கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (3)

கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (3)

குற்ற உணர்வும், குற்றங்கள் பெறுகும் தன்மையும்: மனிதன் பிறக்கும் போதே குற்ற உணர்வுகளோடு, குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. பொதுவாக பாரம்பரிய கூறுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலைகள் தாம் (hereditary and environmental factors) பலதரப்பட்ட தாக்கங்களுக்குட்பட்டு மனிதனை உருவாக்குகிறது[1]. இருப்பினும் உலகில் கொலை-கொள்ளை செய்வதையே தொழிலாகக் கொண்ட குடும்பங்கள், குழுக்கள், குடிகள் இருந்துள்ளன. ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இந்தியாவில் சில மக்கள் குழுமங்களை / குடிகளை குற்றஞ்செய்யும் குடிகள் (Criminal tribes) என்றே பெயரிட்டு[2] அவ்வாறே நடத்தி வந்தனர்[3]. மேனாட்டவரைப் பொறுத்தவரைக்கும் தங்களைப் போல உருவத்தில், நிறத்தில் மாறியுள்ள அனைவரையும் தாழ்வாகத்தான் பார்த்தனர். அதனால், அதிகம் கருப்பாக உள்ளவர்கள் எளிதில் குற்றச்செயலில் ஈடுபடுவார்கள் என்ற தப்பெண்ணத்திலும் இருந்தனர். இருப்பினும், எப்படி எஞ்சினியரின் பிள்ளை தானாகவே எஞ்சினியராகி விடமுடியாதோ, அதே போல கொலைக்காரனின் பிள்ளை கொலைக்காரனாக இருப்பான் என்று நினைப்பது தவறானதாகும்.

ஒரு குறிப்பிட்ட தவறான செயல் நியாயப்படுத்தப்பட்டால் அது பெரிய குற்றத்தை செய்வதற்கு வழிகோலும்: லஞ்சம் என்பது ஒரு குறிப்பிட்ட செயல், இது ஏதோ காசு கொடுப்பது என்று மட்டும் நினைக்கவேண்டாம், தார்மீகரீதியில் செய்யக்கூடாததை செய்யும் போது தடுக்கும் மனங்களுக்கு எதிராக செய்யும் எல்லாமே ஒழிங்கீனம்தான பெரிய லஞ்சம். அதை ஊக்குவிப்பவன், ஊக்கடத்துடன் செய்பவன் பெரிய குற்றத்தை செய்பவன் ஆகிறான். ஆக ஒருவருக்கு வேண்டிவதை மற்றவன் பறித்துக் கொள்ள உதவினால், அதுவும் மாபெரும் லஞ்சம் தான். அதை நியாயப்படுத்தப்பட்டால் அது பெரிய குற்றத்தை செய்வதற்கு வழிகோலும். இத்தகைய “சிறியதாக” அல்லது “ஏற்றுக்கொள்ளப்பட்டதாக” கருதப்படும் ஊழல்கள் தாம் இன்று கோடிகளில் இந்தியாவை அரித்து வருகிறது[4].

ஊழல் நியாயப்படுத்தப் பட்டுள்ள நிலை: இன்றைய காலக்கட்டத்தில் அரசியல்வாதி யாரும் யோக்கியமானவனாக, லஞ்சம் வாங்காதவனாக, ஒரு தவறு செய்யாதவனாக இருப்பானா என்று சந்தேகிக்கும் நிலைக்கு வந்துள்ளது. மாநில அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது சாதாரணமான விஷயம், அது இல்லாமல், எந்த வேலையும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும், ஒருவருடைய விண்ணப்பம், காகிதம் நகர வேண்டுமானால், அதற்குரியவரை நேரில் சென்று பார்த்து கவனிக்க வேண்டியுள்ளது, இல்லையென்றால் அது அப்படியே கிடக்கும். புகார் செய்தால் அதோகதிதான். இந்நிலையில் தான், அவர்கள் மக்களை ஆட்டிப்படைக்கிறர்கள். இதைவிட மோசமான நிலை என்னவென்றால், அத்தகைய அரசு ஊழியத்திற்கு வருவதற்கே லட்சங்களைக் கொடுத்துவிட்டு வருகிறவர்கள், சில ஆண்டுகளில் அதை எடுத்துவிடலாம் என்ற மனப்பாங்குடன் வருகிறான்[5]. அந்நிலையில் அவன் / அவள் மனதில் எந்த இரக்கமும், பட்சதாமமும் வருவதில்லை[6], காசு கொடுத்தால்தான் வேலை என்று உறுதியாக இருக்கிறான்/ள்[7].

குற்றம்: குற்றம் என்பது உள்ள சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக செய்கின்ற காரியம். அவ்வாறான சட்டமீறல் தண்டனைக்குட் பட்டதாகிறது. சட்டதிட்டங்கள் ஒரு சமூகத்தில், நாட்டில் ஏற்படுத்தப் பட்டுள்ளவையாகும். இதைத்தவிர, தனிப்பட்ட மனிதனுக்கே தான் செய்யும் செயல் தவறு, குற்றமானது என்று அறிந்தே தெரிந்தேயிருக்கிறது.

குற்றம் செய்யக்கூடிய இயல்பு (Culpability): ஒருவன் குற்றம் செய்திருந்தால் மட்டும் போதாது, அதற்கான – அக்குற்றத்தை செய்யக் கூடிய – மனப்பாங்கு, இயல்பு, அவனுக்கு இருந்திருகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

குற்ற உள்நோக்குக் கொண்ட மனப்பாங்கு (criminal motive): குற்றம் செய்யக்கூடிய இயல்பு (Culpability), குற்றம் செய்யக்கூடிய இயல்புள்ள மனப்பாங்கு (culpability of mind and mens rea), குற்றம் செய்வது தவறு (Guilty guilty feelings) என்ற மனப்பாங்கை துடைத்து விடுதல், பிறகு அத்தகைய மனப்பாங்கைப் பெறுவது (Motive), பிறகு அது கொடூரமாகும் போது குற்ற உள்நோக்குக் கொண்ட மனப்பாங்கும் (criminal motive) உருவாகிறது.

குற்றம் செய்வதையே பழக்கமாக, வழக்கமாக, தொழிலாகக் கொண்டுள்ளத் தன்மையினர் (habitual offenders): ஒரு தவறைத் தெரிந்து முதன்முதலாக செய்யும் போதுள்ள தயக்கம், குற்ற உணர்வு, இர்ணடாவதாக செய்யும் போது குறைந்து விடுகிறது. மறுபடி-மறுபடி செய்யும் போது, அதைப் பற்ரிய எண்ணமே இல்லாம், மேன்மேலும் அத்தகைய தவறை / குற்றத்தை எப்படி திறம்பட செய்யலாம் என்ற நிலைக்கே, குற்றவாளிகள் சென்றுவிடுவார்கள். அவ்வாறு அத்தவறு / குற்றம் செய்வது பழக்கமாகி, வழக்கமாகி விடும்போது, மனம் இருகிவிடும்போது அதையே தொழிலாகக் கொண்டுள்ளத் தன்மையினராகி விடுகின்றனர். குடிகாரர்களைப் போல, போதை மருந்துக்கு அடிமையானவனைப் போல சிலர் குற்றஞ்செய்வதையே தொழிலாகக் (habitual offenders) கொண்டிருந்தால், அவ்வாறாக கொண்டுள்ளவர்களை ஒருவேளை மாற்றமுடியாமல் போகலாம். இருப்பினும், இன்றைய சூழ்நிலைகளில் சிறை சீர்திருத்தம், குற்றவாளிகளுக்கு ஆலோசனை, சீர்திருத்தம் முதலிய வழிகள் பின்பற்றப்படுகின்றன.

குற்றம் செய்யக்கூடிய இயல்புள்ள மனப்பாங்கு (culpability of mind and mens rea), குற்றம் செய்வது தவறு (Guilty guilty feelings) என்ற எண்ணங்கள்: குற்றத்தைச் செய்கின்றவனுக்கு நிச்சயமாக முதலில் குற்றம் என்று அறிந்தேயிருக்கிறான். இருப்பினும், செய்வதற்கு முன்பு தனது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, செய்வதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்கிறான்.  பிறகு அதை செய்வதற்கு நடைமுறை படுத்துவதற்கு இறங்குகிறான். இங்குதான் திட்டம் திட்டப்படுகிறது. மனத்தில் ஏற்கெனெவே அதை எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்கலாம் என்று முடிவு செய்து கொள்கிறான். அதில் சில எதிர்பாராத நிலைகளில் ஏற்படும் எதிர்ப்புகள், அவற்றை எதிர்கொள்ளும் விதம், மற்றும் அதை மீறுவதற்கு செய்ய வேண்டிய முடிவான காரியங்கள் முதலியவற்றையும் திட்டமாக்கிக் கொள்கிறான். தன்னால் ஒருவனே செய்யமுடியாது எனும்போது, கூட்டாளியை சேர்த்துக் கொள்கிறான். அபொழுது திட்டம் பெரியதாகிறது. குற்ற உணர்வை பொதுவாக மக்கள் (inferiority complex) என்று பொருள்கொண்டு வேறு விதமாக தமிழில் விளக்கம் அளிக்கிறார்கள்[8]. இது அத்தகைய குற்ற உணர்வு அல்ல, ஆனால், குற்றங்களை செய்ய ஊக்குவிக்கும் உணர்வு. உண்மையில் இது குற்றவாளிகளின் தனித்தன்மையை  அவர்கள் அத்தகைய குற்றங்கள் செய்யும் விதத்தை வெளிக்காட்டும். இங்கு தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம் என்றெல்லாம் நியாயப்படுத்த முடியாது, ஏனெனில் அது குற்றச்செயலாகி விடுகிறது.

தமிழ்கத்தில் குற்றங்கள் நடக்கும் விகிதாச்சாரம் / கணக்கீடு: தமிழகத்தில் இப்படி எல்லா வகை குற்றங்களையும் சேர்த்து கணக்கிட்டால், கீழ் காணும் வகையில் மொத்தக் குற்றங்கள் வருகின்றன.

CRIME HEAD 2009 2008 2007 2006 2005
மொத்த கொலை-கொள்ளைகள்[9] 22,941 21,365 19,140 18,858 21,538
பெண்கள் மீதான குற்றங்கள்[10] 5,333 6,524 6,605
சொத்து முதலியவை 2,356 2,783 2,762
மொத்தம் 30,630 30,672 28,507

ஆக மொத்தம் சராசரியாக மொத்தமாக –

*         ஒரு வருடத்திற்கு 30,000 குற்றங்கள் நடக்கின்றன.

*         ஒரு மதத்திற்கு 2500 குற்றங்கள் நடக்கின்றன.

*         ஒரு நாளைக்கு 82-83 குற்றங்கள் நடக்கின்றன.

*         ஒரு மணிக்கு 3-4 குற்றங்கள் நடக்கின்றன.

*         15-20 நிமிடங்களில் ஒரு குற்றம் நடக்கிறது.

இதில் கோவில்களில் நடக்கின்ற திருட்டு செயல்கள், கொள்ளைகளை சேர்க்க வில்லை என்று தெரிகிறது. அதையும் ழ்ச்சேர்த்தாக், இக்கணக்கு இன்னும் அததகமாகும்.

குற்றங்கள் தமிழகத்தில் பெறுக நாத்திகம் காரணமா? குறிப்பாக கடவுள் எதிர்ப்பு, நாத்திக சித்தாந்தங்கள் தமிழர்களுடைய மனங்களை கயந்த 60-70 வருடங்களாக அடியோடு கெடுத்து விட்டது எனலாம். குற்றவிகிதங்கள் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆனால், அங்கும் – அதாவது கோவிலை இடிப்பவர்கள், விக்கிரங்கள் / சிலைகளை உடைப்பவர்கள், திருடுபவர்கள், கடத்துபவர்கள்…..அதே மாதிரியான குற்றங்களைத்தான் செய்கிறான். காவலாளியைக் கொல்கிறார்கள்; எளிதான இலக்குகளாக இருக்கும் பூசாரியைக் கொல்கிறார்கள்; அவர்களை பயமுறுத்த சமயம் வரும்போது பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குகிறார்கள்; பெட்ரோல் குண்டு வீசி பயங்கரவாதத்தை செய்து காட்டுகிறார்கள்;

வேதபிரகாஷ்

© 05-11-2010


[1] J. P. Chaplin, Dictionary of Psychology, Dell Publisjing co., USA, 1968. Any standard book of pasychology or criminology could be referred to.

[2] S. T. Hollins, The Criminal tribes of India, Nidhi Book Centre, 2005, Reprint, 2005

Lectures on some criminal tribes of India and religious mendicants, Nagpur, 1909. Though, much is discussed about the “Abolition of Thuggery” in India, it was actually, the British killing of warrior type people of India who opposed the Britsh.

[3] Criminal Tribes‘ Act, 1871. Act XXVII

[4] 2G / 3G கற்றை, CWG, கார்கில் விதவைகளுக்கு கொடுக்கப்பட்ட நிலைத்தை அபகரித்தது முதலியன இன்றைச் கோடிக்கணக்கான ஊழல்கள். போஃபோர்ஸ், நீர்மூகி கப்பல் ….போன்றவை நேற்றைய ஊழல்கள். கோடிக்கணக்கான பணம் அதில் சம்பந்டப்பட்டிருந்தாலும், யார் மீதும் நடவரிக்கை எடுக்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை. ஆனால், மணம் போனது போனதுதான்!

[5] இன்று இந்து அறநிலையத் துறைக்கே அவ்வாறு வந்துள்ளார்கள், இன்னும் வரத்துடிக்ககறார்கள். அத்தகைய ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபூர்கள் கோவில்களில் ந்ழைந்து விட்டால் அவ்வளவு தான்!

[6] இறப்பு சான்றிதழுக்கே பணம் வாங்குகிறார்கள் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!

[7] பெண்கள் ஆண்களைவிட தைரியமாக லஞ்சம் வாங்குவதாக தெரிகிறது. மேலும், அவர்கள் நேரிடையாக விஷயத்திற்கு வந்து விடுகிறார்களாம்.

[8] இணைதளத்தில் நண்பர் ஒருவர், இப்படி விளக்கியுள்ளார்: “குற்ற உணர்வு என்பது ஆத்மாவில் உண்டாகிய புற்றுநோய்.உங்களை எப்போதும் அடிமை நிலையில் வைத்திருக்க,உங்களுடைய தனித்தன்மையை  அழிக்க,இந்தக் குற்ற உணர்வை மதங்களெல்லாம் ஒரு ஆயுதமாக வைத்திருக்கின்றன.ஆகவே எதைக் குறித்தும் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்.அப்படி ஏதாவது உங்களை அறியாமல் தவறு செய்து விட்டால்,அதற்காக வருந்த வேண்டாம்.மீண்டும் அதைச் செய்யாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம்.நீங்கள் குற்ற உணர்வு பெற்றால்,உங்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.இதனால் பல செயல்களில் நீங்கள் தோல்வியைத் தழுவ நேரிடும்.இதனால் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாகும்”.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (3)”

 1. குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! « ஊழ Says:

  […] ……………………….(3), https://dravidianatheism.wordpress.com/2010/11/05/crime-culpability-menrea-criminality/ […]

 2. குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! « ஊழ Says:

  […] ……………………….(3), https://dravidianatheism.wordpress.com/2010/11/05/crime-culpability-menrea-criminality/ […]

 3. குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! « ஊழ Says:

  […] ……………………….(3), https://dravidianatheism.wordpress.com/2010/11/05/crime-culpability-menrea-criminality/ […]

 4. M. Nachiappan Says:

  குற்றங்கள் நடப்பதை தடுப்போம், அடியோடு நிறுத்துவோம், என்றெல்லாம் வீரமாக சூளுரைக்காமல், மற்றவர்களை விட நாங்கள் குறைவாகத் தான் செய்கிறோம் என்று பீழ்த்திக் கொண்டால் எப்படி?

  அவன் பத்து பெண்களை கற்பழித்துள்ளான், நான் ஒரு பெண்ணைத்தான் கற்பழித்துள்ளேன் என்றால், அவன் ஒழுங்கானவன் ஆகிவிடுவானா?

  அதேபோலத்தான், மற்ற குற்றங்களும்!

  ஒழுங்கீனம், மரியாதையற்ற பண்பாடு, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, அடிக்க வருவது, ரௌடித்தனம், பொறுக்கித்தனம், ……………..முதலியவை தமிழர்களுக்கு உரித்தான குணங்கள் போல ஆகிவிட்டன.

  பொது இடங்களில், தெருக்களில், பேருந்துகளில், மாநில அரசு அலுவலகங்களில் பேசுவதற்கே பயமாகத்தான் இருக்கிறது, ஏனெனில், அவர்கள் வாயைத் திறந்தாலே, செந்தமிழில் தான் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

  இவையெல்லாம் குற்றங்கள் தாம், ஏனெனில், மிருதுவான / சாதுவாவான குணம் கொண்ட, அப்பாவி மக்கள் ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் தவித்துப் போய்விடுவார்கள்.

  “தீயினாலும் சுட்டப்புண் ஆறினாலும் ஆறாதே
  நாவினால் சுட்ட வடு”

  என்றெல்லாம் ஐயன் தான் சொல்லியிருக்கிறார், ஆனால், எந்த ஐயாக்களும் நினைத்துப் பார்ப்பதில்லை…………….

  இக்குற்றங்களையும் குறைத்தால் தமிழகம் நன்றாகவே உருப்படும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: