரணமடைந்த போது 14-4-1995 அன்று சென்னை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்து “பைபிள்” சண்முகம் என்பவர் மாண்டபோது; 10-7-1995 அன்று திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்தபோது; 1991 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுக்கால ஜெயலலிதா ஆட்சியில் 333 வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து – 135 பேர் மரணமடைந்து, 394 பேர் காயமடைந்தபோது; சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தமது பேனா முனையைத் தீட்டிட முன்வந்தார்களா?

  சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.கே.பாலன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டாரே; கழக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்தின் தம்பி, ஈரோடு மாவட்டத்தில் காவல் துறை ஆய்வாளராக இருந்தவர்; திடீரெனக் காணாமல் போனாரே, இவற்றின் அடிப்படையில், ஜெயலலிதாவின் காவல் துறை செயலிழந்துவிட்டது என்று சுட்டிக்காட்ட முயற்சி செய்தனவா?

  16-8-1991 அன்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் கல்வீசித் தாக்கப்பட்ட போது; அ.தி.மு.க.வைச் சார்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்களே, அதாவது, ரமேஷ் என்பவரும், பி.சொக்கலிங்கம் என்பவரும் தாக்கப்பட்டபோது; 19-5-1992 அன்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது “ஆசிட்” பாட்டில் வீசப்பட்டு தாக்கப்பட்டபோது; 2-12-1994 அன்று முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் சேஷன் தங்கியிருந்த ஓட்டல் தாக்கப்பட்ட போது; 26-7-2004 அன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டபோது; சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 2005 டிசம்பர் மாதம் நிவாரணம் பெறுவதற்காக ஜெயலலிதா அரசு கையாண்ட தவறான அணுகுமுறையின் காரணமாக, 40-க்கும் மேலான அப்பாவிப் பொது மக்கள் நெரிசலில் சிக்கி மாண்டபோது; சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய் திறந்தார்களா?

  ஆனால், இனியாவது நடுநிலை நாளேடுகள் நாட்டு மக்களுக்குத் தேவையான – ஆக்கப்பூர்வமான செய்திகளையும், எந்த ஒரு கட்சியையும் சாராமல், விருப்பு வெறுப்பின்றி அரசியல் குறித்த செய்திகளையும், நாகரிக – கலாச்சாரக் கேடுகளுக்குத் துணை புரியாத செய்திகளையும், நல்லெண்ணத்தையும், நற்செயல்களையும் ஊக்குவித்து உற்சாகப் படுத்தும் செயல்களையும் வெளியிடுவது குறித்து சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்! நடுநிலையாளர்க்குக் கெடுமதி; கூடாதல்லவா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

  • M. Nachiappan Says:

   குற்றங்கள் நடப்பதை தடுப்போம், அடியோடு நிறுத்துவோம், என்றெல்லாம் வீரமாக சூளுரைக்காமல், மற்றவர்களை விட நாங்கள் குறைவாகத் தான் செய்கிறோம் என்று பீழ்த்திக் கொண்டால் எப்படி?

   அவன் பத்து பெண்களை கற்பழித்துள்ளான், நான் ஒரு பெண்ணைத்தான் கற்பழித்துள்ளேன் என்றால், அவன் ஒழுங்கானவன் ஆகிவிடுவானா?

   அதேபோலத்தான், மற்ற குற்றங்களும்!

 2. M. M. Enathi Reddy Says:

  Karunanidhi, thus, accepted that the crime rate is maintained in TN, whether he rules or Jayalalita rules!

  Thus, the question is why such trend is noted in TN?

  Why compare with others and rise of population etc?

  The increase crime rate is shame for the rulers as it is not mere numbers or statistics or interpretation.

  The parents of lost / killed children cannot appreciate as to whether the killers were arrested within 4 hours, 4 days, or 40 days, as their loved ones have gone far ever.

 3. குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! « ஊழ Says:

  […] ……………………….(2), https://dravidianatheism.wordpress.com/2010/11/04/modus-operandi-theft-decoity/ […]

 4. குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! « ஊழ Says:

  […] ……………………….(2), https://dravidianatheism.wordpress.com/2010/11/04/modus-operandi-theft-decoity/ […]

 5. குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! « ஊழ Says:

  […] ……………………….(2), https://dravidianatheism.wordpress.com/2010/11/04/modus-operandi-theft-decoity/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: